in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17

 “தர்ஷணாவை நீலாவிற்கு உதவியாக விட்டு விட்டு நாமெல்லாம் போய் ஹாலில் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்” என்றாள் நிர்மலா, தர்ஷணாவை கலாட்டா செய்வதற்காக. புது இடத்தில் தர்ஷணாவிற்கு ஒன்றும் பேச்சு வரவில்லை, எனவே நிர்மலாவை முறைத்தாள்.

“தர்ஷணா சின்னப் பெண், அவளைப் போய் கலாட்டா செய்கிறீர்களே. இனிமேல் அவள் எங்களோடு தான் இருக்கப் போகிறாள். அவள் இங்கே இருப்பதில் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி” என்ற ஜட்ஜின் மனைவி சாந்தா, அருகில் வந்து அணைத்து தர்ஷணாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

கொஞ்சம் ஓய்வெடுத்து, பின் தர்ஷணாவை அவள் பணியில் சேர வேண்டிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் நிர்மலா.

“நிம்மிக்கா, நீங்கள் வர வேண்டுமா? எல்.கே.ஜி. பாப்பாவை ஸ்கூலில் சேர்ப்பதற்கு கைப்பிடித்து அழைத்துப் போவது போல் இருக்கிறது நீங்கள் என்னுடன் வருவது. அந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என் வீரமென்ன… தைரியமென்ன?” என்று கே.பி.சுந்தராம்பாள் போல் பாட்டுப் பாடினாள் தர்ஷணா.

“வாயை மூடிக் கொண்டு வா. ஏற்கெனவே உன் புகழ் தான் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறதே?” என்றாள் நிர்மலா புன்னகையுடன்.

“என் புகழ் அவ்வளவு தூரம் பரவியிருக்க நான் என்ன செய்தேன்?” என்றாள் தர்ஷணா.

“எஸ்.எஸ்.எல்.சி’யில்  மாநிலத்தில் முதலாவதாக வந்து விட்டு முதல்வரையே வீட்டிற்கு வரவழைத்த பெண்தானே என்று தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள், அடையாளம் காட்டுகிறார்கள். உன்னைப் பார்த்து எல்லோரும் பயந்து போயிருக்கிறார்களே. என் நீண்ட நாள்தோழி, முன்பு என்னுடன் வேலை செய்தவள்… இப்போது நீ வேலைக்குப் போய் சேரப்போகும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறாள். ரொம்ப நல்லவள், அவளையும் பார்த்து விட்டு உன்னையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்றாள் நிர்மலா.

வீடு திரும்பும் போது, “நிம்மிக்கா, நான் உங்களுக்கு ஒரு ஜோஸியம் சொல்வேன். அது பலித்து விட்டால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்றாள் தர்ஷணா.

“நீ சரியான பிராடு. ஏதாவது விஷயம் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வாய்” என்றாள் நிர்மலா புன்னகையுடன்.

“நோ நோ… உங்களுக்கு சந்தோஷமான் விஷயம், பிராமிஸ். பெட் ஒன்றும் பெரியதில்லை, ஜஸ்ட் ஒரு ஐஸ்கிரீம் தான். என்ன சொல்கிறீர்கள்? வேண்டுமென்றால் கேட்டுக் கொள்ளுங்கள், வேண்டாமென்றால் விடுங்கள்” என்றாள் தர்ஷணா பிகுவாக.

“சரி சொல்” என்றாள் நிர்மலா.

“நாம் வீட்டுக்கு சென்று சேரும்போது நித்யா அங்கிருப்பாள்” என்றாள் தர்ஷணா.

“உனக்கு எப்படித் தெரியும் ?” ஆவலுடன் கேட்டாள் நிர்மலா.

“நான் சொன்னது சரியா தவறா என்று வீட்டில் போய் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்” என்றாள் தர்ஷணா.

நிஜமாகவே வீட்டில் நித்யா தன் சித்தி  மற்றும் தந்தையுடன் வந்திருந்தாள். ‘எப்படி’ என பார்வையிலேயே தர்ஷணாவை வினவினாள் நிர்மலா. ‘பிறகு சொல்கிறேன்’ என்றாள் தர்ஷணாவும் பார்வையிலேயே. ஜட்ஜ் பிரகாசம் எல்லோரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார், ஆனால் நித்யாவின் அப்பாவும் சித்தியும் யாருடனும் எந்த அறிமுகமும் தேவையில்லை என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

 “ஜட்ஜ் அங்கிள், நித்யா கொஞ்சம் ப்ரீயாக இருக்கட்டுமே, நான் அவளை என் அறைக்கு அழைத்துச் செல்லட்டுமா?” என தர்ஷணா கேட்க

எந்த தயக்கமும் இல்லாமல், “அதற்கென்ன, எல்லாம் நம் வீடு தானே அம்மா. நீங்கள் சுதந்திரமாக பாடலாம், ஆடலாம்… என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்றார் ஜட்ஜ் பிரகாசம்.

“வா நித்யா, என் ஆல்பம் காட்டுகிறேன்” என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள். தர்ஷணா துள்ளித் துள்ளி மான் குட்டி போல் ஓடும் போது நித்யா நொண்டியவாறு ஓடினாள், நிர்மலாவும் அதைப் பார்த்தாள்.  ஜட்ஜின் மனைவி சாந்தா அதைக் கேட்டே விட்டார்.

 “அவள் காலில் ஏதோ சுளுக்கு” என்று  சொல்லிக் கொண்டிருந்தார் நித்யாவின் சித்தி.

தன்னறைக்கு நித்யாவை அழைத்துச் சென்ற பிறகு தர்ஷணா அவளைத் துருவித் துருவிக் கேட்ட பிறகு, தன் பாவாடையை லேசாகத் தூக்கிக் காண்பித்தாள் நித்யா. காலில் சூடு போட்டப் புண் ஈரம் மாறாமல் இருந்தது. பாவாடை நுனிபட்டு லேசாகக் காய்ந்த தோல் பிய்த்துக் கொண்டு இரத்தக் கலரில் இருந்தது.

“இது சுளுக்கா? காலில் போடப்பட்ட சூடா?” கோபமாகக் கேட்டாள் தர்ஷணா.

“மன்னித்து விடு தர்ஷணா. இது சூடு தான், என் சித்தி போட்ட சூடு” என்றாள் கண்கள் கலங்க.

“நீ என்ன மாடா, உனக்கு சூடு போடுவதற்கு? ஏன் இப்படி செய்தார்கள்?” என்றவள், தன் செல்போனில் போட்டோ எடுத்தாள் தர்ஷணா.

“ஏன் தர்ஷணா போட்டோ எடுக்கிறீர்கள்?” என்றாள் நித்யா பயந்து.

“இது என்ன நீ வாங்கிய அவார்டா, எல்லோருக்கும் அனுப்புவதற்கு ? இதற்கு என்ன மருந்து போட்டால் சீக்கிரம் ஆறும்  என்று யோசிப்பதற்கு எனக்கு டைம் வேண்டும் அல்லவா? இப்போது என் கையில் உள்ள மருந்தைப் போடுகிறேன்” என்று நீபாஸல்ப் பௌடரைப் போட்டாள் தர்ஷணா.

“நாளை ஆஸ்பத்திரிக்கு வா, ஒரு இஞ்ஜெக்ஷன் போட வேண்டும். அப்போது தான் சீழ் பிடிக்காமல், செப்டிக் ஆகாமல் இருக்கும்” என்றாள் தர்ஷணா.

“சரி” என்றாள் நித்யா.

“உன் சித்தி ஏன் இப்படி சூடு போட்டாள்? பொம்பளையா இல்லை பிசாசா?” என்றாள் தர்ஷணா கோபமாக.

“என் திருமணத்திற்கு அப்பாவும் சித்தியும் கட்டாயப்படுத்தினார்கள். நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் சூடு போட்டாள். என் அப்பா கூட அமைதியாக எழுந்து போய் விட்டார்” என்றாள்  விம்மியவாறு.

“உனக்கு இன்னும் பதினெட்டு வயதே ஆகவில்லை, அதற்குள் திருமணமா? அதுவே சட்டப்படி முதல் தவறு, சூடு போடுவது இரண்டாவது தவறு. இப்படிப்பட்ட அப்பாவுடனும், சித்தியுடனும்  நீ வாழ வேண்டுமா? ஏன் உன் அம்மாவிடம் போய் இருக்கக் கூடாது?”

“அம்மா தான் அப்பாவை விட்டுப் போய் வேறு ஒருத்தரைக் கல்யாணம் செய்து கொண்டாளே” என்றாள் நித்யா வெறுப்புடன் .

“உங்கப்பா வேண்டுமென்றே உங்கள் அம்மாவை விரட்டி விட்டு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார். அவர் என்ன உனக்காக வாழ்ந்தாரா? உன் சித்தியை கல்யாணம் செய்து மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது  நீ அவர்களுக்கு வேண்டாத குப்பை, இல்லையென்றால் இப்படி சூடு போடுவாளா?” என்றாள் தர்ஷணா கோபத்தோடு.

அப்போது ஏதோ பேசிக் கொண்டே உள்ளே வந்தார்கள் சியாமளாவும், ஜட்ஜின் மனைவி சாந்தாவும். அவர்களும் நித்யாவின் காலில் போட்டிருந்த சூட்டினைப் பார்த்தார்கள். தர்ஷணாவும் நித்யாவும் பேசிய பேச்சைக் கேட்டு, இருவரும் அதிர்ந்து நின்று விட்டார்கள். சியாமளாவிற்கு மனம் கொதித்தது. நிர்மலா எவ்வளவு பண்பானவர், அறிவானவர். அவருக்குப் பிறந்த ஒரு பெண், படிக்காத ஒரு முரட்டுத் தந்தையால் என்ன அவதிப்படுகிறது.

கொதித்துப் போன சியாமளா, நித்யாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு  ஹாலிற்குப் போனாள். அவள் வந்த வேகத்தையும், முகத்தில் இருந்த கோபத்தையும் பார்த்த பிரகாசம், “சியாமளா, என்ன ஆயிற்று? இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டு தானே உள்ளே போனீர்கள். உன் முகத்தில் ஏன் இவ்வளவு கோபம்?” என்று கேட்டார்.

“நான் பேசுவதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களை நம்பித்தானே இந்தப் பெண்ணை அவள் அப்பாவிடம் ஒப்படைத்தார் நிர்மலா. இப்படி காலைச் சுற்றி சூடு போடுவது தான் பெற்றோருக்கு அழகா?  அதிலும் இவள் சித்தி, நிர்மலாவின் தங்கையே. இவள் பெண்ணா இல்லை பேயா? போலீஸில் ரிப்போர்ட் செய்தால் இவர்கள் நிலமை என்ன?” என்று கர்ஜித்தாள் சியாமளா.

“நித்யா சின்னக் குழந்தை தானே, சூடு போடுமளவு என்ன தப்பு செய்தாள்? அவள் தப்பே செய்தாலும், நீங்கள் எங்களிடம் சொல்ல வேண்டியதுதானே. சித்தி , கொடுமை செய்தாலும், ஒரு தந்தையாக நீங்கள் எப்படி இந்தக் கொடுமையைப் பொறுத்துக் கொண்டீர்கள்?” என நித்யாவின் தந்தையிடம் கேட்டார் சாந்தா.

அதுவரை அமைதியாக இருந்த ஜட்ஜ், நித்யாவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனைவியுடன் மாலை நேர வாக்கிங் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

    தாத்தா புராணம் (சிறுகதை) – ரேவதி பாலாஜி