2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
Happy women’s day வாட்ஸ்அப்பில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. அதை திறந்து பார்ப்பதற்குள் அனிதா!!! என்று குரல் வந்தது..
என்னங்க! லன்ச் பேக் ரெடியா? கணவன் குரல் கொடுத்தான்.
ஹான் இதோ! சாப்பாட்டு பையை நீட்டினாள். சரி வரேன் என்று அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்தவன் சட்டென அவள் பக்கம் திரும்பி ஹாப்பி வுமன்ஸ் டே! என்றான் கடமைக்காக. தாங்க்ஸ் என்றாள் வெற்று சிரிப்புடன்.
அம்மா! இன்னிக்கு வுமன்ஸ் டே! வா? கைப்பேசியை நோண்டி கொண்டே கேட்டான் பருவ வயது மகன். ஆம்! என்று தலையாட்ட ஹாப்பி வுமன்ஸ் டே! மா! என்று கை குலுக்கி கல்லூரிக்கு கிளம்பினான். ஐந்தாவது படிக்கும் தன் மகளுக்கு தலை சீவி கொண்டிருந்தாள். அம்மா ஹாப்பி வுமன்ஸ் டே! என்று வாழ்த்து சொல்ல தாங்க்ஸ் டா! செல்லும் என்று கன்னத்தை கிள்ளி முத்தமிட, முறைத்தாள் மகள்.
ஏன் என்பது போல் புரியாமல் பார்த்தேன். நானும் பெண் தானே எனக்கு ஏன் நீ விஷ் பண்ணல கோபப்பட்டாள் மகள்.
ஹாப்பி வுமன்ஸ் டே என்றாள் மகளின் கைப்பற்றி சிரித்த முகத்துடன் வாழ்த்து பெற்ற த்ருப்த்தியில் பள்ளிக்கு சென்றாள் மகள்.
எல்லாம் இன்று ஒரு நாள் தான். அதன் பிறகு ஒருவர் முகம் ஒருவர் பார்த்து பேசு கூட நேரமில்லாமல் ஓடுவோம். நேரம் என்பது நாம் ஏற்படுத்தியது அதை நாம் தான் சீராக வகுத்து கொள்ள வேண்டும். நாம் நினைத்தால் மனது வைத்தால் நேரம் இருக்கும் இல்லை எனில் அந்த நேரத்தை கூட கைபேசியில் செலவிடவே தோன்றும். வீட்டில் இந்த நிலை என்றால் வேலை செய்யும் இடத்தில் வேறொரு நிலை வாங்க அதையும் பார்ப்போம்
வீட்டு கடமைகளை முடித்து அலுவலக கடமைகளை மேற்கொள்ள அரக்கபறக்க ஆபிஸிற்கு ஓடினாள் அனிதா. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் வாசலில் வண்ணக் கோலம் அழகாய் வரவேற்றது. அட! இந்த கோலத்தை போட்டதும் பெண்கள் தான். எங்களுக்கு நாங்களே பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே வருடா வருடம் மகளிர் தினம் கொண்டாடிகிறோம்.
உள்ளே நுழைந்ததும் ஹேய்! மேம் குட் மார்னிங்! ஹாப்பி வுமன்ஸ் டே! பல்லை இளித்துக் கொண்டு கைகளை நீட்டினான் எங்கள் ஆபிஸின் மன்மத ராசா! அதாங்க ஜொள்ளு பார்ட்டி.
நான் தாங்க்ஸ் என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டு அவனை கடந்து சென்றேன். எனக்கு தெரியும் அவன் பார்வை முழுக்க இப்போது என் பின்(னல்) நடையில் இருக்கும் என்று. எத்தனை முறை என்னை ஓரக்கண்ணால் பார்த்திருப்பான். எப்போது எவள் சேலை விலகும் என்று தானே அவன் பார்வை காத்திருக்கும்.
தன் குடும்பத்திற்காக வேலைக்கு வரும் பெண்களை அவர்களது தாய், தங்கை போல் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை மாற்றான் மனைவியை அப்படி பார்ப்பது தவறு என்று கூடவா தெரியாது? பிறகு எதற்கு பிறர் முன் தன்னை உத்தமன் போல் காண்பித்துக் கொள்ள மகளிர் தினம் வாழ்த்து சொல்லும் நாடகம்.
அடுத்து எங்கள் மேல் அதிகாரி. அவர் மேல் அதிகாரி மட்டும் தான் கம்பெனியின் முதலாளி அல்ல ஆனால் இந்த முழு நிர்வாகமும் அவரால் மட்டுமே சிறப்பாக நடப்பது போல் கர்வம் கொள்வார். அது கூட பரவாயில்லை மற்ற ஊழியர்களை குறிப்பாக பெண்களை ஏளனமாக நடத்துவார். நீயெல்லாம் எனக்கு சமமா! என்பது போல் உதாசீனம் செய்வார். ஆண் ஆதிக்கம் குணம் கொண்டவர்.
ம்ஹும்! தொண்டையை செறுமிக் கொண்டு எங்கள் முன் கம்பீரமாக வந்த நின்றார், எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். கேக் வெட்டி கொண்டாடுங்க எனக்கு வேலை இருக்கு என்று நிற்க கூட நேரம் இல்லாதது போல் எங்களை கடந்து சென்றார். போனால் போகட்டும் இன்று ஒரு நாள் மட்டும் என்னிடம் திட்டு வாங்காமல் பிழைத்து போங்கள் என்பது போல் இருந்தது அவர் செய்கை.
அப்போ! எல்லா ஆண்களும் கெட்டவர்களா? என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. ஒட்டு மொத்த ஆண் வர்கத்தை நான் குறை கூறவில்லை இன்னும் சில மோசமான ஆண்கள் வாழும் உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைவு கூறுகின்றேன்.
அப்போ! பெண்கள் மட்டும் என்ன யோகியமானவர்களா? என்று ஆண்கள் கொந்தளிப்பது புரிகிறது. இங்கு சில ஆண்களால் பெண்கள் பாதிக்க படுகிறார்கள் என்றால், பெண்கள் அதற்கும் ஒரு படி மேலாக பெண்களால் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். சும்மாவா சொன்னாங்க பெண்ணே! பெண்ணுக்கு எதிரி என்று. ஒரு ஆண் சாதித்தால் அவனை ஆஹா! ஹோ ஹோ! என புகழும் பெண்களுக்கு அதே ஒரு பெண் சாதித்தால் அவளை புகழ மனம் வரவில்லை. காரணம் பெண் இனம்.
நீயும் என்னை போல் ஒரு பெண் தானே! உன்னால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது? எனக்கு கிடைக்காத ஒன்று உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது? நான் அனுபவிக்காத ஒன்றை நீ மட்டும் எப்படி அனுபவிக்கலாம் இப்படி பட்ட பொறாமை எண்ணம் கொண்ட பெண்கள் இருப்பதால் தான் இன்றும் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, வரதட்சனை கொடுமை என பெண்களால் மற்ற பெண்களுக்கு கொடுமை நடந்துக் கொண்டிருக்கிறது.
அவ்வளவு ஏன் காதல் திருமணம் ஆனாலும் சரி, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் சரி, இன்று நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு ஒரு பெரும் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணமும் ஒரு பெண்ணாக தான் இருக்கிறாள். மாற்றான் மனைவியை பார்க்க கூடாது என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல மாற்றான் கணவனை கவரக் கூடாது என்பது பெண்களுக்கும் பொருந்தும்.
இதை விய கொடுமையான ஒன்று பாலியல் வன்கொடுமை. உலக மகளிர் தினம் ஊரெங்கும் கொண்டாட்டம் பிறகு எதற்கு இன்றும் நாம் #justife for என்று ஏதோ ஒரு பெண்ணின் பெயரையோ பெண் குழந்தையின் பெயரையோ சமூக வளைதளத்தில் ஹாஷ்டேக்குடன் பதிவிட்டு குரல் கொடுத்து கொண்டிருக்கும். அன்று #justice for Damini( nirbhaya case) முதல் இன்று #justife for aarthi(புதுசேரி) சம்பவம் முதல் பாலியல் கொடுமைகள் வயது வரம்பின்றி நடந்த வண்ணம் இருக்கிறது. நாமும் எப்போதும் போல் #justice for…….. என்று பதிவிட்டு விட்டு நம் அன்றாட வேலைகளை பார்க்க சென்று விடுகிறோம்.
பிறகு எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டம்? குமரியானாலும் கிழவியானாலும் பிஞ்சு குழந்தையானாலும் ஆள் அரவமற்ற இடத்தில் இருந்தால் ஆபத்து தான். அவள் கிழிந்த நாராகவோ சாக்கு மூட்டையில் பிணமாகவோ தான் வீடு திரும்புகிறார்கள். ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் ஆசிரியர் சொல் படி கேட்டு நடக்க வேண்டும், வகுப்பில் சேட்டை செய்ய கூடாது, பாடத்தை ஒழுங்காக கவனிக்க வேண்டும் இப்படி தான் பெற்றோர்கள் சொல்லி அனுப்புவார்கள். ஆனால் இன்று முகம் தெரியாத நபரிடம் பேச கூடாது, தனியாக எங்கும் செல்ல கூடாது, என்று தைரியமாக வளர வேண்டிய குழந்தைகளை பயப்புறுத்தி எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களை தனித்து விட பயந்து கொண்டு அவர்கள் துணிச்சலை அடக்கி முடக்கி போடுகிறோம்.
அவர்கள் மற்றவர்களை சார்ந்தே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். துள்ளி திரியும் புள்ளி மான்களை, குதித்து விளையாடும் முயல் குட்டிகளை (குழந்தைகளை) இன்றும் சில ஓநாய்க்கள் (காமுகர்கள்) கடித்து குதறிக் கொண்டு தான் இருக்கின்றது. இத்தனை கொடுமைகள் நடக்கும் நிலையில் எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டம்? எதற்கு இந்த வாழ்த்துக்கள்?
இதெல்லாம் என் மனதில் தோன்றிய குமுறல்கள் இதை சரியான நேரத்தில் பதிவிட எனக்கு நேரமில்லை. என்பது தான் கொடுமை. ஏன் என்றால் எனக்கு மீ டைம் கிடைக்கவில்லை. அதாங்க! இப்ப எல்லாம் பெண்கள் தனக்காக ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் செலவழிப்பதாக சொல்லி அவர்களை அவர்களே ஏமாற்றி கொண்டிருக்கிறார்களே அந்த மீ டைம் பற்றி சொல்கிறேன்.
நானும் பார்க்கிறேன் பெண்கள் சொல்வது போல் எந்த ஆணும் மீ டைம் என்று சொல்வதாக எனக்கு தெரியவில்லை. நேரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இயற்கை வகுத்த இந்த நேரத்தை தனக்காக செலவிட கூட சில மணிதுளிகளே ஒதுக்க வேண்டும் என்ற நிலையில் தான் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது கசப்பான உண்மை. பிறகு எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டம்?
இங்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆர்வத்திற்கு காரணம் பெண்களுக்கு நடக்கும் பெரும்பாலான இன்னல்களுக்கு ஆண்களே காரணம் என்கிற குற்றயுணர்ச்சியா?
அப்புறம் என்னங்க ஆபிஸ் வேலை முடிச்சு பஸ்ஸில் இடிப்பட்டு, மிதிப்பட்டு, சகிக்க முடியாத உரசல்களை எல்லாம் தாண்டி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன் முழுசா.
அதன் பிறகு இரவு உணவிற்கான வேலைகளை முடித்து வீட்டில் உள்ளோர் உறங்க சென்ற பிறகு எனக்கான மீ டைம் கிடைத்ததில் என் மன குமுறல்களை மகளிர் தினம் முடிவதற்குள் பதிவிடுகிறேன். இருங்க! நான் இன்னும் முடிக்கல, அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! எனக்கு வாழ்த்து சொன்னவங்களுக்கு பதில் வாழ்த்து சொல்ல வேண்டாமா? ஏன்னா! நானும் பெண் தானே 😀
அப்பாடா!!! எப்படியோ மகளிர் தினம் முடிவதற்குள் என் மனதில் உள்ளதை எழுத்துக்களாக கொட்டிவிட்டேன்.
சிந்திப்போம்!!!!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings