2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25
அறையின் உள்ளே நுழைந்த காவ்யா, மெல்ல ஏறிட்டுப் பார்த்தாள்.ஆதர்ஷ் பால்கனியில் நின்றிருந்தான். மென்மையான குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கருமையான வானத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் அசையா மின்மினிப் பூச்சிகளாய் மின்னின .பௌர்ணமி தினம் அருகில் என்பதால் வட்ட நிலா வானில் .இனிமையான இயற்கை எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்கள் இருவர் மனதிலும் அமைதியில்லை. காதலர்களுக்கு தூது போகும் இரவும், பௌர்ணமி நிலவும், அந்த கணவன்-மனைவிக்கு துணை போகவில்லை.
காவ்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனை அழைப்பதா.. வேண்டாமா.. இப்போது தான் என்ன செய்யவேண்டும்.. காலையிலிருந்தே ஹோம புகையும், மல்லிகை பூ வாசமும், கசகசவென்று உடைகளும், அவளுக்கு ஒரு அதீத சோர்வைக் கொடுத்தது .அந்த சோபன அறை அவளுக்கு ஒரு கலக்கத்தை கொடுத்திருந்தது.அவளுக்கு அதிக சங்கடத்தை வைக்காமல் ஆதர்ஷ் திரும்பிப் பார்த்தான்
“வாங்க காவ்யா… ஏன் அங்கேயே நின்னுகிட்டிருக்கீங்க? இப்படி வந்து உட்காருங்க…” என்று நாற்காலியைக் காண்பித்தான். அவன் எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
காவ்யா அவன் காட்டிய நாற்காலியில் உட்கார, அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.. சொல்லவொண்ணா குற்ற உணர்வு அவளை அழுத்தியது.
“ரெண்டு நாளாக நடந்த பங்க்ஷன்ஸ் , நிகழ்வுகள் நமக்கு அதிக சோர்வை கொடுத்திருக்கு ..நீங்களும் ரொம்ப டயர்டா தெரியறீங்க ..நாம அதனால இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு நிதானமா பேசிக்கலாம். நீங்க மெத்தையில் படுத்துக்கங்க.. ஷீட்டை விரிச்சு நான் கீழே படுத்துக்கிறேன் “
“பார்க்கவே ரொம்ப டென்ஷனா தெரியறீங்க !உங்க இடத்தில் யார் இருந்தாலும் இந்த டென்ஷன் நியாயமானதுதான். உங்க மனசுல பலவித குழப்பங்கள் இருக்கும் .நான் ஒன்னு மட்டும் உங்களுக்கு உறுதியா சொல்றேன் காவ்யா..அன்னைக்கு ஜெய் கிட்ட சொன்னது தான் இப்பவும் சொல்றேன்..உங்கள என் உடன்பிறவா சகோதரியாக தான் மனசுல நினைச்சுகிட்டிருக்கேன் .அதனால உங்களுக்கு எந்த பயமும் பதட்டமும் வேண்டாம். மத்தவங்க யார் எது சொன்னாலும் அதை பெரிசா எடுத்துக்காதீங்க .. நமக்குள்ள அன்டர்ஸ்டான்டிங் இருந்தாப் போதும்”
“நான் இப்ப வெளில போய் படுத்தால் பல கேள்விகள் பல பேர் கேட்பாங்க ..அதுக்கு பதில் சொல்ல நம்மால முடியாது. நமக்குள்ள ஏதோ சண்டைன்னு மறுபடியும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நான் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் நீங்க என்கூட இருக்கிற இந்த ஒரு வருஷம் சந்தோஷமாயிருங்க… எந்தவித டென்ஷனும் வேண்டாம்”
“எனக்காக நீங்க எதுவுமே உங்கள மாத்திக்க வேண்டாம். உங்களுக்கு பிடிச்சத செய்ங்க. உங்களுக்கு பிடிச்ச போது வெளியில போங்க ..பிடிச்சவங்க கிட்ட பேசுங்க. உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில எந்த சந்தர்ப்பத்திலும் நான் தலையிட மாட்டேன் ..நானும் எப்போதும் போல என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துகிறேன்”
“ஒரு வருஷம் இது நமக்கு டெஸ்டிங் பீரியட்..இதை எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்மூத்தாக கிராஸ் பண்ணிடனும். ஜெய்கிட்ட தினமும் பேசுங்க.. கண்டிப்பா இந்த டைம்ல நிறையவே பேசுங்க… ஏன்னா உங்களுக்குள்ள இருக்கிற பதட்டம் அவர்குள்ளேயும் இருக்கும். உங்ககிட்ட ஏதும் மாற்றம் வந்துவிடுமோன்னு அவருக்குள்ள ஒரு பயம் இருக்கும். ஆனா நம்ம மூணு பேருக்குள்ள உள்ளது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் …என்ன காவ்யா நான் முதல் நாளே நிறைய லெக்சர் அடிக்கிறேனா? “
“இல்ல ஆதர்ஷ்…என் மனசு பூரா ஒரு குற்ற உணர்வும், பயமும், நிரம்பிக் கிடந்தது. இப்ப நீங்க பேசப் பேச உங்க வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. மனசு நிம்மதியா இருக்குது. நீங்க பண்ணினது மிகப்பெரிய ஒரு தியாகம் ..அதுல சந்தேகமே இல்லை.. யாரோ முகம் தெரியாத இருவருக்காக உங்க வாழ்க்கையே நீங்க மாத்திகிட்டேங்க.. இதுக்கு நான் எப்படி நன்றி சொல்ல போறேன்” என்றவள்,
அவனை கையெடுத்துக் கும்பிட்டாள். “உண்மையிலேயே நீங்கள் என்னுடைய பூர்வ ஜென்ம சகோதரர்தான் .தயவு செய்து என்னை காவ்யான்னே கூப்பிடுங்க.. வாங்க போங்க என்று மரியாதையெல்லாம் வேண்டாம்”
“எஸ்… காவ்யா இனிமே உங்கள.. சாரி உன்ன வா ..போ…ன்னே கூப்பிடுறேன் ஓகே.. யா? காவ்யா உணர்ச்சிவசப்படாதே.. நீ போய் படு..டயர்டா இருக்க.. நல்லா தூங்கு… காலையில பார்ப்போம். குட்நைட்! நான் கொஞ்ச நேரம் தூக்கம் வர்றவரைக்கும் புத்தகம் படிச்சிட்டு தூங்குறேன். இந்த டேபிள்லைட்டை வச்சிக்கிறேன்..” என்றவன்..
தரையில் ஷீட்டை விரித்து படுத்தான். புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான் பக்கத்தில் டேபிள் லைட்டை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். காவ்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மனதில் நிரம்பிய நன்றி உணர்ச்சியுடன், அசதியில் தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை எழுந்து ,குளித்து விட்டு ,இருவரும் கீழே இறங்கிய பொழுது தடபுடலாக விருந்து காத்திருந்தது. சாப்பிட்டுவிட்டு மதிய விருந்துக்கு ஆதர்ஷ் வீட்டுக்கு போவது என்ற முடிவு செய்து இருந்தபடியால் இருவரும் ஆதர்ஷ் வீட்டுக்கு கிளம்பினர்.
வாசலில் மாயா ஆரத்தி தட்டுடன் காத்திருந்தாள்…
‘மணமகளே மணமகளே வா வா…
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா..
குணமிருக்கும் குலமகளே வா வா..
எங்கள் கோயில் வாசல் திறந்து வைத்தோம் வா வா..”
பாடியபடியே ஆரத்தி எடுத்தாள். “அத்தான் 500 ரூபாய் நோட்டெல்லாம் போடுறதெல்லாம் நடக்காது.. இரண்டாயிரத்துக்கு குறையாம ஆரத்தி தட்டில் போடாம வீட்டுக்குள் நுழைய விடமாட்டேன்.”
“வாயாடி இந்தா 2000 ரூபா வச்சுக்கோ .”.இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாலினி தேவியின் முகம் கடுகடுவென மாறியது …
உள்ளே வந்த காவ்யாவை குத்து விளக்கேற்றச் சொன்னாள் ருக்மணி தேவி .பின் பால் காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்த பிறகு “மாடிக்கு போங்க” என்றாள் ..” வாங்க அண்ணி நான் உங்க மாடி ரூமை காண்பிக்கிறேன்” என்று கூற…
காவ்யா ..”நான் உங்கள விட சின்னவ தான் ..என்னை காவ்யான்னே கூப்பிடலாமே..”
“எனக்கு நோ ப்ராப்ளம் காவ்யா.. வாங்க மாடிக்கு போகலாம்”
“அவரே கூட்டிட்டு போவாரு.. நீ எதுக்கு கூட போற” என்றாள் மாலினிதேவி, “அவங்க புதுசா கல்யாணமானவங்க, இவ எதுக்கு கூட போறா..” முணுமுணுத்தாள் ..
ருக்மணிக்கு சங்கடமாக இருந்தது ..மாயா இந்த காய்ச்சிய பாலை டம்ளரில் ஊற்றி எல்லோருக்கும் கொஞ்சம் குடு. எனக்கு கொஞ்சம் உதவி செய் இந்த பூவை வெட்டி வை… அவள் மாயாவை கீழே தங்க வைத்துக் கொண்டாள் ..
ஆதர்ஷ் அறைக்குள் நுழைந்த காவ்யா அந்த அறையின் சுத்தத்தைப் பார்த்து பிரமித்தாள். எல்லா சாமான்களும் அதது இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு நீட்டாக இருந்தது .இவர் ஒழுங்கான ஆசாமி போல.. நம்மள மாதிரி குப்பையை போடற ஆளில்லை என்று நினைத்துக் கொண்டான்.
ஒரு படுக்கை அறையும், பக்கத்தில் படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்குமான ஸ்டடி ரூமும் இருப்பதைப் பார்த்தாள். பால்கனி வழியாக தோட்டம் அழகாக தெரிந்தது.
பக்கத்தில் இருந்த இன்னொரு அறையை காட்டி. “காவ்யா இதை உனக்கு பர்சனல் ரூம்மாக உபயோகப்படுத்திக்கோ” என்றான்.
அம்மா, அப்பாவை வழியனுப்ப, கீழே இறங்கிய காவ்யாவிடம், மாலினி தேவி, “காவ்யா கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ.. மாமியார் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கிட்டு இருக்காத. எது முடியுமோ அதை மட்டும் செய் .ரொம்ப கீழே இறங்கி போகாத. அப்புறம் அந்த மாயா இருக்காளே அவ ரொம்ப சூட்டிக்கம்மா இருக்கா.. அவளை கரெக்டா வச்சுக்கோ.. அதிகம் மாப்பிள்ளை பக்கத்தில் நெருங்க விடாத” என்று ஓதி விட்டு கிளம்பினாள் ..
அப்பா அம்மாவை அனுப்ப வாசலில் நிற்கும்போது போன் அடிக்க ..டிஸ்ப்ளேயை பார்த்தாள்.. ஜெய் ..ஒரு நிமிஷம் வியர்த்தது .எல்லாரும் சுற்றிவர இருக்கிறார்களே, இப்ப எப்படி பேச.. போனை கட் பண்ணினாள் ..அவன் திரும்பவும் கூப்பிட்டான் ..திரும்ப கட் பண்ணினாள்.மனதின் ஓரத்தில் ஜெய் ஏதாவது தப்பா நினைச்சுடுவானோ என்ற பயமும் எழுந்தது .”
“.மேடம்.. இப்போ காவ்யா ஆதர்ஷ்ல அதான் போன கட் பண்றாங்க.” ஜெய் மனதுக்குள் கறுவிக் கொண்டான்.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings