சஹானா
ஆன்மீகம் கவிதைகள்

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன்

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

கோடை வெயிலும்

வாடை குளிரும்

நிலவின் ஒளியும்

நிலத்தின் வளமையும்

மலரின் மணமும்

மதுவின் சுவையும்

குழலின் இசையும்

குழவியின் மழலையும்

எழுத்தின் சிறப்பும்

எண்ணின் பெருமையும்

பொன்னின் மிளிர்வும்

விண்ணின் நீள்மையும்

ஞானத்தின் உயர்வும்

தானத்தின் செம்மையும்

வாய்மையின் தர்மமும்

தாய்மையின்அழகும்

நீயே அன்றோ கண்ணா !  நீயே அன்றோ !

நீயே அன்றோ கண்ணா ! நீயே அன்றோ  !

மந்தைக் கூட்டத்தின்

ஓர் இளங்கன்றாய்

யாகத்தீயில் எழும்

ஓர் சிறுபொறியாய்

வேய்ங்குழல் இசையின்

ஓர் ஸ்வரமாய்

பக்திப் பாடலில்

ஓர் அட்சரமாய்

மயில்பீலியில் ஒளிர்ந்திடும்

ஓர் நிறமாய்

பீதாம்பர ஆடையில்

ஓர் நூல்இழையாய்

பாற்கடலில் விழும்

ஓர் மழைத்துளியாய்

உன் பாதம் வணங்கிடும்

ஓர் நறுமலராய்

திகழ்வதும் நானே அன்றோ கண்ணா !

நானே அன்றோ கண்ணா !  நானேயன்றோ !

ஹே  கேசவா !  உன்னுடனேயே நான் !

என்நினைவில் நீயே

என்றும்ஹே மாதவா !

ஹரே கிருஷ்ண

ஹரேகிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே

ஹரேராம ஹரேராம

ராம ராம ஹரேஹரே

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

             

         

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: