2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17
ராம்குமாரின் ஆடி கார் ஈ.சி.ஆர் பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் வந்து நிற்க, வழக்கமாக ஓடி வந்து கழுத்தை கட்டி கொண்டு வரவேற்கும் வந்தனாவைக் காணும் ..ஒருவேளை கார் வந்ததை கவனித்திருக்க மாட்டாள். என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவனை சந்தியா வரவேற்றாள்.
“எங்கம்மா வந்தனாவைக் காணோம்? பியூட்டி பார்லர் போயிருக்காளா? ” என்று ராம்குமார் ஆர்வமாய் கேட்க….
“அவளுக்கு கொஞ்சம் தலைவலி.. உள்ள படுத்திருக்கா..”
“ஐய்ய்யோ.. தலைவலியா? உடம்பு சரியில்லைன்னு சொல்லவே இல்லையே.. ஏதாவது மாத்திரை போட்டாளா? நான் போய் பார்க்கிறேன்” என்று நகர முற்பட்டவனை… “ஒரு நிமிஷம் இருங்க தம்பி!” என்றாள் சந்தியா.
“அவளுக்கு அவ நிலைமையை நினைச்சுத் தான் கவலை. ராத்திரி பூரா சரியாவே தூங்கல.. அதான் காலையில தலை வலி வந்துடுச்சு!”
“அவளுக்கு என்ன கவலை? நான்தான் அவளப் பார்த்துகறேனே ..அப்புறம் எதுக்கு அவ கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்கறா இப்ப பாருங்க தலைவலி வந்துருச்சு “என்றான் ஆதங்கத்தோடு.
“எனக்கு மனசே சரியில்ல…பாப்பாவ நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு. எனக்கப்புறம் அவளுக்குன்னு யாரு இருக்கா? அவ ஒரு அனாதை மாதிரி தானே நிக்கிறா. பெத்த அப்பனும் விட்டுட்டு ஓடிட்டான் ..அம்மான்னு நான் ஒருத்தி இருக்கேன் அவளைப் பாதுகாக்க.. எனக்கப்புறம் அவ நிலைமை என்ன?”
“என்னம்மா இப்படி பேசுறீங்க! நான் தான் அவளுக்கு முழு ஆதரவாக இருக்கேனே… அவளுக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றேன். என் பொண்டாட்டி மகாவுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். நேத்திக்கு ஒரே சண்டை …அப்படி இருந்தாலும் நீங்க நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவீங்கங்கற ஒரே காரணத்துக்காக ஓடிவந்தேன். வந்தனா என்னை எதிர்பார்த்து காத்திருப்பாள். அவ ஏமாந்து போய்டக் கூடாதுன்னு வந்தேன் .அவ மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியலையா?”
“இல்ல தம்பி! உங்க அன்பு எனக்கு புரியாமல் இல்லை. நீங்க வந்தனா மேல் எவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும் ..அவளும் உங்க மேல உயிரா இருக்கா… எத்தனையோ பெரிய பெரிய பணக்காரர்களும், பெரிய பெரிய நடிகர்களும் அவ பின்னாடி வர்றதுக்கு, அவளை கல்யாணம் பண்றதுக்கு கொட்டி கொடுக்க தயாரா இருந்தாங்க ..ஆனா அவ அதெல்லாம் மதிக்காமல் நீங்க தான் பெருசுன்னு உங்க கூட வாழ்ந்துகிட்டு இருக்கா ..”
“ஆமாம்மா… எனக்கு வந்தனா தான் உயிர். வந்தனா என்மேல வச்சிருக்கிற பாசத்துக்கு நான் என்ன செஞ்சாலும் தகும். அவ கூட இருக்கிறது தான் வாழ்க்கையில் எனக்கு நிம்மதி, சந்தோஷம். அதுக்காக நான் எது வேணாலும் செய்வேன். எந்த எல்லைவரை வேணாலும் போவேன். அவளுக்கு நான்.. எனக்கு அவள்.. இது தான் கடவுள் போட்ட முடிச்சு.. அவன் உணர்ச்சிவசப்பட்டு பேச …”
” தம்பி நீங்க உணர்ச்சிவசப்பட்டு பேசுறீங்க ஆனா வந்தனா நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! இப்ப மகாவுக்கு பெருமையே அவ பேருல்ல மகா மார்பிள்ஸ் இருக்கிறது தான். கம்பெனி ஓனர் மகாங்கறது தான். மகா உங்களுக்கு தாலி கட்டிய பொண்டாட்டி .அவளுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கு சமுதாயத்துல. இவளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? நீங்களே நாளைக்கு வேண்டாம்னு சொன்னா வந்தனா தெருவுலதான் நிக்கணும்.”
“ஏன் மா அப்படி சொல்றீங்க? நான் ஒருகாலமும் வந்தனாவை கைவிட மாட்டேன். என்ன செஞ்சா நீங்க என்ன நம்புவீங்க? சொல்லுங்க.. நான் செய்கிறேன்” என்றான்.
“உங்க பொண்டாட்டிக்கு பெருமையே அவங்க பேரால ஓடுற மகா மார்பிள்ஸ் கம்பெனிதான். அதனுடைய பொறுப்பு முக்கால்வாசி உங்களுக்கு இருந்தாலும், வந்தனாவையும் அதுல சேர்த்துகிட்டீங்கன்னா அவளுக்கும் சந்தோஷமா இருக்கும். ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும் ..”
“கண்டிப்பா செய்றேம்மா.. என் பேர்ல இருக்குற ஷேர் எல்லாம் அவள் கூட ஜாயின்ட்டா மாற்றிடுறேன் .அப்படின்னா எனக்கு பின்னாடி அந்த ஷேர்கள் பூராவும் வந்தனாவுக்கு வந்துடும்.”
“அது போதாது தம்பி! அந்த மார்பிள் கம்பெனி முழுக்க ‘வந்தனா மார்பிள்ஸ்’ன்னு மாறனும்.. அதற்கு நீங்கள் உறுதிமொழி கொடுத்தால் தான் வந்தனா உங்களோட வாழ்வதில் அர்த்தம் இருக்கு. “
அப்போது அங்கு வந்த வந்தனா, “ராம்…வாங்க .. எப்ப வந்தீங்க உங்கள பார்க்காமா ஊருக்கு கிளம்பிடுவோமோன்னு பயந்துகிட்டிருந்தேனே. ‘மகாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு சண்டை போடுறான்னு’ மெசேஜ் அனுப்பினதிலிருந்து என் மனசு சரியில்ல. ராத்திரி பூரா தூக்கமில்ல. உங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தேன்” என்று ஓடி வந்து கட்டி பிடித்துக் கொண்டாள்.
“ஏம்மா நீ ஏதோ ஏதோ சொல்லி அவரை கொல்ற அவரே பாவம் மகா படுத்தற பாட்டுல ஆறுதலுக்காக இங்க வர்றாரு.. எனக்கு அவர் எதுவுமே கொடுக்க வேண்டாம். அவருடைய அன்பு இருந்தா போதும்” என்றபடி கண்ணீர் விட்டாள்.
அவள் கண்ணீர் விடுவது பொறுக்காமல் ராம், “அழாதே வந்தனா அம்மா சொல்வதும் சரிதான் . என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். உனக்கு நான் ஏதாவது செஞ்சா தான் உனக்கும் என் பெயரிலும் ஒரு நம்பிக்கையும், பிடிப்பும் வரும். நம்ம ரெண்டு பேரும் வாழப்போற வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கை தேவை.. அதுக்கு நான் எதாவது செய்யணும். ஆனால் எப்படி செய்யப் போறேன்னு தெரியல. எங்க மாமா எழுதி வைச்ச உயில் தான் எல்லா கஷ்டத்திற்கும் காரணம். மகாவை டைவர்ஸ் பண்ண முடியல. இல்ல அவள இல்லாம பண்ணினாலும் அவ சொத்து பூரா டிரஸ்ட்டுக்குப் போயிரும்.”
“தம்பி நான் ஒன்னு சொல்றேன் நீங்க கோபப்படாதீங்க! நான் சொல்றபடி கேட்டீங்கன்னா இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்”
“சொல்லுங்கம்மா…தீர்வை தேடித்தான் அலைகிறேன். சொல்லுங்க! “
“எனக்குத் தெரிஞ்சு கேரள மாந்திரீகர் ஒருத்தர் இருக்காரு.. அவருக்கிட்ட ஒரு மருந்து வாங்கி தரேன். அத நீங்க மகாவுக்கு எப்படியாவது எதிலாவது கலந்து கொடுத்து கிட்டுவாங்க ….எண்ணி பத்தாம் நாள் அல்லது பதினைந்தாம் நாள் கை கால்கள் விழுந்துடும்.. பேச முடியாம போயிடும்.. அப்புறம் அவ உயிர் இருக்குமே ஒழிய நடைபிணம் தான். .அவ்வளவு வீரியம். நீங்க சரின்னு சொன்னா நான் கொண்டு வரச் சொல்கிறேன்” என்றாள் சந்தியா
ஒரு கணம் உறைந்து போனான் ராம்குமார். இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் காமம் கண்ணை மறைக்க…வந்தனா பெயரில் உள்ள மயக்கம் அவன் புத்தியை மறைக்க… அதற்கு சம்மதித்தான்.
“நீங்க வாங்கி கொடுங்க எப்படியாவது அதைக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு . மகா சாகவும் மாட்டாள். அதேநேரம் இடைஞ்சலும் பண்ண மாட்டாள். இது நல்ல திட்டம் தான். நான் இதுக்கு சரின்னு சொல்றேன்” என்றான்.
விதியும், சதியும் அந்த அப்பாவி பெண் மகாவுக்கு எதிராக செயல்படுமா…பதில் காலத்திடம்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
மிகவும் அருமையான கதைங்க மா 👌👌👌. முதல் பகுதி படித்த உடனேயே முழுவதையும் படிக்க வைத்து விட்டது.
அன்பின் நன்றிகள் சகோதரர் உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கம் அளிக்கிறது மிக்க நன்றி