2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22
காவ்யாவின் காரை ஹோட்டலிலேயே நிறுத்திவிட்டு, ஆதர்ஷ் காரில் மூவரும் கிளம்பினர்… கார்த்திக் தனது டிபார்ட்மென்ட் ஆட்களுடன் போலீஸ் வேனில் பின்தொடர்ந்தார். செங்கல்பட்டுக்கு 5 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே பொன்னாக்குடி கிராமம் தென்பட்டது.
காவ்யா வழி சொல்ல. ராம்சந்த்தின் கோடௌனை அடைந்தார்கள். கார்த்திக் இறங்கி முன்னால் வந்தார்.
“நீங்க மூணு பேரும் காரிலேயே வெயிட் பண்ணுங்க .. சாதாரணமா விசாரிக்கிற மாதிரி விசாரிச்சிட்டு.. உள்ள சர்ச் பண்ணிட்டு வர்றேன்.. அவங்க பிரச்சனை பண்ணாம ஒப்படைச்சிட்டா பிராப்ளம் இல்ல.. ஏதாவது பிரச்சனைன்னா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு பார்த்துக்குவோம்.”
கோடௌன் ஆபீஸ் பக்காவாக ஏசி.. உயர்ந்த ரக சோபாக்கள் அலங்கரிக்க… கஸ்டமரை வரவேற்று பேசும் இடமாக இருந்தது .
ஆபீஸ் இன்சார்ஜாக இருந்த மேனேஜரிடம் கார்த்திக்…
“சார் நாங்க தேடிகிட்டிருந்த ஒரு குற்றவாளி உங்களுடைய கோடௌன்னுக்குள்ள ஏறி குதிச்சிட்டதா சொன்னாங்க.. நான் உள்ள பாக்கனும். சர்ச் பண்ணனும் ” என்றவாரே தன்னுடைய ஐ.டி கார்டை காண்பிக்க..
“சார் முதலாளி கிட்ட கேட்காம ..நான் எப்படி உங்கள அலவ் பண்ண முடியும்…?”
“மிஸ்டர் மேனேஜர் நீங்க ஒத்துழைச்சா நாங்க தேடுற குற்றவாளி இருக்கானான்னு ஒரு ரவுண்ட் சுத்திப் பாத்துட்டுப் போயிடுவோம். இல்லைன்னு சொன்னா உங்களுக்குத்தான் பிரச்சனை. நீங்க உங்க முதலாளிக்கு போன் பண்ணா.. நான் என்னுடைய மேலிடத்துக்கு போன் பண்ணி கம்ப்ளீட்டா இந்த இடத்தை ரவுண்ட் ஆஃப் பண்ணச் சொல்லுவேன் ..”
“சரி சார் பார்த்துட்டு போங்க…” என்றார் மேனேஜர் அரைமனதுடன்.
கார்த்திக் தன்னுடன் வந்த டிபார்ட்மெண்ட் ஆட்களுடன் கோடௌனுக்குள் சென்றார் .உள்ளே அட்டைப் பெட்டிகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இருளை உள்வாங்கி சற்று இருண்டிருந்தது …அந்தப் பெரிய ஹாலை அவர்கள் சுற்றி வந்தபோது அதில் சந்தேகப்படும் படியாக எதுவுமே இல்லை ..யாருமில்லை”
“சார் இங்கே யாருமே இருக்கிற மாதிரி தெரியலையே? நாம கிளம்புவோமா? ” என்றார் முகுந்தன்.
“நான்தான் சொல்றேனே சார்! இங்க அவ்வளவு ஈசியா யாரும் உள்ளே வரமுடியாது. யாருமே குதிச்செல்லாம் வர வாய்ப்பில்லை “என்றார் மேனேஜர் அவசரமாக.
கார்த்திக் ” ஒரு நிமிஷம் முகுந்தன்… இதோட இந்த கோடௌன் முடிகிற மாதிரி தெரியல. இங்க வேற ஏதோ ஒரு ரூம் இருக்குன்னு நினைக்கிறேன் .” அட்டைப்பெட்டிகளுக்கு நடுவே லேசாக கிடைத்த இடைவெளியில் ..கீழே தரையில் உள்ள தூசியில் பதிந்த கால் தடத்தை காண்பித்தார்.
“முகுந்தன் அட்டைப்பெட்டியை நகர்த்தி வையுங்கள்” என்றதும்.. அங்கே நின்று கொண்டிருந்த நாலைந்து பேர் ஓடிவந்தனர் .
“சார்.. இதெல்லாம் எல்லாம் காஸ்ட்லியான சாமான்.. ஏதாவது ஏதாவது டேமேஜ் ஆச்சுன்னா முதலாளி திட்டுவாரு…”
“அதெல்லாம் உங்க முதலாளிய நான் பார்த்துக்கிறேன். இதை முதல்ல தள்ளி வைங்க”
அட்டைப் பெட்டிகள் அகற்றப்பட. சுவரில் கதவு தெரிந்தது. “பூட்டியிருக்குது… திறங்க” என்றார்.
“சார் அதை திறக்க முடியாது..அதுல வேண்டாத சாமான்களும் குப்பைகளும் தான் போட்டு வைச்சிருக்கோம்.அது லம்பர் ரூம்”
“இப்ப நீங்க எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து இதை திறக்கலைனா…என்னை கடமையை செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் “
சத்தமில்லாமல் மேனேஜர் சாவியை கொண்டு வந்து கொடுக்க …ரூமை திறந்தனர். அது ஒரு பெரிய அறை… அந்த அறையில் குமாரவேலு அவர் குடும்பத்தினரும் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். இவர்களை பார்த்து மிரண்டனர்.
“பயப்படாதீங்க உங்களை காப்பாத்த தான் வந்திருக்கேன். இங்க எப்படி நீங்க வந்தீங்க? ..யாரு உங்கள கடத்தினது?”
“சார் கல்யாணத்துக்கு வந்த எங்களை அவசரமா போன் பண்ணி கல்யாண வீட்டுக்கு வெளியே வரவழைச்சாங்க.
‘ஊர்ல எங்க வீட்டு கதவு திறந்து கிடக்கு ..திருட்டு போயிட்டது’ உடனே எங்கள வரச்சொல்லி எங்க பையன் கார் அனுப்பினதா சொன்னாங்க. நாங்க யோசிச்சிட்டு ஜெய்க்கு போன் பண்ணி பேசுறோம்னு சொல்றதுக்குள்ள அவசரப்படுத்தி எங்களை கார்ல ஏற வச்சுட்டாங்க ..இங்க கொண்டு வந்து எங்களை கடத்தி வச்சிட்டாங்க.”
“ஏதாவது சித்திரவதை பண்ணாங்களா?”
‘ இல்ல சார் ஒரு பெரிய பணக்காரர் ஒருத்தர் வந்தாரு, அவர் எங்களை மிரட்டினார். நீரஜா ஆதர்ஷ் தம்பி கூட பழக கூடாது அப்படின்னு கடுமையாக எச்சரிச்சாரு..சின்ன முதலாளிக்கும் அவருடைய பொண்ணுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது போல ..அதனால அந்த தம்பிக்கு பர்சனல் செகரட்டரியா அவ வேலை பார்க்கக்கூடாதுன்னாரு”
“இனிமே அந்த கம்பெனியிலேயே என் பொண்ணு வேலை பார்க்கக்கூடாது. எங்க குடும்பமே அந்த ஊர்ல இருக்க கூடாது, அப்படி இப்படின்னு பயமுறுத்தினார் ..எங்களைக் எச்சரிச்சுட்டு ‘வெளிய போங்க ‘ன்னு சொன்னாரு ..
அப்ப என் பொண்ணு அவரை எதிர்த்து கேள்வி கேட்டா..
‘ உங்க மருமகனோட யார் பழகினாலும் இப்படித்தான் பண்ணுவீங்களா? பேசாம அவருடைய பர்சனல் செக்ரட்டரி ஒரு ஆம்பளையா தான் இருக்கனும்னு உத்தரவு போட்டுருங்க ..நான் உங்க மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்” என்றாள்.
அதனால “ஒரு நாள் முழுசா உங்கள இங்க அடைச்சு போட்டாத்தான் உங்களுக்கு பயம் வரும்” அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு..
“சாப்பாடெல்லாம் கொடுக்குறாங்க .ஆனா நாங்க எங்க இருக்கோம் என்னங்கறது தெரியல .எங்களை எப்படியாவது காப்பாத்துங்க” கையெடுத்துக் கும்பிட்டார் குமாரவேல்.
“மேனேஜர் பிசினஸ் என்கிற பேர்ல ஒரு குடும்பத்தை வெளி உலகத்துக்கு தெரியாம அடைத்து வைச்சு சித்ரவதை பண்ணியிருக்கீங்க .இதனால் அபீசியலா எடுத்தா உங்க எல்லாத்தையும் கைது பண்ணனும்..உங்களை எச்சரிச்சு விடுறேன். இனி உங்க முதலாளி இவங்களுடைய விஷயத்தில் தலையிட்டால் நான் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.இத உங்க முதலாளி கிட்ட சொல்லிடுங்க “என்றார் கார்த்திக்.
” குமாரவேல் சார் வாங்க வெளியில போலாம்..” என்று அந்த குடும்பத்தை கூட்டிக்கொண்டு வெளியே வந்தனர்.
காவ்யா நீரஜாவை கட்டிக்கொண்டாள். “சாரி நீரஜா.. எல்லாம் எங்கப்பாவால் வந்தது.. தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. .”
ஜெய் பயந்து போயிருந்த அவன் தம்பி தங்கைகள் அணைத்துக் கொண்டான்.” பயப்படாதீங்க நிம்மதியா வீட்டுக்குப் போங்க. ஒரு பிரச்சனையும் இல்ல..இது ஒரு சின்ன விஷயம் தான். இதப்பத்தி வேற யார்கிட்டயும் சொல்லவும் வேண்டாம், பேசவும் வேண்டாம் .அப்பா நீங்க ரொம்ப பயந்துட்டீங்களா?கவலைப்படாதீங்கப்பா இனிமே இது போல எதுவும் நடக்காது ” என்று அப்பாவை சமாதானப் படுத்தினான்.
ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பினார்கள். பின் எல்லோரும் சென்னை திரும்பினர்.
காவ்யாவின் மனதில் இவ்வளவுக்கு காரணம் தன் அப்பா என்கிற எண்ணம் மனதை பிசைந்தது …அதேபோல ஆதர்ஷூம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான் ..தன் அப்பாவின் அதே குணம்தான் காவ்யாவின் அப்பாவுக்கும்…தன்னை நீரஜாவுடன் இணைத்து யாரோ பேசிய பேச்சுக்கு இந்த குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அவன் மனம் வலித்தது.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings