சாதாரணமாக இந்த முறுக்கை செய்ய கடலை மாவையும் அரிசி மாவையும் பயன்படுத்துவார்கள். அதனால் அதிகம் சாப்பிட பயப்படுவார்கள்.
ஆனால் நான் இப்போது செய்யப் போகும் முறுக்கு, எவ்வளவு தின்றாலும் உடலுக்கு ஒன்றும் செய்யாது.
ஏனென்றால் இதில் கடலை மாவுக்கு பதிலாக புழுங்கரிசி உபயோகப் படுத்தப் போகிறோம். எனவே இது சத்து நிறைந்தது.
குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். இதை செய்யும் முறையை கொடுக்கிறேன். நீங்களும் செய்து சாப்பிட்டு இதற்கு கமெண்ட் எழுதுங்கள்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 4 கப்
பொட்டுக்கடலை – 3 கப்
சீரகம் -1 ஸ்பூன்
வெண்ணை- 25 கிராம்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- முதல் நாள் இரவே புழுங்கலரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
- மறுநாள் காலையில் வடித்து, மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்
- பின்பு, அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து இத்துடன் சேர்க்க வேண்டும்
- உப்பு சீரகப்பொடி மிளகாய் பொடி பெருங்காயத்தூள் அனைத்தையும் போட்டு கலந்து பிசைய வேண்டும்
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது நன்றாக சூடானதும், மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிய வேண்டும்
- முறுக்கு சிவந்து வரும் பொழுது எடுத்து விடலாம்
இது மிக சுலபமான முறை. இந்த முறுக்கு கடலை மாவில் செய்வதை விட மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கும் நல்லது
#ad
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇