சஹானா
கவிதைகள்

என் அன்பு தோழி ❤ (கவிதை) – ✍ சௌமியா தக்ஷிணாமூர்த்தி

முகம் பாராது
முகவரி கேளாது
ஒருசொல் பேசாது
பறிக்கப்பட்ட நாத்தை 
பதியன் போடுவதாய்  
விடுதியெனும் சாம்ராஜ்யத்தை 
அடைந்ததும் தான் புரிந்தது
விடுதலை வீட்டை நோக்கியதென்று 

பல மனங்களாய் 
பரவியிருந்த நாங்கள் 
வித்தியாசம் மறந்து 
வளைக்குள் ஒன்றானோம் 

அக்கணம் தான் புரிந்தது 
அகண்ட இவ்வுலகில் 
பலதரப்பட்ட மானிடருடன் 
பாங்காய் வாழும் பயிற்சியே 
பத்துக்கு பத்து அறைகொண்ட
விடுதி வாழ்க்கையென்று 

பெற்ற தாயையும் 
பிணிக்கும் பசியையும் 
ருசிக்கும் உணவையும் 
அழச்செய்யும் வலியையும் 
அன்பின் அருமையையும் 
வாழ்வின் சூட்சமத்தையும் 
வலிக்க சொல்லித் தருவது 
விடுதி வாழ்க்கையது 

உற்றதோழி அமைந்துவிட்டால் 
உறவும் தான் மறந்திடுமோ 
அப்படித்தான் ஆனதெனக்கு 
தோழியவள் கிடைத்ததுமே 

எங்கள் நட்பதனை 
எல்லோரா ஓவியமாய் 
வரையத் தான் நினைத்தேன் 
வரவில்லை கலையெனுக்கு 

அவளை தீட்ட இயலும்
அவளின் அன்பை 
எவ்வாறு தீட்டுவேன் 
எம்மொழியில் உரைப்பேன் 

என் அன்பு தோழியே...
உடைந்த மனதிற்கு 
உற்ற மருந்தான 
உயிர்தோழி நீயே 

யாருக்கும் கிட்டாத 
அரிய வரம் நீ 
உறவாய் அல்ல
உயிராய் என்றும்

உறவாய் ஆன உயிரா? 
உயிராய் ஆன உறவா? 
என்னவென்று சொல்வேன் 
என்னுள் கலந்தவளை

#ad

      

        

#ad 

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: