2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
இதுவரை:
சென்னையில் மகா மாமனார் திதிக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிறாள். ராம்குமார் பெங்களூரில் நடிகை வந்தனாவுடன் உல்லாசமாக இருக்கிறான் .
இனி:
ராம்குமாரின் பி.எம்.டபிள்யூ கார் அந்த பெங்களூர் சாலையில் வழுக்கிக் கொண்டு வேகமாக விரைந்தது.
“ஹாய் டார்லிங் ..ஏன் இவ்வளவு வேகமா ஓட்டுற…” சிணுங்கினாள் வந்தனா.
“யூ நோ பேபி! நான் கார் ஓட்டுவதில் பயங்கர எக்ஸ்பர்ட்… ஈஸ்வரன் மாமா எனக்கு ரேஸ் கார் கூட வாங்கித் தரேன்னு சொல்லியிருந்தார். நான் கூட கொஞ்ச நாள் கார் ரேஸ் அகடெமில படிச்சேன். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் மாமாக்கு அப்புறம் கம்பெனியை பாக்குறாப்பல ஆயிடுச்சு. அதனால அத அப்படியே விட்டுட்டேன். எனக்கு ரொம்ப ஆசை ரேஸ் கார் ஓட்டனும்னு.”
“இப்ப உங்க மாமா கதையை விடு! அதைப் பற்றிய பேச்சை எடுக்காதே… நாம ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணினோம்.. இந்த இரண்டு நாள் யாரை பத்தியும் நெனைக்காம… நம்மள பத்தி மட்டும்.. நம்ம சந்தோஷத்தை பத்தி மட்டும் நினைக்க வேண்டும்னு முடிவு பண்ணினோமா இல்லையா? முழுக்க முழுக்க இந்த நிமிஷத்தை மட்டும் அனுபவிக்கனும். உன்னோட கவனம் என்கிட்ட தான் இருக்கனும் ..நீ என்கிட்ட மட்டும் தான் பேசனும்.. என்ன பத்தி மட்டும் தான் பேசனும். உனக்கு ஊர் நினைப்பு, பிசினஸ் நினைப்பு, முக்கியமா உன் பொண்டாட்டி மகா நினைப்பு எதுவுமே வரக்கூடாது.”
“ஏன் வந்தனா! நீ சொன்னதும் நான் சரின்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்கூட ரிசார்ட் வர சம்மதிச்சனா இல்லையா. நம்ம ரெண்டு பேருடைய போனையும் அதனால தான் வீட்டிலேயே தூக்கி போட்டுட்டு வந்துட்டோம்.. இப்ப நம்மள யாருமே காண்டாக்ட் பண்ண முடியாது. நாமளும் யாரையும் காண்டாக்ட் பண்ண முடியாது .இந்த ரெண்டு நாள் முழுக்க முழுக்க நம்மளுது. போதுமா டார்லிங். புரிஞ்சுக்கோ! சும்மா சும்மா சந்தேகப்பட்டுகிட்டு இருக்காத. நான் உன்மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்.”
இடது கையால் வந்தனாவின் இடுப்பை வளைத்து தன் தோளில் சாத்தி முத்தமிட்டான் ராம்குமார்.
“இதழில் கதை எழுதும் நேரமிது …
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது ….”
காரில் தவழ்ந்த அந்த இனிமையான பாடல் அவன் மனதை இன்னும் மயக்கியது.
“காரை பார்த்து ஓட்டு ராம்! என்னோட கார்ல உன்ன இப்படி பக்கத்துல உட்கார வெச்சு நானும் இதே மாதிரி ஸ்பீடா ஓட்டணும்னு ஆசை.”
“போச்சு போ! உன் காரைப் பார்த்தா அவ்வளவுதான் அப்படியே நிருபர் பட்டாளமே பின்னாடி வந்துருவாங்க … நான்னா யாருக்கும் தெரியாது..என் காரை பாலோ பண்ண மாட்டாங்க. உன்கதை அப்படியில்ல, நீ மிகப்பெரிய பிரபலம். நீ அவங்க கண்ணுல பட்டா அவ்வளவுதான் ‘முன்னணி நடிகை வந்தனா தொழிலதிபர் ராம்குமாருடன் ரிசார்ட் ஒன்றில் உல்லாசம்’ அப்படின்னு கொட்டை எழுத்துல போட்டு இஷ்டப்படி எழுதுவாங்க. அப்புறம் அவ்வளவுதான். நாம போற இடத்திலெல்லாம் நம்ம முதுகுக்கு பின்னால பேசுவாங்க .”
‘முக்கியமா மகா காதுக்கு போயிடுச்சுன்னா, அவ்வளவுதான்.. அப்புறம் அவளை சமாளிக்கிறது பெரும்பாடு. அவளுக்கு பதில் சொல்ல முடியாது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். தப்பித்தவறி அவளுடைய பெயரை எடுத்தால் அவ்வளவுதான், வந்தனா பத்திரகாளியாகி விடுவாள். எனவே கவனமாக மகா பெயரை தவிர்த்தான்.
ரிசார்ட்டில் அவன் பெயரில் புக் பண்ணியிருந்த காட்டேஜ் அருமையாக இருந்தது. ரம்மியமான அந்த சூழல் அவர்களுக்கு கிளர்ச்சியை உண்டு பண்ண… ராம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். பகலிரவு பேதம் மறைய ..பஞ்சணை மஞ்சணையாக காம நாடகம் அரங்கேறியது.
வந்தனா ராமிடம், “நாம் இப்படியே ரூம்ல அடைஞ்சு கிடக்க வேண்டாம். கொஞ்ச நேரம் சுவிம் பண்ணிட்டு வருவோமா… நான் நம்ம ரெண்டு பேருக்கும் சுவிமிங் டிரஸ் எடுத்து வச்சிருக்கேன். இங்க ஃபுட் ஆர்டர் பண்ணா வர டைம் ஆகும்னு சொன்னாங்க. நாம ஆர்டர் பண்ணிட்டு போயிடலாம். ஒரு மணிநேரம் சுவிம்மிங் பூல்ல என்ஜாய் பண்ணிட்டு வந்து சாப்பிடலாம்” என்றாள் ஆர்வமாக.
“வந்தனா ஏதாவது வெஜிடேரியன் ஃபுட்டே சொல்லிடு” என்றான். “சாரி டார்லிங்! எனக்கு சிக்கன் இல்லாமல் சாப்பிட முடியாது. சிக்கன் பிரியாணி… சிக்கன் சிக்ஸ்டி பைவ்” என அவள் ஆர்டர் பண்ண, அவனால் எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை.
ஸ்விம்மிங் முடித்துவிட்டு பசியோடு இருவரும் வர, தயாராக ஆர்டர் பண்ணிய உணவு வந்து சேர்ந்தது. ட்ரெஸ்ஸை மாற்றிவிட்டு சாப்பிடுவோம் என்று டிரஸை எடுத்தான் ராம்குமார். பேண்டிலிருந்து பர்ஸ் கீழே விழ, அதிலிருந்து வெளியே துள்ளி விழுந்தது அப்பா அம்மா ஃபோட்டோ.
‘இன்று அப்பாவுக்கு திதியில்ல. மகா பாவம் எல்லா ஏற்பாடும் பண்ணி வைத்திருப்பாள். தன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பாள்’
ஒருகணம் குற்ற உணர்வு அவனை ஆட்டியது. இதுவரை அப்பாவுக்கு திதி கொடுக்காமல் இருந்ததில்லை. மாமா அதில் கண்டிப்பாக இருப்பார். மகாவை என்ன சொல்லி சமாளிக்க போகிறேன்.
“வா ராம்! ரொம்ப பசிக்குது! சீக்கிரமா ஆறிபோகும் முன்னாடி சாப்பிடலாம்” என்று அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டவள், கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய, அவனுடைய குற்றவுணர்வு ஒரு நிமிடத்தில் காணாமல் போனது.
அங்கே கோவிலில் அன்னதானம் நடந்து கொண்டிருக்க, இங்கே ராம் முன் தட்டில் இருந்த அசைவ உணவுகள் அவனைப் பார்த்து சிரித்தன. வழக்கம்போல் காமமே ஜெயிக்க வந்தனாவுடன் உணவு உண்ண அமர்ந்தான் ராம். காலம் சொல்லுமா அவன் பாவ கணக்கின் சம்பளத்தை.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings