ஆம்! நான் திருடன் தான்.
உன்னிடமிருந்து உனக்கு தெரியாமலேயே
உன் நினைவுகளை திருடிய திருடன்.
மண்ணுக்குள்ளே புதைந்திருக்கும் விதைகள் போல,
என் நெஞ்சுக்குள்ளே புதைந்திருக்கும் உன் நினைவுகள்.
நித்திரை இல்லா இரவுகள் உண்டு
உன் நினைவுகள் இல்லா பொழுதுகள் இல்லை.
என் சிந்தனையில் ஒளிந்திருக்கும் உன் நினைவுகளை
மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
அது என் வார்த்தைகளின் மூலம் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.
கடந்த காலம் நினைவுகளாக
நிகழ் காலம் நிஜங்களாக
எதிர்காலம் புதிராக
உன் நினைவுகள் மட்டுமே நிரந்தரமாக
நகர்கிறது என் வாழ்க்கை.
நீ நிஜமாக என் முன் இல்லாவிட்டாலும்
உன் நினைவாக நிழலாடி கொண்டிருக்கிறாய்.
மனதோரம் உன் நினைவுகள் இல்லை,
என் மனமே
உன் நினைவுகளால் தான் நிரம்பி கிடக்கிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings