2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25
“வந்தனா மேல இருந்த மோகம் உங்க கண்ணை மறைச்சுது. உங்கள சுத்தி நடக்கிறத நீங்க சரியா கவனிக்கத் தவறிட்டீங்க..”
“சுந்தரம் அண்ணா.. ஈ.சி.ஆர் பங்களாவுல வந்தனாவையும், அவங்க அம்மாவையும், இறக்கி விட்டதுமே அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த முருகன் என்னை பார்க்க ஓடி வந்தான். எங்கிட்ட நீங்க அங்க வந்து போனதைச் சொன்னான்.
முருகன் ஈஸ்வர் டிரஸ்ட் மூலமா படிச்சு வளர்ந்தவன். அவனுக்கு என் மீதும் எங்க அப்பா மீதும் மிகப்பெரிய மரியாதையும் விசுவாசமும் உண்டு. .என்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். ஈ.சி.ஆர் பங்களா கட்டும் போது நான்தான் முருகனை மேற்பார்வை வேலைக்காக உங்களிடம் அனுப்பினேன். அவன் என் ஆள், அதுவே உங்களுக்கு மறந்துவிட்டது.
உங்களுக்கும், வந்தனாவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சரியாக தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவன், நீங்கள் இருவரும் ஸ்விம்மிங் பூல்ல அடிச்ச கூத்தைப் பார்த்திருக்கான். உடனே சுந்தரம் அண்ணாவிடம் வந்து இருவருக்கும் இடையே உள்ள தொடர்பை பத்தி சொல்லிட்டு போயிருக்கான். ஆனால் சுந்தரம் அண்ணா நான் வருத்தப்படுவேன் என்று என்னிடம் நேரடியாக கூறவில்லை. ஆனால் அவருக்குத் தெரியும் என்பதை நான் அவர் முக குறிப்பிலிருந்தும்… பேசும் போது ஏற்படும் தடுமாற்றத்திலேயும் உணர்ந்து கொண்டேன்.
இந்த பங்களாவுக்கு அவன் வந்தால் உங்களுக்கு சந்தேகம் வரும்னு வெள்ளிக்கிழமை நான் கருமாரியம்மன் கோவிலுக்கு போவது அவனுக்கு தெரியும் என்பதால் வெள்ளிக்கிழமை என்னை கோவிலில் வந்து சந்தித்தான்
“அதுபோல அந்த கேரளா மாந்திரீகர் வந்தது.. அவன் ஏதோ பேசிவிட்டு போனது.. எல்லாமே முருகனுக்கு தெரியும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியவில்லை. சந்தியா மாந்திரீகனை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடச் சொல்லி முருகனிடம் சொல்ல அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு.. அவனிடம் பேச்சு கொடுத்து தனக்கு ஒருவரை வசியம் பண்ண மருந்து தர முடியுமா என்று கேட்க, தான் பெரிய இடங்களுக்கு மட்டுமே பண்ணுவதாகவும் தன்னுடைய மருந்துகள் ரேட் ஜாஸ்தி அது உன்னால வாங்க முடியாதுன்னு பெருமையா சொல்லி இருக்கான் அந்த மாந்திரீகன்
விஷயம் தெரிஞ்சதும், முருகன் ஏதோ தப்பு பண்றாங்க என்பது புரிந்து பரிதவித்துப் போயிருக்கான் .அதை என்கிட்ட சொல்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானு பார்த்திருக்கான். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த நான் தங்கமும், சுந்தரம் அண்ணனும் சொன்னதுனால அரை மனசா கிளம்பி கோயிலுக்கு போனேன். அங்கே என்னை முருகன் சந்திச்சான்.
அம்மா ஏதோ மருந்துகள் கை மாறுது… அது யாருக்கும்னு தெரியல. ஐயா கார் வந்தது. அதனால் அது அனேகமாக நான் சொல்லவே தயக்கமா இருக்கு.. உங்களுக்கு கொடுக்கறதுக்கு கூட இருக்கலாம். அதனால நீங்க அய்யாவை நம்பி எந்த மருந்தையும் சாப்பிடாதீங்கன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போனான்.
ஜன்னல் வழியா அவன் லேசாக எட்டிப் பார்த்தபோது சிவப்பு மூடி போட்ட ஒரு வெள்ளை பாட்டில் அந்த மாந்திரிகன் கையில் வைத்திருந்தான்னு சொன்னான். நான் மறுநாள் நீங்கள் கம்பெனி போன பிறகு உங்களுடைய அலமாரியை திறந்து பார்த்தபோது சிவப்பு மூடி போட்ட வெள்ளை பாட்டிலை பார்த்தேன். உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையானு தெரியல எல்லா கப்போர்ட்க்கும் இரண்டு செட் சாவி உண்டு. அதில் ஒரு செட் சாவி தனியா என்கிட்ட இருந்தது. அதனால எனக்கு உங்க கப்போர்ட்டைத் திறக்க எந்த கஷ்டமும் இல்ல.
அப்பவும் நான் இந்த மருந்து இவ்வளவு வீரியமாக இருக்கும். அது இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும்னு நினைக்கல… சாதாரண வசிய மருந்துதான்னு நினைச்சேன். நீங்க சொல்றபடி நான் கேக்குறதுக்கு எனக்கு நீங்க கொடுக்க நினைக்கிற வசிய மருந்துனு நினைச்சேன். இவ்வளவு ஒரு சீரியஸான விளைவை ஏற்படுத்தும் மருந்து என்று தெரிந்து இருந்தால் அதை சத்தியமாக உங்களுக்கு கொடுத்திருக்க மாட்டேன்.
ஆனால், விதியும் நீங்கள் செய்த சதியும் உங்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது. யோசித்துப் பாருங்கள், இப்போது நீங்கள் இருக்கும் நிலையில் நான் இருந்தால் இப்பொழுது நீங்கள் படும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் நான் படுவேன். நான் ஒரு கர்ப்பிணி என்ற இரக்கம் கூட உங்களுக்கு அப்போது வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும் மருந்தை ஒரு கர்ப்பிணி மனைவிக்கு ஒரு கணவன் கொடுக்க வேண்டுமென்றால் அவன் எவ்வளவு கல் மனதுகாரனாக இருந்திருப்பான். அப்படி பார்க்கும்போது இந்த தண்டனை உங்களுக்கு சரிதான் என்று என் மனதுக்கு தோன்றுகிறது
சரி அது போகட்டும், மருந்த என்ன பண்ணினேன் என்று யோசிக்கிறீர்களா. அந்த மருந்தை அப்படியே எடுத்து வேற ஒரு பாட்டிலுக்கு மாத்திட்டு அந்த பாட்டில்ல சுகர் பிரீ பவுடரை போட்டு வச்சிட்டேன். அதைத்தான் நீங்க தினமும் எனக்கு ஜூஸில் கலந்து, கலந்து கொடுத்தீங்க. அதேநேரம் அதிலிருந்த மாந்திரீகர் கொடுத்த மருந்த …நீங்க தினமும் வாக்கிங் போயிட்டு வந்து வாயில் போட்டுக்குவீங்களே குளுக்கோஸ் பவுடர் அதோட கலந்திட்டேன். நீங்களே உங்க கையால தினமும் அந்த மருந்தை சாப்பிட்டீங்க.
நீங்க கத்திகிட்டு… கோபப்பட்டுகிட்டு ..என் மேல எரிச்சல் பட்டுக்கிட்டிருந்த வரை எனக்கு எதுவுமே வித்தியாசமா தோணல.. ஆனா திடீர்னு அன்பு பொழிஞ்சீங்க பாருங்க.. விதவிதமா வாங்கிட்டு வந்தீங்க… பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கிட்டீங்க… நானும் உங்களை நம்புற மாதிரி நடிச்சேன். முழுக்க உங்களுடைய திட்டம் என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு. அந்த மருந்தை நான் அஜாக்கிரதையாக கையாண்டதுனாலேயோ இல்ல அந்த பாட்டில்ல சுகர் பிரீய போட்டதனாலேயே என்ன காரணமோ கரு கலைஞ்சு போச்சு. முதல்ல நான் அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாலும் பின்னாடி இந்த மாதிரி நிலைமைல உங்க பிள்ளைய நான் சுமக்க விரும்பல.
நான் இதுல வந்தனாவை குற்றம் சொல்ல மாட்டேங்க. அவ தினமும் கையில ஒரு புது பொம்மையை கொடுத்தால் சந்தோஷமா விளையாடுற குழந்தையோட மனநிலை கொண்டவ. இப்பவும் உங்க நிலைமைக்காக ஒரு மாதம் உட்கார்ந்து அழுவா …அப்புறம் அவ வாழ்க்கை அவ பார்க்க ஆரம்பிச்சிடுவா. என் கோபம் அவங்க மேல இல்ல, ஆனா மனைவி, குடும்பம், அப்படிங்கிற பொறுப்பு இருந்தும், அதை பற்றி கவலைப்படாமல், காமத்திற்கு இடம் கொடுத்த நீங்க முதல் குற்றவாளி. அதை பயன்படுத்திகிட்டு உங்களை வளைச்சுப் போட்டு வந்தனாவையும், உங்களையும் சேர்த்து வைச்சு.. உங்கள் தொடர்பை பயன்படுத்திகிட்டு பணத்தையும் சம்பாதிச்சுகிட்டு இப்படி ஒரு கொடூரமான திட்டத்தை போட்டுக்கொடுத்த அந்த சந்தியா இரண்டாவது குற்றவாளி.
உங்களுக்கு தண்டனை ஏற்கனவே கிடைச்சிருச்சு.. சந்தியாவை பற்றியும், வந்தனாவை பற்றியும் இனி எனக்கு கவலை இல்லை, வந்தனாவுக்கு ராம்குமாருக்கு பதிலா பிரேம்குமார் கிடைச்சதும் அவ கவனமெல்லாம் அங்க போயிடும். அவ அம்மா சந்தியா இப்பவே அடுத்து வளைச்சு போட வேண்டிய ஆட்கள் லிஸ்ட் வைத்திருப்பா. வேற எவனாவது ஒரு சபல கேஸ் மாட்டுவான். இந்த மகா மாதிரி இன்னொரு சகாவோட வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
மாற வேண்டியது உங்கள மாதிரி காமவெறி பிடித்த மனித மிருகங்கள். மனைவிக்கு துரோகம் பண்ணும் குடும்பத்தை ஏமாற்றம் துரோகிகள். நீங்க மாறாத வரைக்கும் புழு மாதிரி இருக்கிற ‘மகா’க்கள் புலியா மாறத்தான் செய்வாங்க. அவங்க விஸ்வரூபம் எடுத்தா நீங்க தாங்க மாட்டீங்க. மைண்ட் இட்…” என்றாள் ஆக்ரோஷமாக.
தென்றலாய் இருந்த மகா… புயலாய் மாறி வீசினாள் வார்த்தைகளை. அந்தப் புயலின் வேகம் தாங்க முடியாமல் நிலைகுலைந்து போய் நின்றான் ராம்குமார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings