இனிய காலை வணக்கம்,
அனைவரும் நலமா? தவிர்க்க முடியாத காரணத்தால், சஹானா இணைய இதழின் ஆண்டு விழா நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருந்த இந்த வருட சிறுகதை / குறுநாவல் / நாவல் போட்டி முடிவுகள் சற்றே தாமதமாய் வெளியாக உள்ளது.
மொத்தம் 1295 படைப்புகள் போட்டியில் பங்குபெற தேர்வாகி சஹானா இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது, எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டி விதிமுறைகளின்படி இல்லாத சில நூறு படைப்புகள் சேர்க்கப்படவில்லை, அந்த விவரம் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அதன் பின் சிறந்த படைப்புகளை போட்டியில் சேர்த்தும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் பாராட்டுகள்.
1295 படைப்புகளையும் மதிப்பீடு செய்து முடித்தாகி விட்டது, சில இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் மீதமுள்ளது. அதையும் முடித்து, இந்த மாத இறுதிக்குள் வெற்றியாளர்கள் விவரம் பகிரப்படும். அதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற படைப்புகள் புத்தகமாக்கப்பட்டு, புத்தக பரிசும், பணப்பரிசும், மற்ற அங்கீகாரங்களும் விரைவில் எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் காரணமாய் 2024-25 போட்டிகள் முன்பு திட்டமிட்டபடி இந்த மாதம் துவங்கப்படவில்லை, செப்டம்பர் மாதம் தான் துவங்க உள்ளோம். இப்போது எழுத்தாளர்களே நேரடியாய் பதிவை சப்மிட் செய்வதால், நீங்கள் ஏதேனும் படைப்புகளை இதுவரை சப்மிட் செய்திருந்தால் அவை போட்டி துவங்கும் வரை pendingல் வைக்கப்பட்டு, பின் approve செய்யப்பட்டு சஹானா தளத்தில் வெளியாகும், 2024-25 போட்டியிலும் சேர்க்கப்படும்.
So, don’t worry about posts you submitted already, it is safe with us and will be included for upcoming contest. இது குறித்து நிறைய மின்னஞ்சல்கள் வந்ததால் இதைக் குறிப்பிட்டு சொல்கிறேன்
2024-25 வருடப் போட்டி பற்றிய விரிவான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கலந்து கொண்டு சிறந்த படைப்புகள் படைத்து வெற்றி பெற அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
2023-24 போட்டியில் பங்கேற்ற கதைகளை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் உள்ள எழுத்தாளர்களின் Compiled Link மூலம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை தேர்ந்தெடுத்து வாசிக்கலாம் – https://sahanamag.com/2023-24contestpostsinonelink/
விரைவில் போட்டி முடிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். நன்றி.
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings