in

மைசூர் உருளைக்கிழங்கு போண்டா – Recipe by சியாமளா வெங்கட்ராமன்

மைசூர் உருளைக்கிழங்கு போண்டா

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பு அன்று மாலையில் மைசூர் உருளைக்கிழங்கு போண்டா ஸ்பெஷலாக போடுவார்கள். அது மிகவும் நன்றாக இருக்கும். அதைப்பற்றி இப்போது பார்ப்போம் 

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்க – 1/4 கிலோ
  • கேரட் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி தழை – 1 பிடி
  • கடலை மாவு – 2 கப்
  • அரிசி மாவு – 1/2 கப் 
  • காஷ்மீரி சில்லி பவுடர் – 1 1/2 டேபிள்ஸ்பூன் 
  • பெருங்காயத்தூள் – 1/4டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் – 1/4டீஸ்பூன் 
  • பேக்கிங் சோடா – 1/2டீஸ்பூன் 
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  • கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து வைக்கவும்.
  • அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்.
  • எண்ணெய் சூடானதும் உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
  • பொன்னிறமாக வந்ததும் மெதுவாக எடுத்து வடிதட்டில் வைக்கவும்.

இப்பொழுது போண்டோ ரெடி. இதற்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்லூளிமங்கன் (சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் ❤ (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான்