2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26
விரைவில் ‘ஈஸ்வர பவனம்’ பழைய பொலிவுக்கு திரும்பிக் கொண்டிருந்தது .பங்களாவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வேலையாட்கள் பழைய சுறுசுறுப்புடன் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது மகா அம்மா பழையபடி சுறுசுறுப்புக்கும், கலகலப்புக்கும் மாறியதே அவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணம்.
ராம்குமாரின் ஆடி காரை சுந்தரம் துடைத்துக் கொண்டிருந்தார் .அவர் மனதிலும் மிகப்பெரிய நிம்மதியும் சந்தோஷமும் இருந்தது. ராம்குமாருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது அங்கிருந்து யாருக்குமே துளிக்கூட வருத்தமோ, கவலையோ, வரவில்லை. மகாவுக்கு அத்தகைய நிலைமை ஏற்பட்டிருந்தால் என்ற நினைப்பே அவர்களுக்கு கலவரத்தை ஊட்டியது. சுந்தரமும், மகா அதிலிருந்து தப்பித்தாளே என்று ஆறுதல் அடைந்தார்.
மடிப்புக் கலையாத காட்டன் புடவையில் கம்பீரமாகப் கிளம்பி வெளியே வந்தாள் மகா..
“அண்ணா கிளம்பலாமா”.. என்றாள் .
“இதோ நான் ரெடியா இருக்கேன்மா” என்றார் முகம் மலர, மனம் நிறைந்து ..
தங்கம் ஓடி வந்து, “மகா அம்மா.. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும் …”என்றாள்
“என்ன வேணுமானாலும் பண்ணு தங்கம்.. மஸ்ரூம் பிரியாணி மட்டும் வேண்டாம்..” என்று சொன்னவள் கடகடவென சிரித்தாள்.
“அம்மா நீங்க எப்படி சிரிச்சு எவ்வளவு நாளாச்சு! இப்ப தான் இந்த ஈஸ்வரபவனமே ஒரு புது பொலிவா இருக்கு.”
“அப்புறம் தங்கம் ஐயாவுக்கு கூட இருந்து பாத்துக்கரதுக்கு ஒரு ஆள் போட்டிருக்கேன். சாப்பாடு எல்லாம் பார்த்து கொடுத்துடு.. பத்து மணிக்கு ஜூஸ் கொடுத்துடு ..புது ஆள் பழகுற வரைக்கும் நீயும் கொஞ்சம் பார்த்துக்கோ”
“சுந்தரம் அண்ணா! இன்னைக்கு வெள்ளிக்கிழமை கம்பெனிக்கு போறதுக்கு முன்னாடி கருமாரியம்மன் கோயிலில் கும்பிட்டுட்டு போகனும். அதேபோல சாயங்காலம் இன்னைக்கு ஈஸ்வர் ட்ரஸ்டுக்கு போயிட்டு வரனும். அந்த குழந்தைகளை எல்லாம் பார்த்து நாளாயிடுச்சு ..”
“நிறைய நல்லது செய்யனும். நம்ம தொழிலாளர்கள் எல்லார் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பண்ணனும் ..அப்புறம் பெங்களூர் ஆபீஸ் கவனிக்கிற பொறுப்பை சுந்தர்கிட்டயே கொடுத்துட்டேன். “
“என்னுடைய அடுத்த திட்டம் கிரானைட் பிஸினஸும் சேர்த்து பண்ணனும் ..அதுக்கு அந்த தொழிலில் அனுபவம் உள்ள ஒரு மேனேஜரை இன்டர்வியூ பண்ணி எடுத்திருக்கேன். அவருடைய பொறுப்பில் இனி கிரானைட் ஒரு யூனிட் செயல்படும். விரைவில் ‘மகா மார்பிள்ஸ்’…’ மகா மார்பிள்ஸ் அண்ட் கிரானைட்ஸ்’ ஸா மாறனும் .”
‘சிறு குழந்தை போல கலகலப்பாக ஒவ்வொன்றாக பேசும் மகா அல்ல இவள் ..இப்போது பொறுப்போடு சிந்திக்கும் மிக கம்பீரமான மகாவை பார்க்க சுந்தரத்திற்கு பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தான் கும்பிட்ட தெய்வங்களும், ஈஸ்வர் ஐயாவின் ஆசியும் வீண் போகவில்லை. மகா வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து அவள் பழைய நிலைக்கு வந்துவிட்டாள் என்பது கூட பொருத்தமாக இருக்காது …விஸ்வரூபமெடுத்து விட்டாள். ‘
இனி இந்த மகா ..புதியதொரு உலகம் படைப்பாள். ராம்குமார் போன்ற மனிதர்களுக்கு கிடைக்கும் தண்டனை, மகாக்கள் சாதனைப் பெண்களாக தலைநிமிர்ந்து நடக்கும் போதுதான் முழுமையடைகிறது ..
தடைகளைத் தாண்டி மகா சாதனைப் பெண்ணாக உலா வருவாள் ..அவளிடமிருந்து விடை பெறுவோம்…
(முற்றும்)
என்னுடைய இத்தொடரைப் பொறுமையாகப் படித்து ஊக்கமளித்து வந்த என் அன்பு நண்பர்களுக்கு என் நன்றி.
- தி.வள்ளி, திருநெல்வேலி
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings