எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்னங்க, மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. என சந்திரா தன் கணவர் சேகரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வருஷா வருஷம் தான் சித்திரை திருவிழா வருகிறது இப்ப அதுக்கு என்ன?
எப்போதும் அன்னதானம் போடுவோம் தானே, போன வருடம் பற்றாமல் போய்விட்டது. அதனால இன்னும் ஒரு அரை மூட்டை அரிசி வாங்கிக் கொள்ளலாமா?
அதற்கென்ன வாங்கிக் கொண்டால் போச்சு.
திருவிழா ஆரம்பிக்கும் போது உங்க தங்கச்சிக்கு போன் போட்டு சொல்லிடுங்க. அவங்க வந்தா ரெண்டு நாளைக்கு சாப்பிட்டு போகட்டும். ரொம்ப கஷ்டப்படுறாங்க.. என சந்திரா தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
திருவிழா சமயத்தில் அவங்கள கூப்பிட்டு வேலையும் வாங்கிட்டு சாப்பாடு போடுவது உனக்கு சங்கடமாக தெரியவில்லையா?
இதில் என்னங்க சங்கடம் வேண்டி இருக்கு. திருவிழா வருது அதுக்காக அழைப்பு கொடுக்க சொன்னேன்.
மற்ற நாட்களில் என்றாவது ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லி இருக்கியா என கணவர் கேட்க
அவங்க அண்ணன் வீட்டுக்கு வரத்துக்கு யார்கிட்ட கேட்கணும். அவங்க பாட்டுக்கு வரலாம் போகலாம் தானே என் மனைவி கேட்க, ஒரு சிறு வாக்குவாதம் உருவாகி விட்டது.
உனக்கென்ன, வாயில ஈஸியா சொல்லிட்டு போயிடுவே, ஆனால் என்னுடைய தங்கையை அழைக்கும் போது எனக்கு தானே வலிக்கும்.
சரி சரி அப்ப கூப்பிடாம இருங்க..
சந்திரா தன்னுடைய பிறந்த வீட்டிற்கு கைப்பேசியில் திருவிழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சேகர் தன்னுடைய தங்கைக்கு கைப்பேசியில் அழைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு திருவிழாவுக்கு வர சொன்னான்.
எதிர்முனையில் பேசிய தங்கை சரிப்பா நான் வருகிறேன். அண்ணி இருந்தால் போனை கொடுக்கவும் என சொல்ல சேகர் தன்னுடைய மனைவி சந்திராவிடம் ஃபோனை கொடுத்தான்.
போனை கையில் வாங்கிய சந்திரா அண்ணி நல்லா இருக்கீங்களா என நாத்தனார் குரலை கேட்டதும் சந்திரா
ஹலோ ஹலோ சரியாக காதில் விழவில்லை, அப்புறமாக பேசுகிறேன் என போனை கணவரிடம் கொடுத்து விட்டாள்.
நான் இதுபோல் உன் குடும்பத்தாரிடம் நடந்து கொண்டால் எப்படி இருக்கும் என சேகர் கேட்க எதுவும் பேசாமல் மௌனமாக உள்ளே சென்றாள் சந்திரா.
திருவிழாவுக்கு சந்திராவின் அம்மா அப்பா தம்பி தங்கை என அனைவரும் வந்திருந்தார்கள். சேகரின் தங்கை தன்னுடைய இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அண்ணியோட குணம் தெரிந்தும் தன்னுடைய அண்ணனுக்காக திருவிழாவுக்கு வந்தாள்.
அண்ணி தப்பு செய்வது தெரிந்தும் அதை பெரிதுபடுத்தாமல் இரண்டு நாள் தானே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துவிட்டு போகலாம் என அமைதியாக இருந்தாள் குமாரின் தங்கை.
தெருவில் ஐஸ் வண்டிக்காரன் வரவும் அனைவருக்கும் சந்திரா கோன் ஐஸ் வாங்கி கொடுக்க சேகரின் தங்கை குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுத்ததை கவனித்தாள் சேகரின் தங்கை.
மிகவும் கோபம் கொண்டு வெளியே வந்து அவள் வாங்கி கொடுத்த குச்சி ஐஸ்சை பிடுங்கி தூக்கி எறிந்தாள் சேகரின் தங்கை.
இதைப் பார்த்த சந்திரா சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டாலும் இந்த கோபத்துக்கு எல்லாம் குறைச்சல் இல்லை என சொல்ல மேற்கொண்டு குமாரின் தங்கையால் இருக்க முடியாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறேன் என்னுடைய அண்ணன் வந்தால் சொல்லி விடுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பி பேருந்து நிலையத்துக்குச் சென்றாள்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அண்ணன் தங்கையை பார்த்ததும் வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என தங்கையின் முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டான் சேகர்.
ஏம்மா கிளம்பிட்டே? என அண்ணன் கேட்க
சாப்பாட்டுக்கு இல்லை என்றால் உங்க வீட்டுக்கு வந்தேன். திருவிழாவுக்கு கூப்பிட்டீர்கள் வந்தேன் அண்ணி என்னை இப்படி அவமானப்படுத்துவார்கள் என நினைக்கவில்லை. இனிமேல் என்னை திருவிழாவிற்கு கூப்பிடாதீர்கள். உங்களுக்கு எங்களை எப்போது பார்க்க வேண்டும் என தோன்றுதோ அப்போ வந்து நீங்கள் பார்த்து விட்டு செல்லலாம். என்னை பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு போதும் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேருந்து வரவும் கண்ணீருடன் தன்னுடைய அண்ணனை பார்த்துக் கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings