2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34
“ராவ் பேலஸ்” விஐபிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது ..வழக்கம்போல் மாலினி தேவி விலை உயர்ந்த பட்டுப்புடவையில், வைர நகைகளுடன் இங்குமங்கும் ஓடியாடி வந்திருக்கும் விஐபிகளையும், சினேகிதிகளையும் வரவேற்றுக் கொண்டிருந்தாள் .
ராம்சந்தும், பரமேஸ்வரனும் தங்கள் பிசினஸ் உலக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். .ஃபுல் சூட்டிங்கில் ஆதர்ஷூம் ,அழகான டிசைனர் சாரியில் காவ்யாவும் , அவ்வப்போது வாழ்த்துகளையும், பரிசுகளையும் பெற்றுக் கொண்டு நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் .
வழக்கம் போல் ருக்மணிதேவி, இது எதிலும் கலந்து கொள்ளாமல் சாரதாவுடன் தனியாக அமர்ந்திருந்தாள் .
“இவங்களுக்கு இந்த பந்தா பண்றதே பெரிய பொழுது போக்கா போச்சு ..எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை சாரதா. ஆனாலும் ஒன்னும் பேச முடியாது. வாய பொத்திகிட்டு இருக்கனும்.என் திருப்திக்கு குலதெய்வத்துக்கு போய் செஞ்சுட்டு கடா வெட்டி, பொங்கல் வைச்சிட்டு வந்தாச்சு ..கடவுள் கண் திறந்து பாக்கனும். இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசக் கொடுக்கனும்”
“அண்ணி காவ்யாவும் படிப்ப முடிக்கிறா.. இனிமே பாருங்க சீக்கிரம் உங்களுக்கு ஒரு பேரனையோ.. பேத்தியையோ பெத்துக் கொடுப்பா ..உங்க மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்”
“சாரதா, மாயாவுக்கு நான் ஒரு ஜாதகம் கொடுத்தனுப்பியிருந்தேனே பொருத்தம் பாத்தியா? ..”
” ஆமாம் அண்ணி.. நம்ம குடும்ப ஜோசியர்கிட்டதான் கொடுத்துவிட்டேன். அவ்வளவாக பொருத்தமில்லைன்னு சொல்றாரு ..”
“ஆனா இவ தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்கும்போது மாலை பூத்தாச்சு.. சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் நடந்ததுடும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கண்டிப்பா முடிஞ்சுடும்னு சொன்னாரு.. இப்ப அவளுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லைன்னு துர்க்கைக்கு விளக்கு போடச் சொல்லி இருக்காரு. “
“சரி ஏதோ நல்ல வார்த்தையாவது சொன்னாரே சாரதா ..இந்த சின்னஞ்சிறுசுகளப் பாக்கும்போது அவளுக்கும் கல்யாண ஆசை வரட்டும்னு நினைப்பேன் ..”
“இப்பவும் பிடி கொடுக்க மாட்டேங்குறா அண்ணி…ஆனால் எப்படியும் வர்ற தைக்குள்ள நடத்திட வேண்டியதுதான்.”
மாயா அவள் பிரெண்ட் கல்யாணத்திற்காக திருச்சி வரை போயிருந்தாள்.அவ்வளவு கூட்டத்திலும் காவ்யா அவளை நினைத்துக் கொண்டாள். அவள் இருந்தால் ஏதாவது கலகலப்பாக கிண்டல் பண்ணிக் கொண்டு, பாட்டுப் பாடிக் கொண்டிருப்பாள் ..எவ்வளவு அருமையான பெண் அவள்.
மாமாவுக்கு அவளுடைய அருமையான குணம் தெரியவில்லை. காரணமில்லாமல் வெறுக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் …
அப்போது மாலினி தேவி ஸ்டேஜில் ஏறி மைக்கில் ..
“டியர் பிரண்ட்ஸ்.. எல்லோரும் எங்களுடைய அழைப்பை ஏற்று, எங்கள் பிள்ளைகளின்’ திருமண முதலாம் ஆண்டு நிறைவு விழா’விற்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி ..இந்த இனிய தருணத்தில் நான் என் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரு பரிசளிக்க விரும்புகிறேன். இருவரையும் மேடைக்கு அழைக்கிறேன்” என்றாள்.
ஆதர்ஷ் காவ்யாவைப் பார்த்து’ அப்படி என்ன பரிசு?’ என்று புருவத்தை உயர்த்தினான் ..அவள் பதிலுக்கு உதட்டை பிதுக்கினாள் ..மாலினி தேவி இருவரையும் பார்த்து” வாங்க மேடைக்கு” என்று திரும்ப அழைத்தாள் ..
காவ்யாவும், ஆதர்ஷூம் மேடையேற ..ஒரு அழகான தங்கச் சாவியை எல்லோரிடமும் காண்பித்தாள் ..நண்பர்களே பெசன்ட் நகரில் நான் புதிதாக கட்டியிருக்கும் பங்களா, கடற்கரையை பார்த்து மிக அழகாக அமைந்துள்ளது ..நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. ..வெளிநாடுகளுக்கு இணையான இன்டீரியர் ..முழுக்க முழுக்க தேக்கு மரத்தை உபயோகப்படுத்தி மரவேலைப்பாடுகள். அந்த பங்களாவை இந்த நாளில் இவர்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்” என்று கூற அனைவரும் வேகமாக கைதட்டினர்.
தங்க சாவியை அனைவர் முன்னிலையிலும் காவ்யா கையில் கொடுத்தாள் ..ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான்.
‘உங்கள் மகள் மனம் சிங்கப்பூரில் அல்லவா இருக்கிறது .அது பெசன்ட் நகரில் எப்படி குடியேறும்? …சிங்கப்பூரில் வீடு வாங்கிக் கொடுத்தால், காவ்யா சந்தோஷமாக இருப்பாள்’ என்று மனதுக்குள் நக்கலடித்துக் கொண்டான்.
இந்த கும்பலை எல்லாம் பழிவாங்கவே காவ்யாவும், ஜெய்யும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..என்ற வெறி மனதில் எழுந்தது. மனதில் எழுந்த எண்ணங்களை மறைத்து புன்னகைத்தான்.
அந்த நாகரீக கூட்டத்திற்காக சிரிக்க கற்றுக்கொண்ட பொம்மைகளாய் இருவரும் சிரித்து கையாட்டி சாவியைப் பெற்றுக் கொண்டனர் ..
“பணக்காரத் திமிர எப்படி காண்பிக்கிறா இந்த மாலினி தேவி” என்று சாரதாவும், ருக்மணியும் நினைத்துக் கொண்டார்கள்.
‘இப்ப எதுக்கு மகளுக்கு வீடு? ..குடும்பத்தில் இருந்து பிரிக்கப் போடுற திட்டமா எதுக்கு இப்படி எல்லாம் நடந்துகறாங்க என்ற வருத்தத்தில் ..ருக்மணி மனம் வெதுப்பியது
பரமேஸ்வரனுக்கு பெரிய சந்தோஷம் …தானும் தன் பங்குக்கு வைரங்கள் இழைத்த இரண்டு பெரிய தங்கச்சங்கிலியை மகனுக்கும் மருமகளுக்கும் அணிவித்தார்.
மொத்தத்தில் அவர்கள் பணக்கார ஸ்டேட்டஸை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விழா சிறப்பாக முடிந்தது ..சம்பந்தப்பட்ட இரு மனங்கள் மட்டும் தாமரை இலை தண்ணீர் போல தத்தளித்து கிடந்தன …
வீடு திரும்பியதும் ருக்மணி அவர்களை வாசலில் நிற்க வைத்து, ஒரு பெரிய பூசணிக்காயை சுத்தி, தோட்டக்காரனை கூப்பிட்டு, முச்சந்தியில் உடைத்து விட்டு வரச் சொன்னாள்.
“ஊர்க்காரங்க கண்ணுபூரா இவங்க மேல தான் ..”
ஆதர்ஷ், காவ்யா இருவரும் உடை மாற்றிவிட்டு அமர்ந்தனர் ..
“காவ்யா எக்ஸாம்ஸ் எப்ப ஆரம்பிச்சு எப்போ முடியுது? “
“அடுத்த வாரம் மண்டே எக்ஸாம் ஆரம்பிக்குது ஆதர்ஷ். அடுத்த இரண்டு வாரங்கள் எனக்கு எக்ஸாம்ஸ் இந்த மாசக் கடைசில எக்ஸாம்ஸ் முடியுது …”
“ஓகே காவ்யா! அப்ப அடுத்த மாசம் செகண்ட் வீட்ல ஜெய் ஃப்ரீயா இருப்பாரான்னு கேட்டு வை …ஃப்ரீயா இல்லேன்னாலும் ஃப்ரீயா இருக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக்க சொல்லு.”
காவ்யா முகம் மாறியது. “என்ன காவ்யா ஏன் டல்லாயிட்ட..”
“ரொம்ப பயமா இருக்கு ஆதர்ஷ். இது எல்லாமே நல்லபடியா நடக்குமா ..பரமேஸ்வரன் மாமாவையும் எங்க அப்பாவையும் நினைக்கும்போது எனக்கு பயமா இருக்குது …ரொம்ப ரிஸ்க் எடுக்குறோம். என்னால உங்களுக்கும் ரொம்ப சிரமம். அத்தைய நெனச்சாலும் கவலையாயிருக்கு. பாவம் அவங்க எப்படி நடக்கிறதெல்லாம் தாங்கிக்கப் போறாங்கன்னு தெரியல “
“காவ்யா காதல மனசுக்குள்ளேயே வச்சுட்டு சொல்லாம தியாகம் பண்றது ஒரு ரகம் ..அது ஆரம்ப நிலையில் வேணா சாத்தியமாக இருக்கலாம். உனக்கும் ஜெய்க்கும் உள்ள அன்பு ரொம்ப ஆழமானது. இது பல வருட பழக்கம். நீங்க ஒருத்தர் இல்லாம ஒருத்தர் வாழ்வது… நினைவுகளே உங்களை சித்திரவதை பண்ணும் …அதனால இனிமே எதையும் யோசிக்காதே.. முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது.”
“துணிஞ்சு பிளான் பண்ணுவோம். எந்த பிரச்சனை வந்தாலும், அந்த நேரம் பார்த்துக்கலாம். சென்டிமென்ட்டா ரொம்ப யோசிச்சுகிட்டு இருந்தேன்னா எதுவுமே செய்ய முடியாது. நீ தைரியத்தை இழந்திடாதே. எங்களுக்கு அது சோர்வை கொடுத்திடும். ஜெய் மனசுலயும் இதே பயம் இருக்கும் …உன் காதலாவது நல்லபடியாக நிறைவேறட்டும் நீ ஜெய் கூட சந்தோஷமா வாழு…
இன்னும் ஒரு பத்து நாள்ல நம்மளுடைய டிவோர்ஸ் கேஸ் வருது ..நாம போய் பார்மலிடீஸ் முடிச்சிட்டோம்னா.. டிவோர்ஸ் கிடைச்சிடும். அப்புறம் மாயாவுக்கு இது எதுவுமே தெரியக்கூடாது காவ்யா ..அவ சிறுபிள்ளைத்தனமாக அம்மாகிட்டயோ.. சாரதா அத்தை கிட்டயோ ஏதாவது உளறினால் காரியம் கெட்டுப் போயிடும். நீ அவகிட்ட ரொம்ப க்ளோசா இருக்கிறேன்னு எனக்கு தெரியுது.. ஆனா இந்த விஷயத்த ஷேர் பண்ணாத. சரி இப்ப.. நீ எதையும் பத்தி கவலை படாம முதல்ல எக்ஸாம்ஸ்ஸ முடி. அதுக்கு அடுத்தது நம்ம டிவோர்ஸ். அப்புறமா கல்யாணத்துக்கு நாள் குறிப்போம் எதுனாலும் இன்னும் மேட்டர் ஆப் ஒன் மன்த் …”
30 நாட்களில் ..???
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings