2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22
மறுநாளும் இதே போல் தங்கம் கொண்டு வந்த ஜூஸில் மருந்தை கலக்கிக் கொடுத்தவன் மகாவிடம் ஏதும் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தான். ‘இன்று இரண்டாவது நாள் தானே.. அதற்குள் எப்படி மருந்து முழுக்க வேலை செய்யும்’ என்று தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
அடுத்த நாள் ஒரு பெரிய கிரேன்பெர்ரி ஜூஸ் டப்பாவை கொண்டு வந்தான். “தங்கம்.. தினமும் மகாவுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தா போரடிக்கும்… இன்னைக்கு வேணா கிரேன்பெர்ரி ஜூஸ் கொடுக்கலாம் .உடம்புக்கு நல்லது. இது வெளிநாட்டில் இருந்து என்னுடைய நண்பன் மகாவுக்காக வாங்கி அனுப்பியிருக்கிறான்” என்று கூறிவிட்டு… “ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து வா ” என்றான்.
தங்கம் கண்ணாடி தம்ளரை எடுத்து வர, அதில் ஜூஸை ஊற்றி எடுத்துச் சென்றவன்.. வழக்கம்போல் மருந்தை கலக்கி எடுத்துக் கொண்டு மகாவின் அறைக்கு வந்தான்.
“கிரேன்பெர்ரி ஜூஸ் வேண்டாங்க” என்றாள் மகா .
“இல்லம்மா இன்னைக்கு ஒரு நாள் குடிச்சு பாரு.. உனக்கு டேஸ்ட் புடிச்சிருந்தா குடி… இல்லேன்னா பழையபடி சாத்துக்குடி, திராட்சை, மாதுளை ஜூஸ் குடிக்கலாம். கிரேப் ஜூஸ் ரொம்ப நல்லது என்று டாக்டர் சொன்னார் .அதனால நாளைக்கு கிரேப் ஜூஸ் குடி . பிரஷ் ஜூஸ் குடிச்சாதான் உன் உடம்புக்கு தெம்பு கிடைக்கும் …ஏற்கனவே நீ கொஞ்சம் சோர்வா இருக்கிற” என்றான் ..
அவன் இவ்வளவு அன்பாக கூறுகிறானே என்று மகாவும் கிரேன்பெர்ரி ஜூஸ் எடுத்து இலேசாகச் குடித்துப் பார்த்தவள் வாய்க்கு நன்றாக இருக்க …மடமடவென குடித்தாள்.
நாட்கள் நான்கு ஓடிவிட மகாவிடம் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தால், இவளுக்காக மாடியும், கீழேயும் ஏறி, இறங்கி எனக்குத் தான் கால் வலிக்கிறது.. என்ற எரிச்சல் மனசில் தோன்றியது. இருந்தாலும் பழம் கனிந்து வரும்போது அதை வீணாக்கி விடக்கூடாது.. என்று நினைத்துக் கொண்டான்.
எங்கே ஜூஸை குடிக்க மறுத்து விடுவாளோ என்ற பயத்தில் அன்று மாதுளை ஜூஸ் போடச் சொன்னான். மாதுளை ஜூஸ்ன்னா மகாவுக்கு ரொம்ப பிடிக்கும். உடம்புக்கு நல்லது என்று மருந்தை கலக்கிக் கொடுத்தான்.
“ஏனோ இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்குது” என்றாள் மகா.
“வந்து சாப்பிடு மகா! சாப்பிடாமல் இருந்தா எப்படி தெம்பிருக்கும்” என்று அவளைக் கீழே கூட்டி வந்தான்.
சாப்பிட உட்கார்ந்த மகா… சற்று நேரத்தில் ..அப்படியே மேசையில் கவிழ்ந்து படுத்து வயிறு வலிக்கிறது வயிறு வலிக்கிறது என்று துடிக்க ….. தங்கமும், ராம்குமாரும் பதறியபடி ஓடி வந்தனர்.
“சுந்தரம்” என்று ராம்குமார் கூப்பிட சுந்தரம் ஓடிவந்தார் .”உடனே காரை எடுங்க.. மகா வயிறு வலிக்குதுன்னு சொல்றா… டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடுவோம்” என்றான் அக்கறையாக.
அந்தக் கேரளா மாந்திரீகன் சொன்னது மனதில் ஓடியது. ‘பெரிய உசிருக்கே தாங்கறது கஷ்டம்னா… சின்ன உசுரு எப்படித் தாங்கும்?’ என்றானே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் மகாவுக்கு அபார்ஷன் ஆனது.
மிகவும் உடைந்து போனாள் மகா. அழுதுகொண்டே இருந்தவளை..தங்கமும் ,ராம்குமாரும் ஆறுதல் கூறி தேற்ற வேண்டியதாயிற்று. சுந்தரம் மிகவும் மனம் உடைந்து போனார்.. ராம்குமார் மட்டும் மருந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான்.
இந்தப் பிள்ளையால் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்தால் கைக்கு வந்த பிள்ளை போய் விட்டதே என்ற ஆதங்கம் சுந்தரத்திற்கு. தங்கம் மட்டும் “அம்மா! உங்களுக்கு என்ன வயசு அடுத்தாப்புல சீக்கிரம் கடவுள் ஒரு குழந்தையை கொடுப்பாரு… வருத்தப்படாதீங்க” என்றாள்.
கொஞ்சம் உற்சாகமாக இருந்த மகா அதன்பின் ஒரேடியாக சோர்வாக தனது அறையிலேயே படுத்திருந்தாள்.
ராம்குமார் இன்னும் அதிக அக்கறையோடு மகாவை கவனித்துக் கொண்டான். கூடிய வரை வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவள் அருகிலேயே இருந்து என்ன வேண்டும் என்ன வேண்டும் என்று கேட்டு அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்தான்.
வயிற்றில் இருந்த குழந்தையும் கலைந்து விட்ட நிலையில் மகா யாருடனும் பேசாமல், தன் அப்பாவின் படத்தின் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருந்தாள்.
ஜூஸில் மருந்து கலந்து கொடுப்பதை மட்டும் ராம் சரியாகச் செய்து வந்தான்..என்ன ஆகும் மகா நிலை …???
நாட்கள் பத்து ஓடி விட, மகா மார்பிள்ஸ் கம்பெனி வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
“என்னப்பா உங்க கம்பெனில விசேஷம்” என்று ஒருவர் கேட்க
“எங்க கம்பெனிக்கு புது எம்.டி வராங்க அவர்களை வரவேற்க தான் இந்த ஏற்பாடு… அதுவும் அவங்க ஒரு பொண்ணு… “
“கம்பெனி பேர் கூட மாறப் போகுதாமே?”
என்ன ஆயிற்று???
ஏன் இந்த மாற்றம்???
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings