in ,

சிவப்பு ரிப்பன் (சிறுகதை) – ✍ ஹரி பிரகாஷ், மதுரை

சிவப்பு ரிப்பன் (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 137)

ம்மா எதுக்கு மா ஆஸ்பத்திரிக்கு? எனக்குத்தான் ஒன்னுமில்லையே”

பள்ளிக்கு விடுப்பே எடுக்காத கண்ணனை விடுப்பு எடுக்கச் சொல்லி நண்பன் ஹரியிடம் விடுமுறை விண்ணப்பத்தினை கொடுத்து அனுப்ப சொன்னாள் தாய் மல்லிகா

எதுவும் புரியாது அவளது விரலினை பற்றி அரசு மருத்துவமனை நோக்கி நடக்கலானான். முப்பது நிமிடம் நடக்க வேண்டியிருந்தது.

இத்தருணத்தில் தாய் மல்லிகா ஏதோ சிந்தனையுடனே நடந்து வந்தாள். சின்ன சின்ன டிபன் சென்டர்கள், டீக்கடைகள், சீப்பு, சோப்பு, கண்ணாடிகள் அடங்கிய சிறிய தற்காலிக கடைகள் என கடந்து வந்தனர்.

மருந்து வாடை காற்றில் மிதந்து வர மருத்துவமனைக்குள் நுழைகின்றனர் இருவரும். உள்ளே நுழைகையில் வயிற்றை யாரோ பிசைவது போல இருந்தது கண்ணனுக்கு

மருந்துச் சீட்டு வழங்கும் இடத்தில் இவ்வளவுதான் கூட்டம் என்றில்லை. 

“ம்… பேர் என்னப்பா?”

“கண்ணன்” என்றான் மெல்லிய குரலில். 

“வயசு?”

“14”

“என்ன தொந்தரவு?”

மெதுவாக அம்மாவின் முகத்தைப் பார்க்க, அவள் “காய்ச்சல்” என்றாள் சற்றும் நேரவிரயமின்றி

நடப்பது எதுவும் அறியாமல், அவர் கொடுத்த துண்டு சீட்டை வாங்கிக் கொண்டு மருத்துவர் அறை நோக்கி நடந்தான், தாயினை பின்பற்றி

ராத்திரி பகலுமா குடிச்சுப்புட்டு புள்ளைங்களையும் படிக்க விடாம பொண்டாட்டியையும் தூங்க விடாம தொல்லை குடுக்கிறதுல கோபாலுக்கு அப்படி என்ன தான் ஆனந்தமோ?

குடியை தன் குல சாமியா கொண்டவனுக்கு யார் அறிவுரையும் கேட்காது, யார் நலனும் கண்ணுக்கு தெரியாது.

போன வாரம் தான் குடிச்சிட்டு மூச்சிப் பேச்சி இல்லாம சினிமா கொட்டாய் முன்னாடி விழுந்து கெடக்க, ஆம்புலன்ஸ்லாம் வச்சி பெரிய ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயி காப்பாத்தி விட்டாங்க

இப்போ திரும்ப எங்கேயோ விழுந்து கெடக்குறதா பக்கத்து வீட்டு வசந்தாவுக்கு போன் வந்துச்சி. வேலைய விட்டு வந்தும் வராம மல்லிகா பதறியடிச்சுக்கிட்டு ஓடியிருக்கா

எந்த சாமி புண்ணியமோ காலணி கடை வச்சிருக்க பாய், வீட்டு கஷ்டத்த புரிஞ்சுக்கிட்டு, மணிய வெளிநாடு அனுப்ப முயற்சி செஞ்சிட்டு இருக்காரு

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை

பாய் கோபால் வீட்டிற்கு வருகிறார், வாசல் தொடங்கி வீட்டில் உடையாத ஒரு பொருளை அவர் கண்களால் பார்க்க முடியவில்லை, அவருக்கு குடிக்க தண்ணீர் கண்மணி கொடுத்த சொம்பு வரை

“ஒரு வேலை இருக்கு கோபாலு துபாய்ல, நல்ல சம்பளம். நீ பாக்குற வேல தான், உனக்காக சொல்லி வச்சிருக்கேன். நீ என்ன பண்ற, இன்னைக்கே பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணிடு”

அவர் சொல்லி விட்டு சென்றது தான் போதும். கோபால் தன் மனைவி மல்லிகா விடம், “ஃபாரின் போக போறன்ல, இனி குடிக்கமாட்டன்டி கண்ணு” என்று கணக்கிலடங்கா செய்த சத்தியத்தோடு,  இன்னொன்றையும் சேர்த்துக் கொண்டான்

அந்த ஒரு வாரம் மணியோட போக்கே மாறிப் போச்சு. மகள் கண்மணிக்கு நடப்பது கனவா நனவான்னு தெரியல. கூட வேலை பாக்குற பொண்ணுங்ககிட்டலாம் பெருமையா சொல்லிட்டு இருந்தா அந்த ஒரு வாரம். 

அடுத்த நாள் ஒரு போலீஸ்காரர் மணியத் தேடி அவங்க வீட்டுக்கு வரார். மணிக்கு கை கால்கள் நடுங்க வீட்டுக்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டு பொண்டாட்டியிடம் “இல்லை”னு சொல்ல சொல்றார்

ருந்துச் சீட்டு வாங்கவே அவ்வளவு கூட்டம் மருத்துவர பார்க்க இருக்காதா என்ன? நீண்ட நெடிய வரிசையில் இறுதியில் நின்றனர் இருவரும்

பளபளப்பான சுவர்கள் தான் ஆங்காங்கே வியாதிக்காரர்கள் விட்டு வச்ச எச்சம். நோய்களை பகிர்வதில் மக்களுக்கு அவ்வளவு ஆனந்தம் 

பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணங்களில் பொம்மைகள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் தலை நிமிர்கையில் கண்களைக் கவர்கின்றன என்ன ஏதென்று வாசிக்க முயல்கையில், கண்ணனால் அதற்கு மேல் தலை நிமிர முடியவில்லை.

சிகப்பு ரிப்பன் படம் அச்சிட்ட பச்சையான வாசகங்கள் அவை

இவ்வாறாக கண்களை மேய விட்டு வரிசையை உற்று நோக்கினான், இமியளவும் நகர்வதாய் தெரியவில்லை. தட்டையான கண்ணாடி, டிப்டாப்பான உடையணிந்து கூட்டத்தை விலக்கி ஒருவர் முன்னே செல்ல முயற்சிக்கிறார்

அங்கிருந்த  மல்லிகா மற்றும் இன்னும் சில பெண்கள் அவரை வசை பாடி முன் செல்ல அனுமதிக்கவில்லை

இருப்பினும் அவர் தனக்குள்ளாக எழுந்த கோபத்தினை கண்கள் மற்றும் மூக்கின் நுனி வரை காண்பித்து மருத்துவர் அறைக்குள் நுழைகிறார்.

அங்கிருந்த ஹேங்கரில் மாட்டியிருந்த வெள்ளை கோர்ட் ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டு மருத்துவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து அழைப்பு மணியை அழுத்துகிறார்

கூட்டத்தில் அனைவரும் கப்சிப்

“இங்க யாரும்மா கோபாலு?”

மல்லிகா சற்றே படபடப்புடன், “எங்க வீட்ல தாங்க, என்ன விஷயம்? ஏதும் பிரச்சனையா?”

“பாஸ்போர்ட் வந்திருக்குமா, வெரிஃபிகேஷன் பண்ணனும், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஸ்டேஷனுக்கு வரச் சொல்லு”

“ஏங்க சார் ஏதும் கொண்டு வரணுமா?” 

“அதலாம் நேர்ல வந்து பேசச் சொல்லு” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பினார், அந்த காவல்துறை அதிகாரி.

பின்னால் ஒளிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த கோபால், “இருடி, பாய் பார்த்து தகவல் சொல்லிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான். 

“என்னப்பா கோபாலு… பாஸ்போர்ட்டு வந்துருச்சாம்ல, வா சாயந்திரம் போய் வாங்கிட்டு வந்துரலாம்”

“என்னப்பா ஏதும் தரணுமா?”

“பின்ன தராம, நீ பாரின் போக அவங்க தான ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க” என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்

“சரி வா, கொஞ்சம் டீ குடிச்சிட்டு போ” என்று உள்ளே அழைத்தார்.

இப்ராஹிம் பாய்க்கு  அயல்நாட்டு நண்பர்கள் அதிகம். கடந்த மாதம் தான் பத்து வருட அயல்நாட்டு வாழ்வை முடித்து நாடு திரும்பினார். கிடைத்த வருமானத்தில் நல்லதொரு காலணி கடை ஒன்றினை வைத்துள்ளார்.

அவர் ஈன்ற மூன்றும் பெண் என்பதால், திருமணமான சில ஆண்டுகளிலேயே அயல்நாட்டு காற்றை சுவாசிக்க ஆயத்தமானவர் 

மூத்த மகள் டம்ளரின் விளிம்பு வரை டீ போட்டு கொடுக்க, அதனை அருந்திக் கொண்டே புதிதாய் வந்திருந்த சிடி பிளேயரை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் கோபால்.

இளைய மகள் அதனை ஆன் செய்ய, ஏற்கனவே போடப்பட்டிருந்த படம் அதில் ஓட ஆரம்பித்தது. படத்தில் இரண்டு ஹீரோக்கள் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

குடும்பச்சூழல் தாய், தங்கை மற்றும் மனைவியின் நிலையை எண்ணி சங்கடப்படுகிறார்கள். எப்படியேனும் கொடுத்த பணத்தையாவது திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு வித்தியாசமான முடிவினை தேர்வு செய்கிறார்கள்

பாதி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே கோபாலின் சிந்தனை எங்கெங்கோ சென்றது. தாமும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பய உணர்வு அவனை ஆட்கொண்டது.

சொந்த பந்தங்களிடம் பெருமையாய் சொல்லி விட்டோமே, என்ன செய்ய? குடி மட்டுமே பிரதானமாக இருந்த அவன் மூளையில் இப்போது களேபரம்

ருமல், தும்மல் மற்றும் உஸ் என்ற சத்தத்தால் அவ்விடம் நிறைந்து இருந்தது. 

“அம்மா இப்பவாது சொல்லுமா? எதுக்கு என்ன கூட்டிட்டு வந்துருக்க?”

“பேசாம வாடா” என்று அதட்டினாள்

மருத்துவர் அறையை நெருங்க, நெருங்க மல்லிகாவுக்கு பதட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இடையே வெள்ளை உடையணிந்த செவிலியர் ஒருவர் மல்லிகாவை நெருங்கி “இவன் தான் உங்க பையனா? எடுத்துட்டு சொல்லுங்க” என்றாள்

மல்லிகாவின் பதட்டம் இன்னும் அதிகமானது

அடுத்ததாக கண்ணன் தான் செல்ல வேண்டும் திடீரென பின்னாலிருந்த முதியவரை முன்னால் செல்ல அனுமதித்தாள் மல்லிகா.

இவ்வாறாக ஒவ்வொருவராய் அவள் அனுமதிக்க “அடுத்து யாருமா உள்ளே வாங்க” என மருத்துவர் அழைக்க அவள் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள்

யாரிடமும் சொல்லாமல் அவன் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தான்

“மாமா எங்க கிளம்பிட்டீங்க? மீதி படம் பார்த்துட்டு போங்க” என்றாள் இப்ராஹிமின் இளைய மகள்.

“இல்லம்மா டைமாச்சு, ஸ்டேஷன் வேற போகணும்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டான் கோபால்

நடந்ததை வந்து மல்லிகாவிடம் கூற, அவளையும் எதிர்மறையான சிந்தனை ஆட்கொண்டது. ஒருவழியாக பேரம் பேசி முடித்து பாஸ்போர்ட்டை வாங்கி வந்தனர். இருப்பினும் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை அவர்களுக்கு

வேலை முடித்து வந்த கண்மணிக்கு, அங்கிருந்த பாஸ்போர்ட்டை பார்த்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி. 

“எப்பமா வந்துச்சு? அப்பா அடுத்த மாசம் வெளிநாட்டுக்குப் போய்டுவாரு இல்லம்மா?” என்று ஆர்வமாக கேட்க இருவரிடத்திலும் பதில் இல்லை.

கண்மணியின் மகிழ்ச்சியில் பாதி கூட அவர்கள் முகத்தில் இல்லை. என்ன ஏதென்று வினவ, நடந்ததைக் கூறினாள் மல்லிகா

“ச்சீ… இவ்வளவு தானா. அப்படி எல்லாம் நடக்காதுமா, நமக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும். நீ வேணும்னா பாரு, அப்பா அடுத்த மாசம் பிளைட்ல பறக்கத் தான் போறாரு, அத நாம பார்க்கத் தான் போறோம்”

அடுத்த நாள் பாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

“பாஸ்போர்ட் வந்துருச்சு, அடுத்து மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டோம்னா வீசா அப்ளை பண்ணிடலாம். எப்படியும் ஒரு மாசத்துல போற மாதிரி இருக்கும், மெடிக்கல் டெஸ்ட்டுக்கு மட்டும் 2500 ரூபா ரெடி பண்ணி வச்சிக்கோங்க, நாளைக்கே பண்ணிடலாம்”

“சரிங்கண்ணே, மூணு நாளைக்குள்ள ரெடி பண்ணிட்டு சொல்லிடுறோம்” என மல்லிகா சொல்ல

“அவ்வளவு லேட் பண்ணிடாதீங்கமா, வீசா கிடைக்க லேட்டாகிரும். எங்க ஆளுங்க ரெண்டு பேரும் வராங்க, அதனால பயப்படத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு பாய் புறப்பட்டு விட்டார்

அடுத்த நாள் பக்கத்து வீட்டு வசந்தாவிடம் கடன் வாங்கி மெடிக்கல் டெஸ்டுக்கு பட்டணத்துக்கு அனுப்பி வைத்தாள் மல்லிகா. டெஸ்ட்டுகளை முடித்து அன்றைய மாலை வீடு திரும்பினான் கோபால்

“இன்னும் இரண்டு நாள்ல ரிசல்ட் வந்துருமாண்டி. அதுக்கப்புறம் என்னைய கேவலமா பேசின பையன்லாம் மூக்குல விரல வப்பான் பாரு. புள்ளைய நல்ல இடத்துல கட்டிக் குடுத்துரலாம், பையன டாக்டர் ஆக்கிடலாம். சொந்த வீடுகூட கட்டிடலாம். பாய் மாதிரி ஒரு கடைய வச்சுட்டு உட்கார்ந்திடலாம்” என  குடும்பமே கற்பனைக் கடலில் இரண்டு நாட்களாக மிதந்து கொண்டிருந்தனர்

அடுத்த நாள் காலை விடிந்தும் விடியாததுமாக பாய் கோபால் வீட்டை நோக்கி விரைந்து வந்தார். கதவைத் திறந்த கண்மணி “ரிசல்ட் வந்திருச்சா மாமா?”

“அப்பா எங்கம்மா?”

“வீட்ல இல்ல?”

“பட்டணம் வரைக்கும் போகணும், சீக்கிரம் வர சொல்லு?”

“ஐயோ பட்டணம் போக என்கிட்ட பணம் ஏதும் இல்லையேண்ணா, ரிசல்ட் தான் வீட்டுக்கு வந்துரும்னு சொன்னிங்க” என்று கேட்டாள் மல்லிகா

“இல்லம்மா, ஒரு டெஸ்ட் மட்டும் திரும்ப எடுக்கணுமாம். பணத்தை பத்தி கவலைப்படாதே, நான் பாத்துக்குறேன். கோபால் சட்டுபுட்டுன்னு கிளம்பு” என்று அறக்கப்பறக்க அவ்விடத்திலிருந்து புறப்பட்டனர் இருவரும்.

ல்லிகா பின்னால் திரும்பிப் பார்க்க அங்கு யாரும் இல்லை

“நீ தாமா வாமா?” மல்லிகா வியர்வையில் முழுதாக நனைந்திருந்தாள்

கதவில் இருந்து மருத்துவர் மேசை வரை நடக்கும் தூரம் இன்னும் நீளாதோ என்பது போல் இருந்தது அவளுக்கு.

நடப்பது எதுவும் தெரியாது, இழுக்கும் பக்கமெல்லாம் நடந்து வந்திருந்த கண்ணனுள், இருந்தது கேள்விக்குறி மட்டுமே

“ம்ம்… என்னம்மா சீட்டு கொடு?” அவள் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சிதறி கிடக்க, மருத்துவர் கூறியது கூட கேட்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தாள்

அவள் கையிலிருந்த சீட்டினை வாங்கி மருத்துவரிடம் நீட்டினான் கண்ணன்

“காய்ச்சலா? எத்தனை நாளா இருக்கு?” என மருத்துவர் கேட்க, கண்ணன் தன் பார்வையினை தாயின் பக்கம் திருப்ப, அவளோ சுவற்றில் இருந்த விழிப்புணர்வு பலகையை  ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

மருத்துவர் சற்றே சிடுசிடுப்புடன், “ஏம்மா… இப்ப சொல்றியா என்ன?” என்று கடிந்துகொண்டார் (அவர் கிளினிக்குக்கு நேரமாகியிருக்குமோ என்னவோ)

டுத்த நாள் இப்ராஹீமும் அவரது தோழர் நான்கு ஐந்து பேரும் அவனது வீட்டிற்கு வந்தனர். 

“இவ்வளவு நாளா மல்லிகா பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்காச்சும் விடிவு காலம் வரட்டும்”

“இந்த குடிகாரனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா?”

“கண்ணனுடைய எதிர்காலம் நல்லா இருக்கட்டும்”

“இந்த கோபால் குடியால் தான் கண்மணி கல்யாணம் நின்னு போச்சு, இனி அவர்களே தேடி வருவாங்க”

“இந்த பாய் நமக்கு ஒன்னும் பண்ணாம இந்த குடும்பத்துக்கு ஏன் இவ்வளவு பண்றாரு?”

“வீட்ல ஒன்னு இல்ல எல்லாத்தையும் வச்சி குடிச்சிட்டான் அந்த கோபாலு”

“வயசுப்புள்ள இருக்க வீட்டுல வாடகை தரலன்னு வீட்ட பூட்டு போட்டு ரெண்டு நாள் வெளில உக்கார விட்டுட்டாங்க, வீட்டுக்காரங்க சோத்துக்கு கூட இல்லாம கெடந்தாங்க அந்த புள்ளைங்க, பாவம்”

(இவ்வாறாக அக்கம் பக்கத்தினர் அனைவரது பேச்சும் அன்று அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தான்)

“எச்.ஐ.வி டெஸ்ட் எடுக்கணும் சார்” என்றாள் மல்லிகா.

மருத்துவர் சற்றே அதிர்ந்தவராய் “எதுக்குமா சின்ன பையனுக்கு?”

“யார் எடுக்க சொன்னது? உங்க வீட்ல யாருக்காச்சும் இருக்கா? நீங்க பையனுக்கு என்ன வேணும்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

“நான் அவனுக்கு அம்மா வேணும் சார்… எனக்கு இருக்கு”

(தன் காதில் ஏதோ தவறாக விழுவதாய் எண்ணி தன் தாயின் கண்களைப் பார்க்கிறான். அவனது பார்வை தன் தாய் ஏதோ தெரியாமல் சொன்னதை உணர்த்துகிறது)

“உங்களுக்கா? எங்க எப்ப பாத்தீங்க? மாத்திரை சாப்பிடுறீங்களா? எதும் ரிப்போர்ட் இருக்கா?” 

“ரிப்போர்ட் எதுவும் இப்ப இல்ல சார்… பையனுக்கும் பாக்கணும்… பரிமளா சிஸ்டருக்கு தெரியும். அவங்க தான் பாக்க சொன்னாங்க”

(கண்ணன் தன் தாயிடம் கடிந்து கொள்கிறான் ‘அவங்க என்ன கேட்டாங்கன்னு தெரியாம எதுக்கும்மா இருக்குன்னு சொல்ற’ என)

“சரிம்மா…குடும்பத்துல வேற யாருக்கு இருக்கு? எல்லாருக்கும் டெஸ்ட் எடுத்தாச்சா? எடுக்கலைனா அவங்களையும் கூட்டிட்டு வாங்க”

ண்ணனை வெளியில் அனுப்பி விட்டு பேசுகிறார் இப்ராஹிம்

“கோபால் நீ பாரின் போக முடியாதுப்பா, உனக்கு எச்.ஐ.வி நோய் தொற்று இருக்காம். உடம்ப பாத்துக்க, என்னால இப்போதைக்கு உனக்கு  எந்த உதவியும் செய்ய முடியாதுப்பா.

பயப்படாத பக்கத்துல இருக்கவங்களுக்கு தெரியாம நா பாத்துக்குறேன். நீ குடிச்சதுனால நெஞ்சில கொஞ்சம் பிரச்சனை இருக்கு, அதனால தான் நீ துபாய் போக முடியாதுன்னு சொல்லிடறேன். புள்ளைங்கள பாத்துக்க”

“அம்மா மல்லிகா எப்படி வந்துச்சுனு ஏதும் பேசிட்டு இருக்காம புள்ளைங்கள பாத்துக்கோங்க, அவங்களுக்காக வாழுங்க” என்று ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார் பதிலை எதிர்பாராமல்

மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவ்வீடு, சுடுகாட்டினைப் போல் ஆனது. மல்லிகா தன் கண்ணீரால் தான் அணிந்திருந்த சீலையை ஈரப்படுத்தினாள்.

கண்மணிக்கோ வாழ்வதா? இருப்பதா? தனது வாழ்வு பற்றிய பயம். தன் தம்பி கண்ணனின் எதிர்காலம் என்ன என பலவாறான சிந்தனை சிதைத்துக் கொண்டிருந்தது

“எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியல டீ, நிதானம் இல்லாம பல நாள் இருந்துருக்கேன்” என சொல்லி அவள் தோள் சாய்ந்து குழந்தை போல அழுதான் கோபால்

மூவர் கண்ணீரினையும் துடைக்க ஒரு கரமும் அங்கில்லை. சமூகத்தில் இவர்கள் மட்டும் அனாதை ஆக்கப்பட்டதைப் போல் உணர்ந்தனர்

“எனக்கும் என் வீட்டுக்காரருக்கு மட்டும் தாங்க. எனக்கு பொண்ணு ஒன்னு இருக்கு, அதுக்கு இல்ல. போன வாரம் தான் பாத்தோம்” என்று மருத்துவரிடம் கூறினாள் மல்லிகா

“பதிமூணா நம்பர் போட்ட இடத்துக்கு போங்க, அங்க டெஸ்ட் எடுத்துப்பாங்க” என ஒரு துண்டு சீட்டினை நீட்டினார். அதனை வாங்கிக்கொண்டு கண்ணனின் கரம் பற்றி  நடந்தாள்.

செல்லும் அவளை அறியாது அவளது கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் சிந்திக் கொண்டே சென்றது. கண்ணனின் குருதிதனை ஆய்வகம் கொடுத்து மல்லிகா வேண்டாத தெய்வங்கள் இல்லை. 

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் இன்னும் இரண்டு நாட்கள் கடந்தாலே தெரியும் என்ற நிலையில், பித்து பிடித்தவள் போல் நடந்து வீட்டினை அடைந்தாள்

அந்த இரண்டு நாட்கள் வீட்டினில் விளக்கொளிக்கு கூட அனுமதி இல்லை. பூட்டிய  கதவோடு, வாட்டிய சோகம்தனில் உறைந்து மறைந்து இருந்தனர். அன்று காலை முடிவுகள் தரப்படுவதாய் கூறியிருந்த அன்றைய தினத்திலேயே கதவுகள் திறக்கப்பட்டது.

கோபால் மீண்டும் மது போதைதனில் தன்னை மறந்திருந்தான். தாயாயிற்றே! தன்னை மறித்து அல்லவா வாழ இயலும். கண்ணனை கூட்டிக் கொண்டு நடந்தாள் மருத்துவமனை நோக்கி

பரிமளா சிஸ்டர் வதனத்தில் புன்னகை இருக்காதா? என பார்த்துக் கொண்டே மருத்துவமனை உள்ளே சென்றாள் மல்லிகா.

பரிமளா  உள்ளிருந்து வருகையில், சிகப்பு, வெள்ளை நிறம் கலந்த அட்டை ஒன்றினை எடுத்து வந்தார். அதில் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த சிகப்பு ரிப்பன் படம் அச்சிடப்பட்டிருந்தது.

அதை இருவர் முன்னிலையில் வைத்து ‘கண்ணன்’ என பெயர் எழுதியதும், கண்ணனின் மனம் படபடத்தது.

என்ன ஏதென்று அறியாமல் வாய் திறவாது அழுது கொண்டிருக்க, பரிமளா ‘நெகடிவ்’ என சிகப்பு நிற பென் ஒன்றினால் எழுதினாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. கதை எழுதுவதில் முன்னால் நடந்த சம்பவங்களைத் தனியாகக் குறிப்பிட்டிருக்கலாம். அப்போது தான் எது முன்னால்/எது பின்னால் என்பது வாசிக்கிறவங்களுக்குப் புரியும்.

  2. சிவப்பு ரிப்பன்.நானும் ஒரு நர்ஸ் தான் .எனக்கு இந்த மாதிரி எயிட்ஸ் பேஷன்ட்டின் மன வலி என நிறைய்ய தெரியும் மிகவும் கஷ்டமாக உள்ளது கதை வாசித்த பிறகு.இது கதை மட்டும் இல்லை காலச்சக்கரம். நிதர்சனம்.
    கால மாற்றத்தில் மனிதனும் மாறி போய் கண்ட இடங்களில் கட்டுப்பாடு இல்லாமல் தன் நிலை தாழ்த்திக் கொள்ளும் குடிக்கு அடிமையாகி அவதிக்கு உள்ளாவது குடும்பம் மனைவி தான் பெற்ற மக்கள் மட்டுமல்ல தானும்தான் என்பது புரிவதில்லை புரிகிறபொழுது வாழ்வு வாசல்தாண்டி போய்விடுகிறது என் செய எல்லாம் காலக்கொடுமை யன்றோ..இதை ஒவ்வொரு மனிதனும் நன்கு சிந்தித்தால் நன்றாக இருக்கும் வாழ்க்கை பயணம்.யாரும் சிந்திக்கிற நிலை இல்லை. கதை அற்புதமாக உள்ளது.வாசித்து முடித்த உடன் என் கண்கள் கலங்கியது.அழகாக சொன்ன விதம் எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்..

அவள் சாந்தி (சிறுகதை) – ✍ நஸ்ரத் அமனா, ஸ்ரீலங்கா

அன்னலட்சுமி (சிறுகதை) – ✍ மகிழம்பூ, சென்னை