in ,

வளையல் (சிறுகதை) – ✍ திவ்யா சுப்ரமணியம், மலேசியா

வளையல்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 51)

“அடியே ராதா… உன் மகனே போலீஸ் பிடிச்சிட்டு போகுது. சீக்கிரம் என்னானு பாருடி” என்று முனியம்மா கூவி விட்டுச் சென்றாள்

என்ன நடந்தது என தெரியாமல், பதற்றத்துடன் மரம் வெட்டுவதை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீட்டை நோக்கி ஓடுவதற்குள் காவல் அதிகாரிகள் அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்

அருகில் இருக்கும் பட்டணத்து காவல் நிலையத்திற்கு, அக்கப் பக்கத்தினரின் உதவியுடன் சென்றாள். காவல் நிலையத்தில் அவனைக் கண்டவுடன் திட்டி தீர்த்தாள்.

காவல் அதிகாரி மனம் வைத்து அவனுக்கு அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பினார். ராதாவிற்கு நடந்தது என்னவென்று தெரியாமல் மண்டை வெடிப்பது போல் இருந்தது.

“இங்க பாருங்க” என குரல் எழுப்பினாள் வனிதா. குரல் வந்த திசையை நோக்கினாள் ராதா

“இனிமே உங்க பையன் என் பையன்கிட்ட வீண் வம்பு பண்ணா இப்படி பொறுமையா பேசிகிட்டு இருக்க மாட்டேன். ஏதோ படிக்கிற பிள்ளைங்கனு சும்மா விடுறேன்” என மிகவும் கோபமாக ராதாவிடம் கூறினாள்

சிவாவை அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றாள் ராதா. வீட்டிற்குள் செல்வதற்கு முன் அவனை வாசலில் அமர வைத்து ஒரு வாளியில் இருந்த தண்ணீரை அவன் மேல் ஊற்றினாள்

“இதோட வீண் வம்புக்கு போவத நிறுத்து” என்றவள் கூற தொடங்கியதுமே, எழுந்து உள்ளே சென்றான் அவன்

“எங்க உன் மகன கூட்டிட்டு வந்துட்டியா? சிவாவ போலீஸ் பிடிச்சிட்டு போச்சுனு சொன்னாங்க எல்லோரும். அதான் வந்தேன்” என்று வீட்டு வாடகை வாங்க வந்தவள் கேட்டாள்

“கூட்டிட்டு வந்தாச்சு, இருங்க பணத்தை எடுத்து வறேன்” என்று கூறி விட்டு வீட்டிற்குள் சென்றாள்

பணம் வைத்திருக்கும் சாமி அறையை நோக்கி நடந்தாள். சாமி படத்தின் பின்னால் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றாள். ஆனால், பணம் கைக்கு எட்டவில்லை.

மீண்டும் நன்றாக கை வைத்து பணத்தை எடுக்க முயன்றாள். அவ்விடத்தில் பணம் இல்லாதது போல இருந்தது. எதற்கும் படத்தை சற்று தள்ளிப் பார்த்தாள். உண்மையாகவே பணத்தை அங்குக் காணவில்லை

ராதாவிற்கு மனம் பதறியது, செய்வதறியாது விழித்தாள். வேறு வழியின்றி வாடகை பணம் வாங்க வந்தவளிடம் சமாளிக்க முயன்றாள்.

“அக்கா, நான் வைச்சிருந்த பணத்தைக் காணும். இன்னும் ரெண்டு இல்லனா மூணு நாளில கொடுத்துடறேன்” என்று அவளின் காலில் விழாத குறையாக கெஞ்சினாள்

“என்ன கதை விடுறியா? ரெண்டு நாள் முன்ன இன்னைக்கு கொடுக்கறேன்னு சொன்னல. இப்ப இப்படி சொல்ற? இதுக்கு மேல உன்னைய நம்புறதா இல்லை” என்று ராதாவைக் கேவலமாகத் திட்டினாள்

“இல்ல கா, நான் வைச்சிருந்த பணத்தைக் காணோம். அதான் இன்னும் 2 நாள் கேட்குறேன்” என்று தயங்கியவாறு கூறினாள்.

“வீட்டுலேயே திருடனே வைச்சிருந்தா இப்படி தான். நான் இன்னும் 2 நாள் தான் பார்ப்பேன், பணம் வரல வீட்டை காலி பண்ணிரு” என்று மிரட்டிச் சென்றாள்.

இதெல்லாம் அவன் வேலையாகத் தான் இருக்க கூடும் என்று அறிந்து, அவனின் அறையை நோக்கி நடந்தாள் ராதா. சிவா எதையும் செவி சாய்க்காதது போல படுத்து உறங்கி கொண்டிருந்தான்.

சுவரில் மாட்டியிருந்த வார்ப்பட்டையை எடுத்து அவனை அடி பிண்ணினாள் ராதா

“வீணா போறவனே… உன் கண்ணுல காசு படக்கூடாதுனு தானே சாமி படம் பின்னால வெச்சிருந்தேன், அதையும் திருடிட்டியே. நல்லா இருப்பியா? இப்போ வாடகை பணம் யாரு கொடுப்பாங்க? அந்த காசு எடுத்து என்ன பண்ண சொல்லு.. சொல்லு..சொல்லுடா”, என்று அவனை அடித்தவாறு கேட்டாள்.

வலி தாங்க முடியாமல், பணத்தைத் திருடியதைப் பற்றி ஒப்புக் கொண்டான் சிவா. நண்பர்களுடன் சேர்ந்து காம்பியூட்டர் செண்டருக்கு சென்றதாக கூறினான். 

“பாவி நல்லா இருப்பியா நீ” என்று அவனைத் துவைத்து எடுத்தாள். வலி தாங்க முடியாமல் அந்த வார்ப்பட்டையைத் தூக்கி எறிந்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான் சிவா

தடுமாறி கீழே விழுந்தாள் ராதா. அவள் மீண்டும் சாமி படத்தை நோக்கி நடந்தாள்.

“கடவுளே ! கோபத்துல அவன ஏசிட்டேன். அதுக்குனு அவன் வாழ்க்கை நாசமா ஆகிட கூடாது. எப்படியாவது வீட்டு வாடகை கட்ட பணம் மட்டும் வேண்டுமே” என்று கைக் கூப்பி அழுத போது, தன்னுடைய கையில் இருந்த காப்பை கவனித்தாள்

என்ன நடந்தாலும் சரி, இறுதி வரையிலும் அதைக் கழற்றக் கூடாது என்று அவளுடைய கணவன் கூறிய இறுதி வார்த்தைகள் அவள் நினைவிற்கு வந்தது. அதை எல்லாம் இப்பொழுது நினைத்து வருந்த நேரமில்லை என்று அறிந்திருந்தாள் அவள்

சவக்காரத்தைப் பயன்படுத்தி கையைக் கழுவி வலையளைக் கழற்றினாள். இறுக்கி பிடித்திருந்த தங்க காப்பைக் கழற்றியதும், கையை விட மனமே அவளுக்கு அதிகமாக வலித்தது.

மேகங்கள் கூட்டமாகத் திரண்டு கொண்டு வர சிவா காட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் அம்மா அடித்ததைப் பற்றி சற்றும் வருந்தாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தான்.

வனுடைய சிந்தனைகள் அங்கும் இங்கும் திரிந்துப் பறந்தன. “டே சிவா”, என்று குரல் வரும் திசையை நோக்கி கவனித்தான்.

ஒரு மகிழுந்து அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக் கொண்டான்.

“என்னடா மேகம் இருட்டிக்கிட்டு வருது. நீ ஏன் தனியா நடந்து வர இப்போ?”, என்று கேட்டான் ரவி

சிறுவயதிலிருந்தே சிவாவிற்கு ரவியை நன்கு தெரியும். ரவி சிவாவை விட வயதில் மூத்தவன். இருவரின் வீடும் ஒரே கம்பத்தில் இருக்கிறது. பல நாட்கள் கழித்து ரவியைப் பார்த்தவுடன் பெரும் மகிழ்ச்சியில் இருந்தான் சிவா

“ஒன்னும் இல்லனே, சும்மா நடக்கலாம்னு வந்தேன்” என்று கூறினான் சிவா

அதற்கு மேல் வீட்டில் நடந்த சம்பவத்தைப் பற்றி அவன் கூற விரும்பவில்லை. சிவா தன் திருட்டு பார்வையால் ரவியை வெறித்து பார்த்தான். தங்க சங்கிலி, விரல்கள் நிறைய பெரிய மோதிரங்கள் அனைத்தும் சிவாவை மிகவும் கவர்ந்தது.

“என்னடா அப்படி பாக்குற?” என்று புன்னகைத்த வண்ணம் அவனிடம் கேட்டான் ரவி

“இல்லனே, இப்போ தான் நீங்க கோலாலம்பூர் போன மாதிரி இருக்கு. அதுக்குள்ள நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிடிங்க போல. சங்கிலி, மோதிரம் எல்லாம்…ஹீம்ம்ம்.” என்று வெளிப்படையாக கேட்டான் சிவா

“நான் செய்யற வேலை அப்படி டா. நீ வர்றதுன்னா சொல்லு, உனக்கும் வேலை வாங்கி தரேன்” என்று கூறினான் ர‌வி

“ஆமா அண்ண, நானும் அங்க தான் வரலாம்னு இருக்கேன்” என்று சிவா வார்த்தைகளைக் கோர்த்தான். அவனைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு சிவாவை அவன் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான் ரவி

ரவியின் நகைகள் தான் சிவாவின் கண் முன் தோன்றின. அவன் உடனே தன் படுக்கை விட்டு எழுந்து ராதாவிடம் சென்றான்

“மா.. மா.. ரவி அண்ண மாதிரி நா‌ன் கோலாலம்பூர் போக போறேன்.. இப்ப தான் கோலாலம்பூர் போனாரு. அதுக்குள்ள நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாரு”, என்று அவளிடம் கூறினான்

“டேய், உன் படிப்பு வீணாகிடுமே” என்று கேட்டாள் ராதா

“அம்மா, படிப்ப வச்சுகிட்டு என்ன செய்றது? பணம் தான் நமக்கு ரொம்ப முக்கியம் இப்ப” என்று கூறினான் சிவா

சிவா கூறியதும் ராதாவிற்கு சரியாகத் தான் தோன்றியது. சிவாவை மேற்படிப்பு படிக்க வைக்கவும் அவளிடம் பணம் இருக்காது. அதனால் அவனை தலைநகருக்கு அனுப்பிட முடிவெடுத்தாள்.

ரவியைத் தன் வீட்டிற்கு அழைத்தாள் ராதா. “வேலை எல்லாம் எப்படி போகுது? நீ அங்க நல்லா இருக்கீயா? நீ வேலை பாக்குற இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா?” என கேள்விகளை அடுக்கினாள்

“என்னைப் பார்த்தாலே தெரியும். நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன். என் அம்மா அப்பா எந்த ஒரு கவலையும் இல்லாம இங்க இருக்காங்க. சிவா என் கூட வேலைக்கு வரட்டும். அவனுக்கும் பொறுப்பு வந்த மாதிரி இருக்கும்” என்று ரவி கூறியதும், திருப்தி அடைந்தாள் ராதா

வீட்டு வாடகைக்காக வைத்திருந்த தங்க காப்பு விற்ற பணத்தை சிவாவிடம் கொடுத்தாள் ராதா. அளவில்லா மகிழ்ச்சியுடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அன்று மாலை ரவியுடன் கோலாலம்பூருக்குச் சென்றான் சிவா

மாலை தலைநகரை வந்தடைந்த சிவா, வானுயர்ந்த கட்டிடங்களை ஆச்சரியமாகக் கண்டான். ரவி யாரிடமோ பேசி விட்டு அன்றிரவே சிவாவை வேலைக்குத் தயாராக இருக்குமாறு கூறினான்.

சிவாவிற்கு உச்சி குளிர்ந்தது. முதல் நாள் வேலை. அவனும் இனிமேல் சம்பாதிக்கவும் சாதிக்கவும் போவதை எண்ணி மகிழ்ந்தான். அனைத்தும் அவன் நினைத்ததை விட வேகமாக ஓடியது.

தன் அம்மாவிடம் திட்டு வாங்கி மீண்டும் ரவி அண்ணனைக் கண்டு அவருடன் புறப்பட்டு கோலாலம்பூருக்கு வந்தது எல்லாம் இன்னும் கனவு போலவே இருந்தது சிவாவிற்கு

ரவியைப் போல் ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம் என்ற தன்னம்பிக்கை அவனுள் எழுந்தது. இரவு 12 மணி வேலைக்கு 10 மணிக்கே தயாராகிவிட்டான். பிறகு ரவியுடன் சேர்ந்து ஒரே மோட்டாரில் ஒரு வங்கியின் முன் யாருக்காகவோ வெகு நேரமாக ரவி காத்திருந்தான்.

அவனிடம் கேட்பதற்கும் சிவாவிற்கு தயக்கமாக இருந்தது. அதனால் மௌனம் கொண்டு காத்திருந்தான்.

“சிக்கிரம்… வாங்கிட்டு ஓடுங்க சிக்கிரம் டா..” என்று பின்னாலிருந்து ஒருவன் கூற, ஒரு பெண் வங்கியில் இருந்து வெளியேற அவளின் கைப்பையைப் பிடுங்கி கொண்டு மோட்டார் வண்டியை வேகமாக செலுத்தினான் ரவி

சிவாவுக்குப் பதற்றம் ஏற்பட்டது. உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என்று எண்ணி வேகமாக மோட்டாரை ஓட்டி கொண்டிருக்கும் ரவியை இறுக்கி பிடித்துக் கொண்டான். இறுதியில் ர‌வி ஒரு முட்டு சந்தில் தன் மோட்டாரை நிறுத்தினான்.

“என்னனே இதெல்லாம், உங்கள நம்பி தானே வந்தேன்” என்று சிவா ரவியிடம் பயத்துடன் கேட்டான்

“இதான் நான் செய்யற வேலை, இந்த வேலை செஞ்சா தான் காசு நிறைய கடைக்கும் டா. அப்படி தான் பணக்காரனா ஆகிட்டேன்” என்று கூறினான் ரவி

“எனக்கு இந்த வேலையே வேணாம்” என்று சிவா கூறிக் கொண்டிருக்க, கைப்பையை பிடுங்கி கொண்டு விரைவாக ஓட சொன்ன அந்த ஆள் அங்கு வந்தான்.

அவன் ரவியிடம் இருந்த கைப்பையை வாங்கி அதிலிருந்தப் பணத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்து கொடுத்தான். ஒரே நேரத்தில் அவ்வளவு பணம் கண்டதும் வாயடைத்து நின்றான் சிவா

“இப்ப சொல்லுடா, நீ இங்க இருந்து போக தான் போறியா?” என்று கிண்டலாக கேட்டு  சிரித்தான் ரவி

“இல்லை தான், ஆனா பயமா இருக்கே…” என்று சிவா பணத்தைக் கணக்கிட்டுக் கொண்டு கேட்டான்

“பயமா? போக போக பழகிடும் டா” என்று அவர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள், அவனை உற்சாகப்படுத்தியது.

அவர்களுடன் சேர்ந்து நன்கு பணத்தைச் சம்பாதிக்க தொடங்கினான் சிவா. அப்பணத்தை ராதாவிற்கு கொஞ்சம் அனுப்பி விடுவான். ராதா எந்தவொரு கவலையுமின்றி வாழத் தொடங்கினான்

இருப்பினும், இரப்பர் மரம் வெட்டும் தொழிலை அவள் கைவிடவில்லை

ஒரு தமிழ் நாளிதழை வாங்கிய ராதா, தலைப்பு செய்தியை ஒவ்வொரு வார்த்தையாக எழுத்துக் படிக்க, அந்தப் பக்கத்தில் இருந்த படத்தை உற்றுக் கவனித்தாள்.

தன் மகனின் புகைப்படத்தைக் கண்டவுடன் தலை சுற்றியது. அவனுக்கு என்ன ஆனதோ என்று பதறிய உள்ளம், உடனே செய்தியை வேக வேகமாக படித்தாள்

சிவா ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறவாக இருப்பதாகவும், அவனைத் தேடிக் கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்குச் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதயம் வெடித்து தூளாக கண்ணீர் மல்க நின்றாள் ராதா

“உன் மகன பத்தி தான் எல்லோரும் கூட்டமா பேசிட்டு இருக்காங்க” என்று எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல் கூறிச் சென்றாள் முனியம்மா

கைப்பேசியில் பேச கூட நேரமில்லாமல் சிவா  காரணம்  இது தானா? என மனம் கலங்கினாள் ராதா

“டேய் சிவா… டேய் சிவா…” என்று சிறை பாதுகாவலர் அழைக்க, கண்களைத் திறந்து பார்த்தான் சிவா

“நாளைக்கு உனக்குத் தூக்கு தண்டனை, ஞாபகம் இருக்கட்டும்” என கூறி சென்றார்.

இருள் சூழ்ந்த அறையில், பல கம்பிகளிடையே அவன் மூச்சுக் காற்று படர்ந்தது. அந்தச் சிறையை விட்டுச் செல்லும் நாள், தன் உயிரும் அவனை விட்டுச் செல்லும் நாள் என்று நன்கு அறிவான்.

அந்தக் கம்பிகளைப் பிடித்தவாறு அழ, கண்களிலிருந்து கண்ணீரும் வரவில்லை.  அவன் மனம் கனத்திருந்தது

ண்களை மூடிக் கொண்டு மீண்டும் அவன் எண்ண அலைகள் பின் நோக்கிப் பறந்தது. தன் அம்மாவிற்குப் பிறகு உயிராய் நேசித்த பெண்ணைப் பணத்திற்காகக் கொலை செய்ய நேரிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், பணத்தேவையின் போது அவளிடம் பணத்தைக் கேட்டு அவள் கொடுக்க மறுத்ததால், குடி போதையில் அவளைக் கத்தியால் குத்தினான். ரத்த வெள்ளத்தில் தன் காதலியைக் கண்டவுடன், அவனின் போதை தானாகவே கலைந்தது

தன்னுடைய முகத்தை மறைத்தவாறு சாலையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தான் சிவா. கனத்த மழை பொழிய, பூனை தன் குட்டிகளைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டது.

அதைக் கண்டதும் அவனுக்கு தன் அன்னை ராதாவின் ஞாபகம் வந்தது. அந்தப் பூனையைப் போல தான் ராதாவும் சிவா என்ன சேட்டைகள் செய்தாலும் அவனை அரவணைத்து வந்தாள்.

இருந்தாலும், சிவா இப்படி ஆபத்தான வலையில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் இருப்பது தன்னுடைய அம்மாவிற்கு அவமானம் என்று எண்ணி அழுதான்

சிவாவை எண்ணி கதறியவள், அந்த நாளிதழை இரண்டாகக் கிழித்து எறிந்தாள் ராதா. உடனே கைப்பேசி மூலம் சிவாவிற்குத் தொடர்பு கொண்டாள்.

வெகு நேரமாக அவளின் அழைப்பைத் துண்டித்தவன், பத்தாவது அழைப்பில் பேசினான். அவனுடைய பயம், பதற்றம், குற்ற உணர்வு அனைத்தும் அவன் அழுகையில் தெரிந்தது

“ஐயா சாமி.. நீ வீட்டுக்கே வந்திரு, அம்மா உன்னை பாத்துக்கிறேன். போலிஸ்கிட்ட இருந்து அம்மா உன்னை காப்பாத்துறேன்” என கதறி அழுதாள்.

அம்மாவிடம் அடைக்கலம் தேடி உடனே அங்கிருந்து புறப்பட்டான் சிவா. யாருக்கும் தெரியாமல் யாரிடமும் சிக்காமல்,வீட்டை வந்தடைந்தான். மற்றவர்களின் கண்களுக்குத் தெரிவதற்குள், வீட்டின் கதவை தடார் என தள்ளி உள்ளே புகுந்தான்.

உயிரற்ற நிலையில் தரையில் விழுந்திருந்த தன் அம்மாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுதான். காவல் துறையினர் அவனைச் சுற்றி வட்டமிட்டு நின்றனர்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கதறி அழ, காவல் துறையினர் அவனை இழுத்துக் கொண்டு சென்றனர். அம்மாவின் கையிலிருந்த கண்ணாடி வளையல் அவன் கையோடு வந்தது

சிவாவின் ஆழ்ந்த உறக்கம், தன் அம்மாவின் நினைவலைகளை நாடியது. மீண்டும் சிறை பாதுகாவலர் சிவாவை அழைக்க, அவன் காதில் விழாதது போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்

“டேய் சிவா, உன்னை கடைசியா பாக்க ஆளு வந்திருக்காங்க எந்திரி” என சிறை பாதுகாவலர் அழைக்க, தூக்கத்தில் மூழ்கியிருந்தான் அவன்

சிறையின் பூட்டை கழற்றி உள்ளே வந்த அவர், தன் அம்மாவின் கண்ணாடி வளையலால் தன் கை நாடியை சிவா அறுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இடைவெளியில் பூத்த மலர் ❤ (சிறுகதை) – ✍ வைரமணி, திருச்சி

    புலி…புலியாகவே இருக்கட்டும் (சிறுகதை) – ✍ முகில் தினகரன், கோவை