எழுத்தாளர் நேத்ரா பாலாஜி எழுதிய அனைத்து கதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முதலில் நான் என் பாட்டிகளை பற்றி சில வரிகள் சொல்லி விடுகிறேன். என் அம்மம்மா, நானாம்மா இருவரும் வழுமையான இல்லதரசிகள் (typical house wives).
என் தாய்மொழி தெலுங்கு என்பதால் அம்மாவை பெற்ற பாட்டியை அம்மம்மா என்றும், அப்பாவை பெற்ற பாட்டியை நானாம்மா என்றும் அழைப்போம். இது பெரும்பாலானோருக்கு தெரிந்ததே.
என் அம்மம்மா அந்த காலத்திலேயே 8ஆம் வகுப்பு வரை படித்தவர் நர்ஸ் ட்ரைனீங் முடித்தவர். அந்த காலத்தில் செவிலியர்கள் தாலியை கழட்டி வைத்துவிட்டு தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அரசாங்க வேலையாக இருந்தாலும் அம்மம்மாவை வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டார் தாத்தா.
என் அம்மம்மா பல விசித்திர கதைகளை எல்லாம் எனக்கு சொல்வது உண்டு. அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை என்றால் பாட்டி வீடு சொர்க்கம். என் நானாம்மா அவர் வாழ்க்கையின் அனுபவங்களை எனக்கு பாடமாக புகட்டி இருக்கிறார்.
என் இரு பாட்டிகளும் கதைகள் மட்டுமில்லை வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுத்தவர்கள். சரி விஷயத்திற்கு வருவோம் நான் இப்ப சொல்ல போறது என் பிள்ளைகளின் பாட்டிகளை பற்றி.
அதிலும் குறிப்பாக அதிகப்படியாக சொல்லப் போவது அவர்களின் அம்மம்மாவை பற்றி அதாங்க எங்க அம்மாவை பற்றி, ஏனொன்றால் தலைப்பு அப்படி 😁முதலில் அவர்களின் நானாம்மாவை பற்றி சொல்லி விடுகிறேன்.
அவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபி, அவர் செல்லாத புண்ணிய ஸ்தலங்களே இல்லை. அவர் எங்களுடன் நீண்டகாலம் பயணிக்கவில்லை என்றாலும், பேரன் பேத்தியுடன் இருந்த நாட்கள் குறைவாக இருந்தாலும் அவை என் பிள்ளைகளுக்கு பசுமையான நினைவுகள்.
ஏன் இருக்காது பிள்ளைகளை கண்டிக்கும் போது அவர்களை நம்மிடமிருந்து காப்பாற்றுவதே தாத்தா பாட்டிகள் தானே. தற்போது அவர் நோய்வுற்று படுக்கையில் கிடந்தாலும் தைரியமும் மன உறுதியும் அதிகம் கொண்டவர்.
அடுத்து அம்மம்மாவை பற்றி பார்ப்போம். அவர் அந்த காலத்து பெண்மணி ஆனாலும் என் பிள்ளைகளுக்கு ஒரு ஹைடெக் பாட்டி தான். அவர் அப்போது எழுதிய அத்தனை அரசாங்க (TNPSC) தேர்விலும் வெற்றி பெற்றவர்.
அவரது இளமை காலத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக காணலுக்கு சென்றாலே அங்கு வரும் இளைஞர்கள் அவரை பார்த்ததும் அட இவங்க இங்கேயும் வந்துட்டாங்களா அப்போ நமக்கு இங்க வேலை இல்ல நிச்சயமா அவங்களுக்கு தான் கிடைக்கும் என என் அம்மா காதுபடவே புலம்பி விட்டு போவார்களாம்.
போக்குவரத்து துறை, ஜி.எச் அரசாங்க மருத்துவமனை என பல்வேறு அரசாங்க துறையில் தற்காலிக பணிபுரிந்தவர் பிறகு மாநில அரசாங்க அச்சகம் மற்றும் எழுதுப் பொருள் துறையில் நிரந்தர பணியாளராக தட்டச்சு வேலையில் நியமிக்கப்பட்டார். பிறகு படிப்படியாக முன்னேறி கண்காணிப்பாளராக பதவி பெற்று 35 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்.
அவர் அக்கால பெண்மணி என்றாலும் இக்காலத்திற்கேற்ப முற்போக்கு சிந்தனை உடையவர். சிலர் பணி ஓய்வுப்பெற்ற பிறகு வெறுமையாக உணர்வார்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் ஆனால் பணி ஓய்வுப் பெற்றதிலிருந்து இன்று வரை தன்னை பிஸியாக சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதை பார்த்து நான் மட்டுமல்ல என் மகளும், மகனும் கூட பலமுறை வியந்திருக்கிறோம்.
மின்சாரம் இல்லாத காலத்தில் பிறந்தாலும் இன்று ஏடிஎம் கார்ட், ஆன்ட்ராய்டு போன் வரை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் ஹைடெக் பாட்டி தான் என் அம்மா.
நாங்கள் இப்போது புறநகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறி உள்ளோம். முன்பு இருந்த ஊரில் காய்கறி கடை முதல் துணி கடை வரை நடந்து செல்லும் தொலைவில் இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் ஊரில் அப்படியான வசதிகள் குறைவு. அங்கு வீட்டிலிருந்து எட்டி பார்த்தாலே கடைகள் தெரியும் இங்கு டூவீலர் இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.
நவீன சாதனங்களை கையாளுவதில் இருந்து எல்லாவற்றையும் கற்ற கொண்ட என் அம்மா இன்று வரை வருத்தப்படும் ஒரே விஷயம் தான் வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.
அம்மம்மா இனிமே நீ பஸ் ஸ்டாண்ட் / இரயில்வே ஸ்டேஷன் ஏடிஎம் சென்டர் பென்ஷன் ஆபிஸ் ஜீ.ஆர்.டி எங்க போனாலும் நடந்து போக முடியாது. இந்த ஊர்ல எல்லாமே தூரம். நாங்க தான் உன்ன பஸ்டாண்ட், இரயில்வே ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும். உனக்கு தான் யாரையும் depend பண்ணி இருக்க பிடிக்காது. இப்ப என்ன பண்ணுவ, இனி நீ எங்கேயும் போக முடியாது அவுஸ் அரஸ்ட் தான் கேலி செய்து சிரித்தனர் என் பிள்ளைகள் அவர்களுடன் சேர்ந்து நானும்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த அம்மா பதிலுக்கு பலமாக சிரித்தார். அவர் சிரிப்பை கண்டு புரியாமல் நாங்கள் விழிக்க அவர் கையிலிருந்த நவீன ஆன்ட்ராய்டு கைப்பேசியை எங்களிடம் காண்பித்தார்.
என்னவென்று நாங்கள் மூவரும் பார்த்தால் அதில் புதிதாக டவுன்லோட் செய்யப்பட்ட ராப்பிடோ (rapido) ஆஃப் இருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த போதே எங்கள் வீட்டு அழைப்பு மணி சத்தம் கேட்க யாரென்று எட்டி பார்த்தோம் வாசலில் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நின்றிருந்தார்.
எங்கள் மூவருக்கும் அவர் யார் என்று தெரியவில்லை. நகருடா! என்று என் மகனை அசால்டாக பின் தள்ளிவிட்டு வாங்க! வாங்க! என்று அந்த பெண்ணை அழைத்தார்.
என் பொண்ணுக்கு பையன் பொறந்திருக்கான் நாளைக்கு சயங்காலம் 6 மணிக்கு தொட்டியில போடுறோம் எல்லாரும் கண்டிப்பா வந்துடுங்க என் அம்மாவிடம் பேசிக் கொண்டே என்னிடம் குங்கமசிமிழை நீட்டினார்.
என்னம்மா அப்படி பாக்குற நான் தான் பால்காரம்மா இரண்டு தெரு தள்ளி தான் எங்க வீடு இருக்கு. எங்க வீட்டுகாரர் தான் பசும் பால் கொண்டு வருவாரு. அதான் உனக்கு என்னைய தெரியல. உங்க அம்மாக்கு தான் நான் பழக்கம் என்றார்.
அம்மா! நாம இங்க வந்தே 15 நாள் தானம்மா ஆகுது அதுக்குள்ள அவங்க வீட்டு பங்கஷனுக்கு கூப்பிடுற அளவுக்கு பழக்கமாகி இருக்காங்க அம்மம்மா என என் காதில் கிசுகிசுத்தாள் என் மகள்.
அவர் சென்றதும் என் அம்மா எங்களிடம் திரும்பி நான் இங்க வந்ததும் அக்கம் பக்கத்துல எல்லாம் பேசி பால்காரமா வீட்டிலிருந்து, மளிகை கடை, தையல்காரர், வேஸ்ட் பேப்பர் கடை வரைக்கும் விசாரிச்சி என் போன்ல அவங்க நம்பர் எல்லாம் சேவ் பண்ணி வச்சிக்கிட்டேன். இங்க பாரு என மறுபடியும் கைப்பேசியை எங்களிடம் காண்பிக்க அதில் ராப்பிடோ புக் செய்து வாகனம் வருவதற்கான அடையாளத்தை காட்டியது.
இன்னும் ஒரு நிமிஷத்துல ராப்பிடோ வந்துடும் எனக்கு டைம் ஆகுது நான் எஸ்பிஐ பாங்க் போயிட்டு அப்படியே தாம்பரம் ஷாப்பிங் போயிட்டு வந்துடுறேன் நாளைக்கு ஈவினீங் பால்காரம்மா வீட்டு பங்கஷன் வேற போகணும் என தன் பையை எடுத்து கொண்டு வாசலுக்கு விரைந்தார். இவர் செல்ல சரியாக ராப்பிடோ பைக் வந்து நின்றது.
தன் கைபேசியில் காண்பிக்கும் வண்டி எண் தானா என சரிப்பாரத்து கொண்டு அவனிடம் ஓடிபி எண்ணை சொன்னார். ஓ.கே பாட்டி வண்டியில பாத்து உட்காருங்க என ஓட்டுனர் சொல்ல இருப்பா!
Is Helmet provided? Yes or no ஆஃப்ல கேட்குது எங்க என்னோட ஹெல்மெட் என அதட்டலாக அம்மா கேட்க மிரண்டு போனான் ஓட்டுனர். பாட்டி இங்க இருக்குற ரெயில்வே ஸ்டேஷன் தானே ட்ராப் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க லோக்கல் ட்ராப் தானே எஸ்னு கொடுத்திடுங்க ப்ளீஸ் என கெஞ்ச பொழுச்சு போ! என்பது போல் ஆஃபில் எஸ் ஆஃப்ஷனை கிள்க் செய்து வண்டியில் ஏறிக் கொண்டார்.
எங்களை பார்த்து பை! என கையசைக்க நாங்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போய் நின்றோம். அவர் கையசைத்து சென்றது எங்களை பார்த்து வரட்டா என தளபதி ஸ்டைலில் சொல்லி சென்றது போல் இருந்தது.
அம்மம்மாவ பாத்தியா மா she never depend on others she loves to be independent என பெருமையாக☹️ என் மகன் கூற, such a brave lady she is my role model. Bravo 👏👏என கைத்தட்டி சிரித்தாள் என் மகள்.
இப்ப சொல்லுங்க என் பிள்ளைகளின் அம்மம்மா ஹைடெக் பாட்டி தானே. நரை முடியும் ஞாபக மறதியும் அவர் முதுமையை காட்டினாலும் இக்காலத்திற்கேற்ப பக்குவத்தையும் நவீன யுக்திகளை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அம்மாவிடம் என்றுமே குறைந்ததில்லை. இந்த மகராசியை பெத்த மெகா மகராசியை பார்க்கணுமா?
இந்த தலைப்பு ஓட கேலரியில அவங்க படம் இருக்கும் பாருங்க அவங்க தான் என் அம்மா. என் பிள்ளைகளோட ஹைடெக் பாட்டி👵
எழுத்தாளர் நேத்ரா பாலாஜி எழுதிய அனைத்து கதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings