in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 4)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

கோபியைத் தூக்கிக் கொண்டு நந்தகோபாலின் மருத்துவமனைக்குச் சென்றாள் மஞ்சுளா

அவன் அறைக்கு வெளியே இருந்த ரிஸப்ஷனிஸ்ட், “டாக்டர் ஒரு முக்கிய கான்பரன்ஸில் இருப்பதால் யாரையும் உள்ளே விடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார் மேடம்” என்றாள்

மஞ்சுளா எதையும் காதில் வாங்காமல் அவளைத் தள்ளி விட்டு, அவன் அறைக் கதவைத் திறந்து உள்ளே போனவள், அதிர்ந்து போனாள்

நந்தகோபாலின் மடியில் அரைகுறை ஆடையுடன் சிந்தாமணி. வெட்கத்தாலோ அல்லது அச்சத்தாலோ, சிந்துவை தள்ளி விட்டு எழுந்து நின்றான் நந்தகோபால்.

போன வேகத்தோடு இறுகிய முகத்துடன் வெளியே வந்த மஞ்சுளா, ரிஷப்னிஸ்டை முறைத்து விட்டு, தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு டாக்டரிடம் மகனை அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

பேயறைந்தாற் போல் இருந்த மஞ்சுளாவை, செல்லம் மாமி பலமுறை கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை. அன்று இரவு நந்தகோபால் வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான்.

நந்தகோபாலின் போக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததால், எதை பேசினாலும் சண்டை வலுத்து வேலைக்காரர்கள் முன்னால் மானம் போகும் என்று வாயைத் திறக்கவில்லை மஞ்சுளா

சில நாட்களாகவே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காமல் போவதும், ஒரு வார்த்தையும் பேசாமல் போவதும், செல்லம் மாமிக்குத் தான் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் மஞ்சுளா தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு கவனம் செலுத்தினாள். கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் முடிந்து விட்டன. முடியும் தருவாயில் இருந்தது.

மனதிற்குள் புகைந்து கொண்டிருந்த வேதனையா, இல்லை வேலை பளுவா எது என்று தெரியாமல், வகுப்பில் தொல்காப்பியம் இலக்கண நூலை கற்பிக்கும் போது தாங்க முடியாத தலைவலி.

அந்த வகுப்பிற்குப் பிறகு வேறு வகுப்புகள் இல்லாததால், அலுவலகத்தில் சொல்லி விட்டு மூன்று மணிக்கெல்லாம் வீடு திரும்பினாள்.

வெளியே வெராண்டாவில் கோபி விளையாடிக் கொண்டிருந்தான்           

‘ஏன் பிள்ளை தனியாக இருக்கிறான், செல்லம் மாமி எங்கே போனார்?’ என மஞ்சுளா நினைத்த நேரம், செல்லம் மாமி ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

“அந்த பெண்ணிற்காக டாக்டர் சார் தான் வாங்கி வரச் சொன்னார் அம்மா. இந்த நேரம் பார்த்து டிரைவர் சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லைனு கிளம்பிட்டாரு, அதான் நானே போக வேண்டியதாயிடுச்சு” என  சில கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களை காட்டி சொன்னார்  செல்லம் மாமி 

“என்ன?” என்றாள் மஞ்சுளா திகைப்புடன்.

“ஆமாம் அம்மா, அந்தப் பெண் உள்ளே தான் இருக்கிறாள்”

மஞ்சுளா காலிங் பெல்லை பல முறை அழுத்திய பிறகு, நந்தகோபால் வந்து கதவைத் திறந்தான். உடம்பில் பனியன் கூட இல்லை. மஞ்சுளா ஒன்றும் பேசாமல் கோபியைக் தரதரவென்று இழுத்துக் கொண்டு வேகமாகத் தன் அறைக்குள் போனாள்.

அங்கே மஞ்சுளாவின் படுக்கையில் சிந்தாமணி கலைந்த ஆடைகளுடன் கோணல் மாணலாகப் படுத்திருந்தாள்.

“ஐயே ஷேம் ஷேம்” என்றான் கோபி முகத்தைச் சுளித்துக் கொண்டு

“மாமி…” என்று கத்தினாள் மஞ்சுளா. அவள் கத்திய கத்தலில் மாமி, நந்தகோபால் இருவரும் ஓடி வந்தார்கள்.

“இவளை எழுப்புங்கள் மாமி, இவள் ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறாள்?” என்றாள் மஞ்சுளா எரிச்சலுடன்.

“இந்த மேடம், முதலில் டாக்டர் அறையில் தான் இருந்தார்கள். ஆனால் அங்கே வாந்தி எடுத்து அறையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டியிருந்தால், இங்கே கொண்டு வந்து படுக்க வைத்து விட்டுத் தான் கடைக்குச் சென்று ஜூல்ஸ் பாட்டில்கள் வாங்கி வந்தேன்”

செல்லம் மாமி மெதுவாக சிந்தாமணியை டாக்டர் நந்தகோபாலின் உதவியுடன் தூக்கினாள், சிந்தாமணி குடித்திருப்பாள் போலும்

தள்ளாடியபடியே ,”ஹே மஞ்சு, இது என்ன உன் வீடா? உன் அண்ணன் உனக்குக் கொடுத்த சீதனமா இது? இது டாக்டர் வீடு, இப்போது இந்த வீட்டில் எனக்கும் உரிமை இருக்கிறது. என்ன நந்து நான் சொல்வது ?” என்றாள் குழறியபடியே

“ஹண்ரட் பர்ஸன்ட் கரெக்ட்” என்றான் நந்தகோபால் சிரித்தபடியே, மஞ்சுளாவைக் கேலியாகப் பார்த்த படி

அடுத்த நாள் காலை எதுவும் நடக்காதது போல், காலைச் சிற்றுண்டியை முடித்து மருத்துவமனைக்கு கிளம்பினான் நந்தகோபால்.

“ஒரு நிமிடம்…. நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்” என்று எதிரில் வந்து நின்றாள் மஞ்சுளா.

செல்லம் மாமி உள்ளே போகத் திரும்பினாள்.

“நீங்களும் இருங்கள் மாமி. இந்த வீட்டில் நான் வருவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்குத் தெரியாத விஷயம் ஏதுமில்லை” என்றவள்

தன் கணவனை நோக்கி, “நேற்று நீங்கள் சிந்தாமணியை வீட்டிற்கு அழைத்து வந்து என்னை அசிங்கப்படுத்தியதற்கு என்ன காரணம்?”

“ரொம்ப தேங்க்ஸ், எப்படி சொல்வது என்று நினைத்தேன், நீயே ஆரம்பித்தது நல்லதாச்சு. இது கூடவா புரியவில்லை, நான் அவளை மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன். உனக்கு இந்த செல்வாக்கு, வசதியான வாழ்கை, டாக்டரின் மனைவி போன்ற அந்தஸ்து, வசதிகளை விட்டுப் போக மனமில்லையென்றால், நீயும் இங்கேயே இருக்கலாம்.

நீ இங்கே இருக்க வேண்டுமானால் சிந்துவோடு ‘அட்ஜஸ்ட்’ பண்ணித் தான் வாழ வேண்டும். இங்கே இருப்பதும் வெளியே போவதும் உன் விருப்பம். ஆனால் நான் உன்னை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டேன்” என்று கூறி விட்டு  அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கிளம்பினான்

“ஒரு நிமிடம் ” என்று கூறிய மஞ்சுளா, “என் அறையின் சாவி, நீங்கள் எனக்காகக் கொடுத்த பீரோவின் சாவி, லாக்கர் சாவி, வங்கி அக்கௌன்ட்ஸ் புக்ஸ் எல்லாம் இருக்கிறது. நான் என் பணத்தில் வாங்கிய பொருட்களையும், என் வங்கிக் கணக்கு புத்தகத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு போகிறேன்” என்றவள், கோபியை ஒரு கையில் தூக்கிக் கொண்டாள்.

“அம்மா, இரண்டு இட்லியாவது சாப்பிட்டு விட்டு, குழந்தைக்கும்  ஊட்டி விட்டு கிளம்புங்க ம்மா” என்றாள் மாமி, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

“வேண்டாம் மாமி, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று  கோபியுடன் படி இறங்கினாள்

தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கோபியையும் சௌகரியமாக அமர வைத்துத் தன் பயணத்தைத்  தன் மகன் துணையுடன் தொடங்கினாள்.

மஞ்சுளாவின் அண்ணா, அண்ணிக்கு ஏற்கனவே நந்தகோபாலுக்கு சிந்தாமணியிடம் உள்ள தொடர்பு மற்றவர்கள் மூலம் தெரிந்திருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து பொது இடங்களில் சுற்றியதை சில சமயங்களில் பார்த்து வேதனை அடைந்ததும் உண்டு.

அதனால் அவர்கள் மஞ்சுளாவை எதுவும் விசாரிக்கவில்லை. குழந்தை கோபியை ஆசையுடன் தூக்கிக் கொண்டனர்

“நீ இன்னும் முன்பே இங்கே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றனர்

“ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பிறகு கல்லூரிக்கு போ மஞ்சுளா. இந்த மனநிலையில் எப்படி கவனத்துடன் பாடம் எடுக்க முடியும்?” என்றான் ராகவன்

‘ஆமாம்’ என்று தலையசைத்தாள் சாரதா.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அண்ணா. இது பழக்கப்பட்ட மனநிலை தான். கோபி மட்டும் நாளையிலிருந்து பேபி ஸ்கூலுக்குப் போகட்டும். இன்று போக வேண்டாம்” என்றாள் மஞ்சுளா .

“கோபியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். எங்கள் வங்கிக்கு அருகில் தான் டே-கேர் சென்டர், செல்லக் குட்டியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றாள் சாரதா

அன்று முதல், அண்ணா வீட்டில் இருந்து கல்லூரிக்குக் கிளம்பினாள் மஞ்சுளா. அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. கணவனை விட்டுப் பிரிந்தோம் என்ற சோகமும் இல்லை, அவன் கொடுமையிலிருந்து தப்பித்தோம் என்ற சந்தோஷமும் இல்லை.

அவள் எழுதி வரும் கட்டுரையை முடிப்பதிலேயே கருமமே கண்ணாயினார் என்று இருந்தாள். அந்த கட்டுரையை முடித்தவுடன், அதை அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவிற்கு அனுப்பினாள்.

அவர்கள் அந்த கட்டுரையை ஆராய்ச்சிக் குழுவின் மூலம் முக்கியமான எல்லா நாட்டுப் பத்திரிகையிலும் வெளியிட்டதுடன், அதற்குப் பரிசாக மூவாயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்பியிருந்தனர்

மேலும் தங்கள் பல்கலைக்கழகத்தில் வந்து பணிபுரிய முடியுமா என்றும் கேட்டிருந்தனர். முடியும் என்றால் ஒரு வாரத்தில் பதில் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.

“இங்கேயே தான் நல்ல சம்பளம் கிடைக்கிறதே மஞ்சு, அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்ன?” என்றான் அண்ணா ராகவன்

“இது ஒரு நல்ல சந்தர்ப்பம், மிஸ் பண்ணிடாதீங்க” என்றனர் நண்பர்கள்

இதற்குள் அங்கேயே பப்ளிஷாகும் சில ‘லோக்கல்’ பத்திரிகைகள்  மஞ்சுளாவின் போட்டோ போட்டு அமர்க்களப்படுத்தி விட்டது.

இதனிடையே நந்தகோபால் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் வந்தது

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20  சிறுகதைகள்,  நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது. 

இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇

 

(தொடரும் – புதன் தோறும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

    தியாக முத்திரை (வரலாற்றுச் சிறுகதை) – ✍ கவி தா பாரதி, சென்னை