இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னம்மா ஜோடியா ஹோட்டலுக்கு போக தெரியுது, காதலன் கூட பைக்ல போக தெரியுது, இந்த ரிசைன் லெட்டர்ல சைன் போட தெரியாதா?”
‘என்ன பத்தி உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லிருக்காங்க சார்’
“நீயும் உன் காதலனும் ஜோடியா போற காட்சியை பார்த்த சாட்சி இருக்கு, யார் தெரியுமா? அது நான் தான்”
“நான் வீட்டுக்கு போகும் போது மயங்கி விழுந்துட்டேன் சார், அவர்தான் என்னை காப்பாத்தி சாப்பாடு வாங்கி கொடுத்து வீட்டில் விட்டுட்டு போனார், அவரை முன்ன பின்ன நான் பார்த்தது கிடையாது சார்”
“முன்ன பின்ன பார்க்காதவன், எதுக்கு உன்னை வீட்டுல விட்டுட்டு போறான், உன் கதையை வச்சி ஒரு படமே எடுக்கலாம் போல, உன் பேச்சை கேக்குற நிலையில நான் இல்ல, சீக்கரம் கையெழுத்து போட்டு கம்பெனியை விட்டு வெளியே போ” என்று சத்தமிட்டுக் கத்தினார்.
“சார்… என்னை நம்பி தான் என் குடும்பமே இருக்கு, நான் வேலையை விட்டு நின்னுட்டா என் குடும்பம் நடு ரோட்டுக்கு வந்துடும் சார்.. என் மீது கருணை காட்டுங்க, இனியும் இந்த தப்பு நான் பண்ண மாட்டேன் சார்”
செண்பகம் மேனேஜரின் காலை பிடித்து அழுகிறாள். ஆனால் மேனேஜரின் மனம் கரையும் போல் தெரியவில்லை. இனியும் இங்கு பேசி எந்த பயனும் இல்லை என்று நினைத்த செண்பகம் வேறு வழியில்லாமல் கம்பெனியை விட்டு வெளியேறுகிறாள்.
செண்பகம் கம்பெனியின் வாசலில் நின்று கொண்டு, குலுங்கி குலுங்கி அழுகிறாள். பல மணி நேரம் கம்பெனியின் வாசலை பார்த்தபடியே பழைய நினைவுகளை சுமந்து கொண்டு நின்றாள்.
செண்பகம் தன் கம்பெனியை விட்டு வெளியேறும் நேரம் மதியம் 12 மணி. இவன் அழுது கொண்டே தன் வீட்டிற்கு செல்வதற்கும், கார்த்திக் மருத்துவமனையிலிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
“செம்பகம்… செண்பகம்… நில்லுங்க”
“சொல்லுங்க சார்”
“வீட்டுக்கு போறீங்களா”
“ஏன் சார் கேட்கிறிங்க”
“போகும் போது உங்க வீட்டுல உன்னை விட்டுட்டு போறேன்”
‘எனக்கு வீட்டுக்கு போக தெரியும், நீங்க போங்க சார்’
“என்ன செண்பகம் இப்படி பேசுறிங்க”
“பின்ன, எப்படி பேச சொல்லுறிங்க?”
“நேத்து உங்களுக்கு உதவி செஞ்சதெல்லாம் மறந்துட்டீங்களா”
“நேத்து உதவி செஞ்சதுக்குதான் கைமாறு பண்ணிட்டீங்களே சார்” என்று அழுதுகிட்டே சொன்னாள்.
“என்ன சொல்றீங்க, நான் என்ன பண்ண?”
‘நேத்து நீங்க, எனக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால், எனக்கு இந்த கெட்ட பேரும் வந்திருக்காது, என் வேலையும் பறி போயிருக்காது’
“ஐயோ என்னதான் ஆச்சி, தெளிவா சொல்லுங்க.”
செண்பகம் அழுது கொண்டே தன் வேலை பறிபோன விஷயத்தை கார்த்திக்கிடம் சொன்னாள்.
“இந்த வேலையை நம்பிதான் என் குடும்பமே இருந்தது, இனி சோத்துக்கு என்ன செய்வேனு தெரியல”
‘என்ன மன்னிச்சிடுங்க செண்பகம், என்னால தான் உங்களுக்கு இந்த கஷ்டம், நான் உங்களுக்கு நல்ல எண்ணத்தோடு தான் உதவி செஞ்சேன், ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.’
நீங்க டாக்டர் என்கிட்ட மன்னிப்பு கேட்கலாமா, நீங்க மனிதாபிமானத்துல உதவி செஞ்சிங்க, உங்க மேல தப்பு இல்ல சார், எல்லாம் என் தலைவிதி.
“கவலைப்படாதீங்க ஒரு கதவு மூடுனா இன்னொரு கதவு திறக்கும்னு சொல்லுவாங்க, அந்த கதவு உங்களுக்கு திறந்திடுச்சு”
‘என்ன சொல்லிறிங்க சார்’
“உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க பெரிய பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ‘பாலாஜி ஜவுளி’ கடை இருக்கே தெரியுமா?”
‘ஆமா சார், பெரிய துணிக்கடை ஒன்னு இருக்கு’
“அது எங்க மாமா கடைதான், வேலைக்கு ஆள் வேணும்னு சொன்னாரு, சம்பளம் 18,000 ரூபாய்.” என்று சொல்லி முடிப்பதற்குள்ளே,
‘சார்… எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கி கொடுங்க சார்’ என்றாள் செண்பகம்.
“நிச்சயமா அந்த வேலை உனக்குத்தான்”
‘ரொம்ப நன்றி சார்’
இப்பவே என் கூட வா, அந்த கடையில உன்னை வேலைக்கு சேர்த்துவிடுறேன், என்றான் கார்த்திக்.
செண்பகம் கார்த்திக்கின் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் பாலாஜி ஜவுளி கடைக்கு சென்றனர்.
கார்த்திக் செண்பகத்தை அந்த கடையில் வேலைக்கு சேர்த்து விட்டான். கடை முதலாளி செண்பகத்தை நாளை முதல் வேலைக்கு வர சொன்னார்.
சார்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போன என்னை பதினெட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வச்சிட்டீங்களே, அதுவும் வீட்டுக்கு பக்கத்திலேயே வேலை, கை நிறைய சம்பளம் என்று சொல்லிய செண்பகம் கண்கலங்கினாள்.
இது மட்டும் அல்ல, உங்களுக்கு இனியும் ஏதாவது உதவினா தயங்காம கேளுங்க, நான் செய்யுறேன். இப்ப நீங்க வீட்டுக்கு போங்க நாளிலிருந்து வேலைக்கு வந்துருங்க, என்றான் கார்த்திக்.
‘சரிங்க சார்’ என்று சொல்லிய செண்பகம் தன் வீட்டிற்கு சென்றாள்.
செண்பகத்துக்கு சந்தோஷம் தாங்க முடியல, ஏனா இதுவரை கம்மி சம்பளத்துக்கு வேலை பாத்தவள், இப்போ அவள் நினைச்சு கூட பாக்காத அளவுக்கு சம்பளம் வரும்போது சொல்ல முடியுமா அந்த மகிழ்ச்சியை.
தன் அப்பாவுக்கு துணி வாங்கி தரலாம், தன் தம்பிக்கு துணி வாங்கி தரலாம், புவனேஷ்க்கு துணி வாங்கி தரலாம், இந்த செய்தி கேட்டதும் புவனேஷ் சந்தோஷப்பட போறாரு, என்று மனசுக்குள்ளே ஆயிரம் ஆசைகளை வளர்த்துக் கொண்டே தன் வீட்டை அடைந்தாள் செண்பகம்.
அன்று இரவு செண்பகத்திற்கு கால் செய்தான் கார்த்திக்.
“ஜவுளி கடை முதலாளி இப்பதான் போன் பண்ணாரு, நாளை காலை 10 மணியிலிருந்து மாலை நாலு மணி வரைக்கும் வேலை என்றும் நாளைக்கு முதல் நாள் என்பதால் சீக்கிரமாக வர சொன்னார்”
‘சரிங்க சார், இந்த நன்றியை எப்போதும் நான் மறக்கமாட்டேன்’
இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போது, புவனேஷ் செண்பகத்திற்கு போன் செய்தான். புவனேஷ் போன் செய்யறாரு, வேலை விஷயமாக பேசிட்டு இருக்கோம் இடையில கால் அட்டென்ட் பண்ணி பேசினால் கார்த்திக் சார் தப்பா நினைச்சுடுவாரு, அதனால அப்புறம் பேசிக்கலாம் என்று நினைத்தாள் செண்பகம்.
யாருகிட்ட பேசுவாள், நான் போன் பண்றேன் எடுத்துப் பேசாத அளவுக்கு அப்படி முக்கியமானவங்க யாரு, என்று நினைத்த கார்த்திக், ஏதேதோ நினைத்து மனம் குழம்பினான்.
ஒருவேளை அந்த டாக்டர்கிட்ட பேசுவாளோ, சேச்சே அப்படி எல்லாம் இருக்காது, நான்தான் அவன் கூட வண்டியிலேயே போகக்கூடாது என்று சொன்னேன் அப்படி இருக்கும்போது அவன் கூட எப்படி போன் பேசுவாள்.
என் செண்பகத்தைப் பற்றி எனக்கு தெரியும் என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings