இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கோபத்தில் இருந்த செண்பகம் புவனேஷ் பேசிய வார்த்தைகளால் சமாதானம் அடைந்தாள்.
சரி புவனேஷ் இன்னைக்கு வெள்ளிக்கிழமை மங்களகரமா முதல் நாள் நான் வேலைக்கு போறேன், என் கஷ்டமெல்லாம் சீக்கிரமா தீரனும் உன்னையும் நான் கைபிடிக்கனும் புவனேஷ்… என்று ஆசையாக பேசினாள் செண்பகம்.
நம்ம திருமணத்துக்கு இன்னும் அதிக நாளெல்லாம் இல்ல, நம்ம ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிடுச்சு கவலை வேண்டாம் என்று பதில் அளித்தான் புவனேஷ்.
“நாளைக்கு உன்ன ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கிறேன்” என்றாள் செண்பகம்.
‘ஆமா செண்பகம் எனக்கும் உன்ன பாக்கணும் போல இருக்கு… நீ வரும்போது அந்த டாக்டரையும் அழைச்சிட்டு வந்துர போற’ என்றான் புவனேஷ்.
“நீ மறுபடியும் மறுபடியும் அவர பத்தி தான் பேசுற அவரை பத்தி பேசினால் தான் நமக்குள்ள சண்டை வருதே” என்று கோபமாக பேசினாள் செண்பகம்.
‘சரி… சரி… கோபப்படாத நான் அவரை பற்றி பேச மாட்டேன், நீ நல்லபடியா வேலைக்கு போயிட்டு வா’
“சரி புவனேஷ்” என்று ஃபோன் கால் கட் செய்தவள் வேகமாக கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கடை திறப்பதற்கு முன்னே இவள் சென்று விட்டதாள் கடை திறக்கும் வரை வாசலிலே அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து கடை முதலாளி கொத்து சாவியுடன் வந்தார்.
வாசலில் அமர்ந்திருக்கும் செண்பகத்தை பார்த்து ‘என்னம்மா முதல் நாள் என்பதால சீக்கிரமா வந்துட்டியா இல்ல தினமும் சீக்கிரமா வருவியா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
“தினமும் சரியான நேரத்துக்கு வருவேன் ஐயா” என்று பொறுமையாக பதில் சொன்னாள்.
செண்பகத்திற்கு அது முதல் நாள் என்பதால் முதலாளி செண்பகத்திற்கு வேலையை பற்றி சொல்லிக் கொடுத்தார். செண்பகம் தான் செய்த அனைத்து வேலைகளையும் நேர்த்தியாக செய்தாள்.
அன்றைய நாள் செண்பகம் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் கவனித்த முதலாளிக்கு செண்பகத்தின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது.
மணி 12:30 இருக்கும் தனது வேலையை முடித்து விட்டு டாக்டர் கார்த்திக் செண்பகத்தை பார்ப்பதற்கு துணிகடைக்கு வந்தார். செண்பகத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, அவரிடம் சென்று நன்றி தெரிவித்தாள்.
‘எளிமையான வேலை அதிகமான சம்பளம், இது எல்லாம் உங்களால தான் சார்’ என்று அவரை புகழ்ந்து தள்ளினார் செண்பகம்.
“உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும் அதை கேட்டால் நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க” என்றான் கார்த்திக்.
‘சொல்லுங்க சார் என்ன விஷயம்’
“நான் அதை இப்ப சொல்ல மாட்டேன் நாளைக்கு நேரில் வந்து தான் சொல்லுவேன்”
‘நாளைக்கு கடை லீவு ஆச்சு அது மட்டும் இல்லாம நாளைக்கு நான் என்னை கட்டிக்க போறவரை பார்க்க போறேன், அவருக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் தான் இருக்காரு. அதுவும் நீங்க வேலை செய்யுற அதே ஆஸ்பத்திரியில தான் அவரும் இருக்காரு’ என்றாள் செண்பகம்.
‘அப்புறம் என்னங்க நாளைக்கு நான் ஹாஸ்பிடல் போகும்போது உங்களையும் அழைச்சிட்டு போறேன்”
‘உங்களுக்கு எதுக்கு சிரமம் சார்’
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நாளைக்கு உங்களுக்கும் உங்களால கட்டிக்க போறவருக்கும் சேர்த்து ஒரு நல்ல செய்தி சொல்றேன். ஆமா நீங்க உங்களுக்கு கல்யாணம் ஆக போதுன்னு சொல்லவே இல்லையே சென்பகம்… நீங்க கட்டிக்க போறவரு யாருன்னு சொல்லலையே” என்றான் கார்த்திக்.
‘அதான் நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்கீங்களே நேரிலேயே காட்டிறேன்’ என்றாள் செண்பகம்.
“சரிங்க” என்று சொல்லி டாக்டரும் தன் வீட்டிற்கு சென்றார்.
அவர் சென்ற பிறகும் கூட செண்பகத்திற்கு ஆவல் தாங்கவில்லை. என்ன செய்தியா இருக்கும் என்று தன் மனதிற்க்குள்ளே போட்டுக் கொண்டாள் வேலையும் குழப்பி கொண்டாள்.
வீட்டிற்கு சென்றவள் இன்று நடந்த எல்லா விஷயத்தையும் புவனேஷ்க்கு போன் செய்து சொன்னாள். கார்த்திக்கும் தானும் நாளை வருவதாகவும் அவர் நல்ல செய்தி வைத்திருப்பதாகவும் சொன்னாள். இந்த செய்தி கேட்டதிலிருந்து புவனேஷுக்கு மனது சரியில்லை.
ஒருவேளை அந்த கார்த்திக் சென்பகத்தை காதலிப்பானோ என்ற சந்தேகம் பலமாக இருந்தது. ஒரு வேளை செண்பகம் மனம் மாறுவாளோ என்றெல்லாம் யோசித்து கொண்டே செண்பகத்திடம் சரியாக பேசாமல் நாளை பேசுவதாக கூறி போன் கால் கட் செய்தான்.
அன்று இரவு அவனுக்கு தூக்கமே இல்லை, செண்பகம் இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தான். அவன் எதுக்கு நாளை என்னை பார்க்க வர வேண்டும். ஒருவேளை அவனுக்கும் செண்பகத்திற்கு இடையே நான் இருக்கேன்னு எனக்கு விஷ ஊசி போட்டு சாவடிப்பதற்காக வருவானோ?
செஞ்சாலும் செய்வான் அவன்கிட்ட உஷாரா இருக்கணும் என்று எண்ணியவன், செண்பகத்தின் மீதும் அவனுக்கு சந்தேகம் வரத் தொடங்கியது. அந்த சந்தேக தீ அன்று இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது புவனேஷ்க்கு.
விடிந்ததும் செண்பகமும் கார்த்திக்கும் சேர்ந்து மருத்துவமனைக்கு வந்தனர். இருவரும் சேர்ந்து வந்ததை பார்த்த புவனேஷுக்கு இன்னும் சந்தேகம் வலுக்கிறது.
புவனேஷை பார்த்த செண்பகம் எப்போதும் போலவே நலம் விசாரித்து அன்பாக பேசினான். கார்த்திக்-ஐ அறிமுகம் செய்து வைத்தாள். கார்த்திக் மருத்துவர் என்பதால் புவனேஷின் உடல்நிலை குறித்து அக்கறை எடுத்து விசாரித்தான்.
“நீங்க ஏதோ சந்தோஷமான விஷயம் சொல்றதா சொன்னீங்களே என்ன விஷயம் சொல்லுங்க எனக்கு ஆவல் தாங்கல” என்று டாக்டரை பார்த்து கேட்டாள் செண்பகம்.
“சொல்லுறேன் செண்பகம் அதுக்கு முன்ன நீங்களும் புவனேஷும் ஒண்ணா நில்லுங்க” என்று சொன்னவன் தனது பையில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்தான்.
“எனக்கு தை மாதம் 1ஆம் தேதி கல்யாணம் மறக்காமல் வந்துவிடுங்கள் என்று” சொல்லி பத்திரிக்கையை இருவர் கைகளிலும் சேர்த்துக் கொடுத்தான்.
இதை கேட்டதும் செண்பகத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால், புவனேஷ்க்கு இப்படி நல்லவர்களை நாம் சந்தேகப்பட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தான்.
அவனுக்கு என்ன பேச வேண்டும் என்று சிந்தையில் ஓடவில்லை. புவனேஷின் மனதில் எரிந்து கொண்டிருந்த அந்த சந்தேகத் தீயை அந்த பத்திரிக்கை அணைத்துவிட்டது.
செண்பகம் கார்த்திக்கிடம் பேச ஆரம்பித்தாள், “நானும் புவனேஷும் கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வந்துருவோம் சார்” என்றாள்.
“சரிங்க செண்பகம்.. எனக்கு இது வேலை நேரம், அதிக நேரம் இங்க இருக்க கூடாது நான் கிளம்புறேன்” என்று புவனேஷ் சென்றுவிட்டார்.
நாம் செண்பகத்தை இப்படி தவறா நினைத்து விட்டோமே என்ற வருத்தம் புவனேஷுக்கு மேலும் மேலும் ஏற்பட்டது. அவன் கண்ணிலிருந்து நீர் வழிந்தது.
‘என்னாச்சு’ என்று செண்பகம் கேட்டாள்.
“ஒன்றுமில்லை செண்பகம் இனி எத்தனை பிறவி இருந்தாலும் நீ தான் எனக்கு காதலியாக வரணும், நான் தான் உனக்கு காதலனா வரணும். எப்பவுமே நான் உன்ன விட்டு பிரிய மாட்டேன் நம்ம வாழ்க்கையில இனிமேல் எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது இனி வரும் அத்தியாயங்கள் எல்லாமே சந்தோஷமாக தான் இருக்கும்” என்று சொல்லி செண்பகத்தை கட்டி அணைத்தான் புவனேஷ்.
எந்த உறவாக இருந்தாலும் சந்தேகம் என்ற ஒன்று அந்த உறவையே எரித்து விடக்கூடும். ஆகையால் என்னதான் மன கஷ்டங்கள் இருந்தாலும் வாய்விட்டு பேசுவதன் மூலம் அனைத்தும் சரியாகிவிடும்.
இந்த கதையில் காதலனும் காதலியும் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் சந்தேகத்தால் பிரிந்த உறவுகள் பல உண்டு. அதில் நம் பெயர் இடம் பெறாமல் இருப்போம்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings