in

பனி விழும் மலர் வனம் ❤ (மெட்டுக்கு என் வரிகள்) – புவனா(சஹானா) கோவிந்த்

பனி விழும் மலர் வனம் ❤

நினைவெல்லாம் நித்யா படத்தில் வரும் “பனி விழும் மலர்வனம்” என்ற பாடலின் மெட்டுக்கு ஏற்ப, எனது கவிதை வரிகளை அமைத்துள்ளேன். பாடி பாருங்கள், சரியாகவே இருக்கும் என நினைக்கிறேன். நன்றி 

என்றும் நட்புடன்,

புவனா(சஹானா) கோவிந்த்

நினைவுகள் நிகழ்வுகள் என்றென்றும் உன்னுடன்

நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே – ம்…ஹும்…

நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே
(நினைவுகள் நிகழ்வுகள்…)

மழலை முதலே அறிந்தாலும், மனதை புரிந்தோம் இந்நாளில்

மழலை முதலே அறிந்தாலும், மனதை புரிந்தோம் இந்நாளில்

உறவுகள் சூழ்ந்திட, இணைந்திட்டோம் வாழ்வினில் – ஹே ஹே

உணர்வதின் பூக்களே, மனமெங்கும் மலர்ந்ததே

உலகம் சுற்றியும் நிற்கையில் உறவுகள் சூழ்கையில்

உறவும் உணர்வும் மறந்து உன்னைத் தேடும்
(நினைவுகள் நிகழ்வுகள்…)

மனதை அறிந்த அந்நாளில், மறந்தோம் உலகை பலகனவில்

மனதை அறிந்த அந்நாளில், மறந்தோம் உலகை பலகனவில்

முப்பது அறுபது, கடந்தும்தான் கசக்கல – ஹே ஹே

முன்னொரு பிறவியில், இருந்தோமோ இன்றுபோல்

காலம் கண்முன்னே கரைகையில் கனவுகள் மலர்கையில்
கரையும் நெஞ்சம் விரிந்து கவிதை பாடும்
(நினைவுகள் நிகழ்வுகள்…)

#ad எனது புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                        

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 Thousand Visitors) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. இன்று போல் என்றென்றும் இதே மாதிரி (டாம் அன்ட் ஜெரி) உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க வாழ்த்துகள்/ஆசிகள்.

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 18) -✍ விபா விஷா

‘ஏப்ரல் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்