அதாவது, ஜெய் ஒரு படத்துல சொல்லுவாரே, எனக்கு எங்க அப்பா அம்மானா தாங்க பயம், மத்தபடி ஐ லவ் யூ ங்க’னு, அந்த மாதிரி காஞ்சிபுரம் இட்லி / டிபன் சாம்பார் இதெல்லாம் தான் எனக்கு அவுட் ஆப் சிலபஸ்’ங்க. மத்தபடி நானும் கரண்டி பிடிக்கும் காரிகை தானுங்க
நளன் அளவுக்கு இல்லைனாலும், ஏதோ நயன் அளவுக்கு சமைப்பனுங்க. நயன் சமைச்சு நீ எப்ப பாத்தேனு குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா, அப்புறம் ரெசிபி சொல்ல மாட்டேன். Flow Miss ஆகுதல்ல
ஏற்கனவே நாலு ஈமெயில், மூணு facebook ID, ரெண்டு புள்ளைங்க (என் பொண்ணு சஹானா + சஹானா இணைய இதழ்), ஒரு ஊட்டுக்கார் எல்லாம் இருக்கறதால, பேசிக்கலி ரசக்களி ராகிகளி… நான் வெட்டியா பிஸியா இருக்கேன்
இந்த காரணத்தால, தனியா சமையல் சேனல் ஆரம்பிச்சு மெயின்டெயின் பண்ண நேரமில்லை என்பதால், நம்ம “சஹானா” இணைய இதழ் சேனல்லையே, ஒரு ரெண்டு செண்ட் இடம் கடன் வாங்கி ஒரு ரூம் போட்டுருக்கேன்.
அந்த ரூம் பேரு ‘Coimbatore Samayal’. நம்ம சேனல் Subscribe செஞ்சு இன்னும் நிறைய வீடியோஸ் தொடர்ந்து பாக்கலாம்
ஓ… இன்னும் என்ன ரெசிபினு சொல்லை இல்ல, அது கேப்ஸிகம், அதாவது “குடைமிளகாய் வத்தக்குழம்பு”
நம்ம இந்திய சமையல்ல பொதுவா குடைமிளகாய் அதிகம் உபயோகிக்கறதில்ல. அதுல வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்து நிறைய இருக்கு. கண்ணுக்கு ரெம்பவும் நல்லதுனு சொல்றாங்க
ஆனா, சாதாரணமா பொரியல் மாதிரி செஞ்சா குழந்தைங்க சாப்பிடறது கஷ்டம், பெரியவங்களுக்கே கஷ்டம் தான்.
அதனால, இப்படி Tangy & Yummy வத்தக்குழம்பு செஞ்சு தந்தா யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. செஞ்சு பாருங்க, மறுபடி மறுபடி செய்வீங்க, என்ஜாய் தி ரெசிபி
இந்த ரெசிபியை சும்மா சொல்றதை விட அழகா செஞ்சே காட்டி இருக்கேன் இந்த வீடியோல👇
ஓகே, Talk Less Work More என்னோட பாலிசி என்பதால்😊, சட்டுபுட்டுனு வீடியோ பாத்து கேப்ஸிகம் வாங்கி, எல்லார் வயத்துலயும் புளியக் கரைச்சு … சாரி புளியக் கரைச்சு குழம்புல ஊத்தி… ருசியா சமைச்சு சாப்பிடுங்க 😋
என்றும் கரண்டியுடன்🥄 ,
அப்பாவி தங்கமணி (எ) சஹானா கோவிந்த் (எ) புவனா கோவிந்த்
சூப்பர்!
முந்தைய தினம் எங்கள் வீட்டில் இதுதான் ஆனால் நான் ஜீரகம் சேர்ப்பது இல்லை பொடியில். குழம்புப் பொடி இருந்தா அதையே போட்டுருவேன். இல்லை என்றால் வறுத்து பொடி செய்து போடுவேன்.
கீதா
சூப்பர்!
முந்தைய தினம் எங்கள் வீட்டில் இதுதான் ஆனால் நான் ஜீரகம் சேர்ப்பது இல்லை பொடியில். குழம்புப் பொடி இருந்தா அதையே போட்டுருவேன். இல்லை என்றால் வறுத்து பொடி செய்து போடுவேன். ஜீரகம் சேர்த்ததில்லை.
கீதா
Thanks a lot for your response
மிக்க நன்றி உங்கள் மறுமொழிக்கு
செய்து பார்க்கிறேன். ரெசிபி அறிமுகம் அட்டகாசம்.
Thank you