in ,

ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா 2 – (தாடாசனம்) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் மற்ற பாகங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்னுரை:

*தாடாசனம் என்பது நின்று கொண்டு செய்யும் ஆசனங்களின் அடிப்படையானது. 

*இந்த ஆசனம் செய்வதால் உடலின் உயரத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. 

*இந்தப் பகுதியில், தாடாசனாவை செய்யும் முறை, பயன்கள், யாரெல்லாம் செய்யக்கூடாது ஆகியவற்றை பார்க்கலாம். 

செய்முறை:

*நேராக நிற்கவும். இரண்டு பாதங்களும் ஒன்று சேர்த்து வைக்கலாம் அல்லது 10 சென்டிமீட்டர் தூரம் இடைவெளி  இரண்டு கால்களுக்கு இடையே இருக்கலாம். 

* நமது உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* நமது உடல் எடையை இரண்டு பாதங்களும் சமமாக தாங்கும் படி நின்று கொள்ள வேண்டும். 

* இரண்டு கைகளும் உடலை ஒட்டி பக்கவாட்டில் இருக்க வேண்டும். 

* தலை, கழுத்து, முதுகு ஆகியவை நேராக இருக்க வேண்டும். 

* நமது கண் பார்வை நேராக இருக்க வேண்டும். 

* இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கைவிரல்களை கோர்க்கவும். 

* நமது உள்ளங்கை ஆகாயத்தை பார்த்தவாறு திருப்பவும். (மேல் நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும்) 

* பிறகு இரண்டு கைகளையும் தலை உச்சியில் வைக்கவும். நமது இரு கண்ணையும் நம் எதிரே உள்ள சுவரின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உற்று நோக்க வேண்டும். 

* நாம் உற்று நோக்கும் புள்ளி அதாவது நமது பார்வை தலையை விட உயரமான இடத்தில் இருக்க வேண்டும்.  

* நாம் இந்த தாடாசனாவை செய்து முடிக்கும் வரை நமது பார்வை நாம் உற்று நோக்கும் புள்ளியை விட்டு நகரக் கூடாது. 

* மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே தலை மீது கோர்த்த நிலையில் வைக்கப்பட்ட கையை மேலே உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் இரண்டு குதிகாலையும் உயர்த்த வேண்டும். நம் கால் விரல்களால் உடலை எடையை தாங்கி நிற்கவும். முக்கியமாக நமது கால் கட்டை விரலால் நமது உடல் எடையை தாங்க வேண்டும். நமது கை, தோள்பட்டை, நெஞ்சு பகுதி ஆகியவற்றை  நம்மால் முடிந்த வரை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். 

* நமது முழு உடலையும் உயர்த்தி கால் கட்டை விரலால் எடையை தாங்க வேண்டும். 

* நமது உடலை தளர்வாக வைக்கக்கூடாது. 

* பாதங்களை நகர்த்தவும் கூடாது. ஒரே இடத்தில் நின்று தான் ஆசனத்தை செய்ய வேண்டும். 

* மூச்சை உள்ளடக்கி கொண்டே இதே நிலையில் சில நொடிகளுக்கு நிற்கவும். 

* முதன் முதலில் இந்த ஆசனாவை செய்பவற்கு இதே நிலையில் நீடிப்பது கடினமாக இருக்கலாம். தொடர்ந்து இந்த ஆசனாவை பயிற்சி செய்வதன் மூலம் எளிமையாக செய்யலாம். 

* மூச்சை வெளியேற்றிக் கொண்டே நம் குதிக்காலை கீழே இறக்குதல் வேண்டும். அதே நேரத்தில் நமது கைகளையும் கீழே இறக்கி தலையின் மீது வைக்கவும். பிறகு கோர்க்கப்பட்ட கைகளை விடுவித்து கீழே தொங்க விடவும். 

* இதுவே ஒரு சுழற்சி ஆகும். 

* இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். 

சுவாச முறை:

* மூச்சு உள்ளிருக்கும் போது கைகளையும், உடலையும் உயர்த்த வேண்டும். 

* மூச்சை வெளியிடும்போது கைகளையும், உடலையும் கீழே இறக்குதல் வேண்டும். 

கவனம்:

உடல் ரீதியாக : நமது கவனம் முழு உடலை தாங்கிப் பிடிக்கும் கால் கட்டை விரலில் இருக்க வேண்டும். இல்லையெனில், நாம் கீழே விழவும் வாய்ப்பு உண்டு. மேலும், நமது மூச்சின் மீதும் கவனம் வேண்டும். 

ஆன்மீக ரீதியாக:  இந்த ஆசனத்தை செய்ய தொடங்கும் போது மூலாதார சக்கரம் மீது கவனம் வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்யும்போது ஆக்னை சக்கரம் மீது கவனம் வைக்க வேண்டும். 

பயன்கள்:

* தாடாசனாவை நாம் தினமும் செய்வதால், உடல் மற்றும் மனதிற்கு வலிமை தருகிறது. 

* நமது முதுகு எலும்பு மற்றும் நரம்புகள் அதிகரிக்கிறது. 

* இந்த  ஆசனம் நமது உடலின் உயரத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. ஏனெனில்,  உடல் தசைகள் மற்றும் தசைநார்கள்  உறுதிப்படுவதாலும், எலும்புகள் நீளமாகவும் உறுதியாகவும் வளர்வதாலும் நம் உடல் உயரம் அதிகரிக்கிறது. 

* வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலிமை பெறுகிறது. 

* இந்த ஆசனம் செய்வதால் நமது சிறு குடல் பலப்படும். 

* வயிற்றில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளை தூண்ட இந்த ஆசனம் உதவியாக இருக்கிறது. 

யாரெல்லாம் செய்ய கூடாது:

* தாடாசனாவை கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது. இருப்பினும் கர்ப்ப காலத்தின் முதல் ஆறு மாதங்கள் செய்வதன் மூலம் வயிற்று தசைகளும் நரம்புகளும் தூண்டப்படுகிறது. இருந்தாலும் யோகா மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த ஆசனாவை கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது. 

* காலில் அறுவை சிகிச்சை செய்தவர்களும், நீண்ட நேரம் நிற்க முடியாதவர்களும் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்கவும். 

* மேலும் இருதய பிரச்சனை உள்ளவர்களும் இந்த ஆசனாவை செய்யக்கூடாது. 

திரைப்படங்களில் வரும் நடிகர், நடிகைகள் வயதானாலும் எவ்வாறு இளமையாக இருக்கிறார்கள்? அவர்கள் தினமும் யோகப் பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்வதால் தான் யோகா நமது அரோக்கியத்திற்கு  மட்டுமல்ல அழகுக்கும் ஒரு சிறந்த வழியாக உள்ளது. நாமும் நமக்குத் தெரிந்த எளிமையான யோகாவை செய்து அபரிவிதமான பலன்களை அடைவோம். இனிவரும் பகுதிகளில் ஆசனங்களுடன் சேர்த்து பிராணாயாமம், முத்திரைகள் ஆகியவற்றையும் சேர்த்து பார்ப்போம். 

ஒவ்வொரு யோகாவும் நமது மனதை தூய்மைப்படுத்தவும், எண்ணங்களை மேம்படுத்தவும்  உதவுகிறது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியை   கேள்விப்பட்டிருப்போம். நமது அகம் வலிமையடைந்தால்  நம் முகமும் அழகு பெறும். ஆரோக்கியமான யோகாவை செய்து அழகாக மிளிர  உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். 

இந்தத் தொடரின் மற்ற பாகங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முள் பாதை (இறுதி அத்தியாயம்) – பாலாஜி ராம்

    ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா 3 (த்ரியக தாடாசனம்) – பாலாஜி ராம்