2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19
வீட்டிற்குள் வந்த வித்யா முதல் வேலையாய் தெருக்கதவைச் சாத்தித் தாழிடாமல் விட்டு வைத்தாள்.
“எப்படிச் சாகலாம்?” தாடையைத் தட்டிக் கொண்டே யோசித்தாள்.
அப்போது பாத்ரூமிற்கு வெளியே ஒரு சுண்டெலி மின்னல் வேகத்தில் ஓடி மறைய, அவள் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது.
“ஏ சுண்டெலியே… உனக்காக அம்மா வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளை நான் எடுத்துக்கப் போறேன்… கோவிச்சுக்காதீங்க?” என்று சந்தோஷமாய்ச் சொல்லியபடியே, பாத்ரூமிற்குப் போகும் வழியில் உள்ள அந்த அலமாரிக்குச் சென்று அதைக் கையிலெடுத்தாள். எலிகளைக் கொல்வதற்காக வீடுகளில் வைக்கப்படும் சிறிய கேக்.
“கசக்குமா?… இனிக்குமா?… புளிக்குமா?” அந்த வஸ்துவின் மேலிருந்த லேமினேஷனைப் பிரித்தாள். மெல்ல முகர்ந்து பார்த்து முகம் சுளித்தாள்.
“நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்” என்று தமாஷாய்ச் சொல்லிக் கொண்டு, வாயருகே கொண்டு போனவள் அப்படியே நிறுத்தி கொண்டு, “ம்ம்ம்… ஒரு கடிதம் எழுதி வெச்சிட்டுப் போகலாமே!…”
மீண்டும் உள் அறைக்குச் சென்று ஒரு காகிதத்தை எடுத்து,
“அம்மா… நான் மேலுலகம் போய் உன் புருஷனையும், என் புருஷனையும் பார்த்து மன்னிப்புக் கேட்டுட்டு வெய்ட் பண்றேன்… நீயும் முடிஞ்சா சீக்கிரமே வந்து சேர் – வித்யா”
எழுதினாள். பின்னர் அக்காகிதத்தை ஹால் டீப்பாயின் மீது வைத்து விட்டு, அது பறந்து விடாமல் அதன் மேல் ஒரு புத்தகத்தையும் வைத்து விட்டு மீண்டும் அறைக்குள் சென்றாள்.
கையிலிருந்த எலிமருந்தை சிறுசிறு துண்டுகளாக்கி, பக்கத்திலிருந்த தண்ணீர் செம்பிற்குள் போட்டாள். சிறிது நேரம் கழித்து எடுத்து உள்ளே பார்த்தாள். எல்லாம் கரைந்து போயிருக்க, தண்ணீர் மட்டும் நிறம் மாறி பச்சைக்கலரில் இருந்தது.
“அம்மா… நான் செத்திட்டா… நீயும் செத்துப் போயிடுவேன்னு சொல்லியிருக்க. அதை டெஸ்ட் பண்ணத்தான் நான் சாகிறேன்… மறக்காம சொன்னபடி செஞ்சிடு”
கண்ண இறுக மூடிக் கொண்டு அந்த செம்பிலிருந்த நீரை கடகடவென்று குடித்தாள். கசப்பு மிகவும் அதிகமாயிருந்ததால் அவளால் பாதிதான் குடிக்க முடிந்தது. அந்தப் பாதியே அவளைக் கிறுகிறுக்கச் செய்தது.
கண்கள் இருண்டன. கைகளும், கால்களும் இல்லாதது போல் மரத்துப் போயின. மொத்த உடலும் விலுக்…விலுக்கென்று இழுக்க, வாயோரம் நுரைப்பூ மலரத் துவங்கியது.
மெல்ல மயக்கத்திற்குப் போனவள் அப்படியே படுக்கையில் விழுந்தாள். அவள் நினைவு வலையத்திற்குள்….
கழுத்து திருகப்பட்டு டிரம்மிற்குள் துடித்த கோழிகள்…
எறும்புப் புற்றில் நின்று துடிதுடித்த ஒண்ணாம் வகுப்பு முருகன்….
ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் கண்ணுக்குள் வீசப்பட்ட பூச்சி மருந்து கலந்த நீரின் எரிச்சலில் துடித்த ப்ளஸ்டூ மாணவன் சுரேஷ்…..
கத்திக்குத்து வாங்கிக் கால்நடையை இழந்த கல்லூரிக் கராத்தே வீரன் மாதவன்….
மாதவனுடனான சண்டை காரணத்தால் கல்வியையே இழந்த ஆணழகன் சிவா….
செப்டிக் டேங்க் மீது விழுந்து மரணித்த தந்தை கிருஷ்ணன்….
மின்சாரம் தாக்கி இறந்த கணவன் சுந்தரராமன்….
என எல்லோரும் வரிசையாக வந்து வந்து போக, வேக வேகமாய் மூச்சிரைத்த வித்யா ஒரு கட்டத்தில் மொத்தமாய் தன் மூச்சை நிறுத்திக் கொள்ள,
அவள் உடலிலிருந்து உயிர்ப்பறவை “ஜிவ்” வென்று மேலெழும்பிப் பறந்தது.
கோவிலிலிருந்து திரும்பி வந்த பத்மாவதி, வரும் போதே, “வித்யா… வித்யா” என்று அழைத்துக் கொண்டே வந்தாள்.
பதில் வராது போக, உள்ளறையை எட்டிப் பார்த்தாள். வித்யா படுக்கையில் கிடக்க, “ஹும்… வாசற்கதவைக் கூடத் தாழ்ப்பாள் போடாமத் தூங்கறதைப் பாரு… சோம்பேறி… சோம்பேறி” திட்டிக் கொண்டே, தான் கொண்டு வந்திருந்த கோயில் பிரசாதங்களை சாமி அறையில் வைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள்.
“அநேகமா காஃபி கூடப் போட்டுக் குடிச்சிருக்க மாட்டாள்னு நினைக்கறேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு வித்யாவிற்கும் சேர்த்தே காஃபி போட்டாள்.
இரண்டு டம்ளர்களையும் கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து அவற்றை டீப்பாயின் மீது வைத்து விட்டு, பக்கத்திலிருந்த சோபாவில் தானும் அமர்ந்தாள்.
“வித்யா…. வித்யா” குரலை சற்று உயர்த்திக் கூவினாள்.
பதிலில்லை.
“ஹும்… கும்பகர்ணன் வாரிசா இருப்பா போலிருக்கு” என்று சொல்லியபடி எழுந்தவள் பார்வையில் அந்தப் புத்தகத்தின் கீழிருந்த அந்த பேப்பர் தெரிய, “என்னது… வித்யா கையெழுத்து மாதிரித் தெரியுது” எடுத்தாள். படித்தாள்.
“அம்மா… நான் மேலுலகம் போய் உன் புருஷனையும், என் புருஷனையும் பார்த்து மன்னிப்புக் கேட்டுட்டு வெய்ட் பண்றேன்… நீயும் முடிஞ்சா சீக்கிரமே வந்து சேர் – வித்யா”
அடுத்த கணம் கையிலிருந்த அந்தக் காகிதத்தை எறிந்து விட்டு, மின்னல் வேகத்தில் உள்ளறைக்குள் ஓடினாள்.
வாயோரம் நுரை வடிய, கண்களிரண்டும் மேல் நோக்கிச் செருகியிருக்க, கடைசி விநாடியில் துடித்த துடிப்பின் காரணமாய் சேலை தாறுமாறாய் விலகியிருக்க, சவமாய்க் கிடந்தாள் வித்யா.
உள்ளிருந்து பீறிட்டு வந்த அழுகையை தொண்டையிலேயே நிறுத்தி விட்டு, செம்பிலிருந்த நீரை முகர்ந்து பார்த்தாள். அதன் வாசனையை வைத்து அது எலி மருந்து என்பதைக் கண்டு பிடித்து விட்டவள், கணநேரம் கூட யோசிக்காமல் மீதமிருந்ததை அப்படியே பருகினாள்.
சரியாக பத்தாவது நிமிடம் பத்மாவதியின் உடல் துள்ள, பதினைந்தாவது நிமிடம் மகளைப் பின் தொடர்ந்து சென்றது அவளுடைய உயிர்ப்பறவை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings