சஹானா
ஆன்மீகம் கவிதைகள்

மந்திராலயம் – மகான் ஆலயம்…! (கவிதை) – ✍ சி. கோவிந்த்

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:

மகத்தான மகான்
மந்திராலய பகவான்

புவனகிரி தந்த புண்ணியன்
திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள்
அருளிய வேங்கட நாதன்…!

கலைகளில் வல்லவன்
வீணை இசை வித்தகன்
கலைவாணிச் செல்வர்
பிரகலாதரின் அவதாரர்

பிருந்தாவனம் அருளிட்ட குருராயர்
ஸ்ரீ சுசீந்திர தீர்த்தரின் சீடரவர்
நெஞ்சத்தில் நிறைந்த ஸ்ரீராமர்

வேத நாயகனாக விளங்கிடும் வேத நாதர்
புவனம் முழுதும் ஆளும் குருராஜர்
ஸ்ரீ குரு ராகவேந்திரர்

ஸ்ரீ மத் ஆச்சாரியாரின் ”துவைதத் தத்துவர்”
நம் மனக் கவலைப் பிணி போக்கும் நல் மருத்துவர்

துன்பங்களுக்கு நிரந்திர நித்திரை அளித்திடும்…
துங்கபத்திரை நதிக்கரையில் அருள்பவர்….

பிரகலாதரின் மறு பிம்பம்…
பிரபஞ்சத்தின் குரு அம்சம்…

குருவருள் கொணர்ந்திடும்…
மந்திராலயம் – மகா ஆலயம்…
மந்திராலயம் – மகான் ஆலயம்…

திருவருள் புரிந்திடும்…
மந்திராலயம் – மகா ஆலயம்…
மந்திராலயம் – மகான் ஆலயம்…

தங்க வியாழன் தோறும்…
திருவிழாக் கோலம் பூணும்….

பூஜிக்க நினைந்து விட்டால்…
உள்ளம் உவகை கொள்ளும்…

பூஜிக்க முனைந்து விட்டால்…
உலகம் உய்வுப் பெறும்…!

தங்க வியாழன் தோறும்…
திருவிழாக் கோலம் பூணும்….

கருணைப் பெருக்கினை அருளும்…
காமதேனு … கற்பக விருட்சம்….!

அட்சதை இருந்து விட்டால்…
அபாயம் நீங்கிடும்…!

மிருத்திகை இருந்து விட்டால்…
நிம்மதி மலர்ந்திடும்…!

சிந்தையில் நின் நினைவு அகலாது…
சிரத்தையுடன் வேண்டுகிறோம்…

அகிலமெலாம்…
அமைதிப் பூக்கள் பூக்கட்டும்…!
ஆனந்தப் பெருமழைப் பொழியட்டும்…!

குரு ஸ்ரீ ராகவேந்திரர் –
திருவருள் புரியட்டும்…!
மகானின் மகிமைகள்….
தொடர்ந்து மலரட்டும்…!

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம:

#ad

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: