2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15
“திலக்.. நீ மும்பைக்குத் திரும்பப் போகிறாய்… நான் இங்கே உனக்கு உழைத்துப் போடவோ… இல்லைக் கணவனை இழந்த தங்கைக்கு உதவி செய்யவோ வரவில்லை. ஏற்கனவே மும்பையிலிருந்து கிளம்பிய போதே நான் சொன்னவைகள் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்” நகத்தைக் கடித்துக் கொண்டே ரொம்ப டென்சனாக சப்தமிட்டான் அரசு.
“என்ன சூடாகி விட்டாய்… நான் உன் நிலமையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னை உபயோகப்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா? கூல் டௌன் மை டியர். நான் சொல்வதற்காக வருத்தப்படாதே. இந்தப் பணக்கார வீட்டுப் பசங்களுக்கு பொறுமையும் கிடையாது…. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அக்கறையும் கிடையாது.”
“யேய்… என்னை வீணாக வெறுப்பேற்றுகிறாய்?”
“புரியாமல் …சும்மா வீணாக கூவாதே”
“சாரி… ரியலி ஸாரி” தணிந்தான் அரசு.
“மஹாராஷ்டிரா இண்டஸ்ரிஸ் டெவலெப்மெண்ட் கார்பொரேஷன்’காரன் ஒருவனை கைக்குள் வைத்துக் கொண்டு உன் வியாபாரத்திற்கான லோனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்று நாம் அவனை போய்ப் பார்க்கப் போகிறோம்.”
“நான் இப்படிச் சொல்வதில் உனக்கு எதுவும் கோபமில்லையே” என்றான் திலக்கின் முதுகில் தட்டிய அரசு.
‘டோண்ட் ஒர்ரி அரசு. பழகி கொஞ்ச நாளாக நல்லதொரு நண்பனாகி விட்டாய். ஏதோ முன்பிறவியில் நீயும் நானும் இணை பிரியாத நண்பர்களா இருந்திருப் போமோ என்று தோன்ருகிறது.”
“ஏதோ சொல்ல வந்தாயே…?”
“அது.. அது.. வந்து.. திலக்.”
“சும்மா தயங்காமல் சொல்லப்பா.”
“இல்லை… உன்னிடம் உதவி கேட்டு வந்து விட்டு உன் வியாபாரத்திலேயே உனக்கு போட்டிப் போட நினைக்கிறேன்.”
“இந்த வியாபாரம் என்பது ஒரு கடல்மாதிரி. யார் மூழ்கி முயற்சி செய்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக முத்தெடுக்க முடியும்.”
“நீ உன் வழியில் உன் வியாபாரத்தை விரிவாக்கு. சரி…சரி.. நேரமாகி விட்டது. அந்த எம்.ஐ.டி.சி. ஆபீசரை போய்ப் பார்க்க வேண்டும்” என்று கூறி திலக் எழுந்த போது
“அண்ணா டீ கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள் அனாமிகா.
“அதெப்படி… சாயா குடிக்க வேண்டும் என்று நான் நினைக்கும்போது நீ டீ தரட்டுமா என்கிறாய். என் மனதைப் படிக்கிறாயா?” என்றான் அரசு அனாமிகாவிடம்.
“போங்கள்.. உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.” என்றவாறு இரண்டு கப்களில் சாயா ஊற்றினாள் அனாமிகா.
“அரசு நீ கப்போலி வந்ததிலிருந்து என் வீடே மாறிப் போயிருக்கிறது. என் மூத்த தங்கை பூனம் வியாபாரத்தில் உன்னோடு போட்டி போட புதிய ஆர்டர்கள் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறாள்.”
“இந்த அனாமிகவோ தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கறாள். ஒன்று தெரியுமா? என் வீட்டிலே முப்பது நாளில் தமிழ் படிப்பது எப்படி என்ற மராத்தி புத்தகம் கூட நடந்து வந்திருக்கிறது.”
“நீ தங்கி இருக்கும் ஆச்சியிடம் ஒவ்வொரு மராத்தி வார்த்தைக்கும் தமிழ் அர்த்தம், உச்சரிப்பு, அதனோடு ஒத்த வார்த்தைகள்… என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறாள். இது எங்கே போய் முடியுமோ?” என்று ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சிரித்தான் திலக்.
கன்னங்கள் சிவந்து போய் “நீ சும்மா இருக்க மாட்டாயா?” என்று அண்ணனிடம் சிணுங்கினாள் அனாமிகா.
“உண்மையிலே அனாமிகா சிணுங்கும்போது இன்னும் அழகாக இருக்கிறாள்.” என்று அரசு சொல்ல, “சீ…” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள் வெளியே.
“நல்ல பெண், இந்த நூற்றாண்டில் இப்படி வெட்கப்பட்டுக் கொண்டு… ஆனாலும் ஆச்சரியமான பெண். அது போகட்டும் திலக், வீணாக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளச் சொல்லாதே. அப்புறம் மிகவும் கஷ்டமாகி விடும். என் அம்மா ரொம்ப தமிழ் தெரிந்த ஓரளவு அழகான அலட்சியமான பெண்ணை எனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னாலே சிக்கல்கள் எதுவும் வந்து விடக்கூடாது.”
“நீ ஒன்றும் இந்தச் சிக்கல்களில் விழாமல் இருந்து கொள் அரசு. எனக்குத் தெரியும் இந்த வயதில் வரும் ஒரு வகையான மன லயம் அப்புறம் ஒருமனப்பட்டு பக்குவப்படும் போது சரியாகி விடும்.”
“ஆமாம் அரசு இமெயிலில் ஏதோ ஆர்டர் கிடைத்திருக்கிறதென்று சொன்னாயே.. என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்.. எத்தனை பேக் ஆர்டர்கிடைத்திருக்கிறது.”
“நம்ப மாட்டாய் திலக். முப்பத்தேழு லட்ச ரூபாய்க்கான ஆர்டர் கிடைத்திருக்கிறது. உன் மும்பை தொழிற்சாலையும் இந்த பூனத்தின் கப்போலி தொழிற்சாலையும் ஒரு மாதம் இரவு பகலாக எனக்காக தயாரித்தால் மீதியை வெளியிலே இருந்து வாங்கி அனுப்பி விடுவேன். எல்லாம் எல்.சி. போட்டு அனுப்புவதால் பணம் பிரச்சினையுமில்லை.”
“அத்தோடு நீ பார்த்திருக்குமிடத்தில் என்னுடைய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி ஒரு சிறிய கட்டிடம் கட்டிட இந்த ஆர்டர் முடிந்ததென்றால் பண உதவி அதிகமாக இருக்கும்.”
“வெரிகுட் அரசு. உன் தீவிரம் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வியாபாரத்திலே பத்து வருடமாக உருளுகிற எனக்கு, போன மாதம் தான் ஒரு சிறிய வெளிநாட்டு எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைத்தது.”
“நீ கப்போலி வந்து உடனே கொடி நாட்ட ஆரம்பித்து விட்டாய். அது சரி, ஏதோ சொல்ல வந்தாயே..”
“ம்… என் நண்பன் குட்டி ஒரு சின்ன ஷிப்பிங் கம்பெனி வைத்திருக்கிறான். அதை விரிவடையச் செய்ய என்னைக் கூப்பிட்டான். நவசேவாவில் அவனோடு அதையும் ஒரு பகுதியாக செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”
“வா.. மவனே… உன் காட்டில் மழை பெய்கிறது. அப்படியே நீ அன்று சொன்ன மாதிரி கன்டெய்னர் பிஸினசையும் ஒரு வழி பார்த்து விடு.”
“ஆமாம். அங்கே நுழைந்து விட்டால் லாஜிஸ்டிக் ஃபிரைட் ஃபார்வார்டிங்… கஸ்டம்ஸ் க்ளீயரன்ஸ் இப்படி எத்தனையோ இருக்கின்றன.”
“அதையும் தாண்டி, கண்டைய்னர் ஃபிரைட் ஸ்டேஷன், வேர் ஹவுசிங், க்ரேன், ஃபோர்க்லிப்ட், டிரான்ஸ்போர்ட் என்று ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யம் காத்துக் கிடக்கிறது.”
“பரவாயில்லை அரசு. இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாயே. அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அன்று என்னோடு என் வீட்டிலேயே காந்திவிலியில் பார்த்த அரசு தானா என்று சந்தேகம் கூட வருகிறது. கண்டிப்பாக சுயமாக காலூன்றி விடுவாய்… சரி… சரி… சாயா ஆறுது பார். குடி. எம்.ஐ.டி.சி. அலுவலகம் புறப்பட வேண்டும்.”
“நான் தனியே ஆரம்பிக்கிறவரை உன் தங்கை பூனத்தோடு உன் தொழிற் சாலையின் உற்பத்தியில் பங்கெடுத்து கொள்ளலாமா?”
“உனக்கு அடிக்கடி சில்லியான சந்தேகங்கள் வருகிறது அரசு. அதற்காகத்தானே நான் உன்னை கப்போலி அழைத்து வந்ததே.”
“மேலும் என் தொழிற்சாலையில் நீ பணிபுரியும் போது பலனடையப் போவது நான் தானே… மேலும் உன் சுய தொழிலுக்கு ஒரு புது அனுபவமாகவும் இருக்கும்.”
“ஆனால் நான் உன்னிடம் சொல்லக் கூடாதுதான். இருப்பினும் நான் மும்பைத் திரும்புவதால் சொல்லித்தான் ஆகவேண்டும்.”
“முந்தாநாள் பூனம் உன் மேல் சரிந்து விழுந்தது வேண்டுமென்றே செய்தது போல் எனக்குப் பட்டது. நீ அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவளைத் தூக்கி விட்டாய். திரும்பவும் அவளுடைய அண்ணன் என்று மட்டுமல்ல.. உன் வெல் விசராகவும் சொல்கிறேன். இந்தப் பெண்கள் விஷயத்தில் வீணாக சிக்கிக் கொள்ளாதே. உன் கொள்கைகள், நீ கொண்டிருக்கும் லட்சியம் எல்லாம் காணமல் போய் விடும்.”
“கவலையே படாதே. நானே இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். இவ்வளவு இருந்தும் இங்கே உன் தங்கையோடு வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளச் சொகிற உன் மனசு இமயம் திலக்.” கண்ணீர் மல்கச் சொன்னான் அரசு.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings