#ads – Best Deals in Amazon 👇
வணக்கம்,
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 அறிவிப்பிலேயே, இந்த போட்டியில் கதை படைக்கும் எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி, வாசகர்களுக்கும் பரிசு உண்டு என குறிப்பிட்டு இருந்தோம். இதோ, அதற்கான அறிவிப்புடன் வந்திருக்கிறோம்
அக்டோபர் தொடக்கம் முதல், சிறுகதைப் போட்டிக்கு தேர்வாகியுள்ள கதைகள், நம் ‘சஹானா’ தளத்தில் பிரசுரிக்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே
அந்த கதைகள் ஒரே இணைப்பில் தொகுக்கப்பட்டுள்ள Link இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/
நவம்பர் 30ம் தேதி வரை கதைகள் பிரசுரிக்க இருக்கிறோம். இது வரை பிரசுரிக்கப்பட்டது மற்றும் இனி பிரசுரிக்கப்பட இருக்கும் அனைத்து கதைகளையும் வாசித்து விமர்சனம் பதிந்து பரிசை வெல்லுங்கள்
போட்டிக்கான பரிசு
அதிக சிறந்த விமர்சனங்கள் பதியும் இரண்டு வாசகர்களுக்கான பரிசு விபரம் இதோ :-
1.Madhura Boutique ( https://madhuraboutique.in/) நிறுவனத்தார் வழங்கும் Rs.500 மதிப்புள்ள Gift Voucher
2.’சஹானா’ இணைய இதழ் வழங்கும் மெடல்
3.’சஹானா’ இணைய இதழ் வழங்கும் சான்றிதழ்
4.சிறந்த விமர்சனங்கள், சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் இடம் பெறும்
விமர்சனப் போட்டி விதிமுறைகள்:-
- ‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் தேர்வாகி பிரசுரிக்கப்படும் கதைகளை வாசித்து, உங்கள் Facebook பக்கத்தில் விமர்சனம் பதிய வேண்டும். அப்படி பதியும் போது ‘சஹானா இணைய இதழ்’ Facebook பக்கத்தை tag செய்ய வேண்டும். எங்கள் Facebook முகவரி இதோ – https://www.facebook.com/SahanaOnlineTamilMagazine/
- #சஹானா_சிறுகதை_விமர்சனப்_போட்டி_2021 என்ற இந்த Hashtag காட்டாயம் உங்கள் விமர்சனத்தில் இடம் பெற வேண்டும், இந்த இணைப்பில் இல்லாத விமர்சனங்கள் கணக்கில் வராது
- Hashtagஐ தொடர்ந்து, கதையின் தலைப்பு, எழுத்தாளர் பெயர், கதை எண் மூன்றும் சரியாக பதிய வேண்டும் (ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் கதையின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
- விமர்சனத்தின் இறுதி வரி, “போட்டி கதைகளின் இணைப்பு கமெண்டில் பகிரப்பட்டுள்ளது” என குறிப்பிட்டு, போட்டிக் கதைகளின் மொத்த இணைப்பு (Link) கமெண்டில் பதிய வேண்டும். கமெண்டில் பதிய வேண்டிய இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/
- விமர்சனம் குறைந்தது 100 வார்த்தைகள் இருக்க வேண்டும் (தலைப்பு, எழுத்தாளர் பெயர், கதை எண் தவிர்த்து)
விமர்சனம் பதிய கடைசி நாள் – டிசம்பர் 31, 2021
பின் குறிப்பு: மற்றவர்களின் விமர்சனத்தை Copy Paste செய்தால், அந்த விமர்சனம் போட்டியிலிருந்து நீக்கப்படும்
போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்கும் Madhura Boutique நிறுவனத்தாரின் இணைய முகவரி இதோ – https://madhuraboutique.in/. இந்த தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
Will i be notified for acceptance/rejection of my entry to the Monthly contest?
Yes mam, you will get a response within 2 weeks of submission. Thank you