in

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

சஹானா இணைய இதழ், ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் &
Madhura Boutique இணைந்து நடத்திய 

சிறுகதைப் போட்டி 2021

முடிவுகள் 

வணக்கம்,

இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை தர இசைந்துள்ள Madhura Boutique (www.madhuraboutique.in) நிறுவனத்தாருக்கு, முதலில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்  

கடந்த ஆகஸ்ட் மாதம், ‘சஹானா’ இணைய இதழின் ஆண்டு விழா நிகழ்வில் ‘சஹானா சிறுகதைப் போட்டி 2021’ பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது, இப்படி ஒரு வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கவில்லை 

அதன் காரணமாக, போட்டிக்கு வந்த படைப்புகளை மூன்று கட்ட பரிசீலனை செய்து, சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து தளத்தில் வெளியிடுவதற்கு சற்று கால தாமதம் ஆனது. அதை புரிந்து பொறுமை காத்த படைப்பாளிகளுக்கு நன்றிகள்  

நீண்ட பரிசீலனைக்குப் பின் தேர்வான 138 கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பதால், அனைத்து கதைகளும் சிறந்த கதைகளே, பங்கேற்ற அனைவரும் வெற்றியாளர்களே. 

ஆனால் பரிசு என வரும் போது, சிறந்ததில் சிறந்தது எது என்பதை பல்வேறு அளவீடுகள் கொண்டு மதிப்பீடு செய்து, ஆகச் சிறந்த படைப்புக்களை எழுதிய எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது 

மதிப்பெண் அளவீடுகள்

1. வடிவமைப்பு (Formatting)

2. திருத்தங்கள் (Corrections)

3. கதைக்கரு (Story Knot)

4. பாணி (Writing Style)

5. திருத்த எடுத்துக் கொண்ட நேரம் (Edit Time)

6. எத்தனை பேர் வாசித்தார்கள் (Reads)

மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆறு அளவீடுகளுக்கு தலா 10 மதிப்பெண்கள் என்ற அளவில், மொத்தம் 60 மதிப்பெண்கள். ஒவ்வொரு கதையும் இந்த அளவீடுகள் கொண்டு பரிசீலித்து, அதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்பட்டது   

சில கதைகள் மற்ற அளவீடுகளில் அதிக மதிப்பெண் பெற்ற போதும், எத்தனை பேர் வாசித்தார்கள் என்ற அளவீட்டில் ஓரிரு மதிப்பெண்கள் குறைந்து பின்னடைந்தது. சில கதைகளை நிறைய பேர் வாசித்திருந்த போதும், பிழைகள் வடிவமைப்பு காரணமாய் மதிப்பெண் குறைந்து பின்னடைந்தது. அனைத்து வகையிலும் அதிக மதிப்பெண் பெற்ற கதைகள் முதல் 20 இடத்தை பிடித்த கதைகளாக தேர்வாகியுள்ளன

கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

அச்சு புத்தக வெளியீடு 

முதல் 20 இடம் பெற்ற கதைகள், சிறுகதைத் தொகுப்புப் புத்தகமாக வெளிவர இருக்கிறது. சிறந்த கதைகளை தவற விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன் இந்த புத்தகம் வெளிவர இருக்கிறது.  அங்கீகரிக்கப்பட்ட ‘உலக சாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு’ ஒன்றில், நம் ‘சஹானா சிறுகதைப் போட்டி 2021’யில் தேர்வான கதைகளின் புத்தகம் வெளியாக இருக்கிறது என்பதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி

அந்த நிகழ்வு எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும், யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் ஆகிய விவரங்கள், விழா தேதி முடிவான பின் பகிரப்படும் 

உலக சாதனை நிகழ்வில் தங்கள் புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்களுக்கு…

இந்த நிகழ்வில், சிறுகதைப் போட்டி 2021 கதைகளின் புத்தகம் மட்டுமின்றி, நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக ‘சஹானா’ இணைய இதழில் எழுதி வரும் சில எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து வட்டத்தில் உள்ள வேறு சில எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளிவர இருக்கிறது 

இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சாதனை நிகழ்வில் நீங்கள் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇

சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

முன்பே குறிப்பிட்டது போல், போட்டிக்கு தேர்வான அனைத்து கதைகளும் சிறப்பானவை தான். அதிலிருந்து, பரிசுக்கு உரிய மற்றும் அச்சு புத்தகத்திற்கான கதைகளை தேர்ந்தெடுக்கும் பணி மிகவும் சிரமமாக இருந்தது என்பதே உண்மை. 

முதல் இடம் பெற்ற கதைக்கும் இருபதாம் இடம் பெற்ற கதைக்கும் 7 மதிப்பெண்கள் தான் வித்தியாசம் என்பதில் இருந்தே, போட்டி எத்தனை கடுமையாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்  

எழுத்தாளர்களுக்கு இரண்டு பரிசுகள், வாசகர்களுக்கு இரண்டு பரிசுகள் என அறிவித்து இருந்தோம். ஆனால், அறிவிப்பில் குறிப்பிட்ட விதிமுறைகளின் படி குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் பதிவிடப்படாத நிலையில், வாசகர்களுக்கு தருவதாய் இருந்த இரண்டு பரிசுகள், மூன்றாம் நான்காம் இடத்தில் உள்ள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது 

இனி… வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம் 

முதல் இடம்

எழுத்தாளர் கவி மாரியப்பன், திருவண்ணாமலை

கதையின் பெயர் ‘அழைப்பு’

www.sahanamag.com

Madhura Boutique (www.madhuraboutique.in) நிறுவனத்தார் வழங்கும் ரூ.2000 மதிப்புள்ள பரிசு, இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

இவரின் இயற்பெயர் விஜயபானு. இயற்கை மருத்துவ சிகிச்சையாளர், மாற்று முறை மருத்துவத்தில் உயர்நிலை பட்டம் பெற்றிருக்கிறார்.

கவி, சிவரஞ்சனி என்ற பெயர்களில், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், 12 நாவல்கள், சிறார் கதைகள் எழுதியிருக்கிறார். அதீதம், நற்றிணை, நவீன விருட்சம், குறி, அகல், அமிழ்தம், தினமலர், சங்கமம் இதழ்களில் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. திருவண்ணாமலையில் வசிக்கும் இவர், மாவட்ட நூலகத்தின் வாசகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள கவி மாரியப்பன் அவர்களின் ‘அழைப்பு’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/alaippu-kavimariyappan-storycontestentry/

இரண்டாம் இடம் 

எழுத்தாளர் டெய்சி மாறன், சென்னை

கதையின் பெயர் ‘மறு வீடு’

www.sahanamag.com

Madhura Boutique (www.madhuraboutique.in) நிறுவனத்தார் வழங்கும் ரூ.1000 மதிப்புள்ள பரிசு, இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும் 

எழுத்தாளர் பற்றி

டெய்சி அவர்கள் எழுத்துத் துறைக்கு வந்து 20 வருடங்கள் கடந்த நிலையில், 63 நாவல்கள்,  95 சிறுகதைகள், கட்டுரைகள் என நிறைய எழுதியிருக்கிறார். தினமலர் TVR நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டு பரிசுகளும், ஜெர்மன் ஞானசௌந்தரி போட்டியில் முதல் பரிசும், வானதியின் இரண்டாவது பரிசும் பெற்றுள்ளார் 

பெற்ற விருதுகள்

  1. காரைக்கால் அம்மையார் விருது
  2. இலக்கியச்சோலை இமயம் விருது
  3. தமிழ் எழுத்தாளர் ஒன்றிணைப்பு விருது
  4. தென்சென்னை தமிழ்ச்சங்கம் கவி திலகம் விருது
  5. வானதி விருது 2016
  6. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை விருது (அரசு விருது)
  7. அன்னை கல்வி அறக்கட்டளை சமூக சேவை விருது

அமேசான், புஸ்தகா, பாக்கெட் ’எப்எம்’ ஆகிய இணைய தளங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்கள் கேளொலி (Audio) நூல்கள் மற்றும் மின் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள டெய்சி மாறன் அவர்களின் ‘மறுவீடு’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/maruveedu-daisymaran-storycontestentry/

மூன்றாம் இடம் 

எழுத்தாளர் வைரமணி, திருச்சி

கதையின் பெயர் ‘கிளப்புக் கடை தாத்தா’

www.sahanamag.com

Madhura Boutique (www.madhuraboutique.in) நிறுவனத்தார் வழங்கும் ரூ.500 மதிப்புள்ள பரிசு, இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

சிவகங்கை மாவட்டம் கோட்டை நெடுவயல் கிராமத்தில் பிறந்து தற்போது திருச்சியில் வசித்து வரும் வைரமணி, திருச்சி மாவட்டம் புலிவலம் ஜே.எப். மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். சிறுகதைகள், கவிதைகள் என்று தொடர்ந்து படைப்புலகில் இயங்கி வரும் இவர், “தொடர்பு எல்லைக்கு வெளியே” என்னும் கவிதைத் தொகுப்பையும், “குயிலக்கா” என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அடுத்த வீட்டு வாழ்க்கையை நேரில் பார்ப்பது போன்ற யதார்த்தமான படைப்புகளை படைத்து வருவது இவரது தனிச்சிறப்பு

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள வைரமணி அவர்களின் ‘கிளப்புக் கடை தாத்தா’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/klappukadhaithatha-vairamani-storycontestentry/

நான்காம் இடம் 

எழுத்தாளர் பவானி உமாசங்கர், கோவை

கதையின் பெயர் ‘பாசமெனும் வேர்கள் படர்ந்தால்’

www.sahanamag.com

Madhura Boutique (www.madhuraboutique.in) நிறுவனத்தார் வழங்கும் ரூ.500 மதிப்புள்ள பரிசு. இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 20 ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  பணி ஓய்வுக்குப் பின், சிறுகதைகள், ஒரு பக்கக் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். அதில் சில கதைகள், குமுதம், தினமணி, சிறுவர் மலர் போன்ற பத்திரிக்கைகளில் பிரசுரமாகியுள்ளன.

‘சஹானா’ இணைய இதழின் மாதாந்திர சிறந்த படைப்பு போட்டியிலும் இவரின் சிறுகதை ஐந்தாம் இடம் பெற்றது. இவரின் சிறுகதைகளை, வாரம் ஒரு முறை “கதைச் சங்கிலி” என்ற பெயரில் யூடியூப் சேனலில் வாசித்து வருகிறார் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள பவானி உமாசங்கர் அவர்களின் ‘பாசமெனும் வேர்கள் படர்ந்தால்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/pasamenumvergalpadarndhaal-bhavaniumashankar-storycontestentry/

 

ஐந்தாம் இடம் 

எழுத்தாளர் முனைவர் நடராஜா ஜெயரூபலிங்கம், Aylesbury, UK

கதையின் பெயர் ‘திறந்த வீடு’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

முனைவர் நடராஜா ஜெயரூபலிங்கம் இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்டவர். தற்போது இவர் இங்கிலாந்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் (Information Technology Consultant) பணிபுரிகிறார். இவரது படைப்புகளாக ஒரு நாவலும் சில சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இவரது சிறுகதைகள் இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, ஈழநாடு பத்திரிக்கைகளின் வார மலர்களிலும், லண்டனிலிருந்து வெளிவரும் சிறுகதை மஞ்சரி இதழிலும் வெளியாகியுள்ளன. பிரதிலிபி தளத்தில் பதிவு செய்யப்பட்ட இவரது சிறுகதை அக்டோபர் 2021 மாத போட்டியில் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள நடராஜா ஜெயரூபலிங்கம் அவர்களின் ‘திறந்த வீடு’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/thirandhaveedu-nadarajajeyaroopalingam-storycontestentry/

 

ஆறாம் இடம் 

எழுத்தாளர் அசோக் குமார், சென்னை

கதையின் பெயர் ‘பிராய்லர் கோழிகள்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

சென்னையில் சுங்கத்துறையில் பணிபுரியும் இவருக்கு, கதை படிப்பதும், எழுதுவதும் பொழுதுபோக்கு என்கிறார்.  ‘சோழவேங்கை கரிகாலன்’ என்ற முழுநீள நாவலை எழுதி வருகிறார் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள அசோக் குமார் அவர்களின் ‘பிராய்லர் கோழிகள்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/broilerkozhikal-ashokkumar-storycontestentry/

ஏழாம் இடம்

எழுத்தாளர் வைகை, சிங்கப்பூர்

கதையின் பெயர் ‘காவேரியின் கைபேசி’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

வள்ளியப்பன் என்ற இயற்பெயர் கொண்ட வைகை, சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்தவர். கட்டுமானத் துறையில் பட்டம் பெற்று இருபது ஆண்டுகள் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் சொந்த மண்ணுக்கு குடிபெயர்ந்து, Grouting Specialist Kovai என்ற நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

2010ல் இருந்து, வைகை எனும் பெயரில் தனது வலைப்பூவில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள வைகை அவர்களின் ‘காவேரியின் கைபேசி’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/kaveriyinkaipesi-vaigai-storycontestentry/

எட்டாம் இடம் 

எழுத்தாளர் த. வேல்முருகன், ஈரோடு

கதையின் பெயர் ‘விதிவிலக்கு’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சக்தி இன்ஃப்ரா டெக்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, ஜோக்ஸ் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள், தினமலர், தினத்தந்தி, காலைக்கதிர் போன்ற வார இதழ்களிலும், மங்கையர் மலர், காக்கை சிறகினிலே போன்ற மாத இதழ்களிலும் வெளிவந்துள்ளன. பல்வேறு சிறுகதை போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள வேல்முருகன் அவர்களின் ‘விதிவிலக்கு’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/vidhivilakku-velmurugan-storycontestentry/

ஒன்பதாம் இடம் 

எழுத்தாளர் இன்பா, சென்னை

கதையின் பெயர் ‘இல்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

இன்பா என்ற புனைபெயரில் எழுதி வரும் இவரின் இயற்பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். எம்.சி.ஏ. பட்டம் பெற்ற இவரின் சொந்த ஊர் சிதம்பரம். சிறுகதை, திரைக்கதை எழுதுதல் மற்றும் வாசிப்பு விருப்பமான விடயங்கள் என்கிறார். ‘கடைத்தெரு’ என்ற வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள இன்பா அவர்களின் ‘இல்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/il-inba-storycontestentry/

 

பத்தாம் இடம் 

எழுத்தாளர் சாந்தி பாலசுப்ரமணியன், சென்னை

கதையின் பெயர் ‘மன்னி சிரிக்கிறாள்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

25 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்து வாலண்டரி ரிட்டயர்மென்ட் பெற்ற சாந்தி பாலசுப்ரமணியன் அவர்கள், தற்போது கம்யூனிகேஷன், சாஃப்ட் ஸ்கில்ஸ், லைஃப் ஸ்கில்ஸ் போன்ற வகுப்புகள் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அறுபது வயதிற்குப் பிறகு ஸ்விம்மிங், டிராயிங், பெயிண்டிங், ஸ்டோரி ரைட்டிங் என்று புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர், ‘தோற்பது மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி கவலைப்படாதிருப்பதே தன்னுடைய பலம்’ என்கிறார் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள சாந்தி பாலசுப்ரமணியன் அவர்களின் ‘மன்னி சிரிக்கிறாள்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/mannisirikiraal-santhibalasubramanian-storycontestentry/

 

பதினொன்றாம் இடம் 

எழுத்தாளர் சந்துரு மாணிக்கவாசகம், சென்னை

கதையின் பெயர் ‘உறுத்தல்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்ட சந்துரு மாணிக்கவாசகம், திருச்சி உறையூரில் பிறந்து வளர்ந்தவர். பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகவியல் பட்டத்தைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்குனர் பிரிவில் பட்டயம் (BCom DFTech) பெற்றுள்ளார்.  2015-ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் ’அவள் வண்ணதினுசேஷம்’ என்ற சிறுமுதலீட்டு மலையாளப் படம் வெளியானது.  

‘நீ நான் நிலா’, ‘அசுரகுரு’ போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், வெளியாகவுள்ள ’கிழக்கு பாத்த வீடு’ என்ற திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். விருது பெற்ற குறும்படங்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், மத்திய மாநில அரசுத் துறைகளுக்கான ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் இயக்கியுள்ளார்.

தற்பொழுது, தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகளிலும், சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். 1990 முதல், வார மாத இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில சிறுகதைகளுக்கு பரிசும் பெற்றுள்ளார். சிறுகதைகளில் யதார்த்த வாழ்வை / நிகழ்வுகளை பிரதிபலிக்க அதிக விருப்பம் என்கிறார் இவர் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள சந்துரு மாணிக்கவாசகம் அவர்களின் ‘உறுத்தல்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/uruthal-shortstory-chandrumanikkavasakam-contestentry/

 

பனிரெண்டாம் இடம் 

எழுத்தாளர் பாரதிக்குமார், நெய்வேலி

கதையின் பெயர் ‘மழைத்தூறல் போல் கோடிட்ட சந்தனச் சட்டை’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

நெய்வேலி பாரதிக்குமார் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வரும் ச.செந்தில்குமார், என்.எல்.சி. நிறுவனத்தில் துணை முதன்மை மேலாளராக (ACM) பணிபுரிகிறார்

ஆனந்த விகடன், கல்கி, குமுதம், தினமணி, தினத்தந்தி, தமிழ் இந்து, கணையாழி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், 5 கட்டுரை நூல்கள், ஒரு குறுநாவல் உட்பட 11 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில், இவரது சிறுகதை நாடகமாக ஒளிபரப்பானது. புதுவை வானொலியில் மூன்று நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன

அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு மற்றும் கிழக்குவாசல் உதயம் இதழும் திருச்சி அரிமா சங்கமும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, அமரர் வே. சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, நன்னன்குடி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, மற்றும் பல முன்னணி பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் வெவ்வேறு பரிசுகள் பெற்றவர்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் ‘மழைத்தூறல் போல் கோடிட்ட சந்தனச் சட்டை’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/sandhanasattai-bharathkumar-storycontestentry/

 

பதிமூன்றாம் இடம் 

எழுத்தாளர் செராமு, தஞ்சாவூர்

கதையின் பெயர் ‘முத்தமும் சத்தமும்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

செராமு என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவரின் இயற்பெயர் எம்.ஆர்.ஜெயந்தி. B.Tech பட்டதாரியான இவருக்கு மேடைப்பேச்சு, நிகழ்ச்சித் தொகுப்பு, கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பது, கவிதை, கட்டுரை, மரபுக் கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் என்கிறார் 

பெரியார் சமுதாய வானொலியில்  நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் இவர், சன் டிவியின்  அரட்டை அரங்கத்தில்  3 முறை பங்கு பெற்று சான்றிதழும் விருதும் பெற்றுள்ளார்.  பெரியார் சமுதாய வானொலியில்,”எண்கள் நம் கண்கள்’ என்ற கவிதை வடிவ குறுந்தகடு வெளியிட்டுள்ளார்.

“முக்கோண முகவரிகள்” என மூவர் கூட்டணியில் மதுரை சங்கத் தமிழ் பலகையில் கவிதை நூல் வெளியிட்டுள்ளார்.  சிற்றிதழ்கள் மற்றும் முகநூலில் எழுதுவது பொழுதுபோக்கு என்னும் இவர், இதுவரை வடித்துள்ள வரிகளுக்கு நூல் வடிவம் கொடுப்பது தனது இலக்கு என்கிறார்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள செராமு அவர்களின் ‘முத்தமும் சத்தமும்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/muthamumsathamum-seramu-storycontestentry/

 

பதினான்காம் இடம் 

எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி, சென்னை

கதையின் பெயர் ‘வேண்டுதல்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

பெருமையாக சொல்லிக் கொள்ளும்படியாக எந்த தனித்திறமையும் இல்லாத சாதாரண இல்லத்தரசி நான் எனும் அன்னபூரணி தண்டபாணி, தன்னைத் தானே மீட்டுக் கொள்ள பற்றுக்கோலாய கிடைத்த எழுத்தார்வத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டு, படிப்படியாக மேலே ஏறிக் கொண்டிருப்பதாக சொல்கிறார் 

நான்கு ஆண்டுகளாக எழுதும் இவர், இதுவரை 12 புதினங்கள், 11 குறும் புதினங்கள், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். 5 புதினங்கள் அச்சுப் புத்தகமாக வெளிவந்துள்ளன. நவம்பர் 2021 மாத குவிகம் குறும்புதினம் இதழில் இவரின் குறும்புதினம் வெளியிடப்பட்டுள்ளது. 3 சிறுகதைகள் தினமலர் வாரமலரிலும் 1 சிறுகதை ராணிமுத்து இதழிலும் பிரசுரமாகியுள்ளன 

பல இணையதளங்கள் நடத்தும் சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் விரும்பி பங்கெடுத்து வரும் இவர், தான் செல்ல வேண்டிய தூரம் மிக நீளம் என்கிறார். அதற்கு உறுதுணையாக தன் குடும்பமும் நண்பர்களும், மிக முக்கியமாக வாசகர்களும் இருக்கிறார்கள் என்ற உற்சாகத்தோடு தன் எழுத்துப் பயணம் தொடர்வதாக கூறுகிறார் 

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள அன்னபூரணி தண்டபாணி அவர்களின் ‘வேண்டுதல்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/vendudhal-annapooranithandapani-storycontestentry/

 

பதினைந்தாம் இடம் 

எழுத்தாளர் ஜெயந்தி ரமணி, சென்னை

கதையின் பெயர் ‘பூக்காத மரம்’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

தமிழ் மொழி மேல் கொண்ட காதலால், ஐம்பது வயதில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற ஜெயந்தி ரமணி அவர்கள், BSNL நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பிறந்தது முதல் இன்று வரை சிங்காரச் சென்னை வாசியான இவர், பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவரின் “காவல்” என்ற சிறுகதை, பண்புடன் குழுவினரால் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. “ஜன்னல்” சிறுகதை, சஹானா இணைய இதழின் மார்ச் 2021 சிறந்த படைப்புக்கான பரிசை வென்றது.

நல்ல விஷயங்கள் அடுத்த தலைமுறையை சென்று அடைவதற்காக, “கதம்பம்” என்ற பெயரில் Youtube Channel தொடங்கியுள்ளார். “Proud grandmother of two grand daughters and one grandson.  I am truly blessed by God” என்கிறார் ஜெயந்தி ரமணி

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள ஜெயந்தி ரமணி அவர்களின் ‘பூக்காத மரம்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/pookadhamaram-jayanthiramani-storycontestentry/

 

பதினாறாம் இடம் 

எழுத்தாளர் மாலா உத்தண்டராமன், கடலூர்

கதையின் பெயர் ‘பயந்து ஓடிய பயம்’ 

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

மாலா உத்தண்டராமன் எனும் புனைபெயரில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என பன்முகங்களில் எழுதிக் கொண்டிருக்கும் இவரின இயற்பெயர் ப.உத்தண்டராமன். 300 சிறுகதைகள், 30 நாவல்கள், பல கவிதைகள் பிரபல இதழ்களில் வெளிவந்துள்ளன. நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்

இலக்கியப்பீடம் நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றவர். தினமலர்-வாரமலர், ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குமுதம், அமுதசுரபி என பல இதழ்களில் வென்ற பரிசுகள் ஏராளம். பொதிகை தொலைகாட்சியில் இலக்கிய கவிதை வாசித்து விருது மற்றும் பரிசு பெற்றுள்ளார். நன்மை செய்வது, இனி தொடர்ந்து நல்லதை எழுதுவது இதுவே தனது குறிக்கோள் என்கிறார் இவர்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள மாலா உத்தண்டராமன் அவர்களின் ‘பயந்து ஓடிய பயம்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/bayanthuodiyabayam-malauthandaraman-storycontestentry/

 

பதினேழாம் இடம் 

எழுத்தாளர் சல்மா அம்ஜத் கான், மதுரை

கதையின் பெயர் ‘காமராசு’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

ஸப்பியா சல்மா என்ற இயற்பெயர் கொண்ட இவர், சல்மா அம்ஜத் கான் என்ற பெயரில் ‘உன்னை என்றும் காதல் செய்வேனே’, ‘உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்.’, “நீயே என் ஜீவனடி” ஆகிய  மூன்று நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.  இன்னும் சில நாவல்களும் தொடர்கதைகளும் தற்சமயம் எழுதி வருகிறார். பிரதிலிபி தளம், 2020ம் ஆண்டின் நட்சத்திர எழுத்தாளராக இவரை அங்கீகரித்துள்ளது

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள சல்மா அம்ஜத் கான் அவர்களின் ‘காமராசு’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/kamarasu-salmaamjathkhan-storycontestentry/

 

பதினெட்டாம் இடம் 

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

கதையின் பெயர் ‘செல்வி அக்கா எப்போ வரும்’ 

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

தன் பெயருக்கு பின் MA, B.Ed (Eng), MA (Tamil), PG Dip (சைவ சித்தாந்தம்) என பல பட்டங்களை சேர்த்துள்ளார் ஸ்ரீவித்யா பசுபதி. பள்ளி நாட்களில் விளையாட்டாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின் கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு, அவ்வப்போது மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதைகளாகவும் கதைகளாகவும் வடிக்க ஆரம்பித்தார்.

பத்திரிகைகளுக்கும் இணைய இதழ்களுக்கும் நிறைய எழுதி வருகிறார். சமூக / குடும்பச் சிக்கல்களை எழுத்தில் வெளிப்படுத்தி, ஏதாவது நல்ல மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது தனது ஆசை என்கிறார் ஸ்ரீவித்யா

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள ஸ்ரீவித்யா பசுபதி அவர்களின் ‘செல்வி அக்கா எப்போ வரும்’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/selviakkaeppovarum-sreevidhyapasupathi-storycontestentry/

 

பத்தொன்பதாம் இடம் 

எழுத்தாளர் முனைவர் கி.இலட்சுமி,சென்னை

கதையின் பெயர் ‘இதுவும் புனிதமே

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

எம்.ஏ, எம்.பில், பி.எச்.டி(தமிழ்) பட்டங்கள் பெற்ற முனைவர் கி.இலட்சுமி அவர்கள், 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது, ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார்  

பெற்ற விருதுகள் / அங்கீகாரங்கள் 
– அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் வழங்கிய நல்லாசிரியர் மாமணி விருது
– இராமலிங்க அடிகளார் பேரவை வழங்கிய அருட்ஜோதி விருது
– சென்னை இலயன்ஸ் கிளப் வழங்கிய நல்லாசிரியர் விருது
– காஞ்சி கலைச்சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருது
– சிறந்த சிறுகதைக்கான கி.இராஜநாராயணன் விருது
– ப்ளாக்ஹோல் வலையொளி நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு
– தேன்சிட்டு மின்னிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு
– பாக்யா பப்ளிகேசன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு
– கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு
– முகநூல் குழுமங்கள் வாயிலாக செந்தமிழ் கவிஞர் விருது, பாரதி விருது, பாரதிதாசன் விருது, கவி மின்னல் விருது, சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது, செம்மொழிக்கவி விருது முதலான பல விருதுகளைப் பெற்றுள்ளார்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள கி.இலட்சுமி அவர்களின் ‘இதுவும் புனிதமே’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/idhuvumpunithame-lakshmi-storycontestentry/

இருபதாம் இடம் 

எழுத்தாளர் சுவாதி கிருஷ்ணா, சியாட்டில், அமெரிக்கா

கதையின் பெயர் ‘என் வாழ்வின் கீதம் நீதானே’

www.sahanamag.com

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 20 கதைகளின் ‘சிறுகதைத் தொகுப்பு’ புத்தகத்தின் ஒரு பிரதி,  ‘சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல் மற்றும் சான்றிதழ் இவருக்கு பரிசாக வழங்கப்படும்

எழுத்தாளர் பற்றி

சுவாதி லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுவாதி கிருஷ்ணா என்ற பெயரில் தமிழ் நாவல்கள் எழுதத் தொடங்கியுள்ளார். B.Tech (IT), ME (CSE) பட்டங்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியாக ஒரு வருடம் பணியாற்றியவர், திருமணத்திற்கு பின் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் 

“உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே” இது இவரின் முதல் முழு நாவல். இவருக்கு நாவல்கள் வாசிக்க மிகவும் பிடிக்கும் என்று கூறும் சுவாதி,  “என் வாழ்வின் கீதம் நீதானே” என்ற இந்த சிறுகதை தான் தனது முதல் சிறுகதை என்கிறார். சிறுகதைகள் மூலம் சமூக கருத்துகளை பகிர்ந்தால், அது சுலபமாய் மக்களை சென்றடையும் என்ற எண்ணத்தில் இந்த கதையை எழுதியதாக கூறுகிறார்

சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள சுவாதி கிருஷ்ணா அவர்களின் ‘என் வாழ்வின் கீதம் நீ தானே’ சிறுகதையை வாசிக்க இணைப்பு இதோ –  https://sahanamag.com/envaalvingeethamneethaane-swathikrishna-storycontestentry/

வாழ்த்துக்கள்

‘சஹானா’ இணைய இதழ், ஸ்ரீ ரேணுகா பதிப்பகம், Madhura Boutique (www.madhuraboutique.in), மற்றும் உங்கள் எல்லோரின் சார்பாகவும், வெற்றி பெற்ற 20 எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி, கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியிட்ட பின், புத்தகத்துடன் சேர்த்து மற்ற பரிசுகளும் அனுப்பி வைக்கப்படும்

பரிசுகளை வழங்குவோர் (Sponsor)

இந்த சிறுகதைப் போட்டிக்கு பரிசுகளை வழங்கும் சென்னையை சேர்ந்த Madhura Boutique, கடந்த 6 வருடங்களாய் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகிறார்கள் 

Madhura Boutique’ல்

- விசேஷங்களுக்கு அணியும் அலங்கார நகைகள்
- ஜெர்மன் சில்வர் நகைகள்
- வெள்ளி நகைகள்
- Trendyயான காதணிகள் 
- காட்டன் புடவைகள் 
- சில்க் காட்டன் புடவைகள் மற்றும்
- பட்டு புடவைகள் 
என பலவும் நியாயமான விலையில் பெறலாம்

www.madhuraboutique.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்து, உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து கொள்ளலாம். admin@madhuraboutique.in என்ற ஈமெயில் முகவரியில் கேட்டும் விவரங்கள் பெறலாம் 

என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 
நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்
contest@sahanamag.com
srirenugapathippagam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை