in ,

ஆனந்தக் கண்ணீர் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கமலி, பக்கத்தில் வந்து நின்று கொண்டு டம்ளர்ல இருந்து காபியை டபரால ஊத்தி நிதானமா ஆத்திக் கொடுத்துக் கொண்டே,”ஏங்க இன்னிக்கு டிபன் என்ன வேணும் உங்களுக்கு? பூரி மசால் பண்ணட்டா இல்லை நெய் தோசையா”

“என்ன இன்னிக்கு தடபுடல் உபசாரமா இருக்கு?”

“என் தங்கை லோகு சாலிக்கிராமத்துல என்னமா வீடு கட்டி இருக்கா நீங்களும் பாத்தீங்க தானே”

“ஆமாம் நல்லாதான் இருந்தது,அவங்களுக்கென்ன, அவன் பெரிய மல்டி நேஷனல் கம்பெனில கை நிறைய சம்பளம் வாங்கறான்.உன் தங்கையும் நல்ல வேலைல இருக்கா, வீடு கட்டறதுக்கென்ன”

“உங்க சர்டிபிகேட் கேக்கலை நான், உங்கம்மா, இந்த வீட்டை இடிச்சு கட்ட விடுவாங்களா, ஒரு பெட்ரூம் உங்கம்மா ஆக்ரமிச்சிருக்காங்க,பெரிய ஹால்,பெரிய கிச்சன், பின்னால பெரிய தோட்டம் தேவையா?சும்மா என்னவோ ஆயுர்வேத ஆஸ்பத்திரி மாதிரி மூலிகைச்செடிகளா தோட்டம் அவ்வளவு பெரிசு தேவையா? நமக்குனு பிரைவசி இருக்கா?” முதல்ல உங்கம்மாவைக் கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேத்துடுங்க.”

சுந்தர்“ஏண்டி அவங்க என்ன உனக்கு இடைஞ்சலா இருக்காங்க”

“அவங்க இங்கே இருந்தா வீட்டை ஒண்ணும் பண்ண விடமாட்டாங்க”

“சரி இடிச்சு கட்ட பணம் வேண்டாமா,நான் என்ன சேத்தா வச்சிருக்கேன்.”

இதெல்லாம், விசாலத்துக்கும் கேக்காமல் இல்லை.

கமலி  அன்னிக்கு ராத்திரி வயிறு வலினு துடிச்சா.சுந்தருக்கு என்ன பண்றதுனு தெரியலை. விசாலம் அம்மாதான் எழுந்து தோட்டத்துல இருந்து, கற்பூரவல்லி, துளசி,புதினா,மற்றும் ஏதேதோ மூலிகைகளைப் பறிச்சுக் கொண்டு வந்து கஷாயம் பண்ணி குடிக்க வச்சா. 3 நாள் பக்கத்துல இருந்து வேளா வேளைக்கு சாப்பிடக் கொடுத்து  கவனிச்சதில் 4 வது நாள் கமலி ஃபிட்.

விசாலம், சுந்தரையும்,கமலியையும் உக்கார வச்சு திருஷ்டி கழிச்சா. கமலிக்கு மாமியாரின் உண்மையான அன்பு புரிந்தது.

விசாலம்,”டேய்,உங்கப்பா யாருக்கும் தெரிய வேண்டாம்னு ஒரு பெரிய தொகை டிபாசிட் பண்ணி கொடுத்துட்டுப் போயிருக்கார்,அதை எடுத்துக்கோ உன் பொண்டாட்டிக்கு தேவையான மாதிரி வீட்டை கட்டிக் கொடு. எனக்கெதுக்கு இனிமே பணமும் பவிசும். எனக்கும் கொஞ்சம் பொது சேவை செய்யணும் போல தோண்றது.  நான் பாபா ஆஸ்ரமத்துல போய் சேந்துக்கறேன். பயப்படாம இரு நான் தனியா இருந்துப்பேன்”

கமலி கதறிட்டா,”உங்க தங்கமான குணம் தெரியாமே பேசிட்டேன் அத்தை, எனக்கு நீங்கதான் வேணும் வீடு வேண்டாம்.இனிமே உங்க மனசு புண் படும் படி பேச மாட்டேன்.”

சுந்தரின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர்.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அது ஒரு முன்பனிக் காலம் (சிறுகதை) – சுஶ்ரீ

    சுத்தமான வீடும் வெண்டைக்காய் ரோஸ்டும் (சிறுகதை) – சுஶ்ரீ