in

தன்னம்பிக்கை (கவிதை) – ✍ கவி தா பாரதி

தன்னம்பிக்கை

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

விடியலில் சூரியன்

விழிக்கும் வேளையில்

வெட்டியாய் உறங்காதே

விழித்திடு என் தோழா

   

வாழ்க்கைக் கதவுகள்

வாகாய் திறந்திருக்க

வருந்தென்றல் உனை

வரவேற்கக் காத்திருக்க

விழித்திடு என் தோழா!

 

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தொளி பிறக்க வேண்டும்!

நீ கற்றதெல்லாம் இனி 

பயனுற வேண்டும்    

நீ காணும் கனவெல்லாம்

நல் நிகழ்வாக வேண்டும்!

 

நம்பிக்கை எனும் ஏணி

நன்றாய் நிமிர்ந்திருக்க

தோல்வியின் தோலுரித்து

வெற்றிப் படிகளேறி…. நீ

விரைந்தெழுவாய் கண்மணியே!

 

தன்னம்பிக்கை தானுணர்ந்து

தயக்கமின்றி தந்திடுவாய்

உண்மையென தானுணர்ந்து

உடலுழைப்பைத் தந்திடுவாய்!

 

சோம்பல் அரக்கனை…. நீ

சோர்வுறச் செய்திடின்

மாமலையும் ஓர் கடுகாம்!

முயற்சி நீ செய்திடின்

முடியாதென ஒன்றிலையே!

 

தன் முயற்சி வெற்றிபெறுமென 

தானுணர்ந்து உழைக்குங்கால்

வெற்றிக்கனி உனதேயாம்

முயற்சி நீ செய்திடின் 

வெற்றிச்சூரியனும் 

உன் கையெட்டும் தொலைவுதான்! 

 

விழித்தெழுவாய் மகனே – வாழ்வில்

வானமே உன் வசப்படும் 

உடன் விரைந்தெழுக என் தோழா!

கனவுகள் மெய்ப்பட 

வெற்றிக் கனி பறிக்க

காலம் கனிந்ததே

களிப்புடன் துள்ளி எழு

வெற்றி உன் வசமே!

           

மனதில் உறுதி வேண்டும்…

விடியல் சூரியன் 

விழித்தெழும் வேளையில்

விதியை நொந்து நீ 

வீட்டுக்குள் முடங்கி விட்டு

விதியே கதி என்றிருப்பது

விரக்தியில் தோன்றும் கானல் நீரே

 

விதியை மதியால் வெல்லுங்கால் 

விதி என் செயும் உனை?

மதி படைத்த கண்ணா –  நீ

மயங்கியே நிற்கலாகுமா?

 

“வெறுங்கை என்பது மூடத்தனம்

விரல்கள் பத்தும் மூலதனம்”

தன்னம்பிக்கை உனக்குள் பதிவு செய்ய… 

‘தாராபாரதி’ கவிதையில் சொல்லி வைத்தான்…!

 

உன்னால் முடியும் தம்பி…

உழைக்கும் கரங்கள் உனதாக

உலகை நீயும் வென்றிடுவாய்

ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுவாய்

புத்தம் புதிய உலகம் படைக்கவே 

 

தன்னம்பிக்கை உனதாக

தரணியில் என்றும் தாழ்வேது?

இலவம் பஞ்சு போல் – உன் மனதை 

இங்குமங்கும் அலையவிடாதே

 

உறுதியான நெஞ்சம் கொண்டு

உயர் சிந்தனைகள் வளர

கவலைகளை விட்டுவிடு – உன்

கல்மனமும் இலேசாகும்

 

நாளை நமதாகும்

நாளும் நலமாகுமென

நம்பிக்கை கைக் கொள்வாய்!

 

மனதில் உறுதி வேண்டும்…

நல்லனவென்றும் மெய்ப்படும்!

வானம் உன் வசமாகும்…

வாழ்க்கையும் நலமாகும்!

 

நலமுடன் நீ வாழ… என்

நல்வாழ்த்துக்கள்!

 

மன உறுதி!

நாளை நமதே!

நேற்றைய பொழுது கனவாகிட

நாளை என்பது எதிர்காலம்

இன்று மலர்ந்ததே நிகழ்காலம்

 

இன்றைய பொழுதில் இன்பமாக

கடமையைச் செய் கனிவாக

ஒன்றே செய்

அதை நன்றே செய்

அதையும் இன்றே செய்

 

நாளை வந்திடும் நலமாக

நம்பிக்கை கொள் உனதாக

கீழ் வானம் சிவக்கும் முன் 

தன்னம்பிக்கை சூரியன் உதிக்குமன்றோ?

 

கவிதை ஆசிரியரின் பெயர் காரணம் – கவி தா பாரதி

எழுதும் கவி அனைத்தும்

என் ஆசான் பாரதியின் ஆசியுடன்

எம்முள்ளே உதிக்கும் வேளை

அக்ஷய பாத்திரம் போல்

உள்ளுந்தொறும் ஊற்றெடுத்து

உற்சாகமாய் பிறக்க வேண்டும்

கவிதை! என்றே வணங்கி

வேண்டுதல் புரிந்தோம்

 

வற்றாது வரமருள எம் பாரதி 

என் நெஞ்சில் நிறைந்திருக்க

வற்றித்தான் போய்விடுமோ – எந்தன்

இதயத்தில் கவிதை ஊற்று?

நான் கவிதா பாரதி அல்ல

 

‘பாரதி, தா கவி எனக்கு’

என்று நான் இறைஞ்சுகையில்

‘கவி-தா-பாரதி’ என்றே

எம் பெயர் புனைதல் கொண்டேன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

கவி தா பாரதி

நன்றி, வணக்கம்

#ads – Amazon Great Indian Festival Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

14 Comments

  1. அருமை.. அருமை..!
    வார்த்தைகள் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது. தொடர்ந்து எழுதுக..!

  2. அன்பு செந்தமிழ் சுஷ்மிதா!

    எனது கவிதைகளை கண்ணுற்று தங்கள் மேலான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி பாராட்டுகின்றேன்.
    வணக்கம்! நல் வாழ்த்துக்கள்! 🎉

  3. மிக அருமையான நடை. ஆழமான கருத்து. நயம்பட உரைக்கின்ற பாங்கு என அனைத்திலும் தமிழ் இதயங்களை வென்றுவிட்டார் கவி தா பாரதி அவர்கள்.

  4. தங்கள் அன்பான விமர்சனம் என்னில் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது…
    நன்றி நான் நவில்கின்றேன்.

  5. இன்றைய உலகுக்கு, குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகவும் வேண்டிய ஒரு செய்தியை இந்தக் கவிதை சொல்லிச் செல்கிறது. பொதுவாக காலை நேரம் தன்னம்பிக்கையை நம் மனங்களில் நிறைக்கும் நேரம். மிகவும் அருமையான கவிதை. எளிமையான வார்த்தைகளில் நேர்மறையான கருத்துகளைப் பேசும் உயர்வான கவிதை. கவிதா பாரதிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

    • தங்கள் அன்பான விமர்சனங்கள் என்னுள் “தன்னம்பிக்கை” ஊட்டி உற்சாகப்படுத்துகின்றது.
      தங்கள் விமர்சனங்களுக்கு என் இதயங்கனிந்த ❤️ நன்றி! 🙏
      நல் வாழ்த்துக்கள்! 🎉

  6. கவிதா பாரதியின் கவிதை தன்னம்பிக்கை வளர்க்கும் கவிதை.
    இலவம் பஞ்சு போல பறக்கவும் கூடாது.
    கல் போல் கடினப்படவும் கூடாது என்று அருமையான வாழ்வியலை கவிதையாக்கி உள்ளார்.

    விதியே கதி என்று இருப்பது
    விரக்தி தரும் கானல் நீர்.

    என்ன வரிகளய்யா கவிஞரே…
    விதி என்ன செய்து விடும் என்று கேட்கும் போதே.
    விதி என்னை ஒன்றும் செய்யாது.
    என்று மனதில் விடை கிடைக்கின்றது.

    கவி தா பாரதி என்று பாரதியிடம் கேட்டீர்களா.
    கவிதை பாரதியாக எழுதியிருக்கிறீர்கள்.

    அருமையான கவிதை தந்த உங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள்

    • எனது கவிதைகளை ஆழப் படித்து நோக்கி, தாங்கள் தந்திருக்கும் விமர்சனம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். தங்கள் அன்பான பாராட்டுக்கள் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து, மேலதிகமாக கவிதைகள் எழுதத் தூண்டுகின்றது…
      நன்றிகளை அர்ச்சனைப் பூக்களாக்கி 🌹🌺🌹🌺🌹 காணிக்கையாக்குகின்றேன்…🙏

  7. உங்கள் தனித்துவமான விமர்சனம் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து மேலதிகமாக கவிதைகள் எழுதத் தூண்டுகின்றது.
    தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!
    நல்வாழ்த்துகள்! 🎉

  8. நேர்மறையான எண்ணங்கள் மூலம் குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் உந்துகோலாக அமைந்துள்ளது தன்னம்பிக்கை கவிதை. வாழ்த்துகள்.

    • தங்கள் அன்பான விமர்சனம் மற்றும் மேலான வாழ்த்துக்களுக்கும் நன்றி!🙏

  9. போட்டிகளும் பொராமைகளும் நிறைந்த இன்றைய உலகில் இளைய தலைமுறையினருக்கு தேவையான ஒன்று. அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருப்பதில் தங்களின் உங்களின் எண்ணங்களும் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையும் தெளிவாக தெரிகிறது. இதற்குமேல் நான் மிகவும் ரசித்து தமிழ் மொழியிலும் கவிதை எழுதுவதிலும் வார்த்தைகளின் மீது இருக்கும் ஆளுமை.

    நிறைவாக ஒன்று இது இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல உங்களின் வார்த்தைகளால் முதியவர்களுக்கும் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. கடைசி பகுதி அருமை அருமை. வாழ்த்துகள் கவிதா பாரதி.

    • தங்கள் சிறப்பான விமர்சனம் என்னுள் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தந்து, எழுதும் எழுத்தில் மேலதிகக் காதலை தூண்டுகின்றது.
      ஒரு கலைஞனுக்கு… கவிஞனுக்கு பட்டங்களும் பரிசில்களும் கிடைத்தாலும், உங்களைப் போன்றோர்களின் விமர்சனங்களும் அங்கீகாரமும் ஆதரவும்தான் மிகப்பெரிய விருதாக அமைகின்றது.
      நன்றிகளைக் காணிக்கையாக்கி
      நல் வாழ்த்துக்களுடன் நிறைவு செய்கின்றேன்.🙏

சூரசம்ஹாரம்… (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஆண் தேவதை (சிறுகதை) – ✍ ஐஸ்வர்யா குமார்