in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 30) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16      பகுதி 17     பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22  பகுதி 23     பகுதி 24     பகுதி 25     பகுதி 26    பகுதி 27    பகுதி 28    பகுதி 29

காவ்யா அன்று காலேஜ் லீவு என்பதால் கொஞ்சம் மெதுவாக எழுந்தாள் ..ஆதர்ஷ் ரூம் பக்கத்தில் ஸ்டடி ரூம் இருந்தது அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆதர்ஷ் தன்னுடைய ஸ்டடி ரூமில் உள்ள திவானில் படுத்துக் கொள்வான். காவ்யா படிக்கவேண்டியது எல்லாம் முடித்துவிட்டு, ரெக்கார்டு எழுதுவாள். முடித்த பிறகு படுக்கையறையில் உள்ள மெத்தையில் படுத்துக் கொள்வாள்.

எப்பவாவது இரவில் ஜெய் அழைத்தால் ,மெதுவாக கதவைத் திறந்து கொண்டு, தன்னுடைய அறைக்குப் போய், கதவை தாளிட்டுக் கொண்டு பேசுவாள். பேசி முடித்துவிட்டு சத்தமில்லாமல் வந்து படுத்துக் கொள்வாள். ஆதர்ஷ் அதைக் கவனித்தாலும் கவனிக்காதது போல இருந்து விடுவான்.

அன்றும் ஜெய் இரவில் அழைக்க, காவ்யா போனுடன் தன்னுடைய அறைக்குச் சென்றாள்..

“ஏய் பேபி.. என்னடா பண்ற இன்னும் தூங்கலையா? “

“போப்பா உனக்கு என்ன நீ படிச்சு முடிச்சு.. வேலைக்கு போயிட்ட ..இந்த ரெக்கார்ட் சப்மிஷன்குள்ள உயிரே போகுது .”

“பேசாம நீரஜாகிட்ட கொடுத்து வரைஞ்சு கொடுக்கச் சொல்லு..அவ சும்மா தானே வெட்டியா இருக்கா..”

“ராதிகா, சுஜிதா, எல்லாம் ரெக்கார்ட் சப்மிட் பண்ணிட்டாங்க. நான் தான் இன்னும் பாக்கி வைச்சிருக்கேன் “

“பேபி என்ன உன் மாமியார் கூட சேர்ந்து சமையல் எல்லாம் பண்ணுறியா? “

“உனக்கு இதே வேலையா போச்சு.. சமைச்சதை சாப்பிடுறதுக்கே நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுல சமையல் எங்க பண்ண… பாரு விதவிதமா சமைச்சு போடறா, சாப்பிட்டு சாப்பிட்டு ஒரு சுத்து பருத்து போயிடுவேன் போல.”

“ஐய்ய்ய்யோ குண்டாயிடாதடி …உன் அழகே அந்த ஸ்லிம்மான உருவம் தான்.. நான் இப்ப இருக்கிற வீட்டுக்கு கதவு சின்னது. அதுக்குள்ள நுழைய முடியாமல் குண்டாயிடாதே..”

” கலாய்க்காதே பேபி ..வெயிட்டை குறைக்க .. நானும் மாயாவும் தோட்டத்தை ஏழெட்டு தடவை சுற்றி வந்துடுவோம்”

“பேசாம ஆதர்ஷ் கூட ஜாகிங் போக வேண்டியதுதானே?”

“அவரு காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு போயிடறாரு. நல்லா சூப்பரா தூக்கம் வர்ற நேரம். அப்ப போய் எழுந்திருச்சு ஜாக்கிங் போறதெல்லாம் என்னால முடியாதுப்பா “

“ஆனாலும் ரொம்பவே சோம்பேறி ஆயிட்டடி..அப்புறம் நான் வேலை விஷயமா இங்க பக்கத்திலே இன்னொரு ஊருக்கு நாளைக்குப் போறேன். ரெண்டு நாள் ட்ரெய்னிங் ப்ரோக்ராம். அதனால உன்கிட்ட பேசுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதை முடிச்சிட்டு வந்து பேசுறேன்..நேரமாயிடுச்சேன்னு கூப்பிட யோசிச்சுகிட்டு இருந்தேன்..”

பேச்சு நீண்டு கொண்டே போக.. இரண்டு மணி நேரம் பேசிய பிறகு, மனசில்லாமல்… ” சரி சரி.. நீ .. நாளைக்கு போய்ட்டு வா.. நானும் தூங்கப் போறேன். காலையில் எந்திரிச்சு கொஞ்சம் ரெக்கார்டு ஓர்க்குகளை பார்க்கனும். நாளைக்குள்ளே எப்படியாவது முடிக்கனும்” என்று அலுத்துக் கொண்டாள்.இன்னும் நாலு மாதத்தில் காலேஜ் முடிஞ்சிடும். நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

இப்போது நடந்தது போல இருக்கிறது…காவ்யா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன ..

காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, ருக்மணிதேவி சொல்லியிருந்தபடி, சாமி கும்பிட்டுவிட்டு .பாருவுக்கு உதவியாக, அவள் சமைத்தது எல்லாம் ஹாட் பாக்ஸில் மாற்றி மேஜையில் எடுத்து வைத்து, தட்டுகளை ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த பரமேஸ்வரன்… “என்னம்மா பாருதான் இருக்காளே.. நீ எதுக்கு இதெல்லாம் செய்கிற” என்றார் வாஞ்சையோடு.

“இல்ல மாமா சும்மா இருந்தாலும் போரடிக்குது. இன்னைக்கு காலேஜ் லீவு தான். அதான் பாருவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றேன் .”.என்றபடி தட்டை எடுத்து வைத்து டிபன் வைத்தாள் ..அதன்பிறகு ஒவ்வொருவராக சாப்பிட, எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் மாடிக்குப் போய் தன் அறையில் படிக்க உட்கார்ந்தாள்.

ஆதர்ஷ் கம்பெனிக்கு கிளம்பிப் போய்விட்டான். ஒரு அரை மணி நேரம் இருக்கும், பேச்சுக் குரல் கேட்க எட்டிப் பார்த்தாள். அத்தையின் அறையில் சாரதாவின் குரல் கேட்டது. ‘பெரியம்மா வந்திருக்காங்க போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

போய் பார்த்துவிட்டு வருவோம் என்று போனவள் அறை வாசலில் அவர்கள் பேச்சு கேட்டு ஒரு கணம் நின்றாள்.

“அண்ணி கல்யாணம் ஆகி எட்டு மாசம் ஆச்சு ஏதேனும் விசேஷம் உண்டா?”

“எங்க சாரதா.. அவன் எப்ப பார்த்தாலும் கம்பெனி கம்பெனின்னு கம்பெனியை கட்டிக்கிட்டு அழுகிறான்.. இவளும் காலேஜ் படிப்பு படிப்புன்னு போறா ..நல்ல புள்ளக தான் அதுல சந்தேகம் இல்ல ..அன்பா இருக்கிறா…நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்கிட்ட வந்து பிரியமா பேசுறா ..ஆனாலும் இத எப்படி நம்ம அவகிட்ட சொல்ல முடியும்? இன்னும் கொஞ்ச நாள் போனா ஊர் உலகத்துல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஏதாவது விசேஷம் உண்டான்னு.?”

“இதுக சின்னஞ்சிறுசுக, வயசு ஒன்னும் ஆகலை. இன்னும் நாள் எவ்வளவோ இருக்கு .அதுக்காக கவலைப்படப் வேணாம். நீங்க ரெண்டு பேரையும் எங்கேயாவது ஒரு நாலு நாளைக்கு வெளியூர் அனுப்புனா என்ன?”.

“நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டு இருக்கேன் சாரதா. கல்யாணமாகி எங்கேயுமே இவங்க வெளியே போகல. அவனும் எப்ப பாரு வேலை வேலைன்னு இருக்கான். ஒரு நாலு நாள் எங்கேயாவது போயிட்டு வந்தா அவங்களுக்குள்ள இன்னும் கொஞ்சம் அந்நியோன்னியம் வரும் ..”

திக்கென்றது காவ்யாவிற்கு .சத்தமில்லாமல் திரும்பி தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள் ..இது என்ன ஒரு புது பிரச்சனையாக இருக்கிறது ..

இரவு சாப்பிடும்போது இதே பிரச்சனை சாப்பாட்டு மேஜையில் ருக்மணிதேவி ஆரம்பித்தாள்..

“எப்ப பாரு வேலை வேலைன்னு இருக்கப்பா. காவ்யா பாவம். சின்னப் பொண்ணு. ஒவ்வொருத்தர் எங்கெல்லாமோ போறாங்க.. நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது நாலுநாள் போயிட்டு வாங்க ..உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.”

ஆதர்ஷுக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்…

“சரிமா யோசிக்கிறேன். நீங்க சொல்றபடி எங்கேயாவது போயிட்டு வரோம்” என்றபடி பேச்சை முடித்துக் கொண்டான்.

காவ்யா மேலே வந்ததும் “ஆதர்ஷ் சாரதா பெரியம்மாவும் ருக்மணி அத்தையும் இதைப் பத்தி பேசிகிட்டிருந்தாங்க எட்டு மாசமாச்சு குழந்தை இல்லைனு ஆதங்கப் பட்டுகிட்டிருந்தாங்க ..”

“இதையெல்லாம் மனசுல போட்டுக்காத காவ்யா.. இவங்களுக்கு இதே தான் வேலை.. மொதல்ல கல்யாணம் கல்யாணம் கல்யாணம்பாங்க.. அப்புறம் குழந்தை, குழந்தை. இவங்களுக்கு இந்த உலகமே அவங்க எழுதி வெச்ச பார்மெட்டில் தான் போகனும் .அதுதவிர அவங்களால மாத்தி யோசிக்க முடியாது”

“இப்ப என்ன செய்ய. எப்படி இந்த பிரச்சனையை தீர்க்க? வெளியூர் போகலைன்னு சொன்னா அதுக்கும் காரணம் கேட்பாங்களே”

“போகலைன்னு சொன்னாதானே காரணம் கேப்பாங்க.. நாமதான் போறோமே”

“போறோம்மா நாம எங்க.. எந்த.. இடத்துக்கு போறோம் ..?”

“நாம சிங்கப்பூர் போக போறோம் ..ஜெய்ய போய் பாக்கப் போறோம் …ஆர் யூ ஹேப்பி நவ் ..”

காவ்யா இன்ப அதிர்ச்சியில்  உறைந்தாள் ..

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விலை கொடுத்து விபரீதம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    எல்லாமே வயித்துக்குத் தாண்டா (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி