இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கடவுளை வேண்டியதால் என்னவோ, காலையிலே ஒரு ஐடியா உதயமானது எனக்கு. அதை செயல்படுத்த ஆயத்தமானேன்.
அலுவகத்தில் செய்தித் தொகுப்பாளராக இருந்த சுந்தரிடம் சென்று நட்பு பாராட்டினேன். அவரை ‘டீ’ சாப்பிட அழைத்தேன். இருவரும் உணவகத்தில் அமர்ந்து கொண்டு, பேச்சை ஆரம்பித்தோம்.
சுந்தர் சார், இந்த கயல்விழியைப் பார்த்தீர்களா, திறமை ஒன்றும் பெரிதாக இருந்த மாதிரி தோன்றவில்லை. ஆனால் investigative reporter ஆக உள்ளாள்.
ஆமாம் ஆமாம். அவளுக்கு திறமை போதாது. அதோடு அதிர்ஷ்டமும் இல்லாதவள். இவளுக்கு ஒரு பையனோடு திருமண நிச்சயம் ஆகி இருந்தது. கல்யாணத்திற்கு முன்னால் அந்த பையன் ஏதோ விபத்தில் இறந்து விட்டான். அவளுடைய அம்மாவிடம் அடிக்கடி சண்டை இடுவாள் போல. ஒரு நாள் சண்டையில், அவளுடைய அம்மா, பேசுவதைக் கேட்டேன். ஏதோ, சாதிக்கப் போகிறேன் என்று என் பேச்சை மீறி பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தாய், திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தால் அதுவும் கூடவில்லை. நீ உண்மையிலே அதிர்ஷ்டம் இல்லாதவள் தான், என்று வாய்க்கு வந்ததை பேசினார்கள். அன்று தான், அவள் தற்கொலைக்கு முயன்றிருப்பாள் போல. ஆனால் அக்கம், பக்கத்தினர் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். இவளையெல்லாம், இங்கு பத்திரிக்கை துறைக்கு யார் அழைத்தது? என்று தன் மனக்குமறலை கொட்¢டினார்.
கயலின் தற்கொலை முடிவிற்கான காரணம் புரிந்தது, இனியும் கயலைப்பற்றி மோசமாக அவர் பேசுவதை நான் விரும்பவில்லை. வேலை இருப்பதால் பிறகு பேசலாம் என்று கிளம்பிவிட்டேன்.
இப்போது தான், எனக்குள் தௌ¤வு ஏற்பட்டது. கயலின் அம்மாவே, அவளை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறியதே தற்கொலைக்கு தூண்டி இருக்கிறது. கயலின் பிரச்சினை தீர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் மனதில் தீர்மானித்து விட்டேன். அதை செயல்படுத்தினேன்.
மூன்று மாத காலமும் முடிந்து விட்டது. கயலிடம் சென்று, கயல் எனக்கு கூடுதலான சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டது என்று விடைபெற்றுக் கொண்டேன். அவளின் முகத்தில் சிறு சோகம் தெரிந்தது. ஆனால் இது நிரந்தரமில்லை என்ற எண்ணத்தோடு கிளம்ப ஆயத்தமானேன்.
“அடுத்தவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்த தன்னலமற்ற முயற்சியில் ஈடுபடும்போது நம்முடைய வாழ்விலும் சந்தோஷம் மலர ஆரம்பிக்கிறது” என்று என்னுள் உணர்ந்தேன்.
“தௌ¤வுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள். மேலே ஒரு கை உங்களை வழிநடத்தும்” என்று கூறிய ஃபிலிப் ஜேம்ஸ் பெய்லி, கூற்றானது மெய்யானதாக தோன்றியது.
ஆறு மாதத்திற்கு பிறகு…
வழக்கம் போல் கயல் அலுவலகத்திற்கு சென்றாள். “சிறகுகள்” பத்திரிகை அலுவலகமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
கயல் விழி அலுவலகத்திற்குள், கால் எடுத்து வைத்ததும், அவளுடைய அம்மா ஓடி வந்து கயலை இறுக அணைத்துக் கொண்டாள்.
நீ சாதித்துவிட்டாய். நான் தான் உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை மிகவும் காயப்படுத்தி விட்டேன். கயலின் கைகளை பற்றிக் கொண்டு என்னை மன்னிப்பாயா, கயல் என்று கூறி கண்ணீர் சிந்தினார்.
“அம்மா, அழாதீர்கள், நான் தான் கொஞ்சம் பிடிவாதமாக இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” கயல்.
ஒருவர் பின் ஒருவராக வந்து பூங்கொத்து வழங்கி, கயலுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கயலுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன நடக்கிறது என்று.
பதிப்பாசிரியர் ஆறுமுகம் பெரிய மலர் மாலையை கொண்டு வந்து, முகத்தில் புன்னகையோடு, கயலுக்கு அணிவித்தார். வாழ்த்துக்கள் கயல். செய்தி தொகுப்பாளர் சுந்தரும் ஒரு மலர் கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தோழி தமிழ்செல்வி, Congratsடி, உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கட்டி அணைத்துக் கொண்டாள்.
கயலால் இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியாமல் குவியும் பாராட்டுக்களை.
போதும், போதும். யாராவது என்ன நடக்கிறது என்று தயவு செய்து கூறுங்கள்.
தமிழ்செல்வி, கயலின் அருகே வந்து ஒன்றல்ல, மூன்று சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings