2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
‘ஈஸ்வர பவனம்’ அப்போதுதான் மேலே எழுப்பிய சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது. லானில் கையில் காப்பியுடன், காலை பேப்பருடன் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன். ஆதர்ஷ் வேலை விஷயமாக பெங்களூர் போயிருந்தான்.பரமேஸ்வரன் முன்னால் சதீஷ் பவ்யமாக கைகட்டி நின்று கொண்டிருந்தான்.
“என்ன சதீஷ்.. கம்பெனி எப்படி போய்கிட்டிருக்கு? ஏதாவது புதுசா விஷயம் உண்டா?,நீ ஏதாவது விஷயம் இல்லாம வர மாட்டியே. ஆதர்ஷ் நிர்வாகமெல்லாம் எப்படி இருக்கு? ஒர்க்கர்ஸ் என்ன பேசிக்கிறாங்க ..யூனியன் லீடர ஒரு நாள் கூப்பிட்டுப் பேசணும் ..ஆதர்ஷ் கம்பெனியை கவனித்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, அதுவும் அவன் பொறுப்பா இருக்கறதுனால நான் ரொம்ப ரிலாக்ஸ்ட்டா இருக்கேன்.
ப்ராபிட் பரவால்ல நிறைய ஆர்டர் ..டிமாண்ட் …நல்லாத்தான் போயிட்டிருக்கு.. இப்படியே ப்ராபிட் காமிச்சா தீபாவளி போனஸ் இந்த தடவ ஒரு 5% கூட்டி குடுக்கலாம்னு இருக்கேன். நாய்க்கு ரொட்டி துண்டை போட்டால் அது பின்னாடியே வர்ற மாதிரி, இந்த ஒர்க்கர்ஸ்க்கு அப்பப்ப பணத்தை காண்பிச்சாத்தான் வேலைய ஒழுங்கா பார்ப்பாங்க ..யூனியன் லீடர் பிரச்சனை பண்ணாம இருக்கனும்னா அவனை தனியாக கவனிச்சிட வேண்டியது தான் .ஆதர்ஷ்க்கு இந்த நெளிவு சுளிவு எல்லாம் தெரியாது. அவன் ரொம்ப நேர்மையா யோசிக்கிறான்..” என்றவர் கடகடவென்று சிரித்தார்.
” என்னுடைய ராஜதந்திரம் எல்லாம் அவனுக்கு சுட்டுப் போட்டாலும் வரமாட்டேங்குது. இப்ப பாரு கம்பெனியில நடக்கிறத உளவு சொல்றதுக்கு உன்ன அங்க வச்சிருக்கேன். நீ அங்க என்ன நடக்குது.. என்ன பேசுறாங்க..எல்லாத்தையும் எங்கிட்ட வந்து சொல்றே.. ஆகமொத்தம் நான் வீட்ல என்னுடைய சேர்ல உட்கார்ந்துகிட்டு, கம்பெனியில் நடக்கிறத தெரிஞ்சுக்கிறேன்”
“அந்த கெட்டிக்காரத்தனம் இருந்ததால தான் சின்ன லெவல்ல இருந்த கம்பெனிய இன்னைக்கு தமிழ்நாட்டில அஞ்சாவது பொசிஷனுக்கு கொண்டு வந்திருக்கேன். ஆதர்ஷும் அவன் வழியில் நல்லாத்தான் பண்றான். அதனால தான் அவன்கிட்ட எதுவும் என்னுடைய கருத்தை சொல்வதில்லை ..நமக்குத் தேவை பணம் பணம் மட்டும் தான். அது லாபமா போறவரைக்கும் நான் எதையும் கண்டுக்கப் போறதில்லை..
நானே பேசிட்டு இருக்கேனே.. நீ சொல்லு சதீஷ்.. என்ன விஷயம் கம்பெனில ஏதாவது பிரச்சனையா …? “
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஐயா! நீங்க சொன்ன மாதிரி இந்த மாசம் டிமாண்ட் ஜாஸ்தி.. அதுக்கு ஒர்க்கர்ஸ்க்கு ஓவர் டைம் பண்ணச் சொல்லி, தனியா அதற்கு இன்சென்ட்டிவ் கொடுத்து, சமாளிச்சாச்சு… அதனால இந்த தடவை நம்மளுக்கு ப்ராபிட் ஜாஸ்திதான் ..என்ன ஒரு சின்ன விஷயம் தான் ஐயா காதுல போடுவதா வேண்டாமான்னு ரொம்ப குழப்பத்தில் இருந்தேன். சரி எதுக்கும் போட்டுடுவோம்ன்னு தான் வந்தேன்.”
“என்ன சதீஷ்.. பொடி வச்சுப் பேசுற.. எதுவா இருந்தாலும் ஒப்பனா சொல்லு” என்றவர் குரலும், முகமும் மாறியது.
“இல்ல அந்த பொண்ணு நீரஜா ..”
“அது யாரு.. நம்ம கம்பெனில எத்தனையோ லேடி ஸ்டாப் இருக்காங்க.. அதுல இவ யாருன்னு எனக்கு எப்படி தெரியும்?”
“நம்ம குமாரவேல் அண்ணன் பொண்ணு.. நீங்க கூட வேலை போட்டுக்கொடுத்தீங்க.. அந்தப் பொண்ணு தான் இப்ப சாருக்கு பர்சனல் செகரட்டரி ..”
“அதுக்கு இப்போ என்ன சதீஷ் .. ஆதர்ஷ் கூட சொன்னான் நல்ல கெட்டிக்கார பொண்ணு சூட்டிக்கமா எல்லா வேலையும் செய்றா… நிறைய நல்ல சஜஷன்ஸ் கொடுக்கிறா.. அவ வந்த பிறகு எனக்கு வேலை பளு குறைஞ்சிடுச்சுன்னு சொன்னான்.”
சதீஷ் முகம் பொறாமையால் ஒரு நிமிடம் மாறியது. அவன் இருந்த இடத்தில் இப்போது நீரஜா..அதுவும் அவளை எல்லோரும் ஆகா ஓகோ என்று புகழ்வது .. அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை இதுதான் சரியான சந்தர்ப்பம்..இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடையாது. அவராக கூப்பிட்டு கம்பெனி விஷயங்களை கேட்கும்போது பெரியவர் காதில் விஷயத்தை கொளுத்திப் போட்டு விட வேண்டியதுதான்.
மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான் சதீஷ் ..”சின்னவர் அத மட்டும் தான் சொல்லி இருப்பாரு. ஆனா கம்பெனியில் கொஞ்சம் கசமுசாவா பேசிக்கிறாங்க ..அந்தப் பொண்ணு பேர்ல சின்னவருக்கு ஒரு தனி பிரியம் இருக்கிற மாதிரி தெரியுது .எந்த மீட்டிங்க்கு போனாலும் அவ தான் கூட போறா..சார் அவகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறத பாத்தா கொஞ்சம் மனசுக்கு நெருடலாயிருக்கு ..அந்தப் பொண்ணும் குழைஞ்சு.. குழைஞ்சு…பேசுறா …வெளியில போற சமயத்துல எல்லாம் டிரைவர் கூட வேணாம்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஒண்ணா போறாங்க …அது எனக்கு என்னவோ சரியா படல ஐயா ..மனசு நெருடலாய் இருக்குது. அதுதான் ஐயா காதுல போட்டுடுவோம்னு நினைச்சேன் …”
“அடப் போய்யா இத சொல்றதுக்கு இவ்வளவு தயங்குற.. ஆதர்ஷ் என்ன மாதிரி கிடையாது.. நான் இவன் வயசுல எப்படி ஜாலியா இருந்திருப்பேன் .என்ன ஆட்டம் போட்டிருப்பேன்.இவன் அம்மா புள்ள. நேர்மை, நியாயம், பாசம்,நேசம்ன்னு பேசுவான். இவனெல்லாம் சத்தியமா எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் ..நீ வேற ஏதாவது சொன்னா நான் பயப்படனும். ஆனால் இந்த பொண்ணு விஷயத்துல ஆதர்ஷ பத்தி எனக்கு நல்லா தெரியும் ” என்று இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆதர்ஷ் கல்யாண விஷயத்தில் பரமேஸ்வரன் ஒரு பெரிய பிசினஸ்மேன் மகளை மனதில் நினைத்திருந்தார். அந்தப் பெண் மட்டும் இவனை திருமணம் செய்து கொண்டால், ரெண்டு கம்பெனியும் சேர்ந்து விட்டால் ..அப்புறம் ஆதர்ஷ் பிசினஸ் உலகின் முடிசூடா மன்னனாக இருப்பான். ஐந்தாவது இடத்தில் இருக்கும் கம்பெனி இரண்டையும் இணைத்தால் முதல் இடத்திற்கு வந்துவிடும் ..அதற்கு எக்காரணம் கொண்டும் எந்த இடைஞ்சலும் வந்துவிடக் கூடாது ..
அதற்காகவே அவர் ருக்மணியிடம் முதலிலேயே மாயாவை பற்றி எச்சரிக்கை செய்திருந்தார். “மாயா என்னோட தங்கச்சி பொண்ணா இருக்கலாம்.. ஆனால் அவளுடைய ஸ்டேட்டஸ் வேற.. என்னுடைய ஸ்டேட்டஸ் வேற.. அதனால நீ எக்காரணம் கொண்டும் மாயாவ பத்தி ஏதாவது சொல்லி, ஆதர்ஷ் மனசை கெடுத்துடாத.. இப்ப நான் சொல்றேன், மாயா எக்காரணம் கொண்டும் உனக்கு மருமகளா வரமுடியாது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் ..அப்படி ஏதாவது நீ பேச்சை எடுத்த அவளைக் கொன்னு போட கூட தயங்க மாட்டேன்.”
அவருடைய மிரட்டலுக்கு பிறகு ருக்மணி மாயாவை பற்றிய கனவை முற்றிலுமாக விட்டுவிட்டாள்.
சதீஷ் சொல்வதுபோல ஒருவேளை ஆதர்ஷ் மனம் நீரஜாவிடம் சென்று விட்டால்.. அவர் மனதில் ஒரு சலனம். .ஆதர்ஷ் பால் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் ஒரு துளி விஷத்தை கலந்துவிட்டது சதீஷின் வார்த்தைகள்.
கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் ..எப்படி போகிறது விஷயம் என்று ..கைமீறி போனால் இருக்கவே இருக்குது என் பாணி மனதிற்குள் கறுவிக் கொண்டார் …
பெரியவர் மனதில் ஒரு சலனத்தை உண்டாக்கி விட்டோம்.. குளத்தில் கல்லெறிந்து விட்ட திருப்தியில், சதீஷ் அங்கிருந்து நகர்ந்தான்.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings