வணக்கம்,
2023-24 ஆண்டின் சிறுகதைப் போட்டி / குறுவல் போட்டி / நாவல் போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் முதற்கண் மனமார்ந்த வாழ்த்துகள்.
வெற்றி பெறுதலின் முதல் படி, போட்டியில் கலந்து கொள்ளல். ஆகையால், இந்த வருடப் போட்டியில் தங்கள் படைப்பு முன்னிலை வகிக்கவில்லை என்றாலும், இது வெற்றிக்கான முதல் படியாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
நம் ‘சஹானா’வில் ஆரம்ப காலத்தில் அறிமுக எழுத்தாளர்களாய் களமிறங்கிய பலர், இன்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளையும் விருதுகளையும் பெறுவதை இணையம் மூலம் கண்டு மகிழ்கிறோம். அவர்களின் படைப்புகளை வெகுஜன பத்திரிக்கைகளில் காணும் போது, நானே வெற்றி பெற்றதைப் போல் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் பாராட்டுகள்.
போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டது போல், வடிவமைப்பு, பிழைகள், கதைக்கரு, எழுதும் பாணி, எத்தனை பேர் வாசித்தார்கள் ஆகிய 5 அளவீடுகளில் மதிப்பெண் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த வருட போட்டிகள் பற்றிய அறிவிப்பு நாளை நம் ‘சஹானா’ தளத்தில் (www.sahanamag.com) வெளியிடப்படும். தொடர்ந்து சிறந்த படைப்புகளை படைத்து, வெற்றி பெற்று, நல்லதொரு எழுத்தாளராய் எல்லா தளத்திலும் பரிமளிக்க வாழ்த்துகள்.
எழுத எழுத தான் எழுத்து கைவரும். நல்ல எழுத்தை படைக்க வாசிப்பும் அவசியம்.
“வாசிப்பு வசப்பட வானமும் வசமாகும்”
“வாசியுங்கள்… வானத்தை வசமாக்குங்கள்… வாழ்க… வளர்க!”
நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘சஹானா’ இணைய இதழின் 2023-24 ஆண்டு சிறுகதைப் போட்டி / குறுநாவல் போட்டி / நாவல் போட்டி முடிவுகள் இதோ:-
2023-24 போட்டியில் பங்கேற்ற கதைகளை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பின் மூலம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை தேர்ந்தெடுத்து வாசிக்கலாம் – https://sahanamag.com/2023-24contestpostsinonelink/
பரிசு பெற்ற படைப்புகள் புத்தகமாகி வந்ததும், மற்ற பரிசுகளுடன் சேர்ந்து மொத்தமாக அனுப்பி வைக்கப்படும்.
வெற்றி பெற்றவர்கள், தங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண் (for courier tracking), contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிருங்கள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!!!
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings