in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 22) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16    பகுதி 17    பகுதி 18   பகுதி 19   பகுதி 20   பகுதி 21

ஆதர்ஷ் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. விரும்பத்தகாத நிகழ்வுகள் அவன் மனத்திற்கு ஒரு சோர்வை கொடுத்திருந்தன ..

ஹாலில் பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். ஆதர்ஷ் ஹாலை தாண்டிப் போகும்போது …

“ஒரு நிமிஷம் ஆதர்ஷ்..ராம்சந்த் அங்கிள் போன் பண்ணியிருந்தார். உங்க கல்யாணத்த அடுத்த மாசம் 20ஆம் தேதி பிக்ஸ் பண்ணிடலாமான்னு கேட்டார். நான் சரின்னு சொல்லிட்டேன் .நாங்க ரெண்டு வீட்டிலேயும் தனித்தனியா இன்விடேஷன் அடிக்கிறோம். நீ ஏதாவது பர்சனலா அடிக்கனும்னாலும் அடிச்சுக்கோ..”

“தேவையில்ல நான் தனியா எதுவும் அடிக்கல… நீங்க அடிக்கிறத அடிச்சுக்கோங்க” என்றான் ஆதர்ஷ் எரிச்சலோடு ..

“சரி ..அது உன் இஷ்டம் ..”

“அம்மா கொஞ்சம் புடவையெல்லாம் எடுக்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தா… நீ அம்மாவை கடைக்கு கூட்டிட்டுப் போயிட்டு வா … “

“எனக்கு வேற வேலை இருக்குப்பா… வேணும்னா அம்மாவ மாயாவை கூட்டிட்டு கடைக்குப் போகச் சொல்லுங்க ..புடவை வாங்குறதுக்கெல்லாம் நான் கூடப் போக முடியாது. நான் இப்ப வெளியில கெளம்பிகிட்டிருக்கேன். போயிட்டு வர்றேன்..” என்றவன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

“ஒரு நிமிஷம் ஆதர்ஷ்.. இதை மட்டும் கேட்டுட்டுப் போ..  நீ அன்னைக்கு அந்த பொண்ணு நீரஜா, அவ வீட்ல இல்லைன்னு சொன்னே.. அதுக்கு காரணம் நான் கிடையாது ..எனக்கு அதைப்பற்றி ஒன்னும் தெரியவும் தெரியாது ..நீ காவ்யாவை கல்யாணம் பண்ண சம்மதிச்சப் பிறகு நான் எதுக்கு அவளை டிஸ்டர்ப் பண்ணப் போறேன்”

“நம்பச் சொல்றீங்க…”

“நம்புறதும்.. நம்பாததும் உன் இஷ்டம் …ஆனா உண்மை இதுதான் .அந்த பொண்ணு எங்க போனாங்கறது எனக்கு தெரியாது. அந்த பொண்ணு விஷயத்துல நான் எதுவும் செய்யலை”

‘அவளை உயிரோட வச்சிருக்கீங்களா? இல்ல அவளையும் ஏதாவது பண்ணிட்டீங்களா?’ என்று மனசுக்குள் குமறினான் . பதில் பேசாமல் வெளியே நடந்தான்.

செல்போன் அடிக்க..யாரென்று டிஸ்ப்ளேயில் பார்த்தான்.. அழைத்தது ஜெய் …ஜெய் பதட்டமாய் பேசினான்.

“ஆதர்ஷ் ப்ரோ… ஒரு விஷயம்.. உங்ககிட்ட ஷேர் பண்ணனும்.. கொஞ்சம் உடனே உங்களை பார்க்க முடியுமா?”

“சொல்லுங்க ஜெய்.. யாருக்காவது ஏதாவது பிரச்சனையா? உங்களுடைய குரலில் பதட்டம் தெரியுதே ..”

“ப்ரோ..ஒரு முக்கியமான விஷயம்… நாம வழக்கமா சந்திக்கிற அந்த ரெஸ்டாரெண்ட்க்கு வந்திடுங்க.. நானும் காவ்யாவும் அங்க வந்துடுறோம்..”

ஆதர்ஷ் அந்த ரெஸ்டாரெண்ட்க்கு போய் சேரும்போது காவ்யாவும், ஜெய்யும் அவனுக்காக காத்திருந்தார்கள் ..

“சாரி ப்ரோ.. உங்களை தொந்தரவு பண்ணிட்டேன். ஆனா எனக்கு உங்களைத் தவிர யார்கிட்ட உதவி கேட்கறதுன்னு தெரியல ..”

“பார்மாலிட்டி வேண்டாம் ப்ளீஸ்.. என்ன விஷயம் சொல்லுங்க ஜெய்..”.

“நாலு நாளைக்கு முன்னாடி என்னுடைய ஃபேமிலி.. அதாவது அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள் எல்லாரும் கிராமத்துக்குப் போனாங்க.. அவங்க எல்லோரும் நேற்றிலிருந்து மிஸ்ஸிங் என்னுடைய பேமிலியை யாரோ கடத்தி வெச்சுருக்காங்க. அவங்க யாருமே போன் எடுக்க மாட்டேங்குறாங்க.. புல் ரிங் வந்து வந்து கட் ஆகுது .. சந்தேகப்பட்டு கிராமத்தில் இருக்கிற என்னுடைய பிரெண்ட் வீட்டுக்கு போன் பண்ணி அவனைப் போய் பார்க்கச் சொன்னேன். இப்பத்தான் அவன் பேசினான்.அவங்க யாருமே அங்க இல்லைன்னு. என்னுடைய மொத்த குடும்பத்தையும் யாராவது கடத்தி இருப்பாங்களா… அவங்க செல்போன் எல்லாத்தையும் அவங்க எடுத்து வச்சிருப்பாங்க போல… யார் இப்படி பண்ணுனாங்கன்னு தெரியல… உடனடியாக அவங்ளை காப்பாத்தனும் ..”

“கடத்தி இருப்பாங்கன்னு எப்படி சொல்றீங்க ப்ரோ.. அவங்களா எங்கேயாவது கிளம்பிப் போயிருக்கலாம்ல..”

“கல்யாண வீட்டுல இருந்த அப்பாவுக்கு போன் வந்திருக்கு . அப்பா பேசியிருக்காரு… அப்புறமா ஏதோ ஒரு கார் வந்திருக்கு…உடனே மொத்த குடும்பமும் கிளம்பிப் போயிருக்காங்க.. அவங்க எங்க போனாங்க.. அவங்களை யாரு வரச் சொன்னாங்க…கார் அனுப்பியது யார் ..ஒன்னும் தெரியல. என்னால யோசிக்கக் கூட முடியல பதட்டத்துல.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு கால் பண்ணினேன்..”

“போலீசுக்கு போனா என்ன ப்ரோ…”

“தப்பா நினைச்சுக்காதீங்க ..பொம்பள பிள்ளைங்க.. அவங்க எதிர்காலத்தை நினைச்சா யோசனையா இருக்கு… நாம ட்ரை பண்ணிப் பாப்போம். முடியலைன்னா போலீஸுக்கு போயிடுவோம்.”

“ஆதர்ஷ்! ஜெய் வேற ரெண்டு நாள்ல சிங்கப்பூர் கிளம்பனும். அதுக்கு நடுப்பற இப்படி ஒரு குழப்பம்…”

“உங்க ஃபேமிலியோட போட்டோ, உங்கள் சிஸ்டர்ஸ் போட்டோ இருக்கா ப்ரோ..”

“மொபைல்ல இருக்கு ..ஒரு நிமிஷம் “

ஜெய் தன்னுடைய குடும்ப போட்டோவை காட்ட.. ஆதர்ஷ் அதிர்ச்சியில் உறைந்தான் ..”என்ன ஆதர்ஷ்! அதிர்ச்சியாயிட்டீங்க ..?”

“நீரஜா உங்க தங்கையா? சொந்த தங்கையா ..?”

“ஆமாம் ஆதர்ஷ்! நீரஜா என்னுடைய மூத்த தங்கை.. அவளுகடுத்தது தங்கை ஷைலு .. தம்பியும் வினய் .. “

“நீங்க குமாரவேலு அங்கிள் பையனா ..தன்னோட அண்ணன் பேரு சந்திரன்லா நீரஜா சொன்னாங்க ..”

“என்னுடைய முழு நேம் ஜெயச்சந்திரன் வீட்டில் சந்திரன்னு கூப்பிடுவாங்க…அதுனால தான் நீரஜா உங்ககிட்ட சந்திரன்னு என் பேரைச் சொல்லியிருக்கா. காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ் ஜெய்ன்னு கூப்பிடுவாங்க.. எங்க குடும்பத்தை உங்களுக்கு தெரியுமா ஆதர்ஷ்? அப்பா.. பேரைச் சொல்றீங்க அப்பாவைத் தெரியுமா?”

“அவர் எங்க கம்பெனி ஸ்டாப் ப்ரோ..நீரஜா என்னுடைய பர்சனல் செக்ரட்டரியாத் தான் வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க.. ரொம்ப நல்ல பொண்ணு.. கெட்டிக்காரப் பொண்ணு… அவங்கள நாலு நாளா ஆபீஸ் வரலைன்னு நாங்க தேடிட்டு இருக்கோம். அப்போ அவங்களுக்கு ஏதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு.. அதனால கல்யாணத்துக்காக கிராமத்துக்குப் போயிட்டாங்கன்னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க..ஜெய் யாரோ என்னை திசை திருப்பி யிருக்காங்க..”

“ஆதர்ஷ் ‘ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ்’ உங்க கம்பெனியா? அப்பா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காரு. பரமேஸ்வரன் ஐயாவை பார்த்திருக்கேன். ஆனா உங்களைத் தெரியாது’

“ஜெய் முதல் நாள் உங்களை சந்திக்கும் போது நான் என்னை ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் எம்.டின்னு அறிமுகப்படுத்திக்கிட்டேனே…அப்ப கூட நீங்க ஒன்னும் சொல்லலையே. ரொம்ப வருஷமா அப்பாதான் கம்பெனி எம்.டி நான் இப்ப சமீபமாக கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதனால என்னை ரொம்ப பேருக்கு தெரியாது.”

“சாரி ப்ரோ ..அன்னைக்கு இருந்த குழப்பத்துல நான் மனசுல சரியா அதை வாங்கிக்கல…”

“உங்க தங்கை நீரஜாவும் முதல்ல சாதாரண வேலையில தான் ஜாயின் பண்ணாங்க. நான் தான் எங்க கம்பெனில வேலைக்கு சேர்த்தேன். உங்கப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன போதுதான் அவங்க வேலையில சேர்ந்தாங்க. படிப்படியா தன்னுடைய திறமையால முன்னேறி என்னுடைய பர்சனல் செகரட்டரியா ஒர்க் பண்றாங்க ..”

“நாலு நாளா நீரஜா வரலை என்னுடைய பியூன் போய் வீட்ல பாத்துட்டு வந்து வீட்ல ஒருத்தருமே இல்லைன்னு சொன்னாரு…நீரஜாவுக்கு கல்யாணம்னு சொன்னாரு…அப்ப நீரஜாவுக்கு கல்யாணம் இல்லையா?”

“அவங்க கல்யாணத்துக்கு போனது உண்மைதான் ஆனால் கல்யாணம் எங்கம்மாவுடைய அக்கா பொண்ணுக்கு. நான் சிங்கப்பூர் கெளம்பிகிட்டிருக்கேன். அதனால கல்யாணத்தன்னைக்கு மட்டும் வரேன்னு சொல்லியிருந்தேன். “

‘இது நிச்சயம்.. அப்பாவுடைய வேலையாகத்தான் இருக்கும் . நீரஜாவையும், என்னையும் இணைச்சு யாரோ அப்பாவிடம் வத்தி வச்சிருகாங்க. ஆனா அப்பா தனக்கும் நீரஜா காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்கிறாரே… அதுவும் தானா முன்வந்து … அது உண்மையாக இருக்குமா. இவரிடம் எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும் எதுவாயிருந்தாலும் முதலில் நீரஜாவையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்.’

ஜெய் நீரஜாவின் அண்ணன் என்பதே ஆதர்ஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது .

“ஜெய் முதல்ல நீங்க உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாருடைய போன் நம்பருக்கும் போன் பண்ணி பாருங்க. யாராவது போன் அட்டெண்ட் பண்றாங்களான்னு பார்ப்போம். நான் நீரஜா நம்பருக்கு கூப்பிட்டுப் பார்க்கிறேன்.”

காவ்யா இந்த பரபரப்பில் ஒன்றும் பேசாமல் அவர்களைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ..ஜெய் குடும்பத்திற்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும் என்ற கவலை மட்டும் மனதுக்குள் அவளை ஆட்டியது. எல்லோருடைய போனும் ‘ஸ்விட்ச் ஆப்’ இல் இருந்தது ..

“ஜெய் இவங்களுக்கு போன் பண்ணி பிரயோஜனமில்லை ..நான் ஒன்னு செய்றேன். எனக்கு ஒரு போலீஸ் ப்ரண்ட் இருக்கிறார் ..இவங்களுடைய போன் நம்பர்களை கொடுத்து அவரிடம் சொல்லி தனிப்பட்ட முறையில் உதவி கேட்போம் ..”

ஆதர்ஷ் தன்னுடைய பிரண்ட் கார்த்திக்கை அழைத்தான்.

“கார்த்திக் நான் சில போன் நம்பர்ஸ் தர்றேன். எல்லோருமே ஒரே ஃபேமிலி. இவங்க எல்லோரும் கிராமத்துக்கு கல்யாணத்துக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனவங்க.. கிராமத்துல இல்ல.. அவங்களை யாராவது கடத்தியிருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்குது. இந்த நம்பர்ஸ் சிக்னல் கடைசியா எந்த ஊர்ல இருந்ததுன்னு கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா? ஏன்னா ஒரு நாளைக்கு முன்னாடி கூட போன் ரிங் வந்து கட்டாச்சு .இப்ப எல்லார் போனும் சுவிட்ச் ஆஃப் ல இருக்கு ..”

“நான் உடனே பார்த்துட்டு உனக்கு கால் பண்றேன் ஆதர்ஷ்” என்றார் கார்த்திக் ..

மூவருக்கும் ஜூஸ் ஆர்டர் பண்ணினாள் காவ்யா ..அந்த டென்ஷனில் ஏதாவது குடித்தால் தேவலை என்று தான் தோன்றியது ..எப்படியும் கார்த்திக்கிடமிருந்து போன் வரும் வரை வெயிட் பண்ணித் தான் ஆகவேண்டும் ..

ஒரு மணி நேரத்தில் கார்த்திக் போன் பண்ணினார்.

“நீங்க கொடுத்த நம்பர்ஸ் எல்லாமே ஒரே இடத்தில் இருந்துதான் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு .அது செங்கல்பட்டு கிட்ட இருக்கிற பொன்னாக்குடி ..”

“பொன்னாக்குடியா” என்றாள் காவ்யா ….

“அங்க தான் எங்கப்பாவுக்கு சொந்தமான ஒரு கோடௌன் இருக்குது .அப்பா அடிக்கடி அங்க போயிட்டு வருவாரு. அங்கிருந்துதான் சாமான்கள் எல்லாம் சென்னை ஷோரூமுக்கு வருது ..”

அதிர்ந்து போனார்கள் ஜெய்யும், ஆதர்ஷும்.

“என்ன சொல்ற காவ்யா? உங்க அப்பாவுடைய கோடௌன் அங்கயிருக்கா. உனக்கு இடம் தெரியுமா .. உடனே இப்பவே அங்கு கிளம்பி போவோம்”

“ஜெய் அவசரப்படாதீங்க! அங்க எத்தனை பேர் இருக்காங்க உண்மையிலேயே அவங்க அங்க தான் இருக்காங்களா? அப்படிங்கிறதெல்லாம் தெரியல… நம்ம மூணு பேர் மட்டும் போயி சமாளிக்க முடியாது. கார்த்திக்கிட்ட நான் உதவி கேட்கிறேன்…”

அப்படியென்றால் நீரஜா குடும்பத்தை கடத்தியது ராம்சந்தா? மனதில் இன்னும் அதிர்ச்சி அகலாமல் மூவரும் அங்கிருந்து கிளம்பினார் .

(அலை வீசும் ..🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 28) – இரஜகை நிலவன்

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 3) – முகில் தினகரன், கோவை