in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 25) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16      பகுதி 17     பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22    பகுதி 23     பகுதி 24

காவ்யா ..ஆதர்ஷின் பெயர்களைத் தாங்கி அந்த மிகப் பெரிய போர்ட் கல்யாண மண்டபத்தில் நுழைவு வாயிலை அலங்கரித்தது.நகரின் மிகப் பெரிய கல்யாண மண்டபம் அது. கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளாலும், புத்தம்புது பூக்களாலும், மிக அழகிய அலங்காரத்தோடு ஜொலித்தது .வாயிலில் செவ்வாழை குலையோடு கூடிய வாழை மரங்கள் கட்டப்பட்டு, தோரணமாய் மலை சாமான்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

மணமேடை புத்தம்புது பூக்களாலும் .. மெல்லிய சாட்டின் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது ..ராம்சந்தும் மாலினி தேவியும் ஒவ்வொரு விஷயத்தையும் தங்களுடைய அந்தஸ்தை காண்பிக்கும் வண்ணம் பகட்டாக அமைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது ..இரண்டு பிசினஸ் ஜாம்பவான்கள் வீட்டு கல்யாணம் என்பதால் மண்டபத்தில் கூட்டம் ஒவ்வொரு வேளையும் நிரம்பி வழிந்தது .மிகப்பெரிய கார் பார்க்கிங்கே நிரம்பி வெளியே அடுத்த இரண்டு சாலைகளிலும் வரிசையாக கார்கள் நின்றிருந்தன ..

வி.ஐ.பி வருகைக்கென்று தனியாக ஒரு தோரணவாயில் அமைக்கப்பட்டிருந்தது.. நகரின் பிரபல புள்ளிகள், மந்திரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், என அனைவரையும் ராம்சந்தும், பரமேஸ்வரனும் நேரில் நின்று வரவேற்று புதுமண ஜோடியை அறிமுகப்படுத்தினர்.

சி.எம் வருவதாக அறிவிப்பு வர ..மண்டபமே பரபரப்பானது …மாலினி தேவி வாசலில் பூங்கொத்தோடு அவரை வரவேற்க காத்திருந்தாள். அவர் வந்ததும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவரை வரவேற்று மணமேடைக்கு அழைத்துச் சென்றனர் …மணமக்களை ஆசீர்வதித்து , பரிசளித்து, அவர் கிளம்பிய பின் தான் ராம்சந்திற்கும் மாலினி தேவிக்கும் நிம்மதி வந்தது.

ட்ரோன் கேமராக்கள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. வீடியோக்காரர்களும், புகைப்படக்காரர்களும் ஒரு பெரிய கூட்டமாய் பல்வேறு நிகழ்வுகளையும் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு பெரிய டிஜிட்டல் திரையில் கல்யாண மேடையின் நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்தது.

ஒவ்வொரு வேளை விருந்தும் பிரம்மாண்டமாய் புதுப்புது ஐட்டங்களோடு ..பிரமாதமாக அமைந்திருந்தது. நகரின் மிகப்பெரிய சமையல்காரர் பொறுப்பேற்றிருந்தார்.

ரிசப்சனில் நின்றிருந்த காவ்யா, ஆதர்ஷின் மணமாலைகள் அழகாய் கட்டப்பட்டு அவர்கள் உடை வண்ணத்திலேயே மிளிர்ந்தது ..காவ்யாவின் உடை நிறத்திற்கேற்ப அவளுடைய நகைகள் ..அவளை ஒரு தேவதையாய் அடித்திருந்தது ..

இவ்வளவு கோலாகலத்திற்கும் நடுவே காவ்யா மனதில் ஒரு குற்ற உணர்வோடு ஆதர்ஷ் அருகில் நின்றிருந்தாள் ..

இவ்வளவு பிரம்மாண்டமான திருமணத்தை நிஜமான.. சந்தோஷமான… மன உணர்வோடு அனுபவிக்க வேண்டியவன், தனக்காக ஒரு போலி வாழ்க்கைக்கு சம்மதித்து, போலிப் புன்னகை சுமந்துகொண்டு ..தன்னருகே நிற்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. இப்படி ஒரு ஆடம்பர திருமணத்திற்கு பதில் தன் மனதுக்குப் பிடித்தவனை எளிமையாக திருமணம் செய்து கொள்ள அனுமதித்தால் கூட எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்ற நினைப்பை அவளால் தவிர்க்க முடியவில்லை.

ஆதர்ஷ் மனநிலை சலனமற்று இருந்தது. எதிலும் மனம் ஒட்டாமல் ஏதோ ஒரு சினிமா காட்சியில் நடிக்கும் நடிகனின் மனநிலையில் இருந்தான். ஒப்பந்த திருமணத்தில் மனம் எப்படி ஒட்ட முடியும்.? தன்னால் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவன் மனம் உறுதியாக இருந்தது. அதற்காகவே அவன் நீரஜா பெயரில் இருந்த அன்பைக் கூட மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டான்.சொல்லாத காதல் சொல்லாமலே போகட்டும் என நினைத்துக்கொண்டான்.

ரிசப்ஷனின் போது ஜெய்யின் குடும்பம் மேடை ஏறி வந்து காவ்யாவை வாழ்த்திவிட்டுப் போனபோது காவ்யாவின் குற்ற உணர்வு இன்னும் அதிகரித்தது.கல்யாணத்திற்கு வந்திருந்த காவ்யாவின் பிரண்ட்ஸ் கூட கலகலப்பின்றியே இருந்தனர்.

நீரஜா எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல், “வாழ்த்துகள் சார் “என்று அவன் கையில் பூங்கொத்தை கொடுத்தாள். எந்த பூவைக் கொடுத்து அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தானோ, அந்தப் பூவை அவள் கொடுத்து தன் திருமணத்திற்கு வாழ்த்து சொல்கிறாள் ..

ஏ.சியின் குளிர்ச்சியிலும், பூக்களின் சுகந்தத்திலும், பிரம்மாண்டத்தின் செழிப்பிலும், நடுவே சில காதல் உள்ளங்களும் கருகிக் கொண்டு தான் இருந்தன..

காவ்யாவின் மனம் ஜெய்யிடம் இருக்க.. தங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆதர்ஷை நினைத்து மனம் சலனப்படத்தான் செய்தார்கள் நீரஜாவும், மாயாவும் .

உண்மையில் இவர்கள் யாரையும் பற்றி கவலைப்படாமல் இருதரப்பு பெற்றோரும் சந்தோஷத்தில் திளைத்தனர். தங்கள் இஷ்டப்படி தங்கள் பிள்ளைகள் திருமணத்திற்கு சம்மதித்ததை தங்கள் வெற்றியாகவே கொண்டாடினார்கள். மிகப் பிரம்மாண்டமான அந்த திருமணத்திற்கு வந்திருக்கும் தங்கள் உறவினர்களை, நண்பர்களை வரவேற்பது, உபசரிப்பது! என சுறுசுறுப்பாய் அலைந்து கொண்டிருந்தனர்.

ருக்மணியும், சாரதாவும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே அவர்களுக்கு உதவியாய் பாருவும் அமர்ந்திருந்தாள்.

மாயா மட்டும் சந்தோஷமாய், சுறுசுறுப்பாய், அங்குமிங்கும் ஓடி ஆடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ..மேடைக்குப் போய் அடிக்கடி மணமக்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு அவ்வப்போது குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடுத்து கவனித்துக் கொண்டிருந்தாள் ..

அவள் பிரிய அத்தானின் கல்யாணம் ..காவ்யாவை ஏதாவது சொல்லி கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தாள் ..மாலினி தேவி மட்டும் அவளை அடிக்கடி கண்காணித்துக் கொண்டு முகத்தை சுளித்துக் கொண்டிருந்தாள். என்னதான் இருந்தாலும் ஆதர்ஷை திருமணம் செய்து கொள்ள முறையுள்ள முறைப்பெண் அல்லவா …இவ ரொம்பத்தான் இழையரா காவ்யா கிட்ட சொல்லி இவளை முதலிலேயே ஆதர்ஷ் கிட்ட நெருங்க விடாமல் வச்சுக்க சொல்லனும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் .

மாயா அத்தை கிட்ட வந்து,” அத்தை உங்க மருமக சூப்பரா இருக்கா ..அங்க பாருங்க தேவதை மாதிரி ஜொலிக்கிறா.. அவங்க அப்பா அம்மாவை பாத்தீங்களா எவ்வளவு பெரிய ஆட்களாயிருக்காங்க.. அனேகமாக காவ்யா கொண்டு வர்ற சீர்வரிசையை இறக்கிவைக்க மாமா தனி பங்களா தான் கட்டனும்னு நினைக்கிறேன்” என்று சிரித்தாள்..ருக்மணி க்கும் சாரதாவுக்கும் .”.இவள் இப்படி வெகுளியாக இருக்கிறாளே” என்ற எண்ணம் மனதை புரட்டியது.

“ஹும்..இந்தக் கல்யாணத்துக்கு முன்னால மாயா கல்யாணத்தை எப்படியாவது நடத்திடனும்னு நினைச்சேன் முடியல .”.என்றாள் ருக்மணிதேவி உண்மையான ஒரு ஆதங்கத்துடன்.

“அண்ணி அதுக்கு அவ சம்மதிக்க மாட்டேன்னுட்டா . இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தன் கல்யாணத்தை பத்தி யோசிக்கணும்னு உறுதியா சொல்லிட்டா ..அவள மீறி நம்மளால ஒன்னும் செய்யவும் முடியாது. அதனால தான் நான் பேசாம விட்டுட்டேன் …அண்ணி நீங்க அதுக்காக வருத்தப்படாதீங்க.. யாருக்கு மாலை பூக்குதோ அவங்க கல்யாணம் தான் முதல்ல நடக்கும் ..”

“ஆனா மாயா சொன்னது போல இந்த பொண்ணு காவ்யா ஆதர்ஷ்கு பொருத்தமா இருக்கா.. நல்லா பேசுறா. எல்லாத்தையும் மரியாதையா நடத்தறா.. நிச்சயமா அவங்க அம்மா மாதிரி இல்லை இவ..நல்ல குணமான பொண்ணா இருக்கட்டும் .சந்தோஷமா, பிரியமா, உங்க கிட்டயும் இருந்து.. ஆதர்ஷ் மனம் கோணாமல் நடந்துகிட்டா.. அதுவே நமக்கு பெரிய நிம்மதி சந்தோஷம்..” என்றாள் சாரதா..

கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடக்க.. வந்திருந்த பரிசுப் பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்லவே ஒரு லாரி தேவைப்பட்டது .மாலினி தன் வீட்டிற்கு முதலில் வரவேண்டும் என்று சொல்லியிருந்ததால், மணமக்கள் காவ்யா வீட்டிற்கு கிளம்பினார் ..பரமேஸ்வரன், ருக்மணி தேவியும் அவர்களுடன் கிளம்பினர். சாரதா, மாயாவை உத்தேசித்து வீட்டுக்கு கிளம்புவதாக ருக்மணியிடம் கூறிவிட்டு, அப்படியே தன் வீட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

வீட்டில் மாலினி ஏற்பாடுகளை பிரமாதமாய் பண்ணியிருந்தாள். தேக்கு மரக்கட்டிலில் நல்ல உயரமான மென் பஞ்சு மெத்தை ..வெல்வெட் தலையணைகள்.. சுகந்தமான மலர் மணம் வீசும் மலர்களைக் கொண்டு மெத்தை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூவிதானத்தோடு, சுற்றிவர அந்த அறையே பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நறுமண பத்திகள் ..மற்றும் பலவிதமான இனிப்புகள்.. பழங்கள் ..என அந்த அறை முதலிரவுக்காக அவர்களை வரவேற்க தயாராக இருந்தது ..

விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. மணமக்களை அமரவைத்து ஆசீர்வாதம் பண்ணியபின் ..மாடியில் ஆதர்ஷ் காத்திருக்க, வெள்ளிச் சொம்பில் பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, போட்டு சுண்டக் காய்ச்சிய பால் , மற்றும் வெள்ளி தம்ளரை கொடுத்து காவ்யாவை அறைக்குள் அனுப்பினர் ..

மனம் படபடத்தது காவ்யாவிற்கு ..ஆதர்ஷ் பற்றிய புரிதல் இருந்தாலும், அவள் மனதுக்குள் ஒரு பயம் எட்டிப் பார்த்தது. காலையில் நடந்த கோலாகலமான திருமணமும், இப்போது இருக்கும் தனிமையும், இந்த அறையின் மணமும், சூழலும் அவன் மனதை மாற்றி விடுமா? ஏ.சி குளிரையும் மீறி காவ்யாவின் உடல் வியர்வையில் குளித்தது …

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 8) – முகில் தினகரன், கோவை

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 5) – ஜெயலக்ஷ்மி