நமது குழந்தைகளுக்கு எப்போதுமே ஊட்டச்சத்தான உணவை கொடுக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுவோம். அதுவும் பரீட்சை நேரத்தில் ஞாபக சக்திக்கும், சோர்ந்து போகாமல் இருக்கவும், கண்டிப்பாக நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகள் கொடுப்பது நல்லது
அப்படி ஒரு உணவு வகை தான் இந்த புரோட்டீன் லட்டு. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்
தேவையான பொருட்கள்
- முழு கருப்பு உளுந்து – 1 1/2 கைப்பிடி
- பாசிப்பருப்பு – 1 1/2 கைப்பிடி
- கடலைப்பருப்பு – 1 கைப்பிடி
- வேர்க்கடலை – 1 கைப்பிடி
- பொட்டுக்கடலை – 1 கைப்பிடி
- பாதாம் – 7
7. பேரீச்சம்பழம் – 10 (இனிப்பு கூடுதலாய் வேண்டுமெனில் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்)
- நெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் – இரண்டு
செய்முறை
- வெறும் வாணலியில் ஒவ்வொரு பருப்பையும் தனித் தனியாய் வறுத்துக் கொள்ள வேண்டும்
- முதலில் வேர்க்கடலை (வறுத்த வேர்க்கடலையாய் இருந்தால் தோல் மட்டும் எடுத்தா போதும், மறுபடியும் வறுக்கத் தேவையில்லை), பின் கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு, கடைசியாக பாசிப்பருப்பு வறுத்து எடுக்க வேண்டும்.
- பாதாம் ஒன்று இரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும். அப்படி செய்வதால், மிக்ஸியில் பொடிக்க சுலபமாய் இருக்கும்
- பேரீச்சம்பழம் கொட்டையை நீக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்
- வறுத்த அனைத்தும் சூடு ஆறியதும், அத்துடன் பொட்டுக்கடலை, பாதாம், பேரீச்சம்பழம் எல்லாவற்றையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்
- இனிப்பு கூடுதலாய் வேண்டுமெனில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்
- பொடித்ததை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து விடவும்
- அதன் பின், சிறிது நெய் சேர்த்து கலந்து, லட்டு பிடிக்கவும்
இதில் கொடுத்துள்ள அளவிற்கு, 10-12 லட்டு வரும்
பயன்கள்
கருப்பு உளுந்து:
- கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
- கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை நோய் (அனீமியா) தீரும்.
- கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புக்கு வலிமை அதிகரிக்கும்.
பாசிப்பருப்பு:
- பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது.
- அதனால், குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள் குறிப்பாக பரீட்சை நேரத்தில் இந்த லட்டு செய்து கொடுத்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
வேர்க்கடலை:
வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருக்கும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற மற்றும் உயிர்ச்சத்து கலவைகள் காரணமாக மன அழுத்தம், பதட்டம் குறையும்.
கடலைப்பருப்பு:
எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடலைப்பருப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர தாது சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது
பாதாம் பருப்பு:
பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும், நரம்புகளைப் பலப்படுத்தும். மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். புத்திக்கூர்மைக்கு மட்டுமல்லாமல், நரம்புகளின் இயக்கத்திற்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.
பேரீச்சம்பழம்:
- ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவற்றை பேரீச்சம்பழம் அதிகரிக்கும்.
- பேரீச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள், இன்சுலினை சுரக்கத் தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கிறது
- உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையைத் தடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது செய்து கொடுக்கலாம். சர்க்கரை வியாதி இருக்கிறதே பேரீச்சம்பழம் எப்படி உண்பது என யோசிக்கத் தேவையில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும் போது வெல்லத்தைத் தவிர்த்திருங்கள்.
இந்த பொடியை, லட்டு செய்யாமல் பாலிலும் கலந்து குடிக்கலாம். நன்றி.
பின் குறிப்பு: இந்த புரோட்டீன் லட்டு என்னுடைய சொந்த படைப்பு
விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇
Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇