sahanamag.com
போட்டிகள்

கொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்

வணக்கம்,

கொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டிக்கு, உங்கள் கதைகளை சிரத்தையுடன் எழுதி அனுப்பிய குழந்தைகள் அனைவருக்கும், முதற்கண் மனமார்ந்த வாழ்த்துக்கள்

போட்டி அறிவிப்பின் போதே சொன்னது போல், வெற்றி பெறுவது நோக்கமல்ல, முயற்சியே பெரும் வெற்றி

அந்த வகையில் பார்த்தால், கதை அனுப்பிய எல்லோரும் வெற்றியாளர்களே. பிள்ளைகள் அனைவருக்கும் முதலில் ஒரு பெரிய கைத்தட்டல் 👏👏👏

இனி, பரிசு பெற்றவர்களின் விவரங்களை பார்ப்போம்

1. இரா. வகுளலக்ஷ்மி – கோவை மாவட்டம்

2. யோ. யாஷினி –  கம்பம், தேனி மாவட்டம்

இந்த இருவரின் கதைகளுமே முதல் பரிசுக்கு உரியதாய் அறிவிக்கப்படுகிறது. பரிசு பெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌷👏

அவர்களுக்கான eCertificate மற்றும் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

அடுத்து வரும் நாட்களில், வகுளலக்ஷ்மி மற்றும் யாஷினி எழுதிய சிறுகதை, சஹானா இதழில் பிரசுரிக்கப்படும்

சஹானா இதழின் செப்டம்பர் பதிவுகளின் தொகுப்பு, Amazonல் eBookஆக வெளியிடப்படும் போது, இந்த கதைகளும் அதில் சேர்க்கப்படும். நன்றி

குழந்தைகள் எழுத ஊக்கம் அளித்த பெற்றோருக்கும் நன்றிகள் பல 🙏

மீண்டும் ஒரு முறை, பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்


Similar Posts

4 thoughts on “கொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்
  1. குழந்தைகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்…தொடர்ந்து பல படைப்புகள் வெளிவரட்டும்..

  2. குழந்தைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள். இருவரும் எழுத்துப் பணியில் மேன்மேலும் சிறப்பாகப் பரிமளிக்கவும் வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!