in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 3) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2

இஞ்சி, மிளகு, மல்லி, வெந்தயம், கருஞ்சீரகம், எலுமிச்சை துண்டு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து (இங்கு வேப்பிலை கிடைப்பதில்லை) சிறிது மலைத்தேன் சேர்த்து அருந்திவிட்டு, மதிய உணவையும் சமைத்து வைத்து விட்டு, சத்துமாவு கஞ்சிக்கு கலந்துவைத்து குளிக்கச் சென்றாள், நித்யா. அடுப்பிலிருந்து இறக்கியவுடன் குடிக்க வேண்டும். ஹாலுக்கு கொண்டு வருவதற்குள் குளிர்ந்து போய்விடும்.

குளித்து உடை மாற்றிக் கொண்டு, கலந்து வைத்த சத்து மாவை காய்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்துவிட்டு, ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் ஊற்றவும் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது!. டிரைவர் ஆனந்த்தின் அழைப்பு தான். அழைத்துப்போக ஜீப் வந்துவிட்டது. “இதோ வந்துட்டேன்” என்றபடியே கதவைப் பூட்டிக் கொண்டு படிகளில் இறங்கினாள்.

சரிவு முடியுமிடத்தில்  உள்ள பெரிய வீடு. வீட்டின் முன்புறம்  நேர்த்தியான ரோஜாத் தோட்டம். ஊர் முழுக்க விதவிதமான பூக்கள் நிறைந்திருந்தாலும், அந்த வீட்டு ரோஜாத் தோட்டத்திற்கு தனிக் கவர்ச்சி உண்டு. சரியாக அளவெடுத்து புள்ளி வைத்து நட்டு வைத்த கம்பங்களின் மேலே பெரிய பெரிய வண்ண விளக்குகளை கட்டி வைத்தது போல், கிளைகளே இல்லாத ஒற்றை ரோஜாச் செடிகளின் மேலே ஒரே மஞ்சரி போல கொத்து கொத்தாய் இருக்கும் பெரிய பெரிய சூரியகாந்தி அளவிலான ரோஜாக்கள்!. கிளைகளைக் கத்தரித்து, களைகளை அகற்றி அத்தனை நேத்தியாய் பராமரிக்கப்பட்டிருந்தது. நின்று இரசிக்காமல் நகரவே முடியாது.

இத்தனைக்கும் அந்த வீட்டில் ஒரு வயதான பாட்டி மட்டுமே தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். பிள்ளைகள் எவ்வளவு வருந்தியழைத்தும் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை விட்டுப்போக மறுத்துவிட்டதாகவும் சொன்னார்கள். சன்னல் வழியே பார்த்தால் ஏதோ கலையரங்கம் போல்  ஆட்டுக்கல், அம்மிக்கல், திருகைக்கல், உரல்-உலக்கை போன்றவை ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. ‘இந்தக் காலத்தில் அது ஏன்?’ என்று கேட்டால், மாமியாரின் நினைவாக வைத்திருக்கிறாராம்! எப்பேர்ப்பட்ட மருமகள்!  .

ஏனோ அவளுக்கு அந்த அமானுஷ்ய பங்களாவின் நினைவு வந்தது. ‘நடிகரின் வீட்டிலும், தன்னந்தனியே வசிக்கும் இந்தப் பாட்டியின் வீட்டிலும் கூட உள்ளே நடப்பதை பார்க்க முடிகிறது. அந்த வீடு மட்டும் ஏன் ஏதோ இரகசியம் காக்கிறது?‘ என்றெண்ணிக் கொண்டே, அலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டு ஜீப்பை நோக்கி நகர்ந்தாள், நித்யா

“வணக்கம் மேடம்!” என்றனர் அலுவலக உதவியாளர் செந்திலும், டிரைவர் ஆனந்த்தும்.

“வணக்கம்!” என்றவாறே முன்பக்க ஸீட்டில் ஏறி அமர்ந்தாள்,

“இன்னிக்கு ஹத்தப்பள்ளம் எஸ்டேட் இன்ஸ்பெக்ஷன் போகணும் மேடம்“ என்றார் செந்தில்.

“சரி போகலாம்” என்றாள்.

“ஆனா அது கொஞ்சம் பிரச்சினை உள்ள இடங்க மேடம்” என்றார் செந்தில்.

“எங்களுக்கு ரிஸ்க் எடுக்றதெல்லாம் ரஸ்க் சாப்ட்ற மாதிரி, பாத்துறலாம்“ என்றாள் வடிவேலு நடையில்.

கடைத்தெருவைக் கடந்து வலதுபுறம் திரும்பியதும் ஒரே மாதிரியாக கத்தரித்து விடப்பட்டதைப் போன்ற பசுமையான தேயிலைத் தோட்டங்களும் அவற்றின் மேலே மிதந்து சென்ற மேகக் கூட்டங்களும், சிறு வீடுகளாயிருந்தாலும் அவற்றின் முன்னே பூந்தோட்டங்களும் , பள்ளத்தாக்கு பகுதிகளிலிருந்து யாரோ புகை போட்டது போன்றே மேலெழும்பி மேகங்களோடு ஒன்று கலந்த பனி மூட்டங்களும் சிறகடித்துச் செல்கின்ற உணர்வைக் கொடுத்தன.

“அங்கே தூரத்ல உயரத்ல தெரியுதே வீடு, அதுக்கு வழியே இருக்ற மாதிரி தெரியலயே! எப்டி போவாங்க?”

“அது இருளர் வீடுங்க மேடம். நடந்துதான் போவாங்க, ரேஷன் பொருட்கள கூட வாங்கி, தலமேல வச்சி சுமந்துட்டு போவாங்க மேடம்“ என்றார் செந்தில்.

“ஓ…!!! அவ்வளவு தூரம் நடந்தேவா?” என்றாள், அகலாத ஆச்சரியத்துடன்.

“ஆமாங்க மேடம்” என்றார் ஆனந்த்.

சிறிது தூரத்தில் மலைப் பாதையின் நடுவில் ஒரு குரங்கு செத்துக் கிடந்தது.

“ஓ! மை காட்!” என்றாள் தவிப்புடன்.

“குரங்குகளுக்கு சாப்பாடு கொடுக்காதீங்கனு டூரிஸ்ட் வர்றவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டாங்க, அது நேச்சுரலா காட்ல இரை தேடறத மறந்து சோம்பேறியாயிடுங்க. மக்கள் சாப்பாடு தருவாங்கனு இப்படி நடு ரோட்டுக்கு வந்து அடிபட்டு செத்துடுங்க” என்றார் ஆனந்த்.

“பாவம் குட்டிக் குரங்கு!” என்றாள் நித்யா.

            நீல மலையழகி குளிர் தாங்காமல் உடல் முழுவதையும் மூடி, தடித்த பச்சை நிற கம்பளி உடை அணிந்தது போல் அடர்ந்த காடுகள் இடைபட்டன.

“ஃபாரஸ்ட் ஏரியாங்க, மேடம்” என்றார் செந்தில்.

மான் போன்ற விலங்கு தாவி ஓடியது.

“மானா?”

“இல்லைங்க மேடம்; காட்டு ஆடுங்க”.

”ஓ… வரையாடு!… தமிழ்நாட்டின் மாநில விலங்கு!” என்றாள்.

காட்டுக் கோழிகளும் குஞ்சுகளோடு திரிந்தன. நாவல் மரங்கள் நிறைய இருந்தன.

“சீஸன்ல வழி நெடுக நாவல்பழம் கொட்டிக் கிடக்குங்க, மேடம்” என்றார் ஆனந்த்.

பலா மரங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாய் கிடந்தன. நிறைய பிஞ்சுகளும், காய்களும் கீழே விழுந்து கிடந்தன,

“ஏன் இவ்ளோ பிஞ்செல்லாம் கீழ விழுந்து கிடக்கு?” எனக் கேட்டாள்.

“யானை பறிச்சு கீழ போடுங்க, மேடம்” என்றார் ஆனந்த்.

“வேணும்னா எடுத்துட்டு போலாங்க மேடம். பலாக்காய் கூட்டு நல்லாருக்குங்க” என்றார் ஆனந்த்.

“அப்படியா?, ஓ.கே., எடுத்துட்டுப் போலாம்“ என்றாள்.

ஜீப்பை நிறுத்திவிட்டு ஆனந்த்தும், செந்திலும் இறங்கிப்போய் நாலைந்து பலாக்காய்களை எடுத்து வந்து ஜீப்பின் பின்புறம் வைத்தார்கள்.

 அந்தப் பகுதியைத் தாண்டியதும் சம்பந்தமே இல்லாமல் காட்டின் நடுவில் தேயிலைத் தோட்டம் வந்தது,

“எப்படி காட்டுக்கு நடுவில தோட்டம் வாங்கினாங்க?” என்று கேட்டாள் ஆச்சரியத்துடன்.

“தெரியலீங்க மேடம், பிரிட்டிஷ் காலத்திலயே ஏதோ பண்ணி எழுதி வாங்கிருக்காங்க மேடம்” என்றார் செந்தில்.

“வண்டிய நிறுத்துங்க! நிறுத்துங்க!” என்றாள் நித்யா.

நிறுத்திவிட்டு, “என்னங்க மேடம்?” என்று கேட்டார் ஆனந்த்.

“யானை! யானை!” என்றாள் நித்யா, ஆசை பொங்க.

“இல்லீங்களே மேடம்” என்றார் ஆனந்த்.

“இருக்கு. நான் பார்த்தேன், அந்த பள்ளத்தாக்குல இருக்கு” என்று கூறியவாறே இறங்கி பின்னோக்கி நடந்தாள். அவர்களும் பின்தொடர்ந்தார்கள்.

செடி, கொடிகளை விலக்கிவிட்டு எட்டிப் பார்த்தால்… யானையின் பின்புற வடிவில் இரண்டு கருநிற பாறைகள் தான் நின்றன. அவமானமாய்ப் போயிற்று நித்யாவுக்கு!. வேறு யாராவதாவது இருந்திருந்தால், கேலி செய்து கொன்றிருப்பார்கள், ஆனந்த்தும், செந்திலும். அதிகாரியாயிற்றே! சிரிப்பை அடக்கிக் கொண்டு வண்டியில் ஏறினார்கள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. 👆It seems that we are traveling with nithya, the heroine of the story itself madam. What a lovely narrarion given for the environment 👌I felt that I was in Ooty/Cunnoor/kodaikanal while reading the story. Super madam 👏👏 waiting for part 4 madam 🌷🌷🌷

  2. சூப்பர் மேடம்……பொழுதுபோக்கு நேரத்தில் மனதிற்கு மருந்து நல்ல நூல்களை படிப்பது….. இன்றைய வேகமான தலைமுறையில் மதிப்பிற்குரிய தொழிலாளர் உதவி ஆணையர் திருமதி அ.ஜெயலட்சுமி அவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக சிந்தனையுடன் கூடிய பல சிறுகதைகளை எளிய வடிவில் இனிய சொற்கள் கலந்து கருத்துக்களாய் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார்….. அம்மையார் எழுதிய கண்களில் மின்னிடும் மின்னல் தொடர் மட்டும் அல்லாமல் அனைத்து தொடர்களையும் படித்து நாளைய தலைமுறைக்கு கொண்டு செல்வோம்….. வாழ்க வளமுடன்

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 23) – தி.வள்ளி, திருநெல்வேலி 

உறவுகள் பிரிவதில்லை ❤ (இறுதிப்பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை