2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24
தன்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்த எல்லா எக்ஸ்க்யூடிவ் ஆபிசர்களிடம் கம்பெனியின் வளர்ச்சிக்கான செய்தியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, செல் போன் சங்கீதமாக சப்திக்க, யாருடைய செல் என்று கவனிக்காமல் “ஹலோ தமிழரசு ஹியர் ஹு இஸ் திஸ்” என்றான் கொஞ்சம் எரிச்சலாக.
“அரசு மகனே! எப்படி இருக்கிறாய்?” என்ற அம்மாவின் குரலைக் கேட்டதும் ஒருமுறை திக்கு முக்காடிப் போனான்.
எல்லாரும் தன்னையே கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்தும் “அம்மா ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு நீங்கள் கொஞ்ச நேரம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள். நான் திரும்பவும் வந்து கலந்து கொள்கிறேன்” என்று கூறி விட்டு வெளியே வந்தவன் கன்னத்தில் சிதறிய கண்ணீரை துடைத்து விட்டு “சொல்லுங்கள் அம்மா! எப்படி இருக்கீங்க?” என்றான்.
“நான் நல்லா இருக்கேம்பா. என்னுடைய சுகத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. நீ எப்படி இருக்கிறாய்? “ எதிர் முனையில் அம்மாஅழுவதை உணர்ந்தான்.
அரசு உணர்ச்சிப் பிழம்பாகி “அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” அவனை அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தான். கைகுட்டையால் முகத்தைத் மறைத்துக் கொண்டு.
“அழாதே அரசு. இத்தனை நாளாகியும் என்னைப் பார்க்கணும் என்று ஒரு முறை கூட உனக்கு தோன்ற வில்லையா ராஜா”
“அது… அது… வந்து..”
“தெரியுமடா. உன் தந்தையின் வைராக்கியம் உன்னிடமும் அப்படியேநிரம்பி வழிகிறது. ஏம்பா, பணம் சம்பாதிப்பதற்காக அம்மா, அப்பாவை ஒதுக்கி வைத்து விட்டுப் போக வேண்டுமா? ஏண்டா எங்களைப் பார்க்கத்தான் வரவில்லை. எத்தனை எத்தனை டெலிபோன்கள்.. கையில்லே செல்போன்.. ஒருமுறை தொலைபேசி எடுத்து என்னோடு பேசக்கூடாதா? நான் என்னடா தவறு செய்தேன்” அம்மா பேசமுடியாமல்..அழ ஆரம்பித்து… எதிர் முனையில் பேச முடியாமல் …….
“அம்மா வீணாக ஏன் அழுகிறீர்கள். தவறு செய்தது நான். சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஏதோ ஒரு காந்தக் கவர்ச்சியில் இழுக்கப்பட்டு வந்தவன். உங்களோடு கூட பேச முயற்சிக்காமல்…” என அவன் முடிக்கும் முன் “ஒரு வேளை நம்ம வீட்டு போன் நம்பர் உனக்கு மறந்து போச்சோ என்னவோ” என்றார் அம்மா.
“ஏம்மா என்னைக் கொல்கிறீர்கள்?” என்று கெஞ்சினான்.
கோபத்தோடு “அரசு உனக்கு நம் வீடு எங்கிருக்கிறது என்று தெரியுமல்லவா?” என்று கேட்டாள் அம்மா.
“தயவு செய்து என்னைக் காயப்படுத்தாதீர்கள் அம்மா. போதும், இன்னும் கொஞ்சநாள்… கொஞ்சநாளில் உங்களைப் பார்க்க….. உங்களோடு உங்கள் பிள்ளையாக தங்கி இருக்க வந்து விடுவேன்.
“……”பேசமுடியாமல் அழ ஆரம்பித்த அம்மா, ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, “எப்போது கண்ணா வரப்போகிறாய்? என் கண்கள் மங்கி உன் முகம் காண முடியாமல் போன பிறகா? ஏண்டா உனக்கு கல் நெஞ்சா? இவ்வளவு நேரம் பேரிய பிறகும் அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாயா?” என்று கேட்டாள் அம்மா.
“அப்பாவிற்கு என்ன? நல்ல சுகமாக இருப்பார்கள். அப்பாவைப் பற்றி அப்பாவின் மனைவி உன்னை விட அவரின் மகனான நான் மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அவருடைய வறட்டுக் கவுரவம் அவர் சம்பாதித்தியத் தோடே வளர்ந்த விஷயம். அப்பாவிடம் எனக்குப் பிடித்த விஷயமே. சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். முதலில் நம் உடம்பை கவனித்துக் கொண்டால்தான் நாம் மற்றவர்களை கவனிப்பதை மட்டுமன்றி சம்பாதிக்கவும் முடியும் என்று சொல்பவர் அது சரி, நீங்க எப்படி இருக்கீங்க?”
“நான்… எனக்கென்னப்பா. எங்களுக்கிருந்த செல்வம் நீயே என்னிடம் இருந்து போய்விட்ட பிறகு… என்ன மகிழ்ச்சி இந்த வாழ்க்கையில்…..? பாபு அடிக்கடி வந்து நீ எங்கிருக்கிறாய்….? எப்படி இருக்கிறாய்? என்பதைப் பற்றிச் சொல்லக் கேட்டுத்தான் மகிழ்ச்சியோடு இருக்க முயற்சிக்கிறோம்.”
“ஓ பாபு…. அப்பாவின் நண்பர் இன்னும் என்னைத் துரத்திக் கொண்டு தானிருக்கிறாரா? சரி, அம்மா அப்புறம் போன் பண்ணுகிறேன்” என்று தொடர்பை துண்டித்து விட்டு தன் பணியாளர் ஒருவனை அழைத்து இந்த செல்லில் இருக்கும் கார்டை எடுத்து மாற்றி புது எண்ணுள்ள கார்டு போட்டுக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டு, உள்ளே வந்து ஹியூமென் ரிசோர்ஸ் டைரக்டர் இரவியை அழைத்து “என்னைக் கவனிக்க…என்னைத் தொடர்ந்து யாராவது வருகிறார்களா?” என்று கவனிக்க யாராவது ஒருவரை நியமியுங்கள்.
“எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை ரிப்போர்ட் தரச் சொல்லுங்கள்” என்றான்.
“சரி சார்” என்று நகர்ந்தார் இரவி
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings