in ,

அன்றும் இன்றும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

சலசலென   ஓடிவந்த   ஓடை

     சங்கீதம்    பாடிவந்த   ஓடை

கலகலென    சிரித்துவந்த    ஓடை

     கால்பதிய    ஆடிவந்த     ஓடை

நிலத்தாயின்    பாலாக    ஊறி

     நிறைசுவையைத்    தேக்கிநின்ற    ஓடை

நலமிழந்தே   ஏடுகளில்   மட்டும்

     நாம்படிக்கும்    அவலமான    தின்று !

 

சிற்றூரின்    அழகென்றே    நின்று

     சிலிர்ப்பூட்டி   மிளிர்ந்ததந்தக்    காலம்

வற்றிப்போய்     தடம்மட்டும்    காட்டி

     வரைகோடாய்    ஆனதின்று    கோலம்

நற்றாயின்    அன்பூற்றாய்க்    குன்றில்

     நறுந்தேனாய்    ஊறிவந்த    தன்று

வெற்றுத்தாள்    போல்காய்ந்து    குன்றும்

     வெறுமையாகிப்    போனதுவே    இன்று !

 

சிற்றோடை    கழிவோடை    யாக

     சிறுமீன்கள்    புழுபூச்சி    சாக

பெற்றவளே    பெண்சிசுவைக்    கொல்லும்

    பெருங்கொடுமைப்    போல்மாசு    செய்தோம்

முற்றாக    நம்வாழ்வை    நாமே

    முடிப்பதற்கு    வழிவெட்டிக்    கொண்டோம்

சற்றிதனை     நாமெண்ணிப்    பார்த்தே

     சரிசெய்ய    வில்லையெனில்   வீழ்வோம் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எது நாட்டுப்பற்று (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    மின்னும் மின்மினிகள்…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M