கண்ணன் எந்தன் காதலன்
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணுக்குள் நுழைந்து
கருத்துக்குள் உணர்ந்து
நெஞ்சம் நிறைந்து நின்றானவன் – எனது
நெஞ்சம் நிறைந்து நின்றானவன்
பிருந்தாவனத்தில் கானமிசைத்து
என்னை அழைக்கிறாய்
பேதைநானும் ஓடிவந்து
தேடிக் களைக்கிறேன்
உன்னைக் கண்டபோதுநீயும்
லீலை புரிகிறாய்
ராதையோடு லீலைபுரிகிறாய்
ஏழைஎன்னை நோகவைத்து
வாடச் செய்கிறாய்
உயிர்வாடச் செய்கிறாய்
கன்றுகாலி பறவைகூட
உந்தன் அருகிலே
என்னைமட்டும் ஏங்கவைத்து
தவிக்க விடுகிறாய்
ஏன் தவிக்கவிடுகிறாய்?
வா வா கண்ணா
வா வா கண்ணா
என் நெஞ்சத்தாமரையில்
வந்தமர்வாய்
உயிர்காத்து முக்திநிலைத்தர
வந்தருள்வாய்
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணுக்குள் நுழைந்து
கருத்துக்குள் உணர்ந்து
நெஞ்சம் நிறைந்து நின்றானவன் – எனது
நெஞ்சம் நிறைந்து நின்றானவன்
கண்ணன் எந்தன் காதலன் (கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – பிப்ரவரி 2021 போட்டிப் பதிவு

அருமை…