in

உலகளாவிய சிறுகதை / நாவல் போட்டி 2023-24 (பரிசுத்தொகை ரூபாய் 10,000 + இலவசமாக புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு)

சஹானா இணைய இதழ்

உலகளாவிய சிறுகதை / நாவல் போட்டி 2023-24

மொத்த பரிசுத்தொகை ரூபாய் 10,000

பரிசு பெறும் படைப்புகள் எங்கள் ஸ்ரீ ரேணுகா பதிப்பக செலவில் அச்சுப் புத்தகமாக வெளியிடப்படும்.

விரிவான விதிமுறைகள்

  1. நமது 2021ஆம் ஆண்டு போட்டிக்கு இந்திய எழுத்தாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த முறையும் அதேப் போல் இந்த ஆண்டும், சிறுகதை மற்றும் நாவல் போட்டிக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த மூலையில் உள்ள தமிழர்களும் கலந்து கொள்ளலாம்.
  1. எழுத்தாளரே நேரடியாய் கதையை “சஹானா” தளத்தில் வெளியிட வேண்டும், உங்கள் சார்பாக நாங்கள் வெளியிட இயலாது. User ID இல்லாதவர்கள் contest@sahanamag.com என்ற முகவரிக்கு Login Link கேட்டு செய்தி அனுப்பவும்.
  1. நேரடியாய் நீங்கள் பதிவிடுவது மிகவும் சுலபம் தான். USER ID Create செய்த பின், எப்படி நேரடியாய் படைப்புகளை வெளியிடுவது என்ற DEMO Video Link உங்களுக்கு அனுப்பப்படும்.
  1. அதிக எண்ணிக்கையிலான சிறந்த படைப்புகள் வெளியிடும் எழுத்தாளர் வெற்றியாளராய் தேர்ந்தெடுக்கப்படுவார். படைப்புகள் சிறுகதைகள் / குறுநாவல்கள் / நாவல்கள் மூன்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  1. சிறந்த படைப்பு என்பது, வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி, எத்தனை பேர் வாசித்தார்கள் ஆகிய 5 அளவீடுகளில் தேர்ந்தெடுக்கப்படும்.
  1. சிறுகதை எனில், குறைந்தது 300 வார்த்தைகள் அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை இருக்கலாம்.
  1. நாவல் மற்றும் குறுநாவல், அத்தியாயங்களாக வெளியிட வேண்டும். ஒரு அத்தியாயம் 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம். 10,000 வார்த்தைகள் வரை உள்ள தொடர்கள் குறுநாவல் போட்டிக்கும், அதற்கு மேல் உள்ள தொடர்கள் நாவல் போட்டிக்கும் சேர்க்கப்படும்.
  1. ஜூன் 30, 2024 வரை “சஹானா” தளத்தில் பதிப்பிக்கப்படும் படைப்புகள் போட்டியில் சேர்க்கப்படும். தொடர்ந்து வார வாரம் அல்லது மாதம் சில படைப்புகளேனும் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பதை கவனத்தில் கொள்க.
  1. ஒருவர் எத்தனை சிறுகதை / குறுநாவல் / நாவல் வேண்டுமானாலும் பதிவிடலாம். நீங்கள் விரும்பினால் தினம் ஒரு கதை அல்லது நாவலின் அத்தியாயம் கூட எழுதலாம்.
  1. வயது வரம்பு இல்லை.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கேட்கலாம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

 

என்றும்  நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்

contest@sahanamag.com | editor@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

7 Comments

கடல் கடந்த காதல் ❤ (சிறுகதை) – வள்ளி, திருநெல்வேலி

மன்னிப்பாயா பெண்ணே (சிறுகதை) – Susri, Chennai