மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)
துர்கா, லஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவியரையும் போற்றி வழிபடும் நாட்கள் தான் நவராத்திரி.
அழகான கொலு பொம்மைகளை படிகளில் அமைத்து அன்றாடம் பூஜை செய்து, வீட்டிற்கு வருபவர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன், வெற்றிலை தாம்பூலம் தந்து, நாளும் ஒரு நிவேதனமாக விதவிதமான சுண்டல் செய்து கோலாகலமாக கொண்டாடப்படும் விசேஷமான நவராத்திரியில், அனைவருக்கும் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.
நவராத்திரி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு நிவேதனமாக செய்யக்கூடிய வெல்லப்புட்டின் செய்முறையைப் பார்க்கலாம். செய்முறை சற்றே பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சுவை அபாரமாக இருக்கும்
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிதளவு
மஞ்சள்பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை
- பச்சரிசியை தண்ணீர் விட்டு நன்கு களைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு துணியில் உலர விடவும். அடுத்து அதனை மிக்சியில் நன்கு அரைத்தெடுத்து மாவை சலித்துக் கொள்ளவும்
- சலித்த மாவை வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும். இன்னொரு அடுப்பில் ஒரு கப் தண்ணீரை சுட வைத்து அதில் மஞ்சள் பொடி சிறிது சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளவும்
- மாவு சிறிது ஆறியதும் அதில் மஞ்சள் பொடி சேர்த்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசிறணும். கட்டியில்லாமல் பிசறிக் கொண்டு, பிடித்தால் பிடிக்க வரணும்! விட்டால் உதிரணும்! இது தான் பக்குவம்
- இந்த மாவை ஒரு சுத்தமான துணியில் மூட்டை போல் கட்டி இட்லிப் பானையில் பத்து நிமிடம் வைத்தெடுத்து ஆற விடவும்.
- அடுத்து அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைத்து கொடுத்துள்ள வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டிப்பாகு தயார் செய்யவும்.
- பாகை வெந்த மாவில் சேர்த்து நன்கு பிசறி விடவும். ஏலக்காய்த் தூளும் சேர்க்கவும். தேங்காய்த் துருவலும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்
சுவையான வெல்லப்புட்டு தயார்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
Click here to view more recipes in Adhi’s Kitchen YouTube Channel
#ads – Amazon Deals 👇
தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings