ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
(கதை சுருக்கம்: வருடம் 1966ல் ஆரம்பித்து தலைமுறை வளர்ச்சி கூடிய மட்டும் சுருக்கமாக சுவாரஸ்யாமாக சொல்ல முயற்சி. ஏழை கம்பவுண்டரின் குடும்பம், அந்த குடும்பத்தின் அன்றாட பிரச்சனைகள், கூடவே அவர்கள் வளரும் நகரின் வளர்ச்சி பரிணாமங்களை விளக்க முயற்சித்திருக்கிறேன். அந்த கால கட்டத்தில் மதுரை நகரில் வாழ்ந்தவர்கள் நிச்சயம் திரும்ப அங்கு போவார்கள். மெதுவாக இல்லை இல்லை விரைவாக காலம் ஓடுகிறது கடைசியில் நாம் வருடம் 2079ல் நிற்கிறோம்.)
1966
மதுரை சிம்மக்கல் ஏரியா, வடக்கு வெளி வீதிக்கு அப்பறம் வருது. முக்கியமான சந்திப்பு. குதிரை வண்டி ஸ்டாண்டு அதை ஒட்டி கம்பீரமாய் உக்காந்திருக்கும் அந்த சிம்மம்பல்லை விரித்து பயமுறுத்தற கோலத்தில், எதுத்த சந்து முனையில் இருக்கும் செல்லத்தம்மன் கோவிலை பாத்த மாதிரி உக்காந்திருக்கும். சுற்றி ஒரு ரவுண்டானா மாதிரி இருக்கும் அதுல எப்பவும் தண்ணி. அதுல மொண்டு மொண்டுதான் குதிரை வண்டிக்காரர்கள், குதிரைக்கு தண்ணிர் வைப்பார்கள். அதை குடித்து விட்டு குதிரைகள் ஸ்டாண்டைஒட்டி போற அலுமினிய நிற TVS நகர பஸ்களை பாத்து பற்களை காட்டி கனைக்கும்.
என்ன சொன்னேன் சிம்மத்துக்கு எதுத்தாப்பல உள்ள தெரு கடைசில செல்லத்தம்மன் கோவில், கண்ணகி மதுரைக்கு கோவலனை தேடி வந்தப்ப தங்கின இடமாம். அந்த தெருவுக்குள்ள வாங்களேன், கும்னு நல்லெண்ணை வாசனை வருதா?
அந்த வாசனையை பிடிச்சிட்டே வந்தா ஒரு எண்ணை செக்கு, அதுக்கு நேர் எதிர்வீட்லதான் கம்பவுன்டர் வேதாசலம், தன் 4 பசங்களோடவும் மனைவியோடவும் இருந்தார்.
ஒரு மருந்துப் பெட்டியை தூக்கிண்டு, தன் ஓட்டை சைக்கிள்ல காலங்காத்தால 8.30க்கெல்லாம் கிளம்பிடுவார், பித்தளை பாத்திரத்துக்கு ஈயம் பூசறது இருக்கானு ஒத்தன் கத்திண்டே போவான். இவர் உங்க வீட்ல யாருக்கும் காச்சல் இருக்கானு கத்தறதில்லை.
இவர் சைக்கிள்ல போற டைம் அந்த ஏரியால எல்லாருக்கும் தெரியும். யார் வீட்டிலயாவது யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா அவங்களே வெளிய வந்து கூப்பிடுவாங்க.
தனக்கு தெரிந்த வைத்தியத்தை பாத்துட்டு, கொடுக்கற ஒரு ரூபாயோ, ரெண்டு ரூபாயோ சந்தோஷமா வாங்கிண்டு வருவார். நல்ல ராசியான கை, ரெண்டே நாள்ல குணமாகும். கஷ்ட ஜீவனம்தான்.
மனைவி ரத்தினா தன் தையல் மெஷினால துணிகளை ஒட்டுப் போட்டா, வீட்டுசெலவுக்கு தொய்வு விழறப்ப அதையும் ஒட்டுப் போடற கடின உழைப்பாளி.
மூத்த பையன் லட்சுமணன், அடுத்து கோதண்டம், கடைசியா ரெட்டை, ராமு சோமுனு. எல்லாருக்கும் வீட்டு வருத்தம் தெரியும்.
லட்சுமணன், இதோ டீச்சர் டிரெய்னிங் இந்த ஜூன்ல முடிச்சிடுவான், வேலை கிடைச்சு மாசம் ஒரு ஐந்நூறு ரூபாய் சம்பளம் வந்தா குடும்பம் தலை நிமிந்திரும். கோதண்டம் இப்ப பி.காம் ரெண்டாவது வருஷம். அடுத்த ரெண்டும் 10வதுல.
பல்லைக் கடிச்சு இன்னும் ஒரு ரெண்டு வருஷம் இழுத்துண்டு போனா, ஓரளவுகஷ்ட ஜீவனம் போகும். ரத்தினா பாவம் கல்யாணம் ஆகி ஒரு 2 வருஷம் சந்தோஷமா இருந்திருப்பாளா?
அப்பா ஓட்டை சைக்கிள்ல தினம் ஓடறதை பாத்தா பசங்களுக்கும் கஷ்டம்தான். எங்களுக்கு கோஆபரேடிவ் பாங்ல கடன் வாங்கி, ஒரு ரெண்டு சைக்கிள் ரிக்ஷா வாங்கி கொடுப்பா, சூப்பரா ஓடற பிசினஸ் மதுரைல இப்ப சைக்கிள் ரிக்ஷாதான்.
சோமு சொன்னான், “போடா இப்ப காலேஜ் ஹவுஸ் பக்கம் ஒரு ஆட்டோ ரிக்ஷா பாத்திருக்கயா? சும்மா சல்னு பிளெஷர் கார் மாதிரி போகுது. இன்னும் 10 ஆட்டோ ரிக்ஷா அடுத்த மாசம் வந்துருமாம் மதுரைல. அப்பறம் இந்த குதிரை வண்டி, சைக்கிள் ரிக்ஷால்லாம் மெதுவா காணம போயிடும்”
ராமு, “ஐய்யே, குதிரை வண்டில்லாம் எப்பவும் போகாது, டிவிஎஸ் பஸ் ஊர் பூராவந்தா குதிரை வண்டில்லாம் காணாம போகும்னாங்க போச்சா.
சோமு, “மெட்ராஸ்ல எலக்ட்ரிக் டிரெயின் ஓடுதாம் தெரியுமா? கணேஷ் லீவுல அவன் மாமா வீட்டுக்கு போனப்ப பாத்திருக்கான். அங்கெல்லாம் 70,80 ஏன் 100 ஆட்டோரிக்ஷா கூட இருக்குமாம் . ரொம்ப பீத்திக்கறான். அது மட்டும் இல்லை கணேஷோட சித்தப்பா லண்டன்ல இருக்காராம். அங்கே டிரெயின்லாம் பூமிக்கு கீழேதான் போகுமாம். பொய் சொன்னாலும் நம்பற மாதிரி சொல்லணும். பூமிக்கு கீழே தண்ணிதானே ஓடும்”
ராமு, “ஏய் இன்னொரு விஷயம் தெரியுமா?, இனிமே விறகு அடுப்பெல்லாம் வேண்டாம், டவுன்ஹால் ரோட்ல இந்தியன் ஆயில் கம்பெனி கடை போட்டிருக்கான். அங்கே டெமான்ஸ்ட்ரேஷன் பண்ணி காட்டராங்க. ஒரு சிவப்பு சிலிண்டரை ரப்பர் பைப்பை போட்டு ஒரு எவர்சில்வர் அடுப்புபளபளனு இருக்கு அதுல சேத்திருக்கு. ஒரு தீக்குச்சி கொழுத்தினா மந்திரம் போட்டா மாதிரி குப்னு நீலக் கலர்ல நெருப்பு. அதுல பாத்திரம் வச்சு சமைக்கலாம். ஊதுகுழல் வேண்டாம் புகை இல்லை, சட்னு ஒரு திருப்பானை சுத்தினா அணைஞ்சு போகுது.
சோமு, “போடா போ அதெல்லாம் நம்ம வரை வராது, சொக்கிகுளம்,TVS நகர், திருநகர்ல உள்ள பணக்காரங்களுக்கு, நாம கடைசி வரை ரெண்டு கையையும் முன்னாலநீட்டி அதுல விறகை அடுக்கி கொண்டு வந்துதான் போடணும்”
அது மட்டும் இல்லை சாத்தமங்கலம் கிட்ட, மெட்ராஸ் மாதிரி ரெண்டு தியேட்டர் கட்றாங்க தெரியுமா?ஒரே பில்டிங்ல 2 தியேட்டர் பூரா பூரா ஏ.சி.யாம். நம்ம சென்ட்ரல், கல்பனா, தேவி, சிந்தாமணி மாதிரி இல்லை இது, அப்படியே பெங்களூர் தியேட்டர் மாதிரி, டிக்கெட்லாம் கூட அஞ்சு ரூபா ஆயிடுமாம்.
இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம ஸ்கூல் பக்கம், அதாண்டா நேரு பிள்ளையார் கோவில்ல இருந்து வந்தா அந்த நாற்சந்தி நடுவுல லைட் போடறாங்க தெரியுமா, வெறும் லைட் இல்லை சிவப்பு போட்டா நிக்கணும், ஆரஞ்சு போட்டா ரெடி ஆவணும், பச்சை போட்டா போகணும். எல்லாம் சுச்சு போடாம ஆடோமேடிக்கா. போலீஸ்காரங்க நின்னு இனி கையை காட்ட வேண்டாமாம். பேர் கூட ஆடோமேடிக் டிராபிக் சிக்னல்.
ஏண்டா கோதண்டம் நம்ம பெரிய மாமா கூட மெட்ராஸ்லதானே இருக்காங்க, நாம ஏண்டா போறதில்லை லீவுக்கு?
அம்மா விட மாட்டேன்றாங்களே, மாமா கூப்படதான் செய்றார், அம்மாதான் அனுப்ப மாட்டேன்றா.
இந்த பசங்க இது தெரியுமா அது தெரியுமானு ஒரு மணி நேரம் கூடகதை விடுவாங்க, பாதி நிஜம் கூட இருக்கும் அதுல.
“சார், சார்” வாசல்ல சத்தம். நாலு பசங்களும் சேந்தாப்பல வெளியே வந்தாங்க
“அப்பா இல்லை, சாப்பிட 1 மணிக்கு வருவார், அட்ரஸ் சொல்லுங்க அனுப்பி வைக்கறோம், பேஷன்ட் பேர் என்ன?”
வந்தவர் நடுத்தர வயதானவர். “இல்லை தம்பிங்களா, உங்க அப்பா ஸ்டான்லி ஹாஸ்பிடல், ஜெனரல் வார்டுல இருக்கார். போய் பாத்துக்கோங்க”
பதறிப் போயினர் நால்வரும், சோமு முதல்ல அம்மானு கத்திட்டு ரத்தினாகிட்ட ஓடினான்.
தன் தையல் மெஷினில் போராடிக் கொண்டிருந்த ரத்தினா, “சோமு அம்மாவை இப்ப தொந்தரவு பண்ணாம போ, அவசர ஆர்டர் தச்சிட்டிருக்கேன்”
“இல்லைம்மா அப்பாவை ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டாங்களாம்.”
சட்னு இருண்டு போச்சு ரத்னாவுக்கு, “அம்மா அம்மானு லட்சுமணன் உலுக்கினான்.
”ஒண்ணுமாகாதும்மா அப்பாக்கு, வெய்யில்லை போனதுல மயக்கம் வந்திருக்கும், யாரோ புண்யவான் ஆஸ்பத்திரில சேத்திருக்கான். இப்ப எழுந்து உக்காந்திருப்பார். நான் போய் கூட்டிட்டு வந்துடறேன் தைரியமா இரு”
கூட்டிட்டு வர போன லட்சுமணன், வேதாசலத்தோட பாடியை தூக்கிண்டு தான் வந்தான், ஒரு குதிரை வண்டில கிடத்தி.
ஊருக்கெல்லாம் வைத்தியம் பாத்த வேதாசலம் தனக்குள் இருந்த மஞ்சக்காமாலை, சக்தி இழந்த சிறுநீரகம் பற்றி உணராமல், அல்லது உணர நேரமில்லாமல் வெய்யிலில் சுற்றி காலனை சென்றடைந்தார்.
ரத்தினாம்மா இடிந்து போய் விட்டாள். இனி இந்த மதுரைப் பட்டிணத்தில் இந்தநாலு பசங்களை வச்சிட்டு என்ன பண்ண முடியும்.
எல்லோரும் நினைக்கிறதுதான், இனிமே என்ன பண்றதுனு, ஆனா ஆண்டவன்எல்லாம் தன் வழில நடத்திட்டுதான் போறான். ரத்தினாம்மாவோட சகோதரன் விஷயம் தெரிஞ்சு வந்தது, குடும்பத்தோட மெட்ராசுக்கு இடம் பெயர்ந்தது எல்லாம் ஏதோ எழுதி வச்சமாதிரி நடந்தது.
1980
ஜனவரி பிறந்தது, முதல் தேதி காலை 7மணி பார்வதி பிறந்தாள். உலகமே கொண்டாடிச்சு பார்வதி பிறந்ததை. அவதான் முதல் பெண் குழந்தை அந்த குடும்பத்தில ரொம்ப வருஷத்துக்கு அப்பறம். அப்பா, பெரியப்பா, சித்தப்பாக்கள் 2 பேர்னு அந்த சென்னை மயிலாப்பூர் வீடே அமக்களப்பட்டது.
அப்பா கோதண்டம் ஸ்கூல் வாத்யார். பெரியப்பாவும் தான். இதுல பெரியப்பா லட்சுமணன்தான் அப்பாவை ஸ்கூல் வாத்யார் வேலைக்கு இழுத்தவர். இல்லைன்னா அப்பாக்கு பேங்க்ல வேலை பாக்கதான் ஆசை.
“டே கோதண்டம், பேங்க் வேலைல என்னடா இருக்கு, நமக்கு சொந்தமில்லாத பணத்தை எண்ணிண்டே இருந்துட்டு, மாசக் கடைசில , எண்ணை இல்லை பருப்பு இல்லைன்னுண்டு”
“இல்லைண்ணா அக்கவுன்ட்ஸ், மேத்ஸ்லாம் படிச்சிருக்கேனே”
“அதனால என்ன, பசங்களுக்கு சொல்லிக் கொடு. கலெக்டர்கள், ஆடிட்டர்களை பெரிய அரசு அதிகாரிகளை உருவாக்கு. கனவு வேலைடா இது, அடுத்தவன் பணத்துக்கு வாச்மேன் வேலை நமக்கு எதுக்கு. நாளைக்கே நல்ல எட்டு முழ வேஷ்டியும், வெள்ளை அரைக் கை சட்டையும் போட்டுண்டு, காரணீஸ்வர்ர் கோவிலுக்கு போய் பகவானை சேவிச்சிட்டு ஸ்கூலுக்கு வா மிச்சத்தை நான் பாத்துக்கறேன். சர்டிபிகேட்லாம் நீட்டா ஒரு ஃபைல்ல போட்டு கொண்டு வா”
அதே மாதிரி போனார் கோதண்டம் நேர்காணலுக்கு, இன்டர்வ்யூ பேனல்ல தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டென்ட், ஒரு முன்னாள் மாணவர் இன்னாள் பெருந்தனவான். ஒரு கணக்கு வாத்தியார் வேலைக்கு எட்டு பேருக்கு நேர்காணல். தேர்வானது அந்த வேலைக்கென்னவோ நம்ம கோதண்டம்தான்.
எல்லா தகுதிகளும் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. ஆனால் தலைமை ஆசிரியருக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டது, உடனடி அப்பாயின்ட்மென்ட்.
இன்டர்வ்யூ முடிந்தது, கரஸ்பாண்டன்ட் தலைமை ஆசிரியரை கேட்டார், “ஏன் சார் உங்க தம்பி ஒருத்தர் வேலை தேடிட்டு இருந்தார்தானே, அவருக்கு இந்த வேலையை கொடுத்திருக்கலாமே?”
“ஹிஹி இப்ப செலக்ட் ஆனவர் என் தம்பி கோதண்டம்தான், ஆனா எனக்கு நமக்கு வேண்டியவர்கள்னு எடுக்கறது எனக்கு பிடிக்காது. நம்ம ஸ்கூல் நன்மை ஒண்ணுதான என் மனசுல”
கோதண்டம் அந்த சைதாப்பேட்டைல இருந்த சின்ன ஸ்கூல்ல சேந்தார், அது இந்த அஞ்சு வருஷத்துல ஆல விருட்சமா வளந்து நிக்கறது. கோதண்டத்துக்க கல்யாணமும் ஆச்சு, இப்ப மயிலாப்பூர்ல தனி வீடு, முதல் பொண்ணு குடும்பத்துல பார்வதியும் பிறந்தாச்சு.
இப்ப அவளை பாத்து சந்தோஷப்பட அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. கோதண்டத்துக்கு தினம் காலைல தன் ஹீரோ ஹோண்டா மோட்டார் பைக்கை துடைச்சிட்டு, ஸ்கூல் புறப்படறப்ப கோதண்டம், அப்பாவை நினைக்காத நாளில்லை. அந்த ஓட்டை ஹெர்குலிஸ் சைக்கிளை அவ்வளவு காதலா துடைப்பார். எங்களை யாரையும் தொட விட மாட்டார்.
அப்பா எப்பவும் மத்யானம் சாப்பாட்டுக்கு அப்பறம் ஒரு குட்டித் தூக்கம் போடுவார். அந்த சம்மர் ஹாலிடேஸ் டைம்ல, அப்பா சைக்கிள் சாவியை திருடி, இருந்த தெருவுலய குரங்கு பெடல் போட்டு ஓட்டறப்ப அப்பா இடுப்புல கையை வச்சிட்டு வாசல்ல நிக்கறதை தூரத்தில இருந்தே பாத்துட்டு சைக்கிளை அப்படியே தெருவுல போட்டுட்டு ஓடின ஞாபகம் வந்தது.
ராத்திரி 8 மணி வரை வீட்டுக்கு வராம, பழைய சொக்கநாதர் கோவில், நவநீத கிருஷ்ணன் கோவில், மீனாட்சி கோவில்னு சுத்திட்டு கொலைப் பசியோட வீட்டுக்கு திரும்பினா, எல்லோரும் காத்திருந்தனர் டிராமா பாக்க. அப்பா வேட்டிக்கு மேல பட்டையா பச்சை கலர்ல ஒரு பெல்ட் கட்டி இருப்பார், பணம் கூட அதுல உள்ள பர்ஸ் மாதிரி பாக்கெட்ல வச்சிப்பார்.
அது அன்னிக்கு சுழண்டு சுழண்டு மேலே விழுந்ததில் கோதண்டம் கழண்டு போனான். ஏற்கனவே பசி அதுல இந்த வெறித்தாக்கல், அம்மா நடுவுல புகுந்து தடுத்ததால பிழைச்சான். அம்மா அழுதுண்டே எண்ணை தடவி விட்டா.
அடுத்த நாள் அப்பா விசாரிச்சார், “எப்படி இருக்கு? இனிமே சைக்கிளை தொடாதே சரியா?”
தொடறதாவது, பக்கத்துல கூட போகலை அதுக்கப்பறம்.
பக்கத்து வீட்டு குட்டிப்பையன், தன் பைக் மேல உக்காந்ததைப் பார்த்த கோதண்டத்துக்கு பழைய ஞாபகம் வந்தது. அந்த குழந்தையின் கன்னத்தை பிடித்து கொஞ்சி ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போனான்.
கோதண்டத்தோட அண்ணன் குடும்பத்தோட இதே மைலாப்பூர்ல வேற தனி வீட்ல இருக்கார், சொந்தமா கார் வச்சிக்கிற அளவு வசதியோட. தம்பிங்க ரெண்டு பேரும் பெங்களூர்ல ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில. பொங்கல், தீபாவளின்னா எல்லோரும் சென்னைல கூடுவாங்க ஒரே கொண்டாட்டம்தான்.
மெட்ராஸ்தான் இப்ப எவ்வளவு மாறிடுச்சு. நினைச்சா சிரிப்பா வருது ஒரு காலத்துல மெட்ராஸ் எல்.ஐ.சி பில்டிங் 14 மாடியோட மவுன்ட் ரோடை பாத்து உயரமா சிரிக்கும். இப்ப கொஞ்சம் வெக்கப்படுது தன்னை விட நிறைய உயரமா, அழகா, கண்ணாடி பதிச்சு கவர்ச்சி காட்டற புது கட்டிடங்களை பாத்து.
அப்பல்லாம் மதுரைல இருந்து லீவுக்கு சென்னைக்கு வர பசங்க ரொம்ப பீத்திக்குவாங்க.
“கே.பி. பஸ்ல தாண்டா போகணும் கரெக்டா 9 மணிக்கு எடுத்தான்னா, சல்னு வெண்ணை மாதிரி போகும், காலைல 6 மணிக்கெல்லாம் டி.நகர். சீட்லாம் ஒவ்வொண்ணும் சிம்மாசனம், பட்டனை அமுக்கினா ஜிவ்னு சாஞ்சிடும். தினம் அந்த கே.பி பஸ் வெள்ளை திரையெல்லாம் மூடி கற்போட ஓடறதை பாக்க தெருமுனைல நிப்போம். காலைல 6 மணிக்கு மெட்ராஸ் டச் பண்ணிடுவான்னு சொல்றதில எங்களுக்கு என்னவோ அவ்வளவு பெருமை”
மெட்ராஸ் போயிட்டு வர பசங்க என்ன கதை விடுவானுங்க, ஸ்பென்சர் பிளாசா மாதிரி இந்தியாலயே இல்லை, வாவ் என்ன தியேட்டர்டா, 3 தியேட்டர் ஒரு பில்டிங்ல மூணும் சூப்பர், சபையர், ப்ளூ டயமன்ட், எமரால்டுனு.
அதுவும் அந்த ப்ளூ டயமண்ட் இருக்கே படு அட்டகாசம். ஒரு டிக்கட் எடுத்தா உக்காந்து பாத்துட்டே இருக்கலாம். ஷோ டைம் கிடையாது, எப்ப வேணா போலாம். அப்பறம் அந்த புகாரி ஹோட்டல், டிரைவ்-இன்-ஹோட்டல் பெருமை. எலக்ட்ரிக் டிரெயின் பெருமை.
மனுஷனுக்கு மட்டும் இல்லை, எல்லாத்துக்கும் ஒரு வயசு இருக்கும் போல. மெட்ராஸ் எப்பவோ சென்னை ஆயிடுச்சு. 2015 ஜூன் மாச கடைசி, 29ம் தேதினு நினைக்கறேன், லண்டன்ல இருக்கு, நியூயார்க்ல இருக்குனு பொறாமையா சொல்லிட்டிருந்த மெட்ரோ டிரெயின் நம்ம சென்னைல இன்னிக்கு ஆரம்பம் ஆயிடுச்சு. லோக்கல் எலக்ட்ரிக் டிரெயினுக்கெல்லாம் அஸ்தில பயம் நம்மளை என்னிக்கு மியூசியத்துல வச்சிருவாங்களோனு.
பார்வதி பெரியவளாகி , கல்யாணம் ஆகி சென்னைலயே குடித்தனம்.கோதண்டம் ரிடயராக ஒரு வருஷம் கூட பாக்கி இல்லை.
வருஷங்கள் பறக்கறதுக்கு கேக்கவா வேணும், ரெக்கை கட்டி பறக்கறது. லட்சுமணனும், கோதண்ட ராமனும் அப்பா இறந்ததை மாமாவுக்கு சொல்ல டெலிஃபோன் பூத்தை தேடி அலைந்தார்கள். இப்போ சின்னப் பசங்க முதல் கொண்டு ஸ்மார்ட் ஃபோனோடதான் அலையறான்க.
பார்வதிக்கு கல்யாணம் ஆகி ஒரே ஒரு ஆண் குழந்தைதான். கணவன் பையனுக்கு ஒரு 10 வயசு இருக்கும் போதே போய் சேந்துட்டார். பணத்துக்கு அதிகம் கவலையில்லை வசதியான குடும்பம்தான்.
பையனை நன்றாக படிக்க வைத்தாள் பார்வதி, அவனும் படித்தான்.
மல்டி நேஷனல் கம்பெனில ஒரு தலைமை அதிகாரி.தன் கீழே வேலை பாத்த அமிர்தவல்லியை காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டான்.
காலம் படு வேகமாய் உருண்டோடறது. இப்ப பார்வதிதான் இந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினர். மத்தவங்க எல்லாம் போய் சேந்தாச்சு.
பார்வதி நல்ல கதை சொல்லி, தன் காலம், தன் அப்பா, தாத்தா காலங்களை சினிமாவாய் விரித்துக் காட்டுவதில் விற்பன்னி. மருமகள் அமிர்த வல்லி, பேரன் லதிக்ரோ ரெண்டு பேரும் திரும்ப திரும்ப சொல்லச் சொல்லி கேட்பார்கள்.
இப்ப பார்வதி அம்மாள் 3 தலைமுறை பாத்தாச்சு, ஆரோக்யமான மூதாட்டி, வருடம் 2079ல் அடியெடுத்து வைக்கிறாள், உலகம் அவளை சுற்றி எவ்வளவு மாறுகிறது தினம் தினம்.
2079
ஆசிரியரின் எச்சரிக்கை:
என்னடா இது பயங்கர புருடாவாக
“ஹேய் ஓல்ட் மான், என பண்து டோ
இப்ப உலகம் பூரா ஒரே லாங்வேஜ்
“பார்வதிப் பாட்டி, குழம்பாதிங்க என் பேரன் பேசற
வேலை அலாட் பண்றதுக்கு வர்ல்
முந்தியெல்லாம் மெட்ரோ டிரெயி
அடுத்த மாடல் வருது புதுசா அது
ஏர்பிளேன்னு அந்த காலத்துல டி
இப்ப உலகத்தை 4000 கிரிட்னு பி
அடல்ட் சேனல் 16 வய்சுக்கு மே
மேரேஜ் கூட பண்ணி ஓன் சைல்ட்
வருஷம் 2079 வரை இருந்து பாருங்
இருக்கறது சென்னை, ஒரு மீடியம்
என்னமோப்பா நான் காலேஜ் போறப்
மோனோசை அவசரமா பார்க் டவர்ல ஒ
இந்த ஒரு மணி நேர பயணத்தை இனி
C-6க்கு நானா ஒரு பேர் கற்பனை
லண்டன் சிடில பொழுது போக்கிட்
முந்தி ட்யூப் டிரெயின்னு பூ
நேஷனல் காலரி சுத்தி டூரிஸ்ட்
ரெண்டு சைல்ட் வேணும், தனி கா
நைட் டின்னருக்கு ஏதோ ஜாபனிஸ்
முழு பாட்டிலோட. ரெண்டு பெக் உள்ளே போனவுடனே அ
எனக்கு ஆச்சரியம், என் ரகசி
டே உன் வயசை தாண்டிதாண்டா நா
போங்கப்பா அப்படியெல்லாம் இல்
அடுத்த பெக்கை கிளாசில் ஊற்றி
அது வந்து என் கூட, அடுத்த சீ
அப்பா, அட சங்ககால பேர் மாதி
போப்பா உனக்கு எல்லாம் கேலிதா
18 வயசாவது இருக்கும் தானேடா, இ
இல்லைப்பா தாராளமா 20 வயசுக்
சரி சீக்கிரம் பேசிட்டு நம்ம
சரிப்பானு முனகினேன். ஸ்காடச்
வீக்எண்ட் எப்படா வரும்னு மு
மண்டே அவசரமா போய் வழக்கமான சூ
அவ பக்கம் திரு
மிஸ் உங்க கூட கொஞ்சம் பேசலாமா? நான் என்ன கேப்பேன்னு தெரிந்
நீங்க தப்பா எடுத்துக்க கூடா
“ஓகே”இது முதல் வார்த்தை அந்த க
நான் உங்களை மிக விரும்பறேன்,
பதில் இல்லை, தலை நிமிர்ந்து
அடுந்த ஐந்தாவது நிமிடம் வெள்
நான் என் மென்பனியை கை காட்டி
அப்படி என்ன செய்தான் என்கிறீ
ஹா, ஒண்ணும் சீரியஸ் இல்லை
அவளுடைய ஐடண்டிடி கார்டும் என்
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings