இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தற்போது, வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று, (Manager) மேலாளரிடம் மூன்று மாதம் விடுப்பு கேட்டேன்.
என்ன மதி, என்ன நினைத்துக் கொண்டு மூன்று மாத காலம் விடுப்பு கேட்கிறீர்கள். முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.
ஒரு வார இடைவிடாத முயற்சி, மற்றும் எனக்கு மருத்துவ சிகிச்சை தேவை இருக்கிறது என்று சொன்ன பல்வேறு காரணத்தினால், ஒரு நிபந்தனையோடு விடுப்பு கொடுத்தார்.
நீ தற்போது செய்யும் வேலையை செய்வதற்கு தகுதியான ஒருவரை வைத்துவிட்டு விடுப்பு எடுத்துக் கொள் என்றார்.
சரி என்று ஒப்புக் கொண்டேன்.
மூன்று வாரமே இருந்த நிலையில் கடுமையாக இரவு பகலாக முயற்சி செய்து கடவுளின் கிருபையால், ஒருவரை தேர்ந்தெடுத்து சேர்த்து விட்டேன்.
அம்மாவிடம், எனக்கு பிடித்த வேலையை சிறிது காலம் செய்கிறேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டேன்.
நான் செய்யும் இந்த செயல்களை எல்லாம் பார்த்துவிட்டு, என் அறையில் இருந்த சிவா, என்னிடம், “மதி, உன் தோழி கயலை நீ விரும்புகிறாயா” என்று கேட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத நான், சுதாகரித்துக் கொண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு அவள் தோழி. அவள் கஷ்டத்தில் இருப்பதை நான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன், அவ்வளவு தான்.
நீ செய்வதை எல்லாம் பார்த்தால், உனக்குள் காதல் வந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.
நான் மறுபடியும் மறுத்து, அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
புதிய வேலையில் சேர்வதற்கான நாள் வந்தது. நான் கயலை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியில் பறப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது என்னில்.
புதிதாக சேர்ந்த என்னை துணை பதிப்பாசிரியர், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். கயல் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.
ஹாய் மதி, what a surprise, உன்னை இங்கு சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீ எங்களோடு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி.
அம்மா மற்றும் வீட்டில் அனைவரும் நலமா என்று நலம் விசாரித்துக் கொண்டாள். நீ பொறியியல் படித்ததாக கேள்விப்பட்டேன் இங்கு எப்படி?
பொறியியல் படிப்பும், photography course-ம் இரண்டும் படித்திருக்கிறேன்.
Ok மதி, நிறைய வேலை இருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம் என்று விடைபெற்றுச் சென்றாள்.
அவளுடைய பழைய புன்சிரிப்பு, கலகலப்பு குறைந்துள்ளதுபோல் தோன்றியது. எனக்குள் அவளை சந்திக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம் அவளுக்குள் இருந்ததாக தெரியவில்லை.
நாம், அவளுக்காகத் தான் வந்திருக்கிறோம் என்று அவளுக்கு தெரியாது. ஏற்கெனவே அவள் மன அழுத்தத்தில் இருக்கிறாள். அதனால் பெரிதாக எதுவும் அவளிடம் எதிர்பார்க்க முடியாது என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
மதிய நேரத்தில், அவளுடைய தோழி தமிழ்செல்வியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
நாட்கள் கடந்து சென்றன. கயல் தானாக அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. நானாக கேட்பதற்கு எனக்கு மனம் வரவில்லை. இரண்டு வாரம் ஓடிவிட்டது. கயலின் தோழி தமிழ்செல்வியிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
மறுநாள், மெதுவாக தமிழ்செல்வியிடம் பேச்சு கொடுத்தேன்.
கயலிடம், பள்ளிப் பருவத்தில் இருந்த கலகலப்பு இல்லை. ஏதேனும் பிரச்சினையா?
என்ன மதி சார், வந்த இரண்டே வாரத்தில், பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள். அப்படி உங்களுக்கு தோன்றினால், நீங்கள் கயலிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
இல்லை. எனக்கு தோன்றியதை கேட்டேன் என்று அன்றைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
இவ்வாறு சென்று கொண்டிருந்தால் ஒரு முடிவு கிடைக்காது. நமக்கு நாள்களும் மிகவும் குறைவாக இருக்கின்றதே என்ற யோசனை.
இரண்டொரு நாள்கள் கழித்து, தமிழ்செல்வியிடம், எல்லா விஷயங்களையும் கூறினேன். நான் வந்ததே கயலுக்காகத்தான், அவளுடைய வாழ்வை மாற்ற நினைக்கிறேன். தயவு செய்து, உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள், என்று.
நீங்கள் வந்ததிலிருந்து, கயல் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்கிறேன். அதனால் நீங்கள் கூறுவதை நம்புகிறேன். ஆனால், அலுவலகத்தில் இதைப்பற்றி பேச முடியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து பேசலாம், என்று ஒத்துக் கொண்டாள்.
தமிழ்செல்வியை ஒரு பூங்காவில் சந்தித்தேன். நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தாள்.
அவள் மிகவும் ஆசைப்பட்டு இந்த வேலையில் சேர்ந்தாள். ஆனால் அவளுடைய படைப்பு எதையும் பிரசுரம் செய்ய பதிப்பாசிரியர் ஆறுமுகம் விரும்புவதில்லை. கயலைக் கண்டாலே அவருக்கு பிடிப்பதில்லை. காரணம் எதுவும் தெரியவில்லை. அவள் நினைத்ததை பத்திரிக்கைத் துறையில் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவளுக்குள் இருக்கிறது.
கயலின் அம்மாவிற்கு கயல் செய்வது எதுவும் பிடிக்கவில்லை. ஏதோ பெரிய சண்டை இருவருக்குள்ளும். இருவரும் பேசுவதில்லை. அந்த சமயத்தில் தான் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். தங்கையும் அவளிடம் நெருக்கமாக இருப்பதில்லை. கயலை சுயநலவாதியாகப் பார்க்கிறாள். கயல் அவர்களை எதிர்த்து செய்தது, ஒன்றே ஒன்றுதான். அவளுக்குப் பிடித்த பத்திரிகைத்துறை தேர்ந்தெடுத்தது தான்.
வீட்டிலும், அலுவலகத்திலும் சந்தோஷம் இல்லை. மிகவும் மனஅழுத்ததில் இருக்கிறாள். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறாள். எனக்கு தெரிந்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன். நீங்கள் கயலிடம் எதுவும் இதைப்பற்றி கேட்க வேண்டாம். தம்மால், மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவள் விரும்ப மாட்டாள்.
இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு ‘டீ’ அருந்திவிட்டு இல்லம் திரும்பினோம்.
நான் எனக்குள் மிகவும் குழம்பிப் போனேன். இவ்வளவு முயற்சி செய்தும், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் தெரியவில்லை. கயலுக்கு மனஅழுத்தம் இருப்பது உண்மை. ஆனால் இது மட்டும் தற்கொலை வரைக்கும் இட்டு செல்லாது. அவளுடைய மனதைரியம், நேர்மறை சிந்தனைகளை பள்ளிப்பருவத்தில் இருந்தே நான் அறிந்திருக்கிறேன்.
கயல்விழிக்கும், அவள் அம்மாவுக்கும் மட்டும் தெரிந்த இரகசியத்தை நாம் எப்படி தெரிந்து கொள்வது. கயிலிடம் கேட்டால் காயப்பட்ட அவள் மனதை மீண்டும் காயப்படுத்தியது போல் ஆகிவிடும்.
அம்மாவிடம் கேட்கலாம் என்றால், என்னைப் பற்றி ஒன்றும் அவர்களுக்கு தெரியாது. அப்படியே, பள்ளித் தோழன் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்கு சென்றாலும் அம்மா, எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. கயலுக்கும், அவள் அம்மாவுக்கும் ஏற்கெனவே பேச்சு வார்த்தை இல்லை. அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை பெரிதாக்கி விடகூடாது.
எனக்கு, நேரம் குறைவாக தான் இருக்கிறது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்து, கடவுளின் கையில் கொடுத்துவிட வேண்டியதுதான். இதைபற்றிய தௌ¤வு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் தூங்கிப்போனேன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings