2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17
“அம்மா… நாங்க காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவை… கூடப் படிக்கற பையனோட அக்கா மேரேஜுக்காக நாங்க பத்து பேர் ஒரு குரூப்பா திருச்சி போயிட்டு வந்தோமே ஞாபகமிருக்கா? கோமதியும் கூட வந்தாளே…..” வித்யா சொல்ல
முகத்தைச் சுளித்துக் கொண்டு யோசித்த பத்மாவதி, “அட ஆமாம்… ஞாபகமிருக்கு” என்றாள்.
“அது இவனோட சிஸ்டர்தான்”
“ஓ… அப்படியா?” என்ற பத்மாவதி, “அவங்க நல்லா இருக்காங்களா?” கேட்டாள்.
“ம்… அவங்கெல்லாம் நல்லாயிருக்காங்க… இவன்தான் நல்லாயில்லை” என்றாள் வித்யா.
“வித்யா… ப்ளீஸ்…. அதையெல்லாம் அம்மாகிட்ட எதுக்கு…” விஜயசந்திரன் தயங்க,
“என்னப்பா… என்ன சொல்றா வித்யா?” பத்மாவதி விடாமல் கேட்க,
“அம்மா… இவனுக்குக் கல்யாணமாகி… முதல் பிரசவத்துல சம்சாரம் இறந்திட்டாங்க!…”
“அடக் கடவுளே?” என்று அங்கலாய்த்த பத்மாவதி, “குழந்தை?” கேட்டாள்.
“ம்… அதுவும் அப்பவே அம்மா கூடப் போயிடுச்சு” என்றாள் வித்யா.
கலங்கிய கண்களுடன், சோக பிம்பமாய் சோபாவில் அமர்ந்திருந்தான் விஜயசந்திரன்.
வாசற்பக்கம் நிழலாட, எல்லோருமே திரும்பிப் பார்த்தனர். கோமதி வேக வேகமாய் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
வந்தவள் விஜயசந்திரனைப் பார்த்து ஒரு கணம் நின்று, “ஹேய்ய்ய்ய்… நீ… விஜயசந்திரன்தானே?” கேட்டு விட்டு அவன் தோளில் ஓங்கிக் குத்தினாள்.
அவன் சோபைச் சிரிப்பை வெளியிட, “என்னா மேன் காலேஜ்ல படிக்கும் போது செம ஜாலியா இருப்பே… இப்ப இப்படி டல்லடிக்கறியே… என்னாச்சு…? கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலையா?… இல்லை கெடைச்ச பொண்ணு எவனாச்சு கூட ஓடிப் போயிட்டாளா?” கோமதி சரளமாய்ப் பேச,
“ஏய்… கோமதி… கொஞ்சம் அடங்கறியா?… அவனும் நானும் இப்ப ஸேம் போட்ல போயிட்டிருக்கோம்” என்றாள் வித்யா.
ஒரு நிமிடம் நிதானமாய் யோசித்த கோமதி, “வாட் யூ மீன்?” கேட்டாள்.
“ஐ மீன்… எனக்கும் என்னோட கணவர் கல்யாணமான சில நாட்கள்ல இறந்திட்டார்… இவனுக்கு இவன் மனைவி… சில நாட்கள்ல… பிரசவத்துல இறந்திட்டா…”
அப்போது காஃபி டிரேயுடன் வந்த பத்மாவதி, எல்லோருக்கும் வினியோகித்து விட்டுத் திரும்ப, “அம்மா… நீயும் இங்கேயே இரு… இப்ப நாம இங்க ஒரு முக்கியமான விஷயம் பேசப் போறோம்!… முக்கியமான முடிவை எடுக்கப் போறோம்” என்றாள் வித்யா.
விஜயசந்திரன் உட்பட எல்லோருமே புருவங்களை நெரித்துக் கொண்டு அவளையே பார்த்தனர்.
“என்ன எல்லோரும் என்னையே பார்த்திட்டிருக்கீங்க?… கைல இருக்க காஃபியை முதல்ல குடிங்க” என்றாள் வித்யா சத்தமாய்.
அதே நேரம், சுந்தரின் வீட்டில் அவன் தாய் தெய்வானையும் தந்தை ராமச்சந்திரனும் சீரியஸாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.
“தெய்வானை… உன் மனசுல இன்னிக்கு வந்த இந்த எண்ணம் என் மனசுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வந்திடிச்சு தெய்வானை!… நீ தைரியமா என்கிட்ட சொல்லிட்டே… ஆனா நான் வெளிய சொல்ல முடியாம உள்ளாரவே வெச்சிட்டிருந்தேன்” என்றார் ராமச்சந்திரன்.
“இங்க பாருங்க…. வித்யா இருபத்தி மூணு… இருபத்திநாலு வயசே ஆன பொண்ணு… இப்போதிருந்தே அவ விதவையா… ஒரு தனிமை வாழ்க்கையை… வாழ்றது என்பது மகா கொடுமை!… உண்மையிலேயே நாம் நம்ம மகன் மேல அன்பும்… பாசமும் உள்ளவங்களா இருந்தா…. அவனுடைய சம்சாரத்துக்கு ஒரு நல்ல மறு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்… அப்பத்தான் அவனோட ஆன்மா சாந்தியடையும்!” தீர்மானமாய்ச் சொன்னாள் தெய்வானை.
“சரிடி… இதை யார் அவகிட்ட சொல்றது?… உன்னால சொல்ல முடியுமா?” ராமச்சந்திரன் கேட்க,
“நாம ஏன் நேரடியா அவகிட்ட சொல்லணும்? அவ அம்மா பத்மாவதிகிட்ட பேசுவோம்!… நிச்சயம் அந்தம்மா “சரி”ன்னுதான் சொல்லுவாங்க!… ஏன்னா தனக்குப் பின்னாடி தன் பொண்ணுக்கு யாருமில்லையேங்கற கவலை அவங்களுக்குள் நிச்சாயம் இருக்கும்!… அதனால ஒத்துக்குவாங்க”
“ம்ம்ம்… அப்ப இந்த விஷயத்தை எப்போ சம்மந்தியம்மா கிட்டே பேசறது?”
“நாளைக்கே பேசிடறேன்!…”
“நாளைக்கென்ன நாளைக்கு?… இன்னிக்கு ஈவிங்கே போ” என்றார் ராமச்சந்திரன்.
“ம்… அதுவும் சரிதான்!… வித்யாவைப் பார்க்கப் போற மாதிரி போயிட்டு… அப்படியே சூழ்நிலையை அனுசரிச்சு… பேசி முடிவெடுத்திட்டே வந்திடறேன்” நம்பிக்கையோடு சொன்னாள் தெய்வானை.
*****
வித்யாவின் எதிரே, அவளைப் பார்த்துக் கொண்டே காஃபியைப் பருகி முடித்த கோமதி, “ம்… சொல்லு என்ன முக்கியமான முடிவு?” கேட்டாள்.
“வந்து… நான்… என் வாழ்க்கை முழுவதும்… ஒரு விதவையா…. தனிமைச் சாமியாரா வாழ விரும்பலை!… அதனால… மறுகல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்கேன்!” சொல்லி விட்டு எல்லோரு முகத்தையும் கூர்ந்து பார்த்தாள் வித்யா.
அவள் தாயார் பத்மாவதியின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் ஓடின. விஜயசந்திரன் முகத்தில் ஒரு கலவரம் ஓடியது. கோமதி முகத்தில் மட்டும் கோபம் தெரிந்தது.
“என்ன? என்னோட முடிவைப் பத்தி யாருமே எந்த அபிப்ராயமும் சொல்ல மாட்டேங்கறீங்க? ம்ம்ம்… ஓ.கே… நான் கையோட இன்னொரு விஷயத்தையும் சொல்லிடறேன்… அதுக்கும் சேர்த்து மொத்தமா உங்க அபிப்ராயத்தைச் சொல்லிடுங்க” என்ற வித்யா
சட்டென்று எழுந்து, அந்த விஜயசந்திரன் அருகே வந்து நின்றாள். அவளின் அந்தச் செய்கையைக் கண்டு அவனும் எழுந்து நின்றான்.
அவன் கைகளைப் பற்றிக் கொண்டு, “நான் மறுமணம் செய்து கொள்ளப் போவது… இந்த விஜயசந்திரனைத்தான்” என்றாள் புன்னகையோடு.
“விருட்”டென எழுந்து நின்ற கோமதி, “இது உன் முடிவா?… இல்லை ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவா?” கேட்டாள்.
“ம்ம்ம்… நான் மட்டும் எடுத்த முடிவு!… விஜயசந்திரனோட சம்மதத்தைக் கூட நான் கேட்கலை!… ஏன்னா நம்பிக்கை… நிச்சயம் அவன் என் பேச்சைத் தட்ட மாட்டான்கற நம்பிக்கை” என்றாள் வித்யா.
“ஸாரி வித்யா…. உன்னோட நம்பிக்கையை சிதைக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன்” என்றான் விஜயசந்திரன்.
“என்ன சொல்றே விஜய்?” புரியாமல் கேட்டாள் வித்யா.
“நான் அன்னிக்கே உன்கிட்ட சொன்னேன்!… இறந்த போன என் மனைவியை என்னல மறக்க முடியலை!… அவ இருந்த இதயத்துல இன்னொருத்திக்கு இடம் கொடுக்க மனசில்லை!… அதனாலதான் இன்னொரு கல்யாணமே பண்ணிக்காமல் இருக்கேன்னு… அப்புறம் எப்படி நீ என் மேல் நம்பிக்கை வெச்சே?” விஜயசந்திரன் கேட்க,
ஆடிப் போனாள் வித்யா.
“வேதனைப்படும் ஒரு மனதிற்குத்தான் வேதனைப்படும் இன்னொரு மனதின் வலி புரியும்”னு சொல்லுவாங்க!… உன்னோட வேதனைக்கு நான் மருந்தாகவும்… என்னோட வேதனைக்கு நீ மருந்தாகவும் இருக்கலாம்!ங்கற எண்ணத்தில்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்!” வித்யா சொல்ல,
இடையில் புகுந்த கோமதி, “வித்யா… இந்த விஷயத்தைப் பத்தி நீ விஜய்கிட்டப் பேசிட்டு… அவன் சம்மதம் கிடைச்ச பிறகுதானே நீ என்னைக் கூப்பிட்டிருக்கணும்!… அதுக்கு முன்னாடி என்னைக் கூப்பிட்டு… ச்சை… எனக்கு உன்னோட நடவடிக்கைகள் எதுவுமே புரியலை வித்யா” தலையிலடித்துக் கொண்டாள் கோமதி.
அதுவரையில் அமைதியாயிருந்த பத்மாவதி, “தம்பி… நீ யாரு?… எவருன்னு எனக்குத் தெரியாது!… என் பொண்ணு சொன்னதுல என்ன தப்பிருக்கு?… ரெண்டு பேரும் வாழ்க்கைத் துணையை இழந்து நிக்கறீங்க…. அதனால நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாய் மாறினா என்ன தப்பு?… ஒரு வேலை ஆண்டவன் சித்தமும் அதுதானோ என்னவோ?” தன் மகளுக்கு ஒரு நல்வாழ்க்கை அமைவதற்காகப் பேசினாள்.
“ஓ.கே. விஜய்… உனக்கு ஒரு நாள் டைம் தர்றேன்!… ராத்திரி முழுவதும் நல்லா யோசி… நாளைக்கு போன்ல எனக்கு பதில் சொல்லு… போதும்” என்றாள் வித்யா.
கோமதியும் அதை ஆமோதிக்க, “நான் வர்றேன்” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அவன்.
மதியம் மூன்று மணியிருக்கும். வீட்டின் முன் வந்து நின்ற காரிலிருந்து சுந்தரின் தாய் தெய்வானையும், தந்தை ராமச்சந்திரனும் இறங்கி வர, பரபரப்பானாள் பத்மாவதி.
“வித்யா… வித்யா” உள்ளறைக்கு ஓடிச் சென்று உறங்கிக் கொண்டிருந்த வித்யாவை எழுப்பிக் கூட்டி வந்தாள்.
“வாங்க சம்மந்தி…”என்று இருவரையும் வரவேற்றாள் பத்மாவதி. வித்யாவைக் கண்டதும் மனம் தாளாமல், அவளருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள் தெய்வானை.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings